Translate

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கேபிள் கவிதைகள்

பதிவுலகில் கடந்த வாரத்தில் கேபிள் சங்கர் அவர்களின் ஒலக நாயகன் வகை கவிதை ஒன்று வகை தொகை இல்லாமல் வரவேற்பை  அள்ளியது என்னுள் உறங்கி கிடந்த கவிஞனை தட்டி எழுப்பி விட , எழுப்பி விட்ட கேபிள் சங்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த கவிதைகளுக்கு கேபிள் கவிதைகள் என்றே பெயரிட்டுள்ளேன்.கேபிள் சங்கர் தவறாக எடுத்து கொள்ள மாட்டார் என்றும் அவர் பெயரை கெடுக்கும் விதமாக கவிதைகள் இருக்காது என்றும் நம்புகிறேன் .ஆமென்.

குளியறை கதவடியில் தெரிந்த 
உன் கணுக்கால்களை விட 
அப்படி ஒன்றும் பிரம்மாதம் இல்லை 
உன் நிர்வாண அழகு !!

விலக்கப்படா பாத்திரங்களும் 
விலக்கப்பட்ட வெட்கங்களும் 
விளக்கி சொல்கின்றன காதல்தனை !

நான்காம் ஐந்தாம் முத்தங்கள் 
சலிக்கும்போது 
முதல் முத்த நினைவுகள் 
ஆறாம் முத்தத்தை விட இனிக்கிறது!!


திருட்டு  முத்த நினைவுகளில் 
திட்டமிடப்பட்ட உறவுகள் 
சலிப்பை தருகிறது!!

வழமையான முத்தம் ஒன்று 
மறக்கப்படும் போது 
வலிமையான தாம்பத்தியம் 
சந்தேகிக்கப்படுகிறது.!!!


ஒலியும் ஒளியும் வெள்ளிகளை 
முந்தி செல்வதில்லை 
சனிக்கிழமை இரவுகள்!!!


விஸ்கி : ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்........
                  நீங்க ஆதரவு தந்தா பீலிங்ஸ் இன்னும் வரும்.!!

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதிவுல அரசியலில் இதெல்லாம் சாதா'ரணம்'ப்பான்னு நிறைய பிரபலங்கள் சொல்றாங்க அண்ணா..

      நீக்கு
  2. என்ன பீலிங்க்ஸ்... என்னே ஏன் நல்லத் தான போயிட்டு இருக்கு... ஆனா எல்லாமே அருமை..சும்மா சொல்லக் கூடாது நல்ல எழுதறீங்க ... நீரும் கவிஞர்தானையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனு.... உனக்கு தெரியுமா..கவிதையை நான் மனப்பாடம் செய்துகொண்டேன் :D :D

      நீக்கு
    2. எதுக்குன்னே இந்த மனப்பாடம்லாம்?என்ன நடக்குது அங்கே?

      நீக்கு
    3. சீனு,கவிஞர் அப்படி இப்படின்னு ஜோல்னா பை தூக்கவிட்டுடாத ராசா...

      நீக்கு
    4. நன்றி நானும் மனபாடம் செய்து கொண்டுள்ளேன் .. யோவ் வரலாறே அங்க அவிங்களுக்கு இது தெரியாது...தெரிஞ்சதுன்னு வையும் அங்கயும் போய் மனபாடம் பன்னுவோம் வோய்

      நீக்கு
  3. கவிதை..அருமை...நான் ஏதோ ஹைக்கூ கவிதை மாதிரி கேபிள் கவிதைன்னு நெனச்சிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னன்னா செய்றது?எதுனாச்சும் வித்தியாசமா தலைப்பு வைக்கலன்னா வர மாட்டேங்குறாங்க.

      நீக்கு
  4. இங்கிலிஷ்காரங்க படிக்கிற அளவுக்கு முன்னேறிட்டேனா நானு....தேங்க்ஸ் தலைவா..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....