செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்......நிதானமா யோசித்தாலும் அவசரமா யோசித்தாலும் ரெண்டு பேர் மட்டுமே நியாபகத்தில் முந்தி வருகிறார்கள்.ஒருவர் ஆசிரியரிலிருந்து தாயை போல மாறிய தெய்வம்.இன்னொருவர் தாயாய் இருந்ததை விட ஆசிரியராகவே வாழ்பவர்.
முதலானவர் சுகந்தி டீச்சர்.வேதராண்யத்தில் கடந்த 2009ல் நிகழ்ந்த பள்ளி வாகன விபத்தில் நீரில் மூழ்கி தத்தளித்து சாக இருந்த 12 பிஞ்சு உயிர்களை காப்பற்றி தன் உயிரை ஈந்த தியாக சகோதரி.முத்துக்குமாருக்கும்,செங்கொடிக்கும் இருந்த மன வலிமை இல்லாமல் அப்படி எளிதாக முடியாது அந்த தியாகம். ஊர் கூடி கும்பிடும் தெய்வமாக மாறிய சுகந்தி டீச்சரை மறப்பது என்பது முடியாத ஒன்று.
மிக மோசமான சமூக நிலையில் சுயநல உலகில் தன்னை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தன் மட்டும் முடிந்த அளவு இறுதி வரை குழந்தைகளின் உயிர் காப்பாற்றிய சுகந்தி டீச்சரின் மன தைரியம் போற்றப்பட வேண்டியதே.செங்கொடிக்கு தந்த வீர வணக்கம் சுகந்தி டீச்சருக்கும் பொருந்தும்.
பொதுவாக என் பள்ளி சூழ்நிலைகள் அடி உதை தண்டனைகளோடு பயமாகவே கழிந்து விட்டதால் அன்பாக இருந்த ஒருவர் இந்த நாளில் நியாபகத்திற்கு வருவதில் ஆச்சரியமில்லை.
அந்த டீச்சர் அன்பாகத்தான் கடிந்து கொள்வார்.மூன்றாம் வகுப்பின் முட்டாள்தனமான ஒவ்வொரு செயலுக்கும் துன்புறுத்தியதாக நியாபகம் இல்லை.அன்பு அன்பு அன்பு இதை மட்டுமே கொண்டு திரிந்த டீச்சர் எனது மூன்றாம் வகுப்பு டீச்சர்.
தாழ்த்தப்பட்ட ஜாதி பிறப்பு என்பதால் தன் மகன்களுக்கு அரசு வழங்கும் இலவச சீருடை,செருப்பு,புத்தகம்,நோட் என அனைத்தையும் கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கும்,புத்தகம் தொலைத்து அழும் குழந்தைகளுக்கும் கொடுத்து உதவிய டீச்சர் அப்போதே உதவும் உள்ளத்தை விதைத்து வைத்தவர்.
நான் பார்த்த ஆசிரியர்களில் பள்ளியிலும் வெளியிலும் தனியாக டியூஷன் எடுத்து பணம் பார்க்காமல் இருந்த ஆசிரியர் அந்த டீச்சர்.
தன் மூன்று மகன்களையும் கவனித்து பள்ளிக்கும் சென்று மாலையில் அன்றிருந்த அறிவொளி இயக்கத்தில் தன்னார்வ தொண்டராக பணி செய்து தன் மாணவர்களையும் அதில் ஈடுபடுத்தி அவர்களையும் ஆசிரியராக மாற்றியவர் அந்த டீச்சர்.இன்று பக்கத்து வீட்டு சுடலி பாட்டி தன் கொண்டக்க மண்டக்க கையெழுத்தை கொண்டாட வைத்த ஆசிரியர் அவர்.
சாராய வாசனையோடு சகட்டுமேனிக்கு சண்டை போடும் பெருசுங்களையும் சரி, சத்தமாக வாயடிக்கும் பெண்களையும் சரி அவர் அன்பாக பேசி அன்பாக திருப்பி அனுப்பி அன்பை கொடு அன்பை பெறுவாய் என்று பலமுறை நடைமுறையில் உணர்த்தியுள்ளார் அந்த ஆசிரியர்.
பள்ளியோ தாழ்த்தப் பட்ட மக்களின் பிள்ளைகள் நிறைந்தது.ஆசிரியர்களோ உயர் ஜாதியால் நிறைந்தது.ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி ஆசிரியரான அவர் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கவனிக்கப்பட்டார்.கொண்டாடப்பட்டார்.நல்லது கெட்டதுகளில் அழைக்கப்பட்டார்.அந்த நேரங்களில் அது எனக்கு புரியவில்லை என்றாலும் அதன் அவசியமும்,அந்த நேரத்து நிலைமைகளும் இன்று எனக்கு அவரின் மதிப்பை புரிய வைக்கின்றன.அந்த இனத்தின் முதல் தலைமுறை ஆசிரியர் அல்லவா?
மூன்றாம் வகுப்பு பாஸ் ஆனாலும் அந்த ஆசிரியர் அன்பில் அடுத்த வகுப்பு போகாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் அழுகை காட்சிகள் என்னை வியக்க வைத்துள்ளன.அன்பை தவிர வேறொன்றுமில்லை.
அறிவொளி இயக்கம் முடங்கியபோது மிச்ச மீதி பென்சில்களை கிராமத்து பள்ளிக்கு தானாக கொடுத்ததாகட்டும்,ஐந்தாம் வகுப்பு முடித்ததும் பிள்ளைகளை ஆறாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாகட்டும் பீசுக்காக படிக்க மறுக்க வைக்கும் பிள்ளைகளின் வீட்டில் முதல் பணம் கட்டி படிக்க உதவியதாகட்டும் கல்வி செல்வம் மட்டுமே நிரந்தரம் என்று சொல்லாமல் சொன்னவர் அந்த டீச்சர்.
கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.கல்வியை தவிர எதை சேர்த்தாலும் அது நிற்காது என்று அவர் பணத்திற்கு குறைவாகவே மதிப்பு தந்து நடந்ததால்தான் என்னவோ இன்றும் என் கரங்கள் பணத்தால் கட்டப்படாமல் சுதந்திரமாக உள்ளது.பரந்த மனமும் திறந்த கைகளும் கொண்டிருந்தால் உலகமே உன்னோடு நிற்கும் என்று புரிய வைத்தவர் அந்த டீச்சர்.
தன் 63ம் வயதில் ஆசிரியர் தினத்தில் பிறந்த தன் பேரனுக்காக பரிசாக ராஜஸ்தான் வரை எழுதுமேசை(டெஸ்க்) சுமந்து வந்து கல்வியின் அருமை காட்டி அன்பாக முத்தம் தந்த அந்த டீச்சர் என்னும் என்னை பெற்ற தாய் இன்று என்னால் நினைக்க பட வேண்டியவரே.ஒரு தாயாக அவரிடம் நான் பெற்றதை விட ஆசிரியராக அவரிடம் பெற்றது அதிகம் என்றே நினைக்கிறேன்.அன்னையர் தினத்தை விட இன்றுதான் எனக்கு அதிக விசேசமாக தோணுகிறது.
ஒரு தாயாக இல்லாமல் வழிகாட்டும் ஆசிரியராகவே வாழ்ந்து வரும் என் ஆசிரிய அம்மாவிற்கும்,ஆசிரியராக ஆரம்பித்து தெய்வமாக மாறிய சுகந்தி டீச்சருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!
முதலானவர் சுகந்தி டீச்சர்.வேதராண்யத்தில் கடந்த 2009ல் நிகழ்ந்த பள்ளி வாகன விபத்தில் நீரில் மூழ்கி தத்தளித்து சாக இருந்த 12 பிஞ்சு உயிர்களை காப்பற்றி தன் உயிரை ஈந்த தியாக சகோதரி.முத்துக்குமாருக்கும்,செங்கொடிக்கும் இருந்த மன வலிமை இல்லாமல் அப்படி எளிதாக முடியாது அந்த தியாகம். ஊர் கூடி கும்பிடும் தெய்வமாக மாறிய சுகந்தி டீச்சரை மறப்பது என்பது முடியாத ஒன்று.
![]() |
| மாதா பிதா குரு சுகந்தி டீச்சர் |
பொதுவாக என் பள்ளி சூழ்நிலைகள் அடி உதை தண்டனைகளோடு பயமாகவே கழிந்து விட்டதால் அன்பாக இருந்த ஒருவர் இந்த நாளில் நியாபகத்திற்கு வருவதில் ஆச்சரியமில்லை.
அந்த டீச்சர் அன்பாகத்தான் கடிந்து கொள்வார்.மூன்றாம் வகுப்பின் முட்டாள்தனமான ஒவ்வொரு செயலுக்கும் துன்புறுத்தியதாக நியாபகம் இல்லை.அன்பு அன்பு அன்பு இதை மட்டுமே கொண்டு திரிந்த டீச்சர் எனது மூன்றாம் வகுப்பு டீச்சர்.
தாழ்த்தப்பட்ட ஜாதி பிறப்பு என்பதால் தன் மகன்களுக்கு அரசு வழங்கும் இலவச சீருடை,செருப்பு,புத்தகம்,நோட் என அனைத்தையும் கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கும்,புத்தகம் தொலைத்து அழும் குழந்தைகளுக்கும் கொடுத்து உதவிய டீச்சர் அப்போதே உதவும் உள்ளத்தை விதைத்து வைத்தவர்.
நான் பார்த்த ஆசிரியர்களில் பள்ளியிலும் வெளியிலும் தனியாக டியூஷன் எடுத்து பணம் பார்க்காமல் இருந்த ஆசிரியர் அந்த டீச்சர்.
தன் மூன்று மகன்களையும் கவனித்து பள்ளிக்கும் சென்று மாலையில் அன்றிருந்த அறிவொளி இயக்கத்தில் தன்னார்வ தொண்டராக பணி செய்து தன் மாணவர்களையும் அதில் ஈடுபடுத்தி அவர்களையும் ஆசிரியராக மாற்றியவர் அந்த டீச்சர்.இன்று பக்கத்து வீட்டு சுடலி பாட்டி தன் கொண்டக்க மண்டக்க கையெழுத்தை கொண்டாட வைத்த ஆசிரியர் அவர்.
சாராய வாசனையோடு சகட்டுமேனிக்கு சண்டை போடும் பெருசுங்களையும் சரி, சத்தமாக வாயடிக்கும் பெண்களையும் சரி அவர் அன்பாக பேசி அன்பாக திருப்பி அனுப்பி அன்பை கொடு அன்பை பெறுவாய் என்று பலமுறை நடைமுறையில் உணர்த்தியுள்ளார் அந்த ஆசிரியர்.
பள்ளியோ தாழ்த்தப் பட்ட மக்களின் பிள்ளைகள் நிறைந்தது.ஆசிரியர்களோ உயர் ஜாதியால் நிறைந்தது.ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி ஆசிரியரான அவர் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கவனிக்கப்பட்டார்.கொண்டாடப்பட்டார்.நல்லது கெட்டதுகளில் அழைக்கப்பட்டார்.அந்த நேரங்களில் அது எனக்கு புரியவில்லை என்றாலும் அதன் அவசியமும்,அந்த நேரத்து நிலைமைகளும் இன்று எனக்கு அவரின் மதிப்பை புரிய வைக்கின்றன.அந்த இனத்தின் முதல் தலைமுறை ஆசிரியர் அல்லவா?
மூன்றாம் வகுப்பு பாஸ் ஆனாலும் அந்த ஆசிரியர் அன்பில் அடுத்த வகுப்பு போகாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் அழுகை காட்சிகள் என்னை வியக்க வைத்துள்ளன.அன்பை தவிர வேறொன்றுமில்லை.
அறிவொளி இயக்கம் முடங்கியபோது மிச்ச மீதி பென்சில்களை கிராமத்து பள்ளிக்கு தானாக கொடுத்ததாகட்டும்,ஐந்தாம் வகுப்பு முடித்ததும் பிள்ளைகளை ஆறாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாகட்டும் பீசுக்காக படிக்க மறுக்க வைக்கும் பிள்ளைகளின் வீட்டில் முதல் பணம் கட்டி படிக்க உதவியதாகட்டும் கல்வி செல்வம் மட்டுமே நிரந்தரம் என்று சொல்லாமல் சொன்னவர் அந்த டீச்சர்.
கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.கல்வியை தவிர எதை சேர்த்தாலும் அது நிற்காது என்று அவர் பணத்திற்கு குறைவாகவே மதிப்பு தந்து நடந்ததால்தான் என்னவோ இன்றும் என் கரங்கள் பணத்தால் கட்டப்படாமல் சுதந்திரமாக உள்ளது.பரந்த மனமும் திறந்த கைகளும் கொண்டிருந்தால் உலகமே உன்னோடு நிற்கும் என்று புரிய வைத்தவர் அந்த டீச்சர்.
| அந்த டீச்சர்.......என் அம்மா!! |
தன் 63ம் வயதில் ஆசிரியர் தினத்தில் பிறந்த தன் பேரனுக்காக பரிசாக ராஜஸ்தான் வரை எழுதுமேசை(டெஸ்க்) சுமந்து வந்து கல்வியின் அருமை காட்டி அன்பாக முத்தம் தந்த அந்த டீச்சர் என்னும் என்னை பெற்ற தாய் இன்று என்னால் நினைக்க பட வேண்டியவரே.ஒரு தாயாக அவரிடம் நான் பெற்றதை விட ஆசிரியராக அவரிடம் பெற்றது அதிகம் என்றே நினைக்கிறேன்.அன்னையர் தினத்தை விட இன்றுதான் எனக்கு அதிக விசேசமாக தோணுகிறது.
ஒரு தாயாக இல்லாமல் வழிகாட்டும் ஆசிரியராகவே வாழ்ந்து வரும் என் ஆசிரிய அம்மாவிற்கும்,ஆசிரியராக ஆரம்பித்து தெய்வமாக மாறிய சுகந்தி டீச்சருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!
| Tweet | |||||

சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு நண்பரே... அம்மா தான் எல்லாருக்கும் முதல் ஆசிரியர்...
பதிலளிநீக்குதன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...
சிறப்பான கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தந்த அண்ணாவுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்....நன்றி அண்ணா..
பதிலளிநீக்குNo muslim teacher in the list. So sad. Because, all muslims good. Hindus are bad. :) You know what I mean.
பதிலளிநீக்குஆங் அப்புறம்....சூப்பர் நண்பரே உங்க கருத்து...(TM 2012)
பதிலளிநீக்குஅண்ணா உங்க எழுத்து நடை அருமை கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. அன்பான ஆசிரியர் என்றதும் என் பள்ளிகால நினைவுகள் ஓட்டம் எடுக்க ஆரம்பித்தது பயபடாதீர்கள் பதிவெல்லாம் எழுதிவிட மாட்டேன்.
பதிலளிநீக்குஅந்த ஆசிரியரே உங்கள் அம்மா என்று தெரிய வந்த பொழுது நெகிழ்ச்சியாய் இருந்தது... அன்பான ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்கள் மனத்தில் நிலைப்பார்கள் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் உங்கள் அம்மா .
(TM 2012) ==> ஹா ஹா ஹா
என்னவோ சீனு நீதான் இப்படி சொல்றே...உனக்காகவே எழுதிட்டு இருக்கிறேன்னு சொன்னா நம்ப மாட்டே அதனாலதான் சொல்லலை.
நீக்குநீ பதிவிடுவாய் என்று எதிர்பார்த்தேன்.அதே போல பதிவுலகத்திலும் நிறைய எதிர்பார்த்தேன்.ஏமாற்றம்.
அம்மா உண்மையிலேயே நல்ல டீச்சர்.நிறைய பேருக்கு பிடிக்கும்.நன்றி சீனு...
த ம 2012#### என்ன செய்ய இப்படி கேட்டு வாங்கிக்கிறாங்க...
ஆசிரிய தினத்தில் அன்னையை சிறப்பித்த விதம் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
வருகைக்கு நன்றி அண்ணா..
நீக்கு