Translate

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட?

ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினம் சொக்கபானைனு கொண்டாடுறோம் .நாம அடுத்தவங்களுக்கு சுதந்திரம் கொடுக்கோமா?காஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர்  சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று அறீவிர்களா?கூடங்குளத்தில் 144..நமக்காக போராடும் அவங்க சுதந்திரத்தை யோசித்தோமா?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால்  எப்படி இருக்கும் என்று?

மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால்  எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும்  தாமதப்படுத்தும்போதும்  எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து   தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

ஈழத்தில் லட்சத்திர்க்கு மேல்.
உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும்  ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற  ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.


இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்?அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?


காஷ்மீர் மட்டும் இல்லை மணிப்பூர் சத்தீஷ்கர், இப்படி அநேக இடங்களில் இந்தியாவில் சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது.இந்த நிலையில் அவர்களை கொடி பிடித்து கொண்டாடுங்கள் என்பது எப்படி?இன்று கூடங்குளமும் கருப்பு கொடி ஏந்தியுள்ளது.



கூடங்குள மக்களும் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள்.அவர்கள் வேறு யாருக்கோ போராடவில்லை.நம் எதிர்கால சந்ததிகளுக்காக அமைதியான முறையில் போராடும் அவர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசு என்ன பதில் கொடுக்கிறது?144ம் காவதுறை குவிப்புமா?
மணிப்பூரில் சர்மிளாக்கு என்ன பதில் தருகிறது இந்தியா?ஆயுத போராட்டம் ,அகிம்சை போராட்டம் எதுவுமே இந்திய செவிட்டு காதுகளுக்கு கேட்காத போது என்ன செய்வான் சாதாரண மனிதன்?புறக்கணிப்பை விட பெரிய ஆயுதம் எதுவுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.அன்று காந்திக்கும் தோன்றியது போல...ஒத்துழையாமை இயக்கம்.


இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குதான் இன்று தமிழகத்திலும் கருப்பு கொடி ஏற்ற வைக்கிறது.காவேரி தண்ணீர்,முல்லை பெரியாறு,கூடங்குளம், இலங்கையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் அநியாயம்,ஈழப் படுகொலைகள் என்று அனைத்து பக்கமும் தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய அரசுக்கு எப்படித்தான் நமது எதிர்ப்பை தெரிவிப்பது? அதன் ஆரம்பம்தான் கூடங்குளத்தில் ஆகஸ்ட் 15ல் கருப்புக்கொடி ஏற்றப்படும்.

அதற்காக இந்தியாவை உடைப்பதா? அது எப்படி என்று பொறுக்க முடியும்? இதற்கான அருந்ததி ராயின் அழகான பதில் படிக்க இங்கே சிரமம் பார்க்காமல் சுட்டவும்

அதெல்லாம் இருக்கட்டும் நண்பர்களே எங்கள்(எல்லை பாதுகாப்பு படை) சுதந்திரத்தை கேப்பீர்களா? சில நாட்களுக்கு முன் நான் தந்த முக நூல் நிலைத் தகவலை படிக்கவும்.

DOCTOR OF BORDER SECURITY FORCE TRAINING CENTRE JODHPUR (NOT MUNNA BHAI MBBS) SAYS TO OFFICER'S COLONY GATE GUARD... 

##"...IF ANY PERSONS OTHER THEN OFFICER RANK ARE(CONSTABLE& HC CONSTABLE) NOT ALLOWED TO RIDE A BICYCLE INSIDE THE OFFICER'S COLONY ... THEY SHOULD GO BY WALK WITH THEIR CYCLE....##"WEATHER WE ARE LIVING IN DEMOCRACY COUNTRY OR NOT? WHICH ACT&RULE SAID ABOUT THIS?



இது எப்படி இருக்கு ? எப்படிங்க சுதந்திர தினம் கொண்டாட?

சக மனிதர்களின் உரிமைகளின் மேல் கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.கீழே காணும் கொண்டாட்டத்திற்கும்  நாளை தொலைக்காட்சி சகிதம் நாம் கொண்டாடப்போகும் கொண்டாட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?கார்ப்பரேட் உலகின் ஆட்சியில் மறைமுக அடிமையாய்  இருக்கும் இந்திய அரசை நாம் இந்த கொண்டாட்டத்தின் மூலம் ஆதரிக்கிறோம் நண்பர்களே.
இதைத்தானே கேட்டாய் பாலகுமாரா ....

நான் கூடன்குளத்து போராட்டத்தை,காஷ்மீர் தேசத்து அடிமை மக்களின் உரிமை போராட்டத்தை,சட்டீஸ்க்கரில் போராடும் பழங்குடி இனத்தின் போராட்டத்தை,சர்மிளாவின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.இவர்களை ராணுவம் மற்றும் காவல் துறை கொண்டு அடக்கி ஒடுக்கும் இந்திய அரசுக்கு  இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் நான் எனது எதிர்ப்பை  அறிவிக்க விரும்புகிறேன்.

வரும் காலங்களில் ஓட்டு மொத்த தமிழகமும் தேர்தல்களை, சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிப்பதன் மூலம் காவேரி நீர் முல்லை பெரியாறு,ராமேஸ்வரம் மீனவர்கள் படுகொலைகளுக்கு ,கூடங்குளத்திற்க்கு நீதி பெற முடியும் என நம்புகிறேன்.ஓட்டு மொத்த தமிழகமும் இணைந்தால் மட்டுமே இது முடியும்.கூண்டுக்குள் அடைத்து வைத்து பாட சொல்லி ஆட சொல்லி கேப்பது போலத்தான் காஷ்மீர் மக்களிடம் நாம் எதிர்பார்ப்பது.காஷ்மீராகட்டும்,சட்டீஷ்கராகட்டும் இறப்பது என்னவோ ஏழை  மக்களும் ஏழை சிப்பாயும்தான்.உங்களுக்கென்ன நீங்கள் கொண்டாடுங்கள்.

ஆகஸ்ட் 14கை  நாகலாந்தில் சுதந்திர தினமாக கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.அது குறித்து அறிந்தவர்கள் தகவல் தரலாம்.

மனதில் தோன்றியது எழுதி விட்டேன்.இதோ எனது தோழன் இதை படித்துவிட்டு திட்டி செல்கிறான்.என் மனைவி எனக்கு ஏதோ நோய் இருப்பதாய் சொல்கிறார்.எனது உடன் பிறந்த அண்ணன் நாட்டை அவமானப்படுத்துகிரவன் தன் தாயை அவமானபடுத்துகிறான் என்று கமென்ட் செய்கிறான்.அளவுக்கு மீறிய தேச பற்று நமக்கும் சக மனிதனுக்கும் இழைக்கும் கொடுமைகளை மறைக்க கூடாது.என்னை துரோகி என்று அழைப்பீர்கள் என்றால் எவ்வித சங்கடமும் இல்லாமல் வரவேற்பேன்.

டிஸ்கி;ஆர்ப்பாட்டமான  கொண்டாட்டங்கள்  போராட்டங்களின் வலியை புரிந்து கொள்வது கஷ்டமே.சுதந்திர போராட்ட வீரர்களின் ஆன்மா ஒரு நாளும் கார்ப்பரேட் அடிமை அரசுகளை மன்னிக்காது.





82 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி நண்பா..முதல் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஸலாம் நண்பா. உங்கள் செய்தி மிகவும் சரியாக உல்லது. இவ்வாறு நீங்கள் உண்மையை கூறி அதற்காக போராடினாள் உங்களையும் இந்த ஜனநாயக இந்தியா தீவிரவாதி என்று ஸொல்லும். வெட்கக்கேடு .......................................................

      நீக்கு
    3. friend ungaloda intha thinking correct than but ithelam all people correct a understand pannina mattum they can do anything, but inga iruka all peoples la good yaru nu solla mudiyathu so good goverment only do all good things,everybody is not correct................in this country, selfish peoples

      நீக்கு
    4. MOHAMED IKRAM,AISH ARUL, இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....சுயநலம் இருக்கும் மனிதனிடம் சுய ஒழுக்கமும் இருந்தால் நல்லது...அதுவே பாதி பிரச்சனைகளை தவிர்க்கும்...

      நீக்கு
  2. நண்பா உங்கள் இந்த பதிவு , மிகச்சரியான கருத்து !

    நான் உங்கள் இந்த் கருத்தை மதிக்கிறேன்

    --க.உதயகுமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @உதய குமார் வருகைக்கும் கருத்துக்கும் மதிப்பிற்கும் நன்றி நண்பரே..இது மட்டும் இல்லை நண்பரே சாதி விடுதலை இன்னும் சொல்லப்படவில்லை.

      நீக்கு
  3. இந்திய அரசின் பல செயல்கள் நமக்கு மிக்க வருத்தத்தை தருகின்றன. சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ....

      நீக்கு
  4. நண்பரே நீங்கள் எதை தீர்வாகக் கருதுகிறீர்கள்?....

    உள்ளுக்குள் நடக்கும் அக்கிரமங்களும், ஊழல்களும், அராஜகங்களும் மோசமான, சுயநல அரசியல்வதிகளாலும், போராட்டம் என்ற பேரில் சில ஒரு சில பொறுப்பற்ற நபர்களாலும் நடக்கிறது, அவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டியக் கடமை நம் எல்லோருக்கும்தான் உள்ளது. அதற்கு நம் மண்ணைப் பழிப்பதில் என்ன தீர்வு கண்டுவிடப் போகிறீர்கள்.

    உங்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில என்பது உங்களுக்கே சரியாக தோன்றுகிறதா? மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது நிலைமை.நாம் நமது எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது ஆயுதம் தூக்கினால் தீவிரவாதி அகிம்சையையும் மதிப்பதில்லை.காஷ்மீரில் ஓட்டெடுப்பு....தமிழக பாரபட்ச பார்வை விலக்கப்பட வேண்டும் இல்லையேல் நாம் விலக வேண்டும்.அன்று பிரிட்டிஷ் ஆதிக்கம்,இன்று இந்திய அரசின் ஆதிக்கம்.நாம் இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறோம்.இப்படியே சகித்து கொண்டு எத்தனை நாட்கள் நண்பரே?நாளை பள்ளி பீஸ் கட்ட கழுத்தில் ஒருவன் கத்தி வைத்து மிரட்டும் அளவுக்கு மோசமாகும் தூரம் தொலைவில் இல்லை.

      நீக்கு
  5. அன்பின் சதீஷ் செல்லதுரை,

    பாராட்டுக்கள்.

    தொய்வின்றி தொடரட்டும் தங்களின் சிறப்பான பணி.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்

    பதிலளிநீக்கு
  6. சலாம் சகோ.சதீஷ் செல்லத்துரை...!
    பதிவில் என்னவோர் ஆக்ரோஷம்...?
    ஒவ்வொரு எழுத்திலும் ராணுவ வீரனுக்கே உரிய அசாத்திய தைரியம்...!
    இந்திய ராணுவத்தில்... காஷ்மீரில்... பணியாற்றிக்கொண்டு இப்படியும் எழுத முடியும் என்றால்... நீங்கள் நிஜமான வீரர் மட்டுமல்ல சகோ... 'உண்மையான நேர்மையாளர்'...! இந்த பட்டத்தை ஒருத்தர் பிறரிடம் இருந்து வாங்குவது ரொம்ப கஷ்டம் சகோ.சதீஷ்..! நீங்கள் அடிக்கடி பலரிடம் இருந்து இப்பட்டத்தை வாங்குகிறீர்கள்..! உங்கள் பதிவுகள் முக்கியத்துவம் வாய்தவை..! மிகவும் நன்றி சகோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசுல தோனுச்சு எழுதிட்டேன் சகோ..வர்டுகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  7. சகோதரரே ! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் .
    நீதியை எடுத்து சொல்லும் உங்களின் நேர்மையை நான் மிகவும் மதிக்கின்றேன் .. உங்களை கண்டு வியக்கின்றேன் .
    தொடர்ந்து எழுதுங்கள் அநீதம் இழைக்கபட்டோருக்கு உங்களின் (எழுத்துகள்) துணை மிக முக்கியம்

    பதிலளிநீக்கு
  8. naan kavithai ezhutha ninaiththu maranthen-
    illai-
    thevai illai ena -
    ninaithen!

    neengal urai nadai nikazhthi vitteerkal!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை சீனி ....சகோ வருகைக்கும் கவிதைக்கும் நன்றி சகோ.உங்கள் பக்கம் தொடர்ந்து வர இயலவில்லை மன்னிக்கவும்.தொடருங்கள் தொடர்கிறேன்.

      நீக்கு
  9. பாதுகாவல் படையினர் என்ற பெயரில் காம, கொலைவெறி பிடித்த மனித மிருகங்கள்......!பாதுகாவல் என்ற பெயரில் காஷ்மீர மக்களுக்கு இந்த ஓநாய்கள் செய்யும் கொடுமைகள் இந்திய ஊடக விபச்சாரிகளால் வசதியாக மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் விடுகின்றது..... உண்மையை உங்களை போன்ற சிலர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மனதுக்கு சற்று ஆறுதலக இருக்கிறது.... நன்றி சகோ.சதீஷ்

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. சகோதரர் சதீஷ் செல்லதுரை,

    உங்கள் மீதும் உங்களின் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....

    உங்களின் "காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும் படைவீரனும்" என்ற கட்டுரை என்னுள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு சற்றும் குறையாத உணர்வலைகளை இந்த கட்டுரையும் ஏற்படுத்தியுள்ளது. பதிவின் சில இடங்கள் ஒருவித மனப்போரட்டத்தையே ஏற்படுத்துகின்றன. தூற்றுவோர் தூற்றட்டும், நமக்கான உண்மையான, நிலையான நற்பலன் என்பது இறைவனிடத்தில் மட்டுமே உள்ளது. உங்களின் 'படைவீரன்' பதிவு பதிவுலகில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கட்டுரையும் அப்படியான வெற்றியை பெற்று மேலும் பலரையும் சென்றடைய என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    இந்த பதிவில் தமிழ்மண வோட் பட்டை இல்லை. இந்த பதிவிற்கு வோட் போட விரும்புபவர்கள் கீழ்காணும் சுட்டியை சுட்டி வோட்டிடலாம்..

    http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1181146

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ
    http://www.ethirkkural.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மண ஓட்டு பட்டை இது போன்ற விசயங்கள் எனக்கு தூரமானவை.தமிழ் 10,உடான்ஸ் ஓட்டு பட்டைகள் காணாமல் போனபோதும் தமிழ் மணத்தில் என் பதிவுகளை இணைத்து தந்த தம்பி சீனுவை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.தமிழ் மண ஓட்டு பட்டை அளிக்கும் உங்களுக்கும் நன்றி சகோ.என் மனதில் உள்ளதை,நான் கண்டதை மட்டுமே எழுதுகிறேன்.சாட்சிகள் இல்லை.மன சாட்சி மட்டுமே இருக்கிறது.ஊடகங்கள் கொடுக்கும் பல பயங்கரங்களை நான் கண்கூடாக காணவில்லை.என் முன்னாள் நடந்தவை மட்டுமே தருகிறேன்.நன்றி சகோ.

      நீக்கு
  12. உங்கள் கோபம் நியமானது.. சுதந்திரத்திற்கு முன்னால் வெள்ளையனிடம் சுதந்திரத்திற்கு கருப்பனிடம் (கறுப்புப் பணத்தைத் தான் குறிப்பிட்டேன்)... எப்போதும் அடிமையை இருக்கும் படி மாறிவிட்ட சமுதாயம்... என் கூற்று வேண்டும் இன்னுமொரு சுதந்திரப் போர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனு சரியாக சொன்னாய்.ஆனால் சரியான தலைவர்கள் இல்லை.நாமும் ஒரு அங்கமாகவே வாழ்கிறோம் என்பதே கொடுமை.தமிழ்மணத்தில் இணைத்து தந்த உனக்கும் உன் அறிவுக்கும் மிகவும் நன்றி தம்பி.

      நீக்கு
  13. நன்றி நன்பா
    கூடங்குளம் பிரச்சினை தொடங்கி சில
    மாதங்களே ஆகின்றது அங்கே ஆயுதமுனையில்
    அடக்குமுறையும் இல்லை ஆனால் பல
    தசாப்தங்களாக ஆயுதமுனையில்
    அடக்கப்படும் இன்னமும் அடக்கப்படும்
    காஷ்மீரிகளின் நிலை பரிதாபமானது
    மிகவும் நைர்மையான பதிவு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் ஆரம்பிக்கும் சகோ.இன்றைய அகிம்சை ஒரு நாள் ஆயுத போராட்டமாக மாறலாம்.அதைத்தான் கார்ப்பரேட் அடிமை அரசும் எதிர்பார்க்கிறது.அப்புறமா ஓட்டு மொத்தமா பயங்கரவாதி என்று முத்திரை குத்தி கொள்ள வேண்டியது.நன்றி சகோ...

      நீக்கு
  14. இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – PART 1

    ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 65 வருடங்கள் கடந்து விட்டன.

    இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 65 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அந்தத் தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.

    இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை.

    வியாபாரத்திற்காக நாட்டில் நுழைந்த வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்கள், உள்நாட்டு பிரச்சனைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

    தாய்மண்ணை ஆக்ரமித்துள்ள அந்நியர்களிடமிருந்து நாட்டை மீட்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராடினர்.

    தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை.

    வெள்ளையன் வருகைக்கு முன்னர் பல்வேறு இன, மொழி மக்களாகப் பிரிந்து வாழ்ந்திருந்த இந்தியர்கள், வெள்ளையனை எதிர்க்க, தங்களிடையிலான அனைத்து வேற்று விருப்பு, வெறுப்புகளையும் களைந்து ஓரணியில் நின்றுப் போராடினர்.

    எனினும் எப்பொழுதும் போல் அற்பக் காசிற்காகவும் அடிமைப் பதவிக்காகவும் விலைபோன சில துரோகிகளும் நாட்டில் இருக்கவே செய்தனர்.

    அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு இறுதியில் வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி, 15 ஆகஸ்ட் 1947 அன்று இன்பமான சுதந்திரக்காற்றைச் சுவாசித்தனர் மக்கள்.

    வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறிய நிமிடத்திலிருந்து அதுவரை மறைமுகமாக இருந்து சதிராடிய மற்றோர் எதிரியை.. இல்லை... துரோகியைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இக்கட்டான நிலைக்கு நாடு வந்து விட்டது.

    ஆனால் உள்ளுக்குள்ளே வளர்ந்து வந்த அந்த எதிரியைக் குறித்தத் தெளிவான சிந்தனை இன்மையோ என்னமோ நாடு அந்தத் துரோகிகளைச் சரியாகக் கவனிக்கத்தவறி விட்டது.

    அதன் விளைவை நாடு சுதந்திரம் அடைந்த ஒரு வருடத்திலேயே பெற ஆரம்பித்து விட்டது.

    ஆம்... சுமார், 35 வருட காலம் வெள்ளையனை எதிர்த்து அவனின் அடக்குமுறை அடிமை ஆட்சியில் போராடி வந்தத் தேசத்தந்தை எனப் போற்றப்படும் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் ஒரு வருட காலம் கூட உயிரோடு வாழ இயலாமல் போனது.

    இந்த ஒன்று மட்டுமே துரத்தப்பட்ட எதிரியை விட, அழிக்கப்பட வேண்டிய துரோகியின் வலிமையையும் வெறியையும் பறை சாற்றும்.

    அப்பொழுதும் அந்தத் துரோகியினால் நாடு எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளைச் சரியாக உணர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவு இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

    இந்தத் துரோகிகளின் சதி வேலைகளினால் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் முஸ்லிம்கள் தான்.

    இந்தியச் சுதந்திரத்திற்குத் தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயம்,

    இன்று இந்தத் துரோகிகளின் கைங்கர்யத்தால் நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களை விடத் தரம் தாழ்த்தப்பட்டவர்களாக,

    தேசவிரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அன்று நாட்டு மக்களுடன் ஒரே அணியில் இணைந்துச் சுதந்திரத்திற்காகப் போராடிய முஸ்லிம் சமுதாயம்,

    இன்று எதுவுமில்லாதவர்களாக அரசு, அதிகாரம், நீதி, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் ஒதுக்கப்பட்டுப் பிந்தங்கிவர்களாக நாட்டின் விரோதிகள் போன்று சித்தரிக்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளனர்.


    மேலும் படிக்க இங்கே >>>> இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! - 1 <<<<< சொடுக்குங்கள்

    THANKS TO : satyamargam.com


    Continued…..

    =======================

    படிக்க இங்கே >>>>
    காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?
    <<<<< சொடுக்குங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலத்தில் வேண்டும் அய்யா வடக்கே உள்ளவர்களுக்கு கட்டாயம் தெரிய வைக்க வேண்டும் அய்யா..

      நீக்கு
  15. இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – PART 2

    ஆனால் அதே நேரம், அன்று நாட்டு மக்கள் ஒரே அணியில் நின்று வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வேளையில்,

    சுதந்திரப்போராட்டத்திலிருந்து விலகி நின்று வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள்,

    சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள்,

    கேவலமான அடிமை பதவிகளுக்காக அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம்

    இன்று ஆட்சிக் கட்டிலிலும் அதிகார இடங்களிலும் ஏன் பாராளுமன்றத்தில் சிலை வைத்து மதிக்கப்படுவது வரை அதிகாரங்களின் உயர் இடங்களை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டு

    தேசப்பற்றாளன் வேடம்பூண்டு,

    சுதந்திரத்திற்காகத் தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த முஸ்லிம் சமுதாயத்தை அடக்கி, ஒடுக்குகின்ற அவலநிலை.

    சுதத்திரத்திற்கு வாளேந்தி மடிந்தச் சமுதாயத்தின் சந்ததியினர் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயமாகும்.

    "தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வரலாற்றிலிருந்தே துடைத்தெறியப்படும்" என்பதற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தைச் சரியான உதாரணமாக கூறலாம்.

    கடந்த 65 ஆண்டு காலமாக தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளாமல்,

    வெள்ளையனின் தொடையப் பிடித்து விட்டு அற்ப வாழ்வு வாழ்ந்த துரோகிகளின் சதிப்பிரச்சாரத்தில் இஸ்லாமிய சமூகமும் கட்டுண்டுத் தன்னைத் தானே தேசிய நீரோட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டு விட்டது.

    கோயபல்ஸின் தத்துவத்தைச் சரியாகக் கடைபிடித்து, முஸ்லிம்கள் இந்த நாட்டிலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்ற ஒரு மாயையை முஸ்லிம்களின் மனதிலேயே இந்தப் படுபாவி துரோகிகள் விதைத்து விட்டனர்.

    இதற்கானக் காரணம், தாய் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அதில் தனது சமுதாய வேங்கைகள் செய்தத் தியாகங்களையும் இந்தப் பரிதாபகரமான முஸ்லிம் சமுதாயம் சரிவர அறிந்துக் கொள்ளாமையே ஆகும்.

    நாட்டைக் காட்டிக் கொடுத்தத் துரோகிகளின் திட்டமிட்ட வரலாற்று இருட்டடிப்பே இதற்கும் காரணம்.

    "ஆதவனைக் கரம் கொண்டு மறைத்து விடலாம்" என்று, கிழக்கிந்திய கம்பெனிக்குக் கிஸ்தி வசூலித்து தந்து அதன் மூலம் சுகபோகம் அனுபவித்த அந்தத் துரோகிகள் நினைக்கலாம்.

    ஆனால் எப்படி "ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ"

    அதே போன்று, இந்திய மண்ணுக்காக இந்தச் சமுதாயம் செய்த தியாகங்களும் மறையப் போவதில்லை.

    இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது; மறையவும் கூடாது.

    அதற்காக, இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு என்றச் சத்தியத்தையும் இன்று தேசப்பற்றாளர்களாக நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட உரிமை கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டு வலம் வரும் துரோகிகளின் வரலாற்றையும் ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    எவ்வளவு தான் வரலாற்றை மறைத்தாலும் மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை.

    நாடு பிரிக்கப்பட்டபோது "என் நாட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்" என்ற தேசப்பற்றோடு உறுதியான முடிவெடுத்த அபுல் கலாம் ஆசாத் போன்ற முஸ்லிம் தலைவர்களைத் துரோகிகளின் வஞ்சகத் திட்டங்கள் மக்கள் மனதிலிருந்து கிள்ளி எறியச் செய்ததை இனிமேலும் அனுமதிக்க இயலாது.

    நாட்டு விடுதலைக்காகப் போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் இன்று வாய்வழியாக முஸ்லிம்களுக்குத் தெரிந்தாலும் இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பல முஸ்லிம்களின் ஈடு இணையற்றத் தியாகங்கள் மறைந்து விட்டது
    என்றே கூறலாம்.


    மேலும் படிக்க இங்கே >>>> இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! - 1 <<<<< சொடுக்குங்கள்

    THANKS TO : satyamargam.com

    =================

    படிக்க இங்கே >>>>
    காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?
    <<<<< சொடுக்குங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலத்தில் வேண்டும் அய்யா வடக்கே உள்ளவர்களுக்கு கட்டாயம் தெரிய வைக்க வேண்டும் அய்யா..

      நீக்கு
  16. இராணுவ வீரராக இருந்தும் இதை துணிச்சலுடன் எழுதிய உங்களது நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே...எனக்கு முன்னால் நடந்ததை மட்டும் எழுதினேன் நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.

      நீக்கு
  17. i do celebrating this independence day as black day.Thanks for this post & salute for your brave and honest

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா,இணைந்திருப்போம்.வருகைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  18. அன்பு சகோதரர் சதீஷ் செல்லத் துரை அவர்களுக்கு உங்கள் மீதும் உங்களின் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....

    எளிமையான நடையில் யதார்த்தங்களை நம் கண் முன்னே வைக்கும் மிக துணிச்சலான பதிவு ... பாராட்டுக்கள் ...

    தக்கலை கவுஸ் முகம்மது - பஹ்ரைன்
    http://haiderghouse.blogspot.com

    பதிலளிநீக்கு
  19. வஜீர் அலி அஹமது15 ஆகஸ்ட், 2012 அன்று 3:52 PM

    சகோதரர் சதீஷ் அவர்களுக்கு உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.....

    நெஞ்சை உலுக்கிய வரிகள் சிந்திக்கவைத்த உண்மைகள் .... வாயடைத்தபடி நிற்கின்றேன் என்ன கூறுவதென்று அறியாமல் ....

    தங்களின் துணிச்சலான பதிவுக்கு எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் என்றே எழுதுங்கள் சகோ..அதன் அர்த்தத்தை சகோதரி ஒருவரின் பதிவில் படித்துள்ளேன்.அலைக்கும் சலாம்...(சரிதானா) நன்றி சகோ.

      நீக்கு
  20. அன்பு சகோ
    புண்பட்ட மனதின் பண்பட்ட எண்ணத்தை பிரதிபளிக்கிறது உங்கள் எழுத்துக்கள்

    நீங்கள் இராணுவ வீரன் என்பதாலோ என்னவோ கேள்வி கணைகள் ஒவ்வொன்றும் ஏவுகணையாய் தாக்குக்கின்றன..
    சாட்டையடி பதிவுக்கு நன்றி சகோ

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே இருந்து எழுதுவதால் அப்படி தோணலாம்.ஆனால் மிக வெறுப்புடன் உள்ளேன்.சில நேரங்களில் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு கோபம தோன்றுகிறது.வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  21. First time I came nd read ur post. The way u r expose ur feeling is mentioned, how u r? I am also wid u brother. Definitely no independence for poor and minority in india. Every independence day is the BLACK DAY. I really not saying from the heart 'I am a Indian'. Because of partiality in religion, caste, money etc....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரா...இப்படி நினைக்க வைத்ததுக்கு முழு பொறுப்பும் இந்திய அரசே நண்பா.உச்ச கட்ட வேதனையில் வரும் முடிவுகள் இது.நன்றி சகோ.இணைந்திருப்போம் ...

      நீக்கு
  22. iam feal proud to be independent ,, the country which is under the rule of mugals and the british is independent after a lot of persons died .. and given the blood,, there is jalian vallabag,,, vellore revolution,,, vallaniana vallaru,, and many more dont fell the independe very chepaly...
    HAPPY independence day..
    and one more question regarifng you photo and blog WHAT HAPPENED TO KASHMIRE PANTITIS WHICH ARE KILLED BY MUGALS AND MUSLIM RULERS .. JUT THINK ALL THE MUSLIMS IN INDIA ARE CONVERTRED TO MUSLIMS ONLY NOT THE ORGNIAL MUSLIMS LIKE IN MIDDLE EAST

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸலாம் சகோ.பழனி,
      ////////ORGNIAL MUSLIMS LIKE IN MIDDLE EAST/////////----?!-----ஹா...ஹா....ஹா......

      அவங்களும் நம்மை போலவே... கல்/மண்/மரம்/சிலை/காத்து/மழை/நெருப்பு என அக்காலத்தில் இவைகளை எல்லாம் கடவுளாக நம்பி வணங்கியவர்கள்தான் சகோ.பழனி.

      முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரம் மூலம்... ஒரே ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று புரிய ஆரம்பித்தவுடன் முஸ்லிம்கள் எனப்பட்டனர்..! அவ்ளோதான்..! CONVERTRED TO MUSLIMS என்பதில்... அவர்கள்.. கொஞ்சம் பழசு... இந்திய முஸ்லிம்கள் கொஞ்சம் புதுசு..! அவ்வளவேதான்..! :-)))

      நீக்கு
    2. அண்ணா,உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் அன்று உயிர் கொடுத்த ஒருவர் இன்று உயிருடன் இருந்தால் கட்டாயம் இதைப் பார்த்து சும்மா இருந்திருக்க மாட்டான்.நமக்கு கிடைத்து விட்டால் மட்டும் சுதந்திரம் சுதந்திரம் ஆகி விட முடியாது.இன்று தாழ்த்த பட்ட ஒருவன் இன்னும் முழுமையாக சுதந்திரம் அனுபவிக்க முடியவில்லை.அதை பற்றி எழுதாமல் விட்டது உறுத்துகிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
  23. தோழரே ....
    என் உள்ளத்தில் இருக்கும் வேதனையை அப்படியே அழகாக தாங்கள் பதிவில்
    சொல்லியுள்ளிர்..பதிவின் ஓவவேறு வரியும் சாட்டையடி வரிகள்..
    நாட்டின் ஒரு பகுதியில் அடக்குமுறைகள் ...மறுபகுதியில் சு.தின கொண்டாட்டங்கள் ....!!! வெட்ககேடு .......
    தங்களின் எழுத்து பனி சிறக்க, மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்த பதிவையும் எளிதாக விளக்கி விட்டீர்கள் நன்றி சகோ.தோழரே இணைந்திருப்போம்.

      நீக்கு
  24. சதீஷ்,

    சில உண்மைகள் கசப்பானவை என்பதை உங்கள் பதிவின் மூலம் நன்கு புலப்படுத்திவிட்டீர்கள், மக்களுக்கு எந்த சேனலில் எந்த படம், நிகழ்ச்சி என்று தான் இன்றைய கவலை, உங்களின் ஆதங்கம் மெத்தப்படித்த பதிவர்களுக்கே புரியாத நிலையில் நம் தேசத்தில் இருக்கும் பாமர மக்களுக்கு எங்கே புரியப்போகிறது.

    அவனவன் வாழ்க்கை நன்றாக ஓடினால் நாடு நன்றாக இருக்கிறது என்ற பொதுப்புத்தியில் உறைந்த மக்களை உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைத்தால் சந்தோஷமே.

    ஆனால் இப்படிலாம் பேசினால் நம் சமூகத்தில் என்ன சொல்வார்கள் என்பதையும் நீங்களே அழகாக சொல்லிவிட்டீர்கள்,

    //மனதில் தோன்றியது எழுதி விட்டேன்.இதோ எனது தோழன் இதை படித்துவிட்டு திட்டி செல்கிறான்.என் மனைவி எனக்கு ஏதோ நோய் இருப்பதாய் சொல்கிறார்.எனது உடன் பிறந்த அண்ணன் நாட்டை அவமானப்படுத்துகிரவன் தன் தாயை அவமானபடுத்துகிறான் என்று கமென்ட் செய்கிறான்.அளவுக்கு மீறிய தேச பற்று நமக்கும் சக மனிதனுக்கும் இழைக்கும் கொடுமைகளை மறைக்க கூடாது.என்னை துரோகி என்று அழைப்பீர்கள் என்றால் எவ்வித சங்கடமும் இல்லாமல் வரவேற்பேன்.//

    எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை விட அருகில் இருப்பவர்கள் மனம் மாற வேண்டும், உண்மையை உணர வேண்ட்டும்.அந்தக்காலம் வரும் என்ற நம்பிக்கையில் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அண்ணா...நீங்கள் சொன்னது சரிதான் அண்ணா,அருகில் உள்ளவர்கள் எப்போது தன்னை மட்டும் நினைப்பதை விட்டு ஊடகங்களின் வெற்று விளம்பரங்களை தவிர்த்து கொஞ்சம் பொதுநலம் கொண்டாலே போதும்.இன்னும் எளிமையாக சொன்னால் தன்னால் முடிந்த அளவு ஒவ்வொரு மனிதனும் சுய ஒழுக்கமாக இருந்தாலே போதும்.காலம் கட்டாயம் மாற்றம் கொடுக்கும்.நன்றி அண்ணா...

      நீக்கு
  25. salam thozare ungal pathivu naatin unmai nilayai solgirathu . continue ur work

    பதிலளிநீக்கு
  26. ஞாயமான கோபங்கள்..உங்கள் எண்ணங்கள் எழுத்துகளின் மூலமாக தெறிக்கின்றன.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகை சிரிக்க வைத்தாலும் சீரியஸாக வந்து கருத்து தந்த அண்ணன் மணிமாறனுக்கு நன்றி...

      நீக்கு
  27. Great Brother...சுதந்திரத்தின் சீரழிவுகளில் நீங்கள் தொடாத பக்கங்கள் இன்னும் நிறையவே உள்ளன... ஒரு ஜப்பானைப்போல... ஒரு சிங்கப்பூரைப்போல... ஒரு இங்கிலாந்தைப்போல... மிகச்சிறந்த நாடாக உருவாகியிருக்க வேண்டிய இந்தியா... இன்றும் ஊழலில் திளைத்து உருப்படாமல் கிடப்பது நிச்சயமாய் சுதந்திரச்சீரழிவே... இன்னும்... இன்னும்... எழுதிக்கொண்டே போகலாம்... சுதந்திரத்தைப்பற்றி எதிர்மறையாய் எழுதுவதே தவறு என்ற எண்ணங்கள் சமீபகாலமாய் உடைபட்டுக்கொண்டிருப்பதே ஆரோக்கியமான மாற்றம்தான்...
    நானும்கூட போனவருடம் எழுதினேன் ஒரு பதிவு... எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?... இரண்டு மாதங்களாக படித்து, திரட்டி எழுதிய இந்தப்பதிவு பலபேரால் தீண்டத்தகாததாகவே மாறிவிட்டது...
    கதம்ப மாலை...: சுதந்திரம் ஒரு சாபக்கேடா? – மகாத்மா செய்தது சரிதானா? http://jeevanathigal.blogspot.in/2011/05/blog-post_11.html

    Well done brother... keep writing...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் இரு மாத உழைப்பின் கட்டுரையை மீண்டும் செதுக்கி ஆகஸ்ட் 15ல் தந்திருக்கலாம்.சிறப்பான பதிவு அது.முகமூடிகள் மட்டுமே மாறியுள்ளன. இப்போதுள்ள கொள்ளைக்காரர்கள் மிக மிக மோசமானவர்களே.கடந்த மாதம் தோழர்கள் தோழிகள் நடத்திய கல்வித்துறையை தனியாரிடமிருந்து மீட்டெடுக்க நடத்திய போராட்டங்களை காவல் துறை அடக்கியதும் தாக்கியதும் இங்கே உள்ள சுதந்திரத்தை(???!!!)பறை சாற்றுகிறது.லண்டனில் புலிக்கொடி ஏற்றி ராஜபக்ஷேவை விரட்டும் அளவு உள்ள சுதந்திரத்தை கண்டு வியந்துள்ளேன்.இங்கு சுதந்திரம் என்பது தவறுகளுக்கு அடையாள அட்டையாகவே உள்ளது.உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...தொடருங்கள் அண்ணா தொடருகிறேன்...

      நீக்கு
  28. அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..
    காஷ்மீரில் நடக்கும் இராணுவ அத்துமீறல்கள் பற்றி படித்திருக்கிறேன். ஆனாலும், ஒரு இராணுவ வீரராக இருந்துகொண்டே உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டிருக்கும் உங்கள் வீரத்திற்கு என் சலுட் சகோதரரே....
    நான் இந்தியன் அல்ல, ஒரு இலங்கையன்..சகோதரர் ஆஷிக் அஹ்மத் மூலமாகவே உங்கள் வெப் பார்க்க கிடைத்தது.. உங்கள் "இராணுவ வீரனும் முஸ்லிம் வாலிபனும்" என்ற ஆக்கம் மெய் சிலிர்க்க வைத்தது..
    இஸ்லாத்தை ஏற்கின்ற சகோதரர்கள் சொல்கின்ற குற்றச்சாற்று 'முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமியம் இல்லை' என்பதே.. ஆனால் உங்கள் அனுபவங்களின் வெளிப்பாடு 'இஸ்லாமியம் உள்ள முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமியம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்பதே'...
    அளஹம்டுளில்லாஹ்..
    -ஹமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் வருகைக்கு வழி அமைத்த சகோ ஆசிக் அண்ணாவுக்கும் மிகவும் நன்றி சகோ.அலைக்கும் சலாம்.

      நீக்கு
  29. VERY GOOD SIR YOUR ARTICLE! KEEP WRITING!

    BEST WISHES FROM
    HAMEED
    PONDICHERRY

    பதிலளிநீக்கு
  30. இறைவனின் சாந்தியும் சமாதானமும் சகோதரருக்கு கிடைக்க என்னுடைய பிரார்த்தனை.

    என்ன ஒரு நேர்மையான பதிவு..ஒரு உண்மையான மனிதன் எப்படி இருக்க வேண்டுமோ,அப்படி உங்கள் செயல்கள் சகோ..

    ஒரு மனிதனை சுதந்திரமாக தன் விருப்பபடி வாழ வைக்க முடிய வில்லை என்றால் அந்த நாடு ஜனநாயக நாடு என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமும் இல்லை..வெட்கப் பட வேண்டிய ஒன்று..

    ஆனால் ஏனோ மறந்து விடுகிறார்கள்..அதிக அடக்குமுறைகள் எதிர்காலத்தில் சரித்திரம் படைக்கும் வீரிய மிக்க விதைகளை உருவாக்கின்றது என்பதை..புகட்டபடும் படும் பாடங்கள் அவ்வளவு எளிதில் மறப்பதற்கு இல்லை..

    தொடரட்டும் இறையருளால் உங்களின் இந்த அருமையான,நேர்மையான பணி..







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக்குமுறைகளை கூட உடைத்துவிடலாம்.கூடவே அலட்சியமும் சேர்ந்து கொண்டு எளியவர்களை நசுக்கும் போது என்னதான் செய்வது...

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

      நீக்கு
  31. நன்றி தோழமையே...!!
    உன்மையை உரக்க சொன்னதற்கு...!!

    -சாதிக் இப்னு அபுபக்கர்-

    பதிலளிநீக்கு
  32. Ok. So, What is the solution? Bomb podalaama?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு நிலை வந்தால் பொதுவில் போடாமல் எங்கள் மீது போடவும்.இல்லையேல் கொள்ளையடிக்கும் அரசியல்வியாதிகள் மீது போடவும்.இங்கு பாம் போடுவது இல்லை விஷயம் நண்பா..ஒரு பக்கம் கூத்தும் கொண்டாட்டமும் மறுபக்கம் வறுமையும் இயலாமையும்..கொஞ்சம் கூட கவலை இல்லா அரசாங்கம்.முடிவு என்னவாகும் நண்பா?இன்றைய கூடங்குளம் நாளை வன்முறை நிலமாக மாறினால் அதற்க்கு முழு பொறுப்பும் அரசாங்கமே தவிர மக்கள் அல்ல.தனி தமிழ்நாடு கேட்க்கும் அளவுக்கு என் மனநிலை உள்ளது.அதற்கும் இந்த அரசே காரணம்.வருகைக்கு நன்றி நண்பா...

      நீக்கு
  33. இது போல இன்னும் பல, என் போன்றவர்கள் அறிய வேண்டிய உண்மைகளை / தங்கள் அனுபவங்களை எழுத வேண்டுகிறேன்.. my first visit to ur blog... added to my news feeds... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயம் எழுதுகிறேன் நண்பரே..உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி நண்பரே..added to my news feeds விரைவில் செய்து வைக்கிறேன் நண்பரே.நன்றி.

      நீக்கு
  34. உங்களின் உள்ள குமுறல்களை எழுத்தாக மொழிபெயர்த்துவிட்டிர்கள். தயவு செய்து சகோதரர் சொல்கிறார் மனைவி சொல்கிறார் என்று உங்களின் உணர்வுகளுக்கு பூட்டு போட்டுவிடாதிர்கள் தோழரே. நிச்சயமாக இணைந்து தொடர்வோம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அண்ணா அப்படியெல்லாம் நான் அடைந்துவிடுபவனில்லை.உங்கள் ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது.தவறான கருத்துக்களோ என்று பயந்த மனைவி சற்றே ஆச்சரியமாக கவனிக்கிறார்.தொடர்வோம் அண்ணா.நன்றி.

      நீக்கு
  35. மனசு எழுத்தானா இப்புடித்தான் இருக்கும்கிறதுக்கு உங்களோட இந்த பதிவு சிறந்த எடுத்துக்காட்டு......

    சுதந்திர தினத்த புறக்கணிக்கிறதால இங்க மாற்றங்கள் வந்துடும்னு எனக்கு தோனல.... எவ்வளவோ இழப்புகளுக்கு பிறகு இந்த சுதந்திரத்த நமக்கு வாங்கித்தந்தாங்க இந்த புறக்கணிப்பு அவங்கள அவமரியாதை செய்வதுபோல் ஆகி விடாதா....?
    நீங்க சொல்லிருக்க எந்த விஷயத்தையும் எந்த காரணத்தை பயன்படுத்தியும் மறுக்க முடியல..... காரணம் வெறும் நிஜங்களை நிஜங்களாவே பதிவு பண்ணிருக்கீங்க....
    ஆனா நாம போடுற ஓட்டுதான சரியான இடத்துல தவறானவங்கள உக்கார வச்சிச்சு..... அவங்க தேசத்த கார்ப்பரேட் முதலாளிகள்கிட்ட வித்துட்டாங்க.....
    இங்க தவறு நம்மக்கிட்டயும் இருக்கே சுதந்திர தினத்த புறக்கணிக்கிறத விட ஓட்டு மொத்த தமிழகமும் ஒரே ஒரு தேர்தல புறக்கணிச்சா அது ஒரு தேசத்தோட மாற்றத்திற்கான ஆரம்பமா இருக்குமே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது மக்களும் லஞ்சம் வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள், அப்புறம் எப்படி தேர்தலை புறக்கணிப்பது? நல்லவர்கள் மானமுள்ளவர்கள் புறக்கணித்தால் அவர்களின் ஒட்டு கள்ள ஓட்டுகளாக பதிவு செய்ய படும்

      நீக்கு
    2. @நான் அறந்தாங்கியான் உங்கள் கருத்துக்களை அப்படியே வரவேற்கிறேன் அண்ணா,சுதந்திரத்தை வாங்கி தந்த ஒருவர் இன்று இருந்தால் அவரே கூட வெறுத்திருப்பார் இந்த போலி சுதந்திரத்தை ஜனநாயகத்தை.உங்கள் கருத்துப்படி ஒட்டு மொத்த தமிழகமும் வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இதற்க்கு ஒரு மாபெரும் விழிப்புணர்வு போராட்டம் அவசியம் அண்ணா.உங்கள் கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
    3. @mubarak kuwait உண்மைதான் சகோ..மாற்றம் வரும் சகோ.மக்கள் புரிவார்கள் ஒவ்வொரு புறக்கணிப்பும் ஒரு போராட்டமே.எப்படியாவது ஒரு போராட்டம் ஆரம்பிக்கட்டுமே...நன்றி சகோ.

      நீக்கு
    4. ஒவ்வொரு புறக்கணிப்பும் ஒரு போராட்டமே/// நிச்சயமா சதீஷ்...... ஆனா ஆரம்ப புறக்கணிப்பே சுதந்திர தினமா இருக்க வேண்டாமேங்கிறதுதான் என்னோட எண்ணம் .... வளரும் தலைமுறையோட மனசுல இந்த புறக்கணிப்பு சுதந்திரப் போராட்டத்தையும் அந்தப் போராளிகளையும் பத்துன ஒரு தவறான பிம்பத்த பதிவு பண்ணிடக் கூடாதுங்கிற பயம்தான் எனக்கு....... காரணம் எத்தனை எத்தனயோ தாலிக்கொடிகளும் தொப்புள் கொடிகளும் அறுத்தெறியப் பட்டிருக்கு இந்த சுதந்திரக்கொடிக்காக....
      ஒரு தேர்தல் புறக்கணிப்புக்கான முன்னெடுப்பை முயற்சிக்கலாமேனு தோணுது......
      சுதந்திரதின புறக்கணிப்புங்கிறத கடைசியா வச்சிக்கலாமே....
      @mubarak kuwait; இப்போது மக்களும் லஞ்சம் வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள்// இப்போ இல்ல சகோதரா.... இந்த கேடுகெட்ட கலாசாரம் தொடங்கி வெகுகாலம் ஆச்சு....

      இதப் பத்தின விழிப்புணர்வு முயற்சிய செஞ்சு பாக்கலாமே ....
      கதராடை கட்டிக்கொண்டு
      கோட்டையில் கொடியேற்றும் நிகழ்கால அரசியல்
      கோட்சே களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை

      ஒரு மாநிலத்தோட தேர்தல் புறக்கணிப்பு நிச்சயமா உலகத்தோட பார்வைய நம்ம பக்கம் திருப்பும்ங்கிறது என்னோட சின்ன அறிவோட நம்பிக்கை....


      நீக்கு
  36. திரு.சதீஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

    தேர்தல் புறக்கணிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவை தங்களின் யதார்த்தங்களில் இருந்து எதிர் பார்க்கிறேன்...

    ஆளுமை நிறைந்த உங்களின் எழுத்துக்கள் ஒரு சில சிந்தனைகளையாவது புரட்டிப் போடும் என்று நம்புகிறேன்.....

    நன்றி.....

    தங்களின் வலைப்பக்கத்திற்கான இணைப்பை தந்த அன்பு நண்பனும் எனக்குப் பிடித்த அரசியல் பதிவருமான ரஹீம் கசாலிக்கு எனது நன்றிகள்.....

    பதிலளிநீக்கு
  37. அன்பு அண்ணாவிற்கு,உங்களின் தேர்தல் புறக்கணிப்பு மிக சரியான திட்டமே...ஆனால் இதில் ஓட்டு மொத்த அரசியல் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.நம் மக்கள் மொத்தமாக தலைவன் வழி செல்லும் அடிமைகளே.தவறே செய்தாலும் சரி என்றுதான் சொல்வார்கள்.ஒரு மாபெரும் விழிப்புணர்வு வேண்டும்.மெல்ல மெல்ல அதை மத்திய அரசே ஏற்படுத்தி கொடுக்கும்.காஷ்மீரில் நடக்கும் தேர்தல்கள் எப்படி உள்ளது?அங்கே புறக்கணித்தாலும் எப்படி ஓட்டுக்கள் விழுகிறது?அங்கேயே இந்திய அரசின் தாளத்திற்கு ஆடும் அரசியல்வியாதிகள் தேர்தலை புறக்கணிக்க விடுவதில்லை...இங்கு கேட்கவா வேண்டும்?

    நீங்க என்னலாமோ சொல்றீங்க..நான் நேரில் அனுபவித்ததை எழுதினேன்...உங்கள் பாராட்டுக்களுக்கு நான் தகுதியானவனா என்பது சந்தேகமே...ஒரு பிரபல பதிவர் திரு.ரஹீம் கசாலி மூலம் அறிமுகம் ஆனது எனக்கு மனதுக்கு மிக நிறைவாக உள்ளது...நீங்கள் சொன்னபடி எழுத முயற்சிக்கிறேன்..மிகப்பெரிய பலவீனம் நான் இதுவரை ஓட்டு போட்டதில்லை..ஆனால் தேர்தல் மேல் சில எண்ணங்கள் உண்டு..சீக்கிரம் பகிரலாம்.மிக மிக மிக நன்றி அண்ணா உங்களின் வருகைக்கு...ஊக்கத்திற்கு...கருத்திற்கு...

    பதிலளிநீக்கு
  38. அத்தனையும் உண்மை. உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....