Translate

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பொறுப்பற்ற கலெக்டரின் செய்திக்கு உதயகுமாரின் பொறுப்பான பதிலடி

நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பொறுப்பற்ற விதமாக  அசாம்பாவித சம்பவங்களுக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிட ...அதற்க்கு பதில் கொடுக்கும் விதமாக உதயகுமார் கொடுத்துள்ள சூடான பொறுப்பான அறிக்கையை படியுங்கள்.




அன்பார்ந்தத் தமிழ் சொந்தங்களே:

முற்றுகைப் போராட்டத்துக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறோம். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் 


சற்று முன் வெளியிட்டிருக்கும் ஒரு பத்திரிக்கைச் செய்தியில் "அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

தி-லி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் சுமார் அறுபது குழந்தைகள் அண்மையில் இறந்தார்கள். இதற்கு யார் பொறுப்பேற்றார்கள்? சிவகாசியில் சுமார் நாற்பது பேர் கருகிச் செத்திருக்கிறார்களே? இதற்கு யார் பொறுப்பேற்றார்கள்? இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் 'நான் பொறுப்பு' என்று ஆட்சித் தலைவரோ அல்லது அரசியல் தலைவர்களோ, அதிகாரிகளோ பொறுப்பேற்கிறார்களா?

"பொறுப்பு ஏற்பது" என்பது ஒரு சிறந்த ஆளுமைச் சித்தாந்தம். பிரதமரிலிருந்து ப்யூன் வரை யாருக்குமே கிடையாதே இந்த நாட்டில். இந்த இழிநிலைக்கு என்ன பதில்?

பல்லாயிரகணக்கான மக்கள் குடும்பங்களுடன், குழந்தைகளுடன் தெருவில் கிடக்கப் போகிறோம். எங்களுக்கு, எங்கள் வாழ்வாதாரத்திற்கு, வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு, எதிர்காலத்துக்கு, அருமைத் தமிழ் சொந்தங்களே, தமிழ் ரத்தம் ஓடுகிற உடன்பிறப்புக்களே, நீங்கள்தான் பொறுப்பு. விரைந்து வாருங்கள் இடிந்தகரைக்கு. ஆதரவுக் கரம் நீட்டுங்கள் நம் அனைவரின் ஒட்டுமொத்த விடியலுக்கு. வணக்கம்.

அன்புடன்,
சுப. உதயகுமாரன்

8 கருத்துகள்:

  1. கேட்க வேண்டிய கேள்விகள் தான்...

    சுடச் சுட... உடனடி தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. The collector should resign from his post if any untoward incident happens.

    He is already trying to escape from any responsibility.

    For this reason alone he is not fit for that post.

    Shame to be called a collector who acts against his consciousness which is going to haunt him till his death.

    பதிலளிநீக்கு
  3. அமாம்! திரு.உதயகுமரன் அவர்கள் அவரை நம்பி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், அந்த போராட்டங்களை வழங்குபவர்கள், இணைந்து வழங்குபவர்கள் எல்லாருக்கும் பதில் சொல்ல பொறுப்பானவர் என்பது உன்மையே! ஆனால் இத்துனை பொறுப்பாகவும் சிறப்பாகவும் ஒரு பொது திட்டத்தை எதிர்த்து நெடிய போராட்டத்தை உலகம் முழுவதும் உள்ள பல நல்ல உள்ளம் கொண்ட கொடை வள்ளள்களின் ஆசீர்வாதத்தோடும்.. முக்கியமாக மக்களின் சொந்த பங்களிப்பான 10% வருமானத்தைக் கொண்டும் நடத்தப்பட்டு வருவதற்கு முழு காரணமான திரு.உதயகுமரன் அவர்கள் சிறந்த ஆளுமையாளர் என்பதில் சந்தேகம் இல்லை.. நமது உலகின் தலை சிறந்த ஜனநாயக நாட்டில் அவர் எதிர்பார்பது போல் எந்த புறுப்பேற்கும் திறனுடய, முடிவெடுத்து செயல்படுத்தும் திறனுடய நல்ல திட்டமிட்டு அதனை அறிவுபூர்வமாக செயல்படுத்தும் திறனுடய எவரையும் காணுதல் இயல்;ஆத ஒன்றுதான்...

    பதிலளிநீக்கு
  4. \\அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்\\

    அப்ப..அணு உலையால ஆபத்து வந்தா அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பேர்ப்பாரா ?

    பதிலளிநீக்கு
  5. How he passed the IAS Exam and got the collector post. we need an CID inquiry for his certification.

    பதிலளிநீக்கு
  6. factu factu factu factu.............நன்றி தலைவா வருகைக்கு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....