சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.
புதியதலைமுறையில் குண்டு வெடிப்பு என்று முக்கிய செய்தி ஓட செய்தியாளர் இது குண்டுவெடிப்புதானா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என கூறுகிறார்.பரவாயில்லை கண்முன் நடந்ததுதானே விடுங்க.அதனை தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையை தகர்க்க திட்டமிடப்பட்டது குரிப்பிடத்தக்கதுன்னு முத்தாய்ப்பாக தமது எதிராளியை குற்றவாளியாக நிறுத்துகிறது..
ஒரு குண்டுவெடிப்பிற்கு பின் எந்த அடிப்படையில் இவர்களாக தீர்மானிக்கிறார்கள் என தெரியவில்லை.இப்படியான சூழ்நிலையில் காவல்துறை பல தீவிர ஆய்வுகளுக்கு பிறகே தமது விசாரணையின் கோணத்தை ஆரம்பிக்கும்.
வெடிகுண்டின் மூலப்பொருட்கள் என்ன? அது அதிகமாக கிடைக்குமிடம் எது? அதன் விற்பனையில் யார்? யார்? இதற்கு முன் இப்படியான மூலப்பொருட்கள் அடங்கிய குண்டு வெடிப்ப்பு யார் செய்தது? எங்கு?அவர்களுக்கு இங்கு ஆதரவு நிலை எப்படி?
குண்டு வெடிக்கப்படும் விதம் வேறு சம்பவங்களோடு ஒத்து வருகிறதா? அதில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புக்கு இங்கு வாய்ப்புள்ளதா? அனுதாபம் உண்டா? நாள் ,கிழமை என பல விடயங்கள் ஆராயப்படும்.
குண்டு வெடிக்க வைக்கப்படும் விதம் கொண்டும் விசாரணை அவசியப்படும்.ரிமோட் எனில் ஆள் அந்த பகுதியில்தான் இருந்துள்ளான்.வேறு முறைகள் எனில் அந்த குண்டு எங்கு பொருத்தப்பட்டது? அந்தப்பகுதிகளை குறித்த விசாரணை...
குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள சமூக பிரச்சனைகள்,அதன் தீவிரம் என்ன?
இப்படியாக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதற்கு முன்னேயே ஊடகங்கள் தமது எதிரியை இல்லை எவரையாவது குற்றவாளியாக்கி கொலை செய்ய துடிப்பதுதான் வேதனையே.
இதனைப்போன்ற தொடர் செய்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல் மூலம் மிகப்பெரும் நஞ்சை விதைத்து வருவது புரிகிறதா? நெல்லை என்பதால் எனது தம்பி மட்டும் ஒரு ஹோட்டலில் அருவா கத்தி இருக்கிறதா என சோதிக்கப்பட்டபோது கூனி நின்றான்.அதை இஸ்லாமியர்களுக்கு பொருத்தி பார்க்கும்போது உண்மையை புரிந்தும் கொண்டான்.
திருநெல்வேலியில் கொலை நடந்தது என்பதால் நானும் கொலைகாரனா?அங்கு சாதி கலவரம் நடந்தால் நானும் சாதி வெறி பிடித்தவனா? இல்லை மத்த ஊரில் கொலைகள் நடக்கலியா? மத்த ஊர்களில் சாதி வெறியே இல்லியா?அனைத்தும் அனைத்திலும் உள்ளது.ஆனால் ஹரி காட்டியதும் விதைத்ததும் நெல்லையாச்சே....
இதனை இஸ்லாமியர்களுக்கும் பொருத்தி பாருங்கள்.உங்களோடு பணிபுரியும் இஸ்லாமியர்,இங்கு பதிவெழுதும் இஸ்லாமிய பதிவர்கள்,உங்களோடு பள்ளியில் படித்த இஸ்லாமியர் இவர்கள் வெடிகுண்டுகளோடு சுற்றுகிறார்களா என்ன? என்னோடு படித்த சாகுல் ஹமீது டீக்கடையில்தான் வேலை பார்க்கிறான்.அவனையும் ஸ்லிப்பர் செல் என்று வக்கிர எண்ணத்தின் நவீன பதிப்பான துப்பாக்கியில் முருகதாஸ் எச்சரிக்கை செய்கிறார்.இயல்பான ஒருவனின் வாழ்வை உடைத்துப்போட்டு அவனை தீவிரவாதியாகவே மாற்றி விடுதல் சரிதானா?
மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?
பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?
மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?
பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?
சக மனிதனை தனிமைப்படுத்தும் இந்த செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் இணைந்து கொண்டு சமூகத்தை உடைத்து போடுகிறோம் நாம்.
சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும் சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.
ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான் (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.
என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும் ,செயல்பாடுகளும் .
ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின் மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?
எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.
சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும் சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.
ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான் (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.
என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும் ,செயல்பாடுகளும் .
ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின் மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?
எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.
| Tweet | |||||

என்னத்தை சொல்ல
பதிலளிநீக்குஎன்ன சொன்னாலும் பரவால்ல ..நீங்க சொல்லுங்க...
நீக்குகுண்டு வெடித்தாலே அது இஸ்லாமியர்கள் என்ற கருத்தினை பரவலாக ஊடகங்கள் பரப்பி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிவிடுகிறது. எண்ணற்ற அப்பாவிகள் இதில் பாதிக்கப்படுவது வேதனைக்குரியது. நாஞ்சில் மனோவின் அந்த பதிவை நானும் படித்தேன். மதத்தை மீறிய மனிதம் துளிர்த்தெழ வேண்டியது அவசியம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதளிர் சுரேஷ் அண்ணா நன்றி .
நீக்குவெகு ஜன பத்திரிக்கைகளில் தலையங்கமாக வரவேண்டிய பதிவிது .
பதிலளிநீக்குஅட...நன்றி ஜீவன் சுப்பு..உங்க இன்லேன்ட் லெட்டர் பதிவுக்கு ஷொட்டு கொடுக்க நினைத்து மிஸ் செய்துட்டேன் ...அது சூப்பரா இருந்துச்சு ஜீவன்
நீக்குஊடகங்கள் தங்களுக்கு கொம்பு முளைத்து விட்டதைப் போல பிதற்றுவது ,ஆனாவிசயமான கற்பனைகளை கட்டவிழ்த்து விடுவது மக்களுக்கு இடையே காழ்புணர்ச்சியை தூண்டுவது நாட்டை சீர் குழைக்கும்.
பதிலளிநீக்குகருத்துக்கும் வருகைக்கும் நன்றி கலாகுமரன் சகோ
நீக்குஉண்மை தான். எல்லா இனத்திலும் இன்று பயங்கரவாதிகள் தோன்றி செயல்படுகின்றனர். ஆனால் வெறும் இஸ்லாமியர்கள் மட்டும் பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப ஊடகங்கள் செய்தி வெளியிடுவது ஆபத்தானது. இஸ்லாமிய மதத்தில் கணிசமான கடும் போக்காளர்கள் உள்ளனர். அவர்களை குறிப்பிடும் போது அந்த இயக்கத்தினை குறிப்பிட்டாலே போதுமானது. ஒட்டு மொத்த மக்களை பிரிக்கும் வகையில் குறிப்பிடுவது ஆபத்தானதே.
பதிலளிநீக்குஉண்மைதான் ....யார் கடிவாளம் கட்டுவது.தம்மைத்தாமே அறிவு ஜீவியாக வேறு ஊடகங்கள் கட்டமைத்து நம்ப வேறு வைத்து விடுகின்றன.
நீக்குவருகைக்கு நன்றி இக்பால் செல்வன் சகோ....பேஸ்புக்கில் உங்களை மீண்டும் தொலைத்து உள்ளேன் :(
சமூகத்தை துண்டாடவே இந்த சமூக வலைத்தளங்கள். ஒவ்வொரு குண்டுவெடி்ப்பின் போதும் தப்பித்தவர்களில் ஒருவனாய். தனிமையில் அழுவதை தவிர வேறென்ன செய்யமுடியும்
பதிலளிநீக்குகுவைத் தமிழ்நேசன் சகோ.....இந்த மனநிலையில் பலரை உணர்ந்துள்ளதால்தான் இந்தப்பதிவு.நன்றி.
நீக்குAfter every bomb blast in India. Apart from sympathy to the victims, my inner thoughts always pray that the guys who involved/set up the bomb should not be a Muslim. This may sounds selfish towards my community but I am pushed to think like this.
பதிலளிநீக்குசரியான விக்டிம்களை பிடிக்காத வரை இதுதான் உண்மை.அதோடு வேறு எந்த கோணத்திலும் யோசிக்காமல் சேற்றை அடிப்பதுதான் பிரச்சனையாகிறது.குற்றம் புரிந்த எவரும் தண்டிக்கப்படட்டும்.அப்படித்தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எவனையோ பிடித்து தூக்கில் நிறுத்தினால்?
நீக்குநன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்
சகோதரர் சதீஸ் செல்லத்துரை அவர்களுக்கு
பதிலளிநீக்கு...இஸ்லாமியர்களாகிய எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு கண்ணீரோடு நன்றியை தெறிவித்து கொள்கின்றேன் ...
உங்களின் வார்த்தைகளை கொஞ்சம் யோசிக்கும்போது எங்களின் நிலையை படம்பிடித்து காட்டியுள்ளது
இங்கு மதம் பிரச்சினையே அல்ல சகோதரா
மதத்தை வைத்து பிளைப்பு நடத்தும் அரசியல் தான் முக்கிய காரணம் ... ..
ஒரு காலத்தில் அமைதி பூங்காவாய் இருந்த தமிழகத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை காட்டி இவர்கள் தீவிரவாதிகள் என்று இஸ்லாமியர்களாகிய எங்களை ஓன்று கூடி அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லும்போது கூனி குறுகி போகின்றோம்
எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருகின்றர்கள் ..உதாரனத்திற்க்கு நக்சலைட் உல்பா போன்ற பல இருக்கின்றன
இவையெல்லாம் மதத்தை சம்பத படுத்தி சொல்வது இல்லை மாறாக எல்லா மதத்திலும் இருப்பது போல ஒரு அயோக்கியன் முஸ்லிம் மதத்தில் இருந்துகொண்டு ஏதேனும் காரியம் செய்தால் அவனை முஸ்லிம் தீவிரவாதி என அழைப்பது எந்த விதத்தில் நியாயம் ??
இங்கு மதம் பிரச்சினையே அல்ல சகோதரா
நீக்குமதத்தை வைத்து பிளைப்பு நடத்தும் அரசியல் தான் முக்கிய காரணம் ... ## இதுதான் சகோ ...இத புரிந்திருந்தால் போதும் ..ஆனால் நிஜத்தில் புதிய தலைமுறை வெகு எளிதாக சூழ்ச்சியில் விழுகிறது/
அருமையான கட்டுரை!
பதிலளிநீக்குநன்றி சகோ ....
நீக்குAmana from Riyadh
பதிலளிநீக்குஐயகோ என்ன ஒரு ஒரேமாதிரி சிந்தனை கொஞ்சம் கண்விழித்து திறந்த மனதுடன் சிந்திகமாடிர்களா? கொஞ்சம் பழைய செய்திகளை புரட்டிப்பாருங்கள் கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன்னால் இதே போன்று சம்பவம் நடந்ததே ஞாபவம் இருகிறதா? தஞ்சையே சேர்ந்த தமீம் அன்சாரி ஒரு வியாபாரி இலங்கைக்கு வியாபரத் தொடர்புடையவர். இதே போன்று காரணங்கள் கூறி கைது செய்யப்பட்டார், ஆனால் பிறகு நல்லுள்ளம் கொண்ட சில அரசியல் அமைப்புகள் அப்பாவியான அவருக்கு ஆதரவாக உண்மைகண்டறியும் குழு அமைத்ததில் காவல் துறை கூறியது உண்மையில்லை எனபது தெரியவந்தது. ஆனால் அவரை கைது செய்யும் போது பரபரப்பாக பேசிய மீடியாக்கள். அவரை நிரபராதி என்று வெளிவரும்போது காட்டவில்லையே. இப்பொழுது இலங்கையை சேர்ந்த ஜாஹீர் உசேன். இவர்களுக்கு பாகிஸ்தான் க்கு தொடர்புடைய ஆட்கள் கிடைக்காத காரணத்தால் இலங்கைக்கும் வழியாக பாகிஸ்தானை தொடர்புப்படுதுகிரார்கள்.
இது போன்றசம்பவங்களை பதிவில் இணைக்க நினைத்து கால சூழ்நிலையில் விட்டு விட்டேன் ...நீங்கள் நியாகப்படுத்திய உண்மை முக்கியமானது ....
நீக்குநன்றி சகோ
அருமையான கட்டுரை!
பதிலளிநீக்குநன்றி சீனிக்கவிதை சகோ
நீக்குதௌிவான சிந்தனை நல்ல விளக்கம் எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் இல்லை தான் ஆனால் பிடிபடும் எல்லா தீவிரவாதிகளும ஏன் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர்
பதிலளிநீக்குஇஸ்லாமியர்களை பிடித்தாலே தீவிரவாதியாக காண்பிக்கப்படுகிறது.பிடிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது காண்பிப்பதில்லை.இந்துக்களில் இது போல செயல் செய்தவர்களை திட்டமிட்டு மறைத்து விடுகிறது ஊடகங்கள்.குண்டு வைப்பது மட்டும்தான் தீவிரவாதம் என்று நினைக்கும் நமது முட்டாள்தனம்.
நீக்குஇஸ்லாமியர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தாலே தீவிரவாதிகள் என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன...
நீக்குஆனால் சில நாட்கள் முன்பு வெடிகுண்டுகளுடன் முஸ்லிமல்லாத வேறு சமூகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டபோது.. வெடிகுண்டுகளுடன் சிக்கிய இளைஞர் என்றுதான் செய்தி வெளியிட்டன இந்த கேடு கெட்ட ஊடகங்கள்.... :/
இறை நாடினால் இந்த நிலை கூடிய விரைவில் மாறும் !!!நடுநிலையாக சிந்திக்கும் சகோ சதீஷ் போன்ற நல்ல உள்ளங்களால்...!
மிக சரியாக சொன்னிங்க...நடுநிலை என்றெல்லாம் இல்ல சகோ....ஒருத்தன் வலியை இன்னொருத்தன் உணர்ந்தா போதும் ....நன்றி சகோ
நீக்குசென்னை குண்டு வெடிப்பு: பின்னணியில் முன்னணியா? –
பதிலளிநீக்குசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (01/05/2014) காலை 7.25 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.இந்தியாவில் அவ்வப்போது மனித குல விரோதிகளால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதும், 1998 – ன் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில், இத்தகைய கோர நிகழ்வுகள் ஏதும் நடந்திராதது நமக்கு ஆறுதலை அளித்தது. ஆனால் இன்றைய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் இலாபம்
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது. அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
மோடிVs லேடி
தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பின்னணியில் முன்னணியா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம். பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.
ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.
அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.
ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.
நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?
அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்!
முஹம்மது ஷாஃபிஈ
- See more at: http://www.thoothuonline.com/archives/65451#sthash.LkkhZFHZ.dpuf
இந்த அரசியல்தான் இன்று சாமானிய மனிதனை சந்தேகத்துக்குள் தள்ளி விட்டுள்ள்ளது.அதனை தெரிந்தும் ஆதரித்து திரிவது மன வேதனையை தருகிறது.
நீக்குசொல்வீர்களா?
பதிலளிநீக்கு'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.
ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது?
காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?
ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.
அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.
எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மைநிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?
ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.
சொல்வீர்களா? - ஆளூர் ஷாநவாஸ்.
SOURCE: https://www.facebook.com/aloor.shanavas?fref=ts
அருமையான பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள் சகோ...
பதிலளிநீக்குநன்றி ஹமீத் சகோ ...
நீக்குஅருமையான பதிவு சதீஷ் ..பாராட்டுக்கள் ..
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின் சகோ ...
நீக்குபாராட்டுக்கள் ..
பதிலளிநீக்குநன்றி ஆசிக் சகோ
நீக்குநல்லவன் கெட்டவன் எல்லா இடத்துலயும் தானே இருப்பான். ஒருவேளை குண்டு வைத்தவன் இஸ்லாமியனாக இருந்தாலும், எல்லா இஸ்லாமியரையும் தவறாக நினைப்பதும், தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் தவறு. இது போன்ற தவறுகளுக்கு பொறுப்பற்ற ஊடகங்களும் ஒரு முக்கிய காரணம்.
பதிலளிநீக்குநன்றி குட்டிப்பிசாசு ....
நீக்குமிக சரியான பதிவு... ஸ்லீப்பர் செல்களைக் குறித்து எடுத்த முருகதாஸிர்க்கு முன்னோடியே நம்மில் பலர் மிக சிறந்த இயக்குனராகப் பாரட்டிய(பாராட்டும்) மணிரத்னம் தானே அவருடைய ரோஜா படத்தை 100 தடவைக்கும் மேல் ஒளிபரப்பு செய்த தூர்தர்ஷன் அப்பாவி கிராமத்து மக்களின் மனத்திலும் தான் விதைப்பது எத்தனை பெரிய நஞ்சு என்பது தெரியாமலே விதைத்து சென்றது... அதன் தொடர்ச்சி மற்றும் அதன் விளைவுகளின் தொடர்ச்சியை பல அப்பாவிகள் அனுபவித்து வருகின்றனர்.
பதிலளிநீக்குநன்றி ப்ரியா ...காஸ்மீரை பக்கத்து வீட்டில் கொண்டு வந்ததை முருகதாஸ் செய்தது மிக கொடுமை.
நீக்குப்ரியா சகோ.. :)
நீக்குவாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?
பதிலளிநீக்குநன்றி கலிபா சகோ.....
நீக்குமிக நல்ல பதிவு .இங்கு இருப்பவை எல்லாம் எவன் காசு கொடுகிறானோ அந்த சிந்தாந்தம் அதரவாக கூவுவது,மிக அதிக மத நம்பிக்கை உடைய மக்கள் வாழும் தேசத்தில் தனது அரசியல் லாபம் வேண்டி திட்டம் இட்டு மக்களை மதத்தின் பெயாரல் பிரித்து ஒருவருக்கு ஒருவர் கொலை வாளை எந்த செய்து ரத்தம் பார்த்த பின்னும் மீண்டும் மீண்டும் ரத்தம் சுவைக்க என்ன வெல்லாம் செய்யவேண்டுமோ அதை தன் அரசியல் இருப்பை நிலைநிறுத்த செய்து கொண்டு இருக்கின்றனர் அடிப்படை வாதிகள் .ஒரு மதத்திற்கு எதிர் அடுத்த மதம் நிறுத்தி ரத்தம் சுவைத்து கொண்டே இருகின்றனர் ,இது தொடந்து கொண்டே தான் இருக்கும் போல ,ஏன் இங்கு எல்லா பயலும் மதத்தை கட்டி கொண்டே தொங்கி கொண்டு இருக்கிறான் .பொது பிரச்சனையில் கூட ஓன்று பட மறுக்கிறான் ஆனால் மதம் ஆபத்து என்றால் கூட்டமாக வருவான் மதத்தை காப்பாற்ற ,மனிதத்தை விட மதம் முக்கியம் என்று மக்கள் எண்ணி விட்டால் யாரவது ஒரு மத மக்களின் ரத்தம் சிந்த பட்டு கொண்டே இருக்கும் .
பதிலளிநீக்குஇந்தியாவில் இதுவரை நடந்த கலவரங்களில் குண்டுவெடிப்புகளில் எத்தனை இந்துக்கள், எத்தனை முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற கணக்கை போட்டுவிட்டு (நாட்டுபிரிவினை+துளுக்கன்களின் படையெடுப்பையும் சேர்த்தும் பார்க்கலாம்) இப்படி கண்ணீர் வடிக்கலாமே...
பதிலளிநீக்குகொஞ்ச காலமாக இந்துவும் திருப்பி அடிக்க வெளிகிட்டவுடன்...முஸ்லீம்கள் இப்போது "அப்பாவி வேடம்" பூணுகிறார்கள்....
நல்ல பதிவு தோழர்
பதிலளிநீக்கு