Translate

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள்

மனித கேடயமாக மக்களை பயன்படுத்துவதை பற்றிய இந்த பதிவு அப்பட்டமான ஒரு உண்மையை உரைக்கிறது.உண்மைக்கும் உயிருக்கும் நடுவில் இந்த பதிவை எழுதுகின்றேன்.உண்மையை புரியும் பட்சம் அப்பாவி உயிர்கள் காப்பற்றப்படலாம்.அதே நேரம் அந்த இடத்தில்  என்னை போல ஒரு  ராணுவ வீரன் இறக்கப்பட நேரிடலாம் என்றும் தெரிந்தே எழுதுகிறேன்.

காஷ்மீரில் நடக்கும் முக்கியமான ஆபரேசன் CORDON AND SEARCH OPERATION.  சுருக்கமா CASO. (இதை பற்றி கோனார் பதிவு போடலாமா என்று யோசிக்கிறேன்.பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.)அதாவது முற்றுகை இட்டு சோதனை செய்தல்.

நம்ம ஊருக்குள்ளே ஒரு போராளி ஏதோ ஒரு காரணமா ஊருக்குள் வந்துள்ளார் சரியா...அதை தெரிஞ்சிகிட்ட ராணுவம் ஊரை வளைச்சி முற்றுகை இட்டு உள்ளது என்றால் அதுதான் CASO. வீடு வீடா சோதனை நடக்கும்.ஆம்பிளை பசங்க மொத்தமும் பொதுவா ஒரு இடத்துக்கு வந்துடனும்.தவறி வீட்டுக்குள் இருந்தா தவறுதலாக தீவிரவாதியா கருதப்பட்டு தவறுதலாக சுடப்படலாம்.தவறுதலாக சாகலாம்.அரசால், ஊடகங்களால் சரியாக்கப்படலாம்.சரியாக்கபடும்.பட்டுள்ளது.

ஆளில்லா வீடுகள் 
ஒவ்வொரு வீடாக நுழைந்து சோதனை செய்யவேண்டும்.எந்த வீட்டின் உள்ளே இருந்தும் குண்டுகள் சீறி வரலாம்.நுழை வாயிலில் கண்ணி வெடி வைத்திருக்கலாம்.உயிரை பணயம் வைத்து யார் முன்பே செல்வது?வீட்டுக்குள் எப்படி நுழைவது?எப்படி சோதனை போடுவது?

இங்கேதான் ராணுவம் தனது எல்லையை மீறுகிறது...மனித கேடயமாக காஷ்மீரிகளை  பயன்படுத்துகிறது.

ஆம்,ராணுவம் நான்கைந்து காஷ்மீரி வாலிபர்களை பிடித்து வலுக்கட்டாயமாக ஒவ்வொரு வீடாக உள்ளே அனுப்பி வைப்பார்கள்.அந்த இளைஞர்கள்தான்  முதலில் உள்ளே போய் அனைத்து ஜன்னல்களையும் திறந்து காண்பிக்க வேண்டும்.உள்ளே இருந்து வரும் முதல் அட்டாக்கை அவர்கள்தான் எதிர் கொள்ள வேண்டும்.கவசம் தாங்கிய உடைகள்,ஹெல்மெட் என்று எந்த பாதுகாப்பும் இல்லாமல் நிராயுதபாணியாக உள்ளே அனுப்பப்படும் அந்த இளைஞர்கள்தான் ராணுவத்திற்கு மனித கேடயங்கள்.

பலவித ஆயுதங்களும்,பாதுகாப்புகளும்,பயிற்சிகளும் கொண்ட ராணுவம் உள்ளே நுழைய வேண்டுமா?நிராயுதபாணி இளைஞர்கள் நுழையவேண்டுமா?

அந்த மனித கேடயங்கள்  சோதனை செய்த பிறகுதான் ராணுவம் உள்ளே நுழையும்.அந்த இளைஞர்கள் ஒருவேளை உள்ளே செல்ல மறுத்தால்?

உள்ளே போக மறுத்தால் அடிகளும்,உதைகளும்,பிறப்பு பற்றிய அசிங்க பேச்சுக்களும் ஏச்சுக்களும் கிடைக்கும் .தீவிரவாதிகளுக்கு ஆதரவான ஊர் என்ற சிறப்பு கவனிப்பில் அடிக்கடி சோதனை நடைபெறும்.பல கைதுகள்,சித்திரவதைகள்,உயிரிழப்புகள் தொடர்கதையாகும்.

ஒருவேளை அப்படி அந்த வாலிபர்களின் உயிருக்கு ஏதும் நேர்ந்தால் அவனுக்கு சத்தியமாக இந்தியா மெடல் குத்தப்போவதில்லை.மாறாக அவனையும் தீவிரவாதியாக்கும் வேலைகள் நடைபெறும்.இல்லையெனில் CROSS FIRE ல் செத்ததாக காண்பிக்கும்.

அந்த வாலிபர்களின் பதின் வயது பையன்களின் வலிகளையும்  கண் முன்னே பலியாடாய் போகும் மகன்களை பெற்ற  தாய்களின் தந்தையர்களின் கண்ணீர்களையும் நாம் என்று உணர்வோம்?

ஒவ்வொரு வீடும் சோதனை செய்யும்போது வேர்க்க விறு விறுக்க உள் நுழைந்து வெளியே வரும் காஷ்மீர் பசங்களை போலத்தான் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நடக்கும் CASO ஆபரேசன்கள் நடக்கின்றன.

ஊர்ல உள்ள உங்க தம்பியையும் பக்கத்தூட்டு   பசங்களையும்  பிடிச்சி கட்டாயமாக அந்த மாதிரி தீவிரவாதி இருக்கிற வீட்டுக்குள் அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்?உள்ளே உள்ள ஆயுத போராளி ராணுவம் நுழைகிறது என்று சுட்டால்?அதில் உங்கள் தம்பியோ மச்சானோ உடல் சிதறி விழுந்தால்?ஊனமானால்?உயிரிழந்தால்?கொஞ்சமா கற்பனை செய்து பாருங்கள்.

இங்கே மனித கேடயமாக யார் யாரை பயன்படுத்துகிறார்கள் என்று 'சோ ' போன்ற அண்ணாவிகள் அவசியம் தெரிவிக்கவும்.இது சரிதானா என்று தன் வீட்டில் இவற்றை நிறுத்தி யோசிக்கவும்.

2006ல் கமாண்டோ பயிற்சியின் போது இதை(CASO) பற்றிய வகுப்பில் இது போல செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எனது அதிகாரி ஒருவர் சொன்ன போதுதான் எனக்கும் உண்மை தெரிந்தது.

குறிப்பு: நான்  காஷ்மீரில் இருந்த வரை  எங்களது ஆபரேசன்களில் காஷ்மீர் வாலிபர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் நடக்கவில்லை என்பது ஆறுதல்.அதன் காரணம் என்னவென்றும்,அப்படி மனித கேடயம் இல்லாமல் நடந்த ஆபரேசன் ஒன்றை பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்.

இது உண்மைக்கும், என்னை போன்ற ஒருவனின் உயிருக்கும் நடுவில் உண்மைக்காக எழுதப்பட்டுள்ளது.தங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்.
கேள்விகள்  கேளுங்கள்.உங்களின் கேள்விகள் பல உண்மைகளை கொடுக்கட்டும்.புரிதலை தரட்டும்.எனவே கேள்விகள் கேளுங்கள்.

இந்த பதிவின் தொடர்ச்சியை படிக்க இங்கே சுட்டுங்கள் மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள்- ஒரு சிறிய தொடர்ச்சி





59 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. முக்கியமான பதிவு அண்ணா... இப்படி அப்பட்டமாக நடக்கும் ஒரு மனித உரிமை மீறல் செயல் ஏன் பத்திரிக்கைத் துறையினராலும் மூடி மறைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மக்கள் போராட்டம் இதற்க்கு எதிராக நடைபெற்றது இல்லையா?
    இது போன்ற செயல்கள் இந்திய இராணுவத்தின் மீதுள்ள மதிப்பைக் குறைக்கும் வகையில் உள்ளது....

    உயிருக்கும் உண்மைக்குமான இடைவெளியில் ஏதோ ஒரு உயிர் நிச்சயமாய் மாட்டிக் கொண்டுள்ளது என்பது நிதர்சனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனு,இப்படிப்பட்ட ஒரு மீறல் இருப்பது நானும் செய்த மீறல் எனக்கே காஷ்மீர் விட்டு வந்தபின்தான் தெரிந்தது.மற்றவர்கள் ஏன் உள்ளே பணிபுரியும் மிகுதியான ஆட்களுக்கே தெரிய வாய்ப்பில்லை.

      நீக்கு
  3. சகோ. சதீஷ் செல்லதுரை ,

    உண்மைக‌ளை நெஞ்சுர‌த்துட‌ன் ப‌கிரும் தாங்க‌ளின் மீது அளவிட முடியாத ம‌திப்பும் ம‌ரியாதையும் இய‌ல்பாக‌ பொங்குகிற‌து.


    தொட‌ருங்க‌ள்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ராணுவவீரர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியதுதானே ஒவ்வொரு தாயும் அவர்களை பெற்றதுபோல் தானே பெத்து வளர்த்திருப்பார்கள். இதுபோன்ற காரியங்களை செய்வதால் பாதிக்கபட்டவன் உன்னமையான தீவிரவாதியாக மாறிவிடுவார்கள் அல்லவா

      நீக்கு
  4. காஷ்மீர்: இந்திய இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்

    தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும் .

    இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை . ‘ வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள் ’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார் , கதறுகிறார் . ‘ என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை கொன்று விடுங்கள் ’ என்கிறார்

    காஷ்மீர் , அங்கே இந்திய இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் .

    பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவு செய்யலாம்

    பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம் .

    தாயின் முன் மகளையும் , மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம் .

    தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் .

    பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம் .

    யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம் .

    மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம்

    தேவையான போது கொன்று புதைக்கலாம் .

    பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

    புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

    இன்னும் , இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

    யாரும் கேட்க மாட்டார்கள் .

    இந்தியாவை எந்த மேற்குலக அரசும் , அது பற்றி கேட்காது .

    எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இறங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை .

    ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து காஷ்மீரை நீக்கினாலும் , காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது .

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர் , இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது .

    ஆனால் இன்று , காஷ்மீர் பள்ளத்தாக்கு , காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் . காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள் . உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம் , காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது

    “ தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும் . இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை . ‘ வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள் ’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார் , கதறுகிறார் .

    ‘ என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை கொன்று விடுங்கள் ’ என்கிறார் அவர் .

    அந்த இராணுவ சிப்பாய வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே , ‘ உன் ஆசைப்படியே நடக்கட்டும் ’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான் .

    தன் காரியத்தைத் தொடர்கிறான்

    ”. இதுபோன்ற ஓராயிரம் கதைகளை , காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன .

    இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

    1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை .

    70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர் .

    இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர் .

    இந்த மரண எண்ணிக்கைகூட , மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது .


    Source; http://www.inneram.com/

    பதிலளிநீக்கு
  5. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.

    ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.

    ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,

    அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.


    CLICK TO >>>>>காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு . கீற்று சிறப்புக் கட்டுரை. - அ.முத்துக்கிருஷ்ணன் <<<<< READ

    .

    பதிலளிநீக்கு
  6. சகோ சதீஷ்!

    நமது ராணுவம் எந்த அளவு மனித நேயமற்று நடந்து கொள்கிறது என்பதை உங்கள் பதிவு தெளிவாக்குகிறது. களத்தில் இருந்த நீங்களே இதனை எழுதுவது இந்த செயல்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்கிறது. எந்த வொரு பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் நீங்கள் அளிக்கும் இந்த தகவல்கள் நடுநிலையாளர்களை சென்றடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்து சொல்லுங்கள் ....சாட்சி சொல்ல வருகிறேன் சகோ....போர் என்பது தனி...அதில் அத்து மீறல் என்பது சரியல்ல...

      நீக்கு
  7. படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது, ஆனால் இங்குள்ள பார்பன ஊடகங்கள் காஷ்மீரிகள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று திமிரோடு எழுதுகிறது. மேலும் இந்தியாவில் வெகு ஜன ஊடகங்கள் பார்பன வசம் தான் இருக்கு, மற்ற ஊடகங்களும் அதையே வாந்தி எடுக்கிறது.
    இப்பொழுது காஷ்மீர் மக்களுக்கு நல்ல விடிவு காலம் வரும், வர வேண்டும் என்று பிரார்த்தனை மட்டும் தான் செய்ய முடியும் எங்களை போன்றவர்களால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்பன ஊடகங்கள்...பாட புத்தகங்கள்,சினிமாக்கள்,இப்படி பல உள்ளன சகோ...போராடும் அனைவருக்கும் விடிவு வரும் சகோ.

      நீக்கு
  8. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்க முடியாத கொடூரமான செயல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு நண்பா,இது முற்றிலும் முற்றிலும் உண்மை நண்பா,..காலம் காலமாக நடக்கும் செயல் இது.இந்த ஆபரேசன் இப்படித்தான் நடக்கும்.இல்லை எனில் ராணுவம் மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும்.அடுத்த பதிவில் இதற்கான உதாரணம் தருகிறேன்.மறுபடி ஒருமுறை காஷ்மீர் சென்றால் வீடியோ ஆதாரத்தோடு பதிவு தருகிறேன்.நன்றி நண்பா....

      நீக்கு
  9. அது சரிங்க அங்க பர்தா போடாத பொண்ணுங்களுக்கு அசிட் ஊத்துரான்கலாம் அது பற்றி எதுவும் எழுத மாட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தெரிஞ்சா எழுதுங்க நண்பா....பதில்களும் புரிதலும் உருவாகட்டும்.இந்த பதிவுக்கு என்ன சொல்றீங்க?

      நீக்கு
  10. இந்திய இராணுவம் பொதுமக்களை பணைய கைதிகளாக பயன்படுத்துவதை ஞாயபடுத்த முடியாது. அதே போல் காஷ்மீர் முஸ்லிம் மக்களுக்காக (காஷ்மீரில் இந்துக்களும் முன்பு இருந்தாங்க இப்போ தொரத்தி புட்டாங்க) போராடுகிறோம் என்று கொக்கரிப்பவர்கள் இரரணுவம் காஷ்மீரிகளை பணய கைதிகளாக கொண்டுவரும் போது ஏன் தாக்குதல்களை தொடுக்கிறார்கள்.? அவர்களையும் கண்டிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே உங்களுக்கு எனது அடுத்த பதிவு இதற்கான பதிலை தரும்.அவசியம் படிக்க அழைக்கிறேன்.

      நீக்கு
  11. " பிரார்த்தனை மட்டும் தான் செய்ய முடியும் எங்களை போன்றவர்களால்"
    அது மட்டும் செய்தால் பரவாயில்லை. குண்டு வைக்கிறீங்க , எங்கேயோ நடந்த பிரச்சினைக்கு இந்தியாவில் ஆர்ப்பாட்டம் செய்து பொது சொத்தை அழிக்கிரீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வருகிற ஆத்திரத்தில் நானே குண்டு வைப்பேன் நண்பா....அவ்வளவு கொடுமைகள் இந்த நாட்டில்.குண்டு வெடிப்புகளை விட மறைமுக ஊழல்களில் இந்தியாவில் இறக்கும் ஏழைகள் எளியவர்கள் அதிகம் நண்பரே....பொது மக்களுக்கு குண்டு வைத்தால் தவறுதான்...ஆனால் அதை பேசும் அளவுக்கு மற்றவற்றை ஏன் பேசுவதில்லை.இந்துத்துவ குண்டு வெடிப்புகளையும் பேசினால் நலம்.

      நீக்கு
  12. பாகிஸ்தான் வெறி பிடித்த இராணுவம் பங்களாதேஷ் பெண்கள் 200,000 பேரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. கொஞ்ச நஞ்சமில்லை இரண்டு லட்சம். இது இந்திய அரசு கட்டிவிட்ட கட்டு கதை அல்ல. பங்களதேஷ் அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது. உண்மை என்ற வாந்தி எடுப்பவர் இதற்க்கு என்ன சொல்லபோகிறார்? பங்களாதேஷ் பெண்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல போகிறார

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,நான் பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை பார்க்கவில்லை.நான் கண்டதை மட்டுமே எழுதுகிறேன்.உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் பதிவிடலாமே......ஆதாரத்தோடு.என் பதிவுகளுக்கு ஆதாரம் என் வேலையே.இப்படி எழுதுவது எனக்கு என் வேலைக்கு ஆபத்து என்று அறிந்தே எழுதுகிறேன்.

      நீக்கு
  13. காஷ்மீர் காணும் இடமெல்லாம் :

    மரண ஓலங்கள்.

    இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்.

    பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவு செய்யலாம்

    அங்கே இந்திய இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் .

    மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம் .

    தாயின் முன் மகளையும் , மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம் .

    தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் .

    பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம் .

    யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம் .

    விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம்

    தேவையான போது கொன்று புதைக்கலாம் .

    பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

    புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

    இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

    யாரும் கேட்க மாட்டார்கள் .

    ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,

    அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம்,

    காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.


    Rashtriya Rifles Of Indian Army gang Raped Eighty ladies

    Even A pregnant Lady was not spared.

    An Eighty year old lady was also a victim.



    CLICK TO >>>> Army gang rape in kashmir. <<<<<< see video

    CLICK TO >>>> Indian Army Attack on Hospital in kashmir!!! <<<<<< see video

    CLICK TO >>>> Watch brutality of Indian Army in Kashmir Part1 <<<<<< see video


    CLICK TO >>>> Watch brutality of Indian Army in Kashmir Part 2 <<<<<< see video


    CLICK TO >>>> Watch brutality of Indian Army in Kashmir Part 3 <<<<<< see video

    .

    பதிலளிநீக்கு
  14. சகோ.சதீஷ் செல்லத்துரை,
    ஊடகங்களே சொல்ல அஞ்சி மறைக்கும்
    உண்மைகளை வாக்குமூலம் போல
    ஒளிவு மறைவின்றி ஒப்புவிக்கிறீர்கள்.

    'இப்படியெல்லாமா நடக்கும்?' என்று பலருக்கும் நம்பிக்கை இன்றி சந்தேகம் இருந்திருக்கலாம்.
    உங்கள் பதிவின் மூலம், 'இப்படித்தான் நடக்குது போல' என்று அவர்கள் தெளிவு பெறக்கூடும்.

    அந்த வகையில் மிகவும் போற்றப்படத்தக்க சிறந்த ஒரு மனிதநேயப்பதிவு. மிக்க நன்றி சகோ.சதீஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊடகங்கள் இன்று எப்படி உள்ளது என்று உங்களுக்கு தெரியாதா சகோ? இப்படித்தான் நடக்குது போல இல்லை சகோ...இப்படித்தான் நடக்கிறது என்று புரிவார்கள்.நன்றி சகோ...

      நீக்கு
  15. காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

    தீவிரவாத பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள்,

    அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு,

    போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு

    பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.

    கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

    1990 களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’.

    ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும்,
    1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது.

    இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள்

    “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது.

    காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில்,

    அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது,

    அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

    காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

    அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

    அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன.

    தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்வி முறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

    இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்,

    அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல் தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

    மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்;

    காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்;

    குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்;

    பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

    காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன.

    மனித உரிமைக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் இந்திய அரசு பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும்,

    நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான் அதைவிடப் பெருத்த அவமானம்.

    காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும் சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன.

    ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி என்றால்,

    காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை இரகசியமாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா?

    இத்தகைய அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு,

    காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய ஒருமைப்பாடா?

    ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

    ______________________________________________
    - புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011

    பதிலளிநீக்கு
  16. சகோ சதீஷ்!

    'நபி வழி' என்ற பெயரில் பின்னூட்டமிடும் நபர் ஒரு இந்துத்வவாதி. இஸ்மாயில் என்ற பெயரை பச்சை குத்தி எவ்வாறு கோட்சே காந்தியை கொன்றானோ அது போன்ற ஒரு செயல்தான் இது. தகவலுக்காக இதைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சகோ...நமக்கு கருத்துக்கள்தானே முக்கியம்.அதற்க்கு சரியாக பதில் தந்தாலே போதும் சகோ.

      நீக்கு
  17. இந்தியாவுல இருந்து உன்ன மாதிரி தேச துரோகிகளை அடிச்சு தொரதணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ....இந்தியா இந்தியா என்று கிரிக்கெட்டில் தேசப்பற்றும் கூச்சலும் போடும் உங்களை போல ஆட்கள்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஊழல்களுக்கும் மௌன ஆதரவு.தமிழனாய் இந்த நாட்டில் தமிழன் படும் கொடுமைகளுக்கு இந்த திருட்டு தேசம் என்ன சொல்கிறது?நீங்கள்தான் என்ன சொல்கிறீர்கள்.

      தவறுகளை எழுதியுள்ளேன்,அவற்றை நானும் செய்துள்ளேன்.நீங்க வாங்க ராணவம் ஆட்சி புரியும் இடங்களில் வாழுங்கள்.அப்புறமா பேசுங்க...

      நீக்கு
  18. Thanks for the blog, Mr. Abdul Kader enra Satish chelladurai.

    பதிலளிநீக்கு
  19. சகோதரருக்கு இறைவனின் சாந்தியும், சமாதானமும் கிடைக்க என்னுடைய பிராத்தனைகள்..

    ஒரு தாயாக உங்கள் பதிவை படிக்கும் போது மனமெல்லாம் துடிக்கிறது..ஒரு நீதியற்ற நாட்டில் பிறந்ததை தவிர அவர்கள் செய்த குற்றம் என்ன..??

    எத்தனை கதைகள் நெஞ்சை துடிக்க வைக்கும் விதத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது..அதை கண்டும் ,காணாமல் அனைத்து தரப்பினரும் இங்கு..:(

    எனக்கென்னமோ காசுக்காக கொலை பண்ணும் கூலிஆட்களுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை

    உண்மையை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயலாற்றி கொண்டு இருக்கும் உங்களை போன்றவர்களை நினைத்து தான் மனதை தேற்றி கொள்ள வேண்டி இருக்கிறது..

    தொடரட்டும் சகோ உங்களின் இந்த நேர்மையான பணி,அதற்கான கூலியை வழங்க இறைவன் போதுமானவன்..





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. The way you mentioned "நம்ம ஊருக்குள்ளே ஒரு போராளி ஏதோ ஒரு காரணமா ஊருக்குள் வந்துள்ளார் சரியா..." tells what kind of person you are...don't shed corocodile tears.

      you are a muslim terrorist in a non-muslim name.

      நீக்கு
    2. நான பயங்கரவாதி என்பதை ஒத்து கொள்கிறேன் நண்பரே,ஆனால் அரசப் பயங்கரவாதி.முதலை கண்ணீர் வடிப்பதை விட தேசம் பற்று இந்தியா என்று நீங்கள் போடும் கூச்சல்கள் மிக மோசமானது நண்பரே...

      நீக்கு
  20. Satish: The way you mentioned "நம்ம ஊருக்குள்ளே ஒரு போராளி ஏதோ ஒரு காரணமா ஊருக்குள் வந்துள்ளார் சரியா..." tells what kind of person you are...don't shed corocodile tears.

    you are a muslim terrorist in a non-muslim name.

    பதிலளிநீக்கு
  21. முதலில் இது ஒரு நல்ல பதிவு என்பேன்... இதே போல இளைஞர்களை பலிகடா ஆக்குவது பெரும்பாலான ராணுவங்களின் டெக்னிக் எனலாம், இந்திய ராணுவமும் அதில் இருந்து விதிவிலக்கு இல்லை. இப்படி பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை இதே இந்திய ராணுவம் இலங்கையில் சுட்டுக் கொன்றது, சிங்கள ராணுவமும் அதனையே செய்தது ... !!!

    ஆனால் எனக்கு ஒரு டவுட்டு ஒரு ராணுவத்தில் பணியாற்றிய வண்ணமே ஒரு ராணுவ வீரர், ராணுவத்துக்கு எதிராக எழுதும் வாய்ப்பு மிகவும் குறைவு ... அதனால் நீங்கள் இராணுவ வீரரா ( தற்சமயம் ராணுவத்தில் ) என்பது சந்தேகமாகவே உள்ளது.

    ஏனெனில் ராணுவப் பகுதியில் பரிமாறப்படும் அனைத்து தகவல்களும் கண்காணிப்பில் இருக்கும், ஒருவேளை நீங்கள் அங்கு இருப்பீர்களானால் நீங்கள் இச்சமயம் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் அல்லது இந்தியாவின் கருத்துச் சுதந்திரம் நல்ல முறையில் இருக்கின்றதோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே விசயங்கள் உண்மை அவ்வளவே...கருத்து சுதந்திரம் என்றெல்லாம் காமெடி பண்ணாதிங்க..நான் எழுதுவதை இன்னும் யாரும் மோப்பம் பிடிக்கவில்லை.அதற்க்கு நேரமும் இல்லை.அந்த வேலையை செய்ய வேண்டியவர்கள் என்னை போல சிப்பாய் மது அருந்துகிரானா? விபசாரம் செய்கிறானா? என்று தேடி திரிகிறார்கள்.நீங்கள் நினைப்பது போல எந்த கண்காணிப்பும் இல்லை என்றே சொல்லாம்.அதிலும் இப்போது உள்ள நிலையில் எதுவும் நடக்கும்.இப்போது நான் நகரத்தில் உள்ளேன் அதுதான் எழுத முடிகிறது.இன்னும் சில மாதங்களில் ஜம்மு சென்று விடுவேன்.அங்கே இருந்த வலைபூ படிப்பதே கஷ்டம்.சிக்னல் கிடைக்காது.

      நான் யார் ?ராணுவத்தில் உள்ளேனா?அடுத்த பதிவில்..

      நீக்கு
  22. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரூ ஒனக்கு டகால்டி வேல தெரியும் தான் அதுக்காக இப்படி செய்றது சரியில்ல

      நீக்கு
    2. ####ஆத்தா சொன்னார், ஆட்டு குட்டி சொன்னார் என்று கதை விட வேண்டாம். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று உன்னோட குடும்பத்தையும், உன்னோட மனைவிமார்களையும் பத்தி கேவலமா சொன்ன நீ சும்மா இருப்பியா. அடுத்து இதே மாதிரி ஒரு பதிவு போடு, அப்புறம் உன்னோட குடும்பத்தை கிழிக்கிறேன்.####


      நான் ஆபிசர் பெயரை சொல்லியது இதன் உண்மையின் வீரியத்தை உணர்த்தவே...போகட்டும்..உங்களின் என்னோட குடும்பத்தை பற்றிய அக்கறைக்கு நன்றி நன்றி நன்றி....நீங்க என் குடும்பத்தை கிழிப்பதற்கு தம ௧௨௩௪௫௬௭௮௮௯௦

      நீக்கு
    3. மேலேவுள்ள வருன் கம்மெண்டை நீக்குங்கள் அதை கிளிக் செய்ய வேண்டாம் வைரஸ் உள்ளது

      நீக்கு
    4. @சதீஷ் செல்லதுரை

      இல்லை நண்பரே! பிரச்சனை அந்த பெயரில் உள்ள லிங்கில் தான். டாஷ்போர்டில் சென்று இந்த கம்மெண்டை முற்றிலுமாக நீக்கிவிடுங்கள்.

      நீக்கு
    5. தற்போது பிரச்சனை இல்லை. அதனை tiny.cc தளத்தினர் நீக்கிவிட்டார்கள்.

      நீக்கு
  23. வருன்1 அக்டோபர், 2012 10:05 am

    //2006ல் கமாண்டோ பயிற்சியின் போது இதை(CASO) பற்றிய வகுப்பில் இது போல செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எனது அதிகாரி ஒருவர் சொன்ன போதுதான் எனக்கும் உண்மை தெரிந்தது///
    ஆத்தா சொன்னார், ............

    அடுத்து இதே மாதிரி ஒரு பதிவு போடு, அப்புறம் உன்னோட குடும்பத்தை கிழிக்கிறேன்.
    ========================

    எச்சரிக்கை. எச்சரிக்கை. எச்சரிக்கை.
    வருன்1 என்ற விஷமியின் விஷ பிரயோகம்.


    மேலே உள்ள கருத்தை இட்டிருக்கும் வருன்1
    என்ற இடத்தை க்ளிக் செய்ய வேண்டாம்.

    அதை க்ளிக் செய்தால் உங்கள் கணினி தாறுமாறாக செயல்பட ஆரம்பித்துவிடும்.

    உட‌ன‌டியாக கணினியின் ON / OFF ஸ்விட்ச்சை உங்கள் க‌ணினி ஸ்விட்ச் ஆஃப் ஆகும் வ‌ரையில் அழுத்திக் கொண்டிருந்து க‌ணினியை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யுங்க‌ள்.

    பின் உங்க‌ள் க‌ணினியை ஒருமுறை வைர‌ஸ் ஸ்கேன் செய்துவிடுக்க‌ள்.



    திரு. சதீஷ் செல்லதுரை அவர்களே,

    தாங்களின் கருத்து பின்னூட்ட பெட்டியில் NAME / URL ANONYMOUS ஆப்சன்களை உடனடியாக நீக்கிவிடவும்.

    கூகிள் அக்கவுண்ட் உள்ளவர்கள் மட்டுமே பின்னூட்டம் இடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சார் இது அநியாயமா இருக்கு?நீங்க சொல்வதை செய்ய முயல்கிறேன்..

      நீக்கு
  24. அன்பின் சகோ சதீஷ்,
    அநியாயக்கார அரசன் முன்னால் நீதியை எடுத்து சொல்லுவது தான் உச்சகட்ட புனித போர் என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. நீங்கள் இங்கே சபையில் எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். இந்த மாதிரி காட்டுமிராண்டி தனங்கள் நமது இரத்தத்தை உறைய வைக்கிறது. மனிதத்தன்மையற்று எவர் நடந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அவர்களுக்கான தண்டனைகள் இந்த உலகில் கிடைக்காவிட்டாலும் மறுமை நாள் என்று நாங்கள் நம்புகின்ற அந்த நாளில் இறைவன் கொடுப்பான். அணுவளவு நன்மை செய்தவர் அதற்கான கூலியை பெறுவார். அணுவளவு தீமை செய்தவர் அதற்கான தண்டனையை பெறுவார்.

    அரசின் உயர் அதிகாரி அந்தஸ்தில் இருந்த ஹேமந்த் கர்கரே அவர்களையே உண்மையை வெளிப்படுத்தியமைக்காக படுகொலை செய்தவர்கள் இங்கே உண்டு. எனவே இராணுவ சிப்பாய் என்ற நிலையில் இருக்கும் தாங்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள். (இதற்கு அர்த்தம் உண்மையை வெளிப்படுத்த வேண்டாமென்பதில்லை. தேவை கொஞ்சம் எச்சரிக்கை என்பது தான்).

    --
    சகோதரத்துவத்துடன்,
    பி.ஏ.ஷேக் தாவூத்.
    (உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே ஒன்றும் பிரச்சினை இல்லை சகோ....அவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தும் அளவுக்கு நான் ஒன்றும் பெரியதாக ஒன்றும் எழுதவில்லை.தங்களின் அக்கறைக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி சகோ....

      நீக்கு
  25. வாழ்த்துக்கள் சகோ. சதீஷ். வெகு சிலர் மட்டுமே உண்மைகளை தைரியத்துடன் எடுத்து சொல்வார்கள். அந்த விதத்தில் மனிதாபிமானமுள்ள மனிதனாக உண்மைகளுக்காக குரல் கொடுக்கின்றீர்கள்.

    மேலும் சகோ. பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். துறை ரீதியாகவோ அல்லது உண்மைகளை குழி தோண்டி புதைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவர்களலோ தங்களுக்கு ஏதேனும் தீங்குகள் நேரிடலாம். (இங்கு இடப்பட்ட பின்னூட்டங்களே சாட்சி) எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கவும்.

    எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நேர்வழி கட்டி, உறுதுணையாக இருந்து பாதுகாக்குமாறு ஏக இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி சகோ துறை ரீதியாக வருவது வரட்டும்.....அதிக பட்சம் வேலை போகலாம் ?வாழலாம் சகோ பிரச்சினை இல்லை

      நீக்கு
  26. சகோ ச செல்லத்துரை...ஒரு முக்கிய அறிவிப்பு,
    முதன் முதலில் தங்கள் தளத்திலிருந்து தான் போலி ஐடி
    முலம் வைரசை பரப்பும் கயவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்
    சகோஸ் உஷாராக இருக்கவும்...
    இச் செயலை செய்தவர்கள் யாராக இருப்பினும்
    மிகவும் கண்டிக்கப்படவேண்டியவர்கள்....
    அவர்களை ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்..
    " பிகடி பாப்கி அவுலாத் "

    பதிலளிநீக்கு
  27. ஐயா.. நீங்கள் செய்வது மிகவும் துணிச்சலான செயல். உங்களின் மன உறுதியைப் பாராட்டுகிறேன். அதே போல, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும், அநியாயத்தின் உச்சத்தையும் இவ்வுலகிற்கு எப்படியாவது தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உங்களின் நேர்மை தான், இதன்மூலம் என்ன பிரச்சினை வந்தாலும் சந்தித்துவிடலாம் என்ற தெம்பை கொடுத்திருக்கிறது.

    அநியாயத்தை எதிர்க்கும் முதல்படியே அநியாயம் நடைபெறுகிறது என்பதை அறிவதே. அதன்படி இந்திய ராணுவத்தின் கஷ்மீர் அட்டூழியங்களை கண்முன்னே கொண்டு வந்து கொட்டியிருக்கிறீர்கள்.

    இந்திய ராணுவத்தின் கஷ்மீர் அத்துமீறல்களை ஊடகங்கள் ஒரு சில தருணங்களில் தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதையும் இந்துத்துவ துவேஷவாதிகள் இருட்டடிப்பு செய்து மக்களிடம் சென்று சேரா வண்ணம் பார்த்து கொள்வார்கள். உங்களின் எழுத்தையும் அதிலுள்ள கருத்தையும் நோக்கும் போது எந்த மதத்திற்கும் சாதகமாகவும் அல்லது பாதகவுமில்லை என்றே அறிய முடிகிறது. விருப்பு வெறுப்பின்றி நீங்கள் எழுதுவதாலேயே அந்த உண்மைகள் பொட்டில் அடித்தாற் போல இருக்கிறது.

    மேலும், வலைப்பதிவு என்ற ஒரு தனி மனித ஊடகத்தை, நீங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். உங்களை அறியாமலே ஒரு புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். வலைப்பதிவு வைத்துக்கொண்டு சமூகத்தில் துவேஷத்தை விதைத்து வரும் விஷமிகளுக்கு , உங்களின் பதிவுகள் உறுத்தலாகத்தான் இருக்கும். இதோ.. துவங்கி விட்டார்களே போலி ஐடிக்களும், வைரஸ் பரப்புகளும்.

    நடுநிலை என்று ஒன்று கிடையாது என்பார்கள். ஒன்று நன்மை பக்கம் இருக்க வேண்டும் அல்லது தீமை பக்கம் இருக்க வேண்டும். தீமைக்கும் நன்மைக்கும் பாலம் போட அவசியமில்லை. நீங்கள் நடுநிலை என்று நீர்த்து போய் விடாமல் நன்மை பக்கமே இருங்கள். உங்களைப் போல நல்ல மனிதர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பீர்கள். அப்போது வேறு மதத்தின் துவேஷவாதிகள் உங்களை சாடி இருப்பார்கள். ஆகவே துவேஷவாதிகள் தூற்றாமலிருக்கும் போது தான் நாம் ஆச்சரியமடைய வேண்டும். ஒடுக்கப்படும் மக்களின் தரப்பு நியாயத்தை உரக்க சொல்லும் போராளியாகத்தான் உங்களை நான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....