Translate

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நீ யார் மூடனே?

⁠⁠⁠அப்படித்தானந்த தனியிரவு
கவிழ தொடங்கியது...
அர்த்தமான வார்த்தைகளை 
அர்த்தமற்ற சிரிப்பால் அனுமதித்தேன் ....

சிறகுகள் விரித்த சுதந்திரம்
இதழ் தொடங்கி சிணுங்கியது...
சம்மதமின்றி சாத்தியமில்லை
முத்தத்தின்  முறைப்பாடுகள்!

அணைத்த அழகுக்குள் 
அத்தனைக்கும் ஆசைப்பட்டாய்...
இதழ்களால் தொடுத்தாய்
தடங்கலின்றி எடுத்தாய்!

வெற்று மூங்கில்கள் 
புல்லாங்குழல் ஆவதில்லை..
வெற்று காற்று
இசை பாட முடிவதில்லை!

இசைந்த இசையாய்
இறை ஆடித்தீர்த்தது..
இலக்கை கடந்த காதலை
காமம் தீர்த்து வைத்தது!

ஆயிரம் காரணங்கள் 
நீயும் நானும் விலகி செல்ல...
நீ சொன்ன காரணமோ 
நான் காமுகியாம்..
நான் தே.... யாளாம்...

நான்தான் காமுகி எனில்
நான்தான் தே.....எனில்
நீ யார் மூடனே?
கம்பம் கண்டால் காலை தூக்கும் நாயா?
                                                                                       

புதன், 26 ஆகஸ்ட், 2015

முத்த அதிகாரங்கள் !

நாடு கடந்து,வீடு துறந்து வாழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் சமர்ப்பணம் இக்கவிதை...

இயலா பொழுதொன்றின்
அயல் நாட்டு விலை நிலையில்
கனவாய் விளைகிறது
முத்த அதிகாரங்கள்...

பிறழ்ந்த கை கமழ்த்தி
உதடு குவித்து ஊதி சிரித்து
மழலை பறத்திய 
பறக்கும் முத்தம்...

முக்காலிருட்டில் மூக்கு சிந்தி
விழிநீர் தேக்கி உதடு வடித்த 
உயிர் முட்டும் உரியவளின்
உன்னத முத்தம் ...

கை கடித்து ஊளையிட்டு அழைத்து
எக்கி தொடை பிடித்து முகம் தேடி
நா நக்கி நகல மறுத்த நாயின்
சொல்மொழி இயலா ப்ரிய முத்தம்

உயர்ந்த பனையின் நிழல் முத்தம்
மார்கழி கோலத்து பனி முத்தம்
மழை பேசிய மண் முத்தம்
நீங்கா நிழலாய் நினைவுகள் முத்தம்

உருகி கிடக்கும் உயிரோரம்
ஓராயிரம் முத்தங்கள் ஏங்கி தவிக்குது...
எதிர்காலம் காலாட்டி இளைப்பாற 
ஓடுகிறது  நிகழ்காலம் நிற்காமல்.

ரியாத்களும் டாலர்களும் ஆக்ரமித்த
அரபு தொழிற்சாலை வீதிகளில் 
இயலா பொழுதொன்றின் விலையில்
கனவாய் விரிந்து கண்களை  கரிக்கிறது 
முத்த அதிகாரங்கள்!!!

-அரபு நாடு என்றில்லாது வீடு துறந்து  தனியே தவிக்கும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இது பொருந்தும்.





வெள்ளி, 23 ஜனவரி, 2015

துப்பாக்கிக்கு ஓய்வில்லாது போயிருக்கும் நேதாஜி ....

மாபெரும் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்க்கு 

சற்று சீக்கிரமாகவே சென்று விட்டாய் நீ
உனது துப்பாக்கிக்கு ஓய்வில்லாது போயிருக்கும்...

நீ கொடுத்த நெருப்பில்
கொளுத்தப்படுகிறது குடிசைகள் ...
நீ கொடுத்த சுதந்திரத்தில்
களித்து கிடக்கிறது முதலாளிகள் கூட்டம்!

வெள்ளையனை வேண்டியவன் மாவீரன்
காந்தியை கொன்றவன் கடமை வீரன்
சிலைகளில் சிரிக்குது தேசம்
வலைகள் பின்னுது மத வெறிக்கூட்டம் !!

நீ விட்டு சென்ற ராணுவமோ
வேலி வைத்து காவல் காக்க ..
கதவுகளை திறந்து களவுக்கழைக்குது
களவாணி கட்சிகளின் கவர்மெண்டுகள்!

நீ சிரித்து புரள ஒரு காட்சியுண்டு தலைவா...
மதயானைக் கூட்டமொன்றின் ஊர்களில்
உனக்கும் மஞ்சளடித்து வைத்துள்ளனர்
தெய்வத்திருமகன் ஜாதியாக .....சிரித்து கட !


நீ நினைத்த நாடல்ல இது...
நீ நினைத்த சுதந்திரமல்ல இங்கு...
கோட்சேக்கு கொடி பிடிக்கும் தேசத்தை
நீ காணாது கடந்ததே நலம் !


சீக்கிரமாய் சென்று விட்டாய் தலைவா நீ ...
உனது துப்பாக்கிக்கு ஓய்வில்லாது போயிருக்கும் !!

-சதிஷ் செல்லத்துரை

வெள்ளி, 4 ஜூலை, 2014

இழந்தது இளவரசனை மட்டுமல்ல !

ஆண்குறி பெண்குறியென்று
அறிவியல் சொல்ல ....
வன்னிய குறி பறக்குறியென்று
பிதற்றுகின்றன கேடு கெட்ட தற்குறிகள் !

கரைபவள் ஒருத்தி மரித்தவர் இருவர் 
எரிந்தது மூவூர் ...
வளர்வது கட்சி !
வாழ்பவன் அமைச்சன் !!

மனிதனாக தெரியாத மிருகங்கள்
தமிழனாக வேசம் போடுது ...
தமிழனுக்கு அடையாளம் சாதியென்று
கோசம் போடுது ..

கட்டியவன் தண்டவாளத்தில் ..
அறுத்தவன் பார்லிமெண்ட்டில்...
நீதியை மட்டும் காணவில்லை!
உச் கொட்டி கடந்து போகும் உங்களையும்தான் ...!!

மறுக்கப்பட்டது காதலல்ல ...
மறுத்தவன் மனிதனுமல்ல ...
மஞ்ச மாக்கானுங்க மத்தியில்
இது ஒன்றும் புதிதுமல்ல ...!!

கதறி அழுது தீர்த்துக்கொள்ள
திவ்யாக்களால் முடியும் ...
எம்மால்தான் இயலவில்லை -ஏனெனில்
இழந்தது இளவரசனை மட்டுமல்ல 

வியாழன், 17 அக்டோபர், 2013

விளக்கமாக விளக்கப்படுகிறது ....

இருட்டில் புணரும் சாதி நாய்க்கு 
நாய் மட்டுமே அவசியப்பட்டது 
சாதி நாய் அல்ல ....

ஆண்டவர்களின் செங்கோல்கள் 
இருட்டான குழிகளில் மட்டும்
சாதி நிறம் கேட்பதில்லை ..

மாட்டுக்கறியின் வீச்சம்
மல்லிகைப்பூவாய் சாத்தியமாவது
இருட்டான முகர்தலில் மட்டுமே....

விடியல் பதிப்பில் மட்டும்
விளக்கமாக விளக்கப்படுகிறது
இன்ன ஜாதி இன்ன ரகத்தில்
பெண்ணொன்று வேண்டுமென்று....

விளக்கமாக விளக்கபடுகிறது
விலக்கப்பட்ட சாதிகள்
உள்ளதென்று .......



இது கண்டிப்பாக சாதிப் பிரியர்களுக்கு ......சாதி அடிப்படையில் கலப்பு திருமணத்தை எதிர்ப்பவர்களுக்கு ....




ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஆண்களே, நீங்கள் விலகிப்போகலாமே...?


பேருந்திலும் பணிபுரியுமிடத்திலும் பெண்கள் மீதான  பாலியல் கொடுமைகள் நிகழ நமது மவுனமும் ஒரு காரணமாகி விடுகிறது.... அவர்களின் இயலாமை ஆணின் தைரியமாகி விடுகிறது....   

விரிந்து விழுங்கும் விழிகளுடன்
பொங்கி வழியும் ஆண்மையுடன்
பேருந்தில் முட்டும் அவனின் உடைகள்
ஆணுறையாகவே உணரப்படுகிறது ....
உங்களின் பாதுகாப்பான மவுனத்தை போல!!!
 
அவனின்  ஆணுறையின் சாட்சியிலும்
எனது மவுனத்தின் சாட்சியிலும்  
என் வேலை நிரந்தரமாகவும்
வாழ்க்கை அடிமையாகவும்
கையெழுத்திடப்படுவது  அறீவிர்களா?

மவுனம் சம்மதமாகிறது 
அவனின் ஆணுறைகளுக்கு...
மவுனம் சம்மதமாகிறது
என் இயலாமை வாழ்விற்கு .....
மவுனம் கேள்வியாகிறது
உங்கள் மவுனமான பார்வைக்கு .....!!

விலகிப்போகலாமே?
சரக்குக்கும் சைடிஷ்க்கும்
இடைப்பட்ட இடைவெளியில்
அவன் சார்பான  உங்களின் கேள்வியை
உங்களிடமே  கடத்துகிறேன்
பதில் சொல்லுங்கள்.........
விலகிப்போகலாமே??? 

அவன் விலகிப்போகலாமே....??? 

                                                  - நர்ஸ்,வேலைக்காரி,போலீஸ்காரி,டைப்பிஸ்ட்,பயணி,ஆசிரியர்,சேல்ஸ் கேர்ள் ,நடிகை ,இன்னும் பலரின் கேள்வி இது......

குறை நிறைகளை பின்னூட்டத்தில் மறக்காமல் தெரிவியுங்கள்...பிடித்திருந்தால் பகிருங்கள்....புரிகிற மாதிரி எழுதியுள்ளேன் என்றுதான் நம்புகிறேன்..நன்றி.


வெள்ளி, 11 அக்டோபர், 2013

சாதி தாஸ்க்கும் வெட்டியான அல்லக்கைகளுக்கும்*......

தருமபுரி மரக்காணம் என கலவர தீ யை கொளுத்தி விட்டு வேடிக்கை  பார்த்து இன்று ஜாதி சங்கங்களுடன் என்று சொல்ல தைரியமற்று சமுதாய இயக்கங்களுடன் போட்டி  என ஓட்டு பொறுக்கும் தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் இந்த உரைநடை கவிதையின் கடைசி கேள்வி அர்ப்பணம்...

மாட்டுக்கறிதான்
பிரச்சனையென்றால் மனிதக்கறி விழுங்கும் உன் தலைவனை கேள் முதலில் நீ எந்த சாதி மிருகமென்று? சாதிதான் பிரச்சனையென்றால் ரத்தம் வேண்டிய அவசர இரவில் தைரியமாகக் கேள் ரத்த வங்கியில் இது வன்னியன் ரத்தமா? பறையன் ரத்தமா? ஆண்டதும் பேண்டதும் வீரமென்றால் உயிர் கொன்றதும் தின்றதும் தீரமென்றால் பயிர் களஞ்சியம் கொண்ட சாதியென்றால் உயிர் வாழ உன் சாதி தகப்பெனவனும் பிச்சையெடுத்து உண்பதில்லை என உறுதியாக சொல்வாயா? அது இது என ஆயிரம் காரணிகள் இருக்கிறது நீ உயிர் வாழ...... உண்டு கழிக்க ...... அதிலொரு காரணி நானாயிருந்தால் செத்து விடுவாயா என்ன?


*இந்தப் பதிவு மருத்துவர் அய்யா,தமிழ் குடி தாங்கி திரு.ராமதாஸ் அவர்களையோ பாமக கட்சியினையோ குறிக்காது.....சாதி வெறி பிடித்த தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்

உங்கள் ஆதரவை எதிர்ப்பை பின்னூட்டத்தில் ,ஓட்டுப்பெட்டியில், பகிர்தலில் என பல விதங்களில் வெளிப்படுத்தலாம் .......

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கேள்விக்குறியாகும் நஸ்ரியாவின் தொப்புள்....18+

ஒரு தொப்புளுக்கு கமிசனர் அலுவலகம் கொடுக்கும் மரியாதை பல பாலியல் கொடுமை புகார்களுக்கும் கொடுக்கப்படுகிறதா?

அன்றொரு நாள் அப்படித்தான் 
எப் ஒன் காவல் நிலையத்தில் 
காக்கி பேனா திறக்கவே இல்லை 
தனது மூடியை  - வன் கொடுமையான 
இந்த பட்டதாரி ஏழைப் பெண்ணிற்கு.... 

அனுமதியின்றி திறக்கப்பட்ட 
யோனியின் சொந்தக்காரிக்கு 
நீதிக்கு பதில் நீட்டப்பட்ட லத்தி 
மற்றுமொரு ஆண் குறியே...

ஒரு பகல் பதிப்பு குப்பையில் 
நான் புரிந்து கொண்டது... 
மினுக்கப்பட்ட தொப்புள்கள்  
காவல் நிலையத்தின் சாவியாகலாம்
சிதைக்கப்பட்ட குறிகளல்ல.....!!!  

மேல் வீட்டுப் பையனின் 
மேற்படி தொப்புள் கவலைக்கு 
அவனப்பன் வேறு பெயரில் 
விருப்பமிட்ட போதுதான்  புரிந்தது
தொப்புள் கொடி உறவுகள் .... 

வார இறுதியின் கடைசி காட்சியில்
தொப்புள் ஆட்ட போதையில் 
ஜிப்புகள் திறக்கப்படலாம்....  
காவல் நிலையங்கள் 
மூடிக் கொள்ளட்டும்  
உங்கள் மனதைப் போலவே ...

என் பெண்மையின் குறி 
நஸ்ரியாவின் தொப்புளில் 
கேள்விக்குறியான போது 
நெஞ்சு  பறையடித்தது... 
நீதிகள் மறுக்கப் படுவதில்லை 
ஒதுக்கப்படுகிறதென்று ...!!! 

                                               -நீதி ஒதுக்கப்பட்டவள்

காவல்துறையும் இன்ன பல துறைகளும்  பல சந்தர்ப்பங்களில் பிரபலங்களின் பிரச்சனைகளை எளிதாக தீர்த்து வைப்பதும்
 நம் போன்ற சாமானியர்களின் குரல் கவனிக்கபடாமாலேயே இருந்து விடுவதும்
அதை குறித்த எந்த கவலையும் இன்றி கிண்டலாகவே வாழ்வை நகர்த்துவதும் மாபெரும் சாபமே ..


திங்கள், 7 அக்டோபர், 2013

சேரிப்பையனும் - சிவகாசிக்காரனுக்கு பதில் கருத்தும்...

அந்த சாலையோரக் கோவிலின் நீண்ட சுற்றுச் சுவர் அப்படி ஒன்றும் வலிதல்ல... அதன் மேலுள்ள பீங்கான் துண்டுகள் நான் பொறுக்கி தந்தவையே....

நீங்கள் சிறுநீர் கழிக்கும் 
அதே சாலையோரம்தான் நான் வாழ்கிறேன் .... நீங்கள் வசிக்கிறீர்கள். !!

உங்கள் கழிவுகளால் நிரம்புகிறது
என் இருப்பிடம் ..
என் இருப்பினால் சுத்தமாகிறது
உங்கள் வீடுகள் ...

என் தமையனும் நானும் 
மலம் கழித்து எழுந்த போதுதான்
நீங்கள் நிழல் காயும் அந்த மரங்கள் வளர்ந்தெழுந்தன!! மூக்கை பொத்திக் கொள்ளுங்கள் ....

அப்படியாக 
உங்களில் ஒருவனாக நானோ என்னைப் போல ஒருவனாக நீங்களோ சொந்தமாகத்தான் இருக்கின்றோம் ...!! ஆயினும் .... 
அந்தக் கோவிலின் சுவர் வலிதாகவும் எனது அசுத்தத்தில் நீங்கள் சுத்தமாகவும் சொந்தம் கொல்லும் சொந்தமாகவும் அமைய ஜாதிதான் காரணமெனில் ..... காரணத்தின் காரணங்கள் 
அப்படியேத்தான் இருக்கிறது கழுவப்படாத குண்டியைப் போல... சலுகைகளும் வாக்குறுதிகளும் பவுசாக பல்லிளிக்கிறது வேண்டுமென்றே காண்பிக்கப்படும் ஜாக்கி ஜட்டியைப் போல....

-சேரிப்பையன்



மிக எதேச்சையாக சிவகாசிக்காரன் அவர்களின் ஜாதி வேண்டும்... என்ற ஒருபழைய பதிவு படிக்க நேர்ந்தது.....அந்த பதிவுக்கு மேலே உள்ள அண்ணல் அம்பேத்காரின் வரிகளை விட வேறு பதில் அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.....அவருக்கு வேண்டுமானால் வாசல் வரை சாதி இருக்கலாம்.ஆனால் வீதியில் செல்ல கூட சாதியையும் ,பூஜை செய்ய ஜாதியும்,வீடு வாடகைக்கும் ஜாதியையும் கேட்கிற இடத்துல சொல்ல உள்ளூர படும் வேதனை அறியவில்லையோ என்று நினைக்கிறேன்.

இப்போது இந்தக்கணம் நான் வசிக்கும் வீட்டின் ஓனர் சாதி கேட்ட போது தாழ்த்தப்பட்டவன் என்றதும் முகம் போன போக்கும் அதை தொடர்ந்து என் மனைவி ஜாதியை கூறியதும் சற்று ஆறுதலாக போனதையும் உணர்ந்தவனின் வலி புரிவது கஷ்டமே....

ஜாதி ஒழிய குரல் கொடுப்பவர்களை கிண்டுவதை விட ஜாதியை தூக்கி கொண்டு வீதிக்கு வந்துள்ளவர்களை கிண்டியிருக்கலாம்.ஜாதி ஒழிப்பாளர்கள் தருவது எதிர் வினையே....முதல் வினையை விட்டு எதிர் வினையை கேள்விகள் கேட்பது மேம்போக்கான பார்வையாகவே தோணுகிறது.....

ஜாதி வேறுபாடின்றி வாழ்வதுதான் நல்லது என்ற கூற்றுக்கு வாழ்த்துக்கள்......கல்யாண கலாச்சாரங்கள் மட்டுமில்ல ... உடன் கட்டை ஏறுதல்,விசேசங்களுக்கு விதவைகளை மறுத்தல் இது மாதிரி ஏகப்பட்ட கலாச்சாரங்கள் உண்டு ....அதையும் கடைப்பிடித்து வாழ வேண்டிக்கொள்கிறேன்.

என் மனைவியின் அம்மா ஜாதியை வீட்டுக்குள் வைத்திருந்தவர்தான்......என் அம்மா பெண் கேட்டு சென்ற போது எட்டி நின்னு தண்ணி வாங்கி குடிக்கிறவங்க படியேறி பொண்ணு கேட்டு வர்றாங்க என்று சொன்ன போது அந்த ஜாதிக்கு வீடும் தெரில வீதியும் தெரில.......ஒரு வழியா சம்மதிச்சப்ப...ஊர்க் கூட்டம் போட்டு கணவன் இல்லா அவரை இரக்கமே இல்லாமல் வீடு காலி செய்ய சொன்னார்கள்.செய்யப்பட்டார்.அவர்களின் ஜாதி தெரியுமா? நாடார் ஜாதிதான்.... உங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு கலாச்சாரம் நாடார் ஜாதியில் இருப்பது துரதிருஷ்டவசமே...

ஒவ்வொரு ஜாதிகளின் கலாச்சாரமும் பண்பாடும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு தாழ் ஜாதியில் பிறந்தவனின் சுய மரியாதை.அதை சீண்டுவது ஜாதிதான் என்றால் அதை கடாசுவதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் பரவாயில்லை.....விரும்புவர்களையும் திசை திருப்பும் பதிவாகி விடுமோ என்ற அச்சம் எழுகிறது.....அந்த அச்சத்தின் விளைவே இந்த பதிவு(?!?!) நன்றி.

உங்களின் மற்றொரு பதிவு ..."சசிக்குமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க " பதிவு அருமை.இதையே சுந்தரப்பாண்டியன் வந்த போதே எழுதியிருந்தேன்.சினிமாவை சினிமாவா பார்க்க சொன்னாங்க....


குறிப்புகள்;
ஜாக்கி என்பது ஜாக்கி சேகரையோ ஜாக்கிசானையோ குறிக்காது :)

கு வார்த்தை தவிர்க்க முடியவில்லை ..மன்னிக்கவும்.

மறக்காமல் குற்றங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..பாரட்டுக்களை ஓட்டு பெட்டியில் பதிக்கவும்.கழுவி ஊத்துவதற்க்கு காமெடி கும்மியில் தொடர்பு கொல்லவும்....

மிகுந்த காலத்துக்குப் பின் எழுதின இந்த கவிதையில் (?!?!) பொருட் குற்றம் சொல் குற்றம் எது இருப்பினும் தயவு செய்து குறிப்பிடவும்.நன்றி.தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,
thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi 

வியாழன், 27 டிசம்பர், 2012

மொட்டைமாடி கல்வெட்டு


முதுகில் ஒட்டிய சுண்ணாம்பை
தட்டி விட்டு சென்று விட்டாய் நீ 
இருந்து போன அடையாளத்தோடு 
என் வீட்டு மொட்டை  மாடி 



முத்தங்களின் சுவடுகளையும் 
வியர்வைகளின் ஈரங்களையும் 
பாசி படிய தேக்கி நிற்கிறது 
என் வீட்டு மொட்டை மாடி


சற்றேறக்குறைய
ஒரு மாபெரும் கல்வெட்டு
என் வீட்டு மொட்டைமாடி....


மொட்டை மாடி கவிதைகள் மொக்கைன்னு ரைமிங்கா பின்னூட்டம் போட்டா மைனஸ் ஓட்டு போடுவேன் என்று பகிங்கரமாக மிரட்டுகிறேன்.சங்கத்து கும்மிகள் எச்சரிக்கை.

வியாழன், 4 அக்டோபர், 2012

நானும் அரவாணியே- இப்படிக்கு புற்கள்

ஒவ்வொரு ரயில் பயணங்களிலும் TTE யை சந்திக்கிறேனோ இல்லியோ கட்டாயம் நான் சந்தித்த மனிதர்கள் அரவாணிகள். சமூகத்தின் பார்வையில் கேலியாகவும்,விபச்சாரமாகவும் மட்டுமே கவனிக்கப்படும் இவர்களை நீங்கள் அங்கீகரிக்காத வரை நீங்களும் நானும் ஒரு வகையில் சமூக விரோதிகளே.


இனி  கவிதை (??!!)  இந்த கவிதை அரவாணிகளை பார்த்து புற்கள் பேசுவதாக புனையப்பட்டுள்ளது.( புரியணும்லா )

பனிப்பூக்கள் என்மேல் படுத்துறங்கும் 
மழைத்துளி சற்று இறங்கி பார்க்கும்
சுள்ளென்ற வெயிலும் 
சுகமாய் பரவிக்கொள்ளும் நான் புற்கள்.

ரோஜாப் பெண்ணின் முகமில்லை 
முள்ளைப் போன்ற முரடன் இல்லை 
இறைவன் படைப்பில் நான் 
ஒன்பதாம் பிறவி!

பாதம் பதித்துப்பார் கிச்சு முச்சு 
படுத்து கொஞ்சம் உறங்கு- 
நான் பட்டு மெத்தை 
விலை என்ன கேக்காதே 
நான் செல்லாக்காசு!

புயலுக்கும் தென்றலுக்கும் ஈடு செய்வேன் 
வெள்ளத்து நீருக்கும் விடை சொல்வேன் 
புணர்கின்ற அளவு ஏனோ 
யாரும் புரிவதில்லை.

பூமி பெண்ணின்  பச்சைதாவணி என்றாலும் 
பூலோகம் மதிக்கா எச்சை துணி 
எறும்பும் புழுவும் ஏறி நின்று 
கொக்கரிக்கும்!

மதித்து நடப்பவர் யாருமில்லை 
மிதியடி கீழே இன்னும் விடியலில்லை 
கூட்டமாய் இருந்தும் 
தனியே தவிக்கிறேன் 

உனக்கும் எனக்கும் பேதமென்ன அரவாணா?
பூஜையில் இல்லையென்றாலும் 
சூடும் பூக்களோடு சூடிக்கொள் 
என்னை நீயாவது...!!

                                                                           -இப்படிக்கு புற்கள் (2001)

2001ல் எழுதிய இந்த கவிதைக்கு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய மறந்துடாதிங்கப்பு..... 

கொசுறா ஒரு சின்ன கவிதை(?)

ஏய் யாரங்கே 
கண்தானம் செய்யுங்கள் 
இந்த இறைவனுக்கு!!
                                                    -2001

2001ல் எழுதிய இந்த ஒன்றே கால் கவிதைக்கு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய மறந்துடாதிங்கப்பு..... இந்த சொல் குத்தம் பொருள் குத்தம் எதுனாச்சும் கண்பிடிச்சிங்கனு வைங்க.அதுக்கெல்லாம்  நண்பன் ஹாரியின் கேள்வி பதில்கள் பதிவுகளில் என் சார்பில் தம்பி சீனு விளக்கம் தருவார்.(சீனு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கேபிள் கவிதைகள்

பதிவுலகில் கடந்த வாரத்தில் கேபிள் சங்கர் அவர்களின் ஒலக நாயகன் வகை கவிதை ஒன்று வகை தொகை இல்லாமல் வரவேற்பை  அள்ளியது என்னுள் உறங்கி கிடந்த கவிஞனை தட்டி எழுப்பி விட , எழுப்பி விட்ட கேபிள் சங்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த கவிதைகளுக்கு கேபிள் கவிதைகள் என்றே பெயரிட்டுள்ளேன்.கேபிள் சங்கர் தவறாக எடுத்து கொள்ள மாட்டார் என்றும் அவர் பெயரை கெடுக்கும் விதமாக கவிதைகள் இருக்காது என்றும் நம்புகிறேன் .ஆமென்.

குளியறை கதவடியில் தெரிந்த 
உன் கணுக்கால்களை விட 
அப்படி ஒன்றும் பிரம்மாதம் இல்லை 
உன் நிர்வாண அழகு !!

விலக்கப்படா பாத்திரங்களும் 
விலக்கப்பட்ட வெட்கங்களும் 
விளக்கி சொல்கின்றன காதல்தனை !

நான்காம் ஐந்தாம் முத்தங்கள் 
சலிக்கும்போது 
முதல் முத்த நினைவுகள் 
ஆறாம் முத்தத்தை விட இனிக்கிறது!!


திருட்டு  முத்த நினைவுகளில் 
திட்டமிடப்பட்ட உறவுகள் 
சலிப்பை தருகிறது!!

வழமையான முத்தம் ஒன்று 
மறக்கப்படும் போது 
வலிமையான தாம்பத்தியம் 
சந்தேகிக்கப்படுகிறது.!!!


ஒலியும் ஒளியும் வெள்ளிகளை 
முந்தி செல்வதில்லை 
சனிக்கிழமை இரவுகள்!!!


விஸ்கி : ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்........
                  நீங்க ஆதரவு தந்தா பீலிங்ஸ் இன்னும் வரும்.!!

ஞாயிறு, 17 ஜூன், 2012

தீண்டும் வரை தேவதைகள்...

அவர்கள் தேவதைகள்
விலைக்கு பேசப்படும்
உயிருள்ள தேவதைகள் ..
வாடகைக்கு படைக்கப்பட்ட
சிகப்பு விளக்கு தேவதைகள்...


மேனி தழுவும்  புடவை
நூலை விட
யோனி  தழுவிய ஆணின்
குறி  அதிகம்..


இரவு உலகத்தின்
கட்டிலினில்
விற்பனைக்கு  விரிக்கப்பட்ட
பொம்மைகள்
இந்த தேவதைகள்


சரித்திரம்  தொட்டு

தரித்திரம் தவிர்க்க
தகர டப்பா சில்லரைக்கு
தங்கமான உடல் கொடுக்கும்
தானத்தின் தலைமகள்கள்.


அரைமணி உறவுகள்
ஆயிரம் ஆயிரம் ....
கூட்டி கழித்து கணக்கு பார்த்தால்
மொத்த உலகும்
இவர்கள் சொந்தம்! 


அழித்து அழித்து
கிறுக்கப்படும்
காமத்து கிறுக்கல்களை
கிழியாமல் தாங்கி கொள்ளும்
திறந்த உடல் புத்தகங்கள்.



கலையரசி காணா
கலை புரிந்து
கண்டவனுக்கும்
மடி புரண்டு படி அளக்கும்
இவர்கள் கோயில் இல்லா சிலைகள்.


ஆயிரம் பாட்டெடுத்து
அருமையாக பாடினாலும்
அதிகாரத்தின் ஆளுமையில்
அவர்கள்....
தீண்டும் வரை தேவதைகள்
தூரம் வந்தால் ..வேசிகள்...விபச்சாரிகள்!!



ஞாயிறு, 3 ஜூன், 2012

வாழும் வள்ளுவருக்கு வாழ்த்துக்களுடன்...



கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க*
*கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய்** **நின்று**,*
*கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!*

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
நன்றி  -சித்ரா சுப்ரமணியன் (முக நூல்)

வெள்ளி, 1 ஜூன், 2012

மறந்து விட்டதாய் நினைப்பவளுக்கு....




கடற்கரை கடந்த பின்னும்
காய்ந்து போன செருப்புக்குளே
மிஞ்சி  போன மணலின் குறுகுருப்பாய்
உன் நினைவுகள்...!




நதிக்கரை மணலில்
விதைத்து  வைத்தோம்
காதலையும்  கவிதைகளையும்....
காதலோடு.. நீயும் உன் கணவனும்
கவிதையோடு... நானும் என் காதலும் மட்டும்  !!





புதுக்கவிதை போல
காதலித்தாய் !
கல்யாணம் என்றதும்
ஏனடி தோழி மரபானாய்?



மணிக்கணக்காய் காத்திருப்பாய்
மன்னித்து போவாய் ..
முகூர்த்த நேரத்திற்கு
முன்னமே வந்து விட்டேன்
ஏனடி  தோழி முறைக்கிறாய்?


விட்டு கொடு என்றேன்
விட்டு விடு என்றல்ல...!








ஓலமிட்டு  கடந்து விட்டாய் நீ
ரயில் போல ...
மௌனமாய் சகித்து கிடக்கிறேன்
தண்டவாளமாய்..!!








கண்கள் கண்டதும் பொய்
உதடுகள் தீண்டியதும் பொய் -உன்
கல்யாண செய்தி மட்டும் மெய்.



உன்னை பற்றி எழுதப்பட்ட
கவிதைகள் போலத்தான் நீயும்  ..
அனைத்தும் பொய்!!



திங்கள், 28 மே, 2012

ஆண் பெண் நட்பிற்க்கு..

முதல் காதல்
முதல் மழை
முதல் முத்தம்
இப்படியெல்லாம் எதுவுமில்லை
ஆனாலும்
அழுத்தமாய் நேசிக்கிறோம்
நட்பு !

என்ன பேசினோம் இருவரும்?
என்ன பேசவில்லை இருவரும்?
ஊரெல்லாம் ஒரே பேச்சு
நாம் காதலிக்கிறோமாம்..!!

பொழுது  போகாமல்
சினிமா சென்றோம்!
மொத்த ஊருக்கும் 
பொழுது போனது!


காதல்  நட்பாக மாறுகிறது
உனது  எனது முடிவுகளில்!
நட்பு காதலாகிறது
ஊர்  வாயின் வடிவுகளில்!!

                                                                  -2003ல் எழுதியது.

சனி, 26 மே, 2012

கடவுளாதல்-முகத்தில் அடிக்கும் காலத்தச்சன் கவிதை .

கடவுளாதல்
விடுதி அறை எண் 16 ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17 ல் நீங்கள் 
தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.

அந்த நெரிசல் பேருந்தில் 
அந்த பள்ளி சிறுமியிடம் 
அந்த வயோதிகர் 
அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு முன்னமே 
இறங்கிக்கொள்கிறீர்கள்.

பார்க்கப்படாமால் கதறுகிறது 
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல் 
புது மோஸ்தர் அலைபேசியில் 
புதிய நீலப் படங்களை 
சேமிக்கத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.

பெருநோய்  மூட்டை ஒன்று 
ஒன்றே கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய் 
ஒட்டியதாக 
கள்ள லாவகத்துடன் 
நிலம் தேய்த்தபடியே கடந்து செல்கிறீர்கள் .

அண்டைத் தீவில் 
அழுகிய நரகலாய் வாழ்வு 
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத் தாவுகிறீர்கள்.

இதில்  கவலைப்பட 
ஒன்றுமில்லை நண்பர்களே....
நீங்கள் தவணை முறையில் 
கடவுளாகிக்கொண்டிருக்கி றீர்கள் !
                                                                -காலத்தச்சன்
 ஆனந்தவிகடனா?குமுதமா? நியாபகம் இல்லை வார பத்திரிக்கையில் வந்த இந்த கவிதைதான் .என் வீட்டு வாசல் கதவில்  வரவேற்கும்.மொழியறீயாத வட இந்திய நண்பர்களுக்கு மொழி பெயர்த்து சொல்வது ஒரு சுகமான அனுபவம்.அத்தோடு ஈழம் பற்றி எடுத்துரைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

 நீங்கள் இடும் ஓட்டுக்கள் காலத்தச்சனுக்கு சமர்ப்பணம்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

அடிடா அவளை...உதைடா அவளை....

எத்தனை நாள்தான் பாஸ் உருகி உருகி கவிதை எழுதுறது?நமக்கு ஒரு மா சூ சொ வேண்டாம்?இனிமே மக்கா எந்த அட்டு பிகரு அப்பீட் ஆனாலும் சரி கொய்யால இந்த மாதிரி எழுதி கொடுத்து ஒருவாட்டியாவது ஒரு குத்தலை கொடுக்கணும்...



என்  அளவுக்கு உனக்கு
காதலிக்க தெரியாது
உன் அளவுக்கு எனக்கு
ஏமாற்ற தெரியாது ...



நீ இல்லாது இருந்திருந்தால்
பொழுது போக
சிரமபட்டிருப்பேன்.



நீ இல்லையென்றால்
காதல் செத்துவிடுமா என்ன?
சர்தான்.. போடி.....



நீ  கொடுத்த வரதட்சணை
நான் எடுத்த சினிமா டிக்கெட்
எதற்கு மதிப்பு அதிகம்?



நான்கு சுவருக்குள் நடந்த
நம் கல்யாணம்
மேடையில் நடக்கும்
உனது கல்யாணம்  
எது உண்மையான கல்யாணம்?



என் விந்தணு
உன் குழந்தை
எதனை முதலில் சுமந்தாய்?



நீ இன்றி
உன் புருசனில்லை
நான் இன்றி
உன் குழந்தையில்லை



உன் பிள்ளையை
கவனமாக  வளர்த்து கொள்
முறை தெரியாமல்
என் மகனை
காதலித்து விட போகிறாள் !!!




 இது எழுதி பல வருடங்கள் ஆகின்றது.இப்போ படிக்கிறப்போ காமெடியா இருக்குது.நல்லா இல்லைனா தயவு செய்து சொல்லிடுங்க.இல்லனா இதே மாதிரி இன்னும் எழுதுறேன்னு ஆரம்பிச்சிட கூடாது பாருங்க....