Translate

வியாழன், 10 மே, 2012

காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்...

எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால்  என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்... ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்....

எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான்.2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை.எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது.
ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை.காணவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானிற்கு ஆயுத பயிற்சி எடுக்க சென்று விட்டதாக சொல்லலாம்.அது குறித்து விசாரிக்க இவன் கொண்டு வரபட்டிருந்தான்.
                                 பொதுவாக விசாரணைகள் G செல் என்ற ஒரு திக்கான தகர ரூமில் வைத்து நடத்தப்படும்.கதவுகள் அடைக்கபட்டே இருக்கும்.அந்த வாலிபனுக்கும் அதே ரூமில் விசாரணை.சிரித்த முகத்துடன் நாம் தப்பு செய்யவில்லை என்ற தைரியமும்,படபடப்புமாக இருந்தான்.அவனுக்கு காவலாக நான்.
                                எனது காவல் முடியும் வரை யாரும் விசாரிக்க வர வில்லை.கை விலங்கு இடப்பட்ட நிலையில் சாப்பாடு கொடுக்கும்போதும் இயற்கை அழைப்பின் போதும் மட்டுமே விலங்குகள் அவிழ்த்து விடப்பட்டன.
                                   விசாரணை என்பதை விட அது அந்த ஊரில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.ரயில்வேயில் ஒரு கருப்பு நிற தொலைபேசி இருக்குமே அதுதான் இங்கு படு பயங்கரமான ஆயுதமே.அதில் டயல் செய்ய சுற்றும்போது சிறிய அளவில் மின்சாரம் உண்டாகும்.அந்த போனோடு இணைக்கப்பட்ட வயர்கள் அந்த வாலிபனின் ஆணுறுப்பில் இணைக்கப்பட்டது.இப்பொழுது டயல் செய்யும் ஒவ்வொரு முறையும் அவன் ஆணுறுப்பில் பாயும் மின்சாரம் கொடுக்கும் மரண வேதனையை சற்று கற்பனை செய்யுங்கள்.மல வாயில் மிளகாய்த்தூள் இடபட்டதா என்று தெரியவில்லை.ஆனால் அதுவும் நடப்பதுண்டு.
                                  அடுத்த நாளில் நான் வேறு காவலுக்கு சென்ற படியால் மாலை மட்டுமே பார்க்க முடிந்தது.மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.நடக்க முடியாமல் நடந்தான்.அன்று மாலை கமாண்டன்ட் விசாரிப்பதாக அவர் பங்குக்கு வதை செய்தார்.கதவு திறக்கும்போது சார் ஒரே ஒரு தடவை நான் சொல்றதை கேளுங்க என்றபோது நீ சொல்லி நான் கேட்கணுமா என்று முகத்தில் விடப்பட்ட ஒரு அறையில் மூலையில் போய் விழுந்தான்.அழுதுகொண்டே இருந்தான்.ஆறுதலாக பேசி சாப்பாடு கொடுத்து அமைதி செய்தேன்.படிப்பு பற்றி பேசியபோது எனது படிப்புக்காக  INGOU வின் PROSPECTUS வாங்கி தருவதாக உறுதி அளித்தான்.
                               அடுத்த நாள் அவனை விடுதலை செய்தபோது நடக்கமுடியாமல் நடந்து சென்றான்.அவன் வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருந்தனர்.அவன் அம்மா அழுத அழுகை மறக்கமுடியாதது.அவன் அழுத அழுகையை விட உக்கிரமாக அழுதபடி அழைத்து சென்றனர்.
                                     நான் என் சகாவிடம் நாம் ஒருவனை தீவிரவாதியாக்குகிறோம் என்ற போது அவன் அதற்க்கு இனிமே அந்த ஊரில் எவனும் பாகிஸ்தான் போக மாட்டான்.போனாலும் போகும் முன்னாடி இன்னொருத்தன் நமக்கு சேதி தந்திடுவான் .அதுக்குதான் இந்த அதிர்ச்சி முறை என்றான்.
                                       சில நாட்கள் கழித்து  அந்த வாலிபன் நான் வாயிலில் காவல் பார்க்கும்போது INGOU  PROSPECTUSகொண்டு வந்து கொடுத்தான்.மேலும் அவன் இதை கொடுக்க பலமுறை வந்ததாகவும் வேறு முகங்களை கண்டு பயந்து திரும்பி விட்டதாகவும் சொன்னான்.அவன் ஊரில் ரோந்து பணிக்கு வந்த என்னை பார்த்ததாகவும் சொன்னான்.நீ அப்பவே என்னிடம் பேசி இத கொடுத்திருக்கலாமே என்றேன்.நீங்க மறுபடியும் பிடிச்சிட்டு போய்ட்டா?சொல்லிவிட்டு சென்று விட்டான்.மறுபடி ஒரு நாளும் பார்க்க வாய்ப்புகள் அமையவில்லை.ஆனால் மறக்க முடியாதவன்.

                                   காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?

டிஸ்கி:  பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில்  உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது  நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது  கசப்பான உண்மை.

82 கருத்துகள்:

  1. நீங்கள் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் என்பதாலேயே எனக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது . உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஏன் ஒவ்வொரு எழுத்துகளும் கூட கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

    உங்கள் அனுபவங்களை மட்டும் கூறாமல் அதிலிருந்து உங்கள் பார்வையையும் கூறுவது அற்புதமாக உள்ளது. உங்கள் அனுபவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் தொடர்கிறேன். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சீனு....மேலும் பல எழுத நிறைய சிக்கல்கள் உள்ளது...இணைந்திருப்போம்.

      நீக்கு
  2. //எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால் என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்... ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்....//

    சலாம் சகோ.சதீஷ் செல்லத்துரை,

    தாங்கள் எடுத்த ரிஸ்க் அளவிடமுடியாத அளவு பெரிது சகோ.

    வெகுஜன ஊடகத்தில் மறைக்கப்படும் உண்மைகளை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாங்களின் இந்த இமாலய முயற்சியானது அந்த அப்பாவி காஷ்மீர் சிறுவனின் தியாகத்தை விட எல்லாம் மிக உயர்ந்தது சகோ.சதீஷ் செல்லத்துரை.

    தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,
    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,
    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,
    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் சகோ.சதீஷ் செல்லத்துரை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள் தோழரே!

    பதிலளிநீக்கு
  4. " தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,
    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,
    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,
    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் "


    என‌


    ~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    கூறியிருப்ப‌தையே நானும் வழி மொழிந்து

    தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,

    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,

    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,

    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்


    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Namakkul naamae vaetrumai paaraatti kolvathaal thaan, vanjaga ennam kondoar ithu poandra adaatha seyalgalil eedupadugindranar. Namathu otrumai oangidavum ellaam valla Iraivanai praartthiyungal aiyaa...

      நீக்கு
    2. வருகைக்கு நன்றி JEYACHANDRAN.ஒற்றுமை ?இங்கே படித்த மக்களே எப்படி இந்த பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள் பார்த்தீர்களா?அதையும் மீறி இருக்கணும்...

      நீக்கு
  5. அன்பு சகோ., சதீஷ் செல்லதுரை

    முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று மிகைப்படுத்தி செய்திகள் வெளியிடும் சில ஊடகங்களுக்கும் இணையத்தில் சிலப்பதிவுகளுக்கும் மத்தியில் தெளிந்த சிந்தனையோடு எழுதிய உங்களுக்கு என் நன்றிகள்.

    அதுவும் அந்த துறையிலே இருந்துக்கொண்டு எதார்தத்தை பொதுவில் இங்கே சொல்வது மிகவும் வியப்புக்குரியது..

    உங்கள் பணி மேலும் சிறக்க - நீங்கள் நலமுடன் இருக்க பிரார்த்தித்தவனாய்

    உங்கள் சகோதரன்
    குலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சாதாரண விஷயம் போல ஒரு சமுதாயத்தை மிக எளிதாக குற்றம் சொல்வது எனக்கு பல நேரங்களில் பலத்த அதிர்ச்சியை தருகிறது.நன்றி சகோதரரே...

      நீக்கு
  6. பெயரில்லா11 மே, 2012 அன்று 8:16 PM

    எல்லாம் சரி, உங்கள் நோக்கமும் உயர்ந்தது.
    கொஞ்சம் பின்னோட்டங்களையும் பார்க்கவும், மதவெறி பிடித்தவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் உங்களுக்கு பின்னோட்டம் போட்டு உங்கள் பதிவை பல இடங்களில் ஒட்டி உங்கள் பதிவின் நோக்கதை சிதைத்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா11 மே, 2012 அன்று 8:16 PM

    மதவெறி பிடித்த வானோஜீர், சுவனபிரியன் கோஷ்டி வந்துவிட்டது கவனம்

    பதிலளிநீக்கு
  8. //மதவெறி பிடித்த வானோஜீர், சுவனபிரியன் கோஷ்டி வந்துவிட்டது கவனம்//

    ஹி..ஹி ராணுவத்தின் அத்து மீறலுக்கு எந்த பதிலையும் காணோம். இதில் மத வெறியைப் பற்றி நிங்கள் கவலைப் படலாமோ அனானி! உண்மை வெளி வருகிறதே என்ற ஆதங்கமோ! இருக்கலாம் :-(

    பதிலளிநீக்கு
  9. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள் தோழரே!

    பதிலளிநீக்கு
  10. // பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில் உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது கசப்பான உண்மை.//
    பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்கிற பெயரில் இது போன்ற அப்பாவி வாலிபர்களை டார்ச்சர் கொடுத்தால் அவர்கள் தீவிரவாதியாகும்
    வாய்புகள் தான் அதிகம் என்பதை ஏனோ அரசாங்கம் + இராணுவம் உணருவதில்லை ...!!??
    உண்மையான முஸ்லிம்கள் தன தாய்நாட்டிற்கு துரோகம் செய்ய கனவிலும் நினைக்கமாட்டார்கள் ....
    காஷ்மீரில் தினமும் நடக்கும் மனித உரிமை மீறல்களை உங்களைப்போல
    நல்லுள்ளம் கொண்டவர்கள் வெளியே சொன்னால்தான் உண்மைகள் தெரியும் .......
    தங்களுக்கு தெரிந்த உண்மைகள் கசப்பாக இருந்தாலும் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைகள் உறங்குவதில்லை.மௌனமான ஒவ்வொரு நேரமும் ஒரு குற்றத்தை ஆதரிக்கிறோம்.இணைந்திருப்போம்...

      நீக்கு
  11. பெயரில்லா11 மே, 2012 அன்று 10:29 PM

    உங்களுக்கு கூட தாய்நாடு என்ற concept எல்லாம் உண்டா? அல்லாவையும் முகம்மது நபியையும் தவிர வேறு எதையும் மதிக்க வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு தாய்நாடாம், துரோகமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா ... உங்களுக்கு தேசப்பற்று என்றால் என்னவென்று தெரியுமா ...? படித்து பாருங்கள்
      http://newstbm.blogspot.com/2012/08/blog-post_15.html

      நீக்கு
  12. இந்தியா என்ற இந்த ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பை பாதுகாக்க இன்னும் எத்தனைதேசிய இனங்களின் சுதந்திரமும் அமக்களின் உரிமைகளும் உயிரும் பரிபோகபோகின்றதோ தெரியவில்லை ஆனால் ஏகதிபத்தியம் என்னும் காகித புலி விரைவில் வீழ்வது நிச்சயம்

    பதிலளிநீக்கு
  13. சகோதரர் சதீஷ் செல்லதுரை,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    முதல் முறை இந்த கட்டுரை படித்தபோது, என்ன சொல்வது என்று திக்கித்தே இருந்தேன். இந்த பதிவில் வரும் அந்த இளைஞனின் மனித நேயத்திற்கு சற்றும் சளைக்காதது அந்த இளைஞனிடம் நீங்கள் காட்டிய அன்பும் அணுகுமுறையும்.

    //காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?//

    இதனை பிரதிபலிக்கும் அதே நேரம் இப்படி உண்மையை அடுத்தவருக்கு எடுத்துரைக்கும் இதயம் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது குறித்தும் பிரதிபளிக்கின்றேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தையும், உடல்நலத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள வேண்டும் என்று பிரார்தித்தவனாக,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே ஒரு பாவ மன்னிப்பு கிடைத்தது போல் உள்ளது.வருகைக்கு நன்றி. இணைந்திருப்போம்.

      நீக்கு
  14. //காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும். தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?//

    காஷ்மீர் குறித்து பலருக்கும் இங்கே தவறான கண்ணோட்டமே விதைக்கப்படுகிறது. ஆனால் அவர்களை அருகிலிருந்து பார்ப்போருக்கே யதார்த்தம் என்னவென்று தெரியும். இதே கருத்தை எல்லைப் படையிலிருக்கும் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். என்னுடன் படித்த நண்பர் சுந்தரராஜ் காஷ்மீரில்தான் சிப்பாயாக இருக்கிறார். அவரைக் குறித்து
    இங்கே எழுதியுள்ளேன்.

    தங்கள் துணிச்சலான எழுத்துப் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.எனக்கும் திருநெல்வேலிதான்.டவுன் ரயில் ஸ்டேசன் பக்கம்தான் வீடு.இணைந்திருப்போம்.

      நீக்கு
  15. மிக முக்கியமான பதிவு சகோதரா. ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவதை ஒரு நிகழ்ச்சி வாயிலாக சொல்லி இருக்கிறீர்கள். இது போன்று எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்கள் அங்கே தினந்தோறும் நடக்கிறது என்பதை உங்களை போன்ற நல்லுள்ளங்கள் நினைத்தால் மட்டுமே வெளிக்கொணர முடியும். சிறப்பான பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் !!!

    பதிலளிநீக்கு
  16. ஒரு நல்ல பதிவைப் பாராட்டியம், ஒரு நல்ல மனிதருக்காகப் பிரார்த்தித்தும் தங்கள் சுய அடையாளத்துடன் பின்னூட்டமிடும் வாசகர்களையும், குறைகூறியும் எச்சரித்தும் தங்களை மறைத்து அநாநியாகப் பின்னூட்டமிடும் வாசகர்களையும் நல்ல மனிதர்கள் அடையாளம் கண்டுகொள்வர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ உங்கள் வாழ்த்துக்களும்,வழிகாட்டுதலும் அவசியம் வேண்டும்.இணைந்திருப்போம்.

      நீக்கு
  17. பெயரில்லா12 மே, 2012 அன்று 2:52 AM

    நல்ல பகிர்வு நன்றி சதீஷ்.
    யோவ் யோக்கியவான்களே, ஏதோ ஒரு பின்னூட்டமிட்டு நடு நிலை வேஷம் போட வேண்டாம்.

    சதீஷ் அவர்கள் குறிப்பிட்டது போல சம்பவங்கள் நடக்க நிறைய சாத்தியம் உண்டு. ஏன் நம் ஊர் காவல் நிலையங்களிலும் இது போல் நடந்திருக்கின்றது நடக்கின்றது இன்னமும் நடக்கும். காரணம், பிடிபடும் அத்தனை பேரூம் இப்படி தான் ஒரே மாதிரி விஷயத்தை சொல்லி தன்னை நிருபராதி என் நிரூபிக்க பார்ப்பார்கள். அப்புறம் போலீஸ்காரனோ இல்லை ராணுவத்தினரோ எப்படி தான் உண்மையை கண்டு அறிவது???

    பின்னூட்டத்தில் வாந்தி எடுத்திருக்கும் அன்பர்கள் தங்கள் ஆள் தவறு செய்யாமல் பிடிபட்டு சித்திரவதைக்கு ஆட்பட்டிருக்கிறான் என்ற கருத்தினால் மட்டுமே கக்கி கக்கி செய்திருக்கிறார்கள். அதை வைத்து முஸ்லீம்கள் தவறே செய்யாமல் பிடிபட்டு த்ண்டனைக்கு உட்படுகின்றனர் என்பதே அவர்கள் சொல்ல விரும்பும் கம்பளியில் வடி கட்டிய பொய்யை.
    இவர்களை பொறுத்தவரை பின்லேடன் அப்பாவி அமெரிக்கா சதி செய்து பின்லேடனை மாட்டிவிட்டது என்பதுதானே!

    இதற்கு உங்களின் இடுகை காரணமாகி விட்டது தான் என்பது தான் வருத்தம் நண்பரே :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
      #போலீஸ்காரனோ இல்லை ராணுவத்தினரோ எப்படி தான் உண்மையை கண்டு அறிவது???#
      இது பற்றி ஒரு பதிவு எழுதலாமோ என தோன்றுகிறது.

      நீக்கு
    2. ///இது பற்றி ஒரு பதிவு எழுதலாமோ என தோன்றுகிறது.///=========என்னது... தோணுதா...?

      அவசியம் எழுதுங்க சகோ.சதீஷ் செல்லம்..!

      நம் நாட்டுக்கே.... இல்லை இல்லை உலகத்துக்கே.... மிக மிக மிக அவசியமான பதிவாக அது அமையக்கூடும்..!

      உங்கள் பதிவுகளின் சிகமாக போற்றப்படலாம்..! ம்ம்ம்.... சீக்கிரம் சகோ..! ஆவலுடன் காத்து இருக்கிறேன்...!

      நீக்கு
    3. Aiya peyarillaa nanbarae!
      Thangalaiyo allathu thangalai saarnthavargalaiyo kaaval thurai anbargal poaliyaai vazhakkil pinaitthaal mattumae antha vali thangalukku theriyum. enakku evvalavo Islaamiya nanbargal ullanar.
      Namathu Ilangai Thamizharai enni evvaaru manathil eeram kondulloamo athu poalae, namathu Islaamiya sagoathararum avar tham Matha anbargalin paal eeram kondullanarae thavira, athai 'theeveera vaatha ennam' endru kutram chaatalaagathu.

      நீக்கு
    4. நல்ல எண்ணம் கொண்ட உங்களை வரவேற்கிறேன்...மிக எளிதாக பொத்தாம் பொதுவாக தீவிரவாதமாக ஒரு மார்க்கத்தையே கூறுவதும் சித்தரிப்பதும் தவறு,நன்றி அன்பரே...

      நீக்கு
  18. ஹலோ, பெயரில்லா அன்பரே!

    உங்களுக்கும் யதார்த்தம் புரியவில்லை.........

    பின்லேடன் ஓர் அப்பாவி என்று சொல்ல நாம் முனையவில்லை. ஆனால், அமைதியான முறையில் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருந்த அவர் தீவிரவாதியாக மாறியதற்கான காரணம், இங்கு சுட்டிக்காட்டப்பட்ட கஷ்மீர் சம்பவம் போல், அமெரிக்காவின் நடவடிக்கைகளும் அமைந்தமைதான்.

    முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் தொடுக்கப்பட்ட அடாவடித்தனங்களை அவர் தன்மீதானதாகக் கருதி, செயற்பட்டதன் விளைவே அது!

    "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற முதுமொழி, இந்த அர்த்தத்துடன் சொல்லப்பட்டதுதான்.

    சாதுகளை (முஸ்லிம்களை) தூண்டிவிட்டு, 'பயங்கரவாதிகள்' என்று லேபல் அடிக்க விரும்பும் உங்களைப் போன்றவர்களுக்கு, சதீஷ் சொல்ல வரும் கருத்து எங்கே புரியப் போகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா12 மே, 2012 அன்று 2:00 PM

      ஹலோ palich
      பின்லாடன் போன்ற பயங்கரவாதிகளை சாதுக்களாக புனிதர்களாக மாற்றும் உங்கள் முயற்சி சதீஷ் போன்றவர்களின் நல்ல நோக்கங்களையும் வீணடித்துவிடும்.

      நீக்கு
    2. வருகைக்கு நன்றி palich.இணைந்திருப்போம்.

      நீக்கு
    3. அல்லிநகரம் பேரா. பொன்னுசாமி9 ஜூன், 2012 அன்று 4:52 PM

      “பெயரில்லா”… இவனைப் போன்ற மனநோயாளினால்தான் பாரதம் என்ற அமைதி பூங்கா, அமைதியிழந்து சாதி… மத பேதங்கள் மன்றி கிடக்கிறது.
      சதீஷ் போன்ற சில பரந்த மனம்கொண்டவர்கள் பாரதத்தில் வாழும் வரை.. மனிதம் வாழும்…

      நீக்கு
    4. Sariyaaga sonneergal Alli Nagaram Aiyaa! Aanaal, anbarai satru mariyaathaiyudan viliyungal, namathu Thamizh panbaadu athu thaanae...

      நீக்கு
    5. பண்பான பதில்...நன்றி அன்பரே...

      நீக்கு
  19. கஷ்மீர் மட்டுமல்ல, முஸ்லீம்களை மட்டுமல்ல‌

    பல இடங்களிலும் குற்றம் செய்யப்பட்டதாக அழைத்து வரப்படும் பலரையும், குற்றம் செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முன்பே, கைதியை குற்றவாளியாக ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை ...

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தவறு எங்கே என்றும் புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தவறு எங்கே என்றும் புரியவில்லை#
      நன்றி சகோ. ஜமால்.

      நீக்கு
  20. அருமையான பதிவு சகோ.

    "ரௌத்திரம் பழகு" என்பதற்கு ஏற்றவாறே உள்ளது உங்களின் தைரியம். அதற்க்கு முதலில் பாராட்டுகள். உங்களை போன்ற சிலரை வைத்துதான் இறைவன் இந்த உலகில் நீதியை இன்னும் வாழ வைத்துகொண்டிருக்கிறான்.

    உங்களை போன்றே.. இன்னொரு உதாரணம்.. திரு. சஞ்சய் பாட், IPS, குஜராத்.

    அந்த சிறுவன் ஒரு முஸ்லிமோ, இந்துவோ, கிருஷ்தரோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தை சார்திருந்தாலுமே, முதலில் அவன் ஒரு மனிதன்.. தவறு எதுமே செய்யாத ஒருவனை கொடுமை படுத்திய விதமும் அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணமும் மிக மிக கொடுமையானதொன்று.

    அந்த சிறுவனின் அன்பும், அந்த சிறுவன் மீது நீங்கள் காட்டிய பரிவும் மிக உன்னத இடத்தில வைத்து பாராட்டபடவேண்டியது.

    ///காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு? //

    மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ. Really Stunning!

    //பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில்  உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது  நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது  கசப்பான உண்மை. //

    இது போன்ற காரணங்களால் தான் தீவரவாதம் பெருகுகிறது.. தீவரவாதி உருவாகிறான் என்று மிகசசரியாக உங்கள் நண்பரிடமும் மற்றும் எங்கள் அனைவரிடமும் பகிர்ந்து உள்ளீர்கள்.

    உங்களின் இதுபோன்ற உண்மையை உரக்க கூறும், நியாயத்திற்காக போராடும் பணிகள் மென்மேலும் தொடரவும், வெற்றியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இறைவன் எல்லா வளமும் வழங்குவானாக.!!!

    பதிலளிநீக்கு
  21. thank you for sharing this post.i wll pray u and your family

    பதிலளிநீக்கு
  22. உங்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது முன்னால் ஒரு அனானி சொன்னது போல இஸ்லாமியர்களால் இந்த இடுகை தவறாக உபயோக படுத்த படுகிறது. தொடர்ந்து பதியுங்கள், உங்கள் வேலைக்கு ஆபத்து வராதபடிக்கு. ஆனால் உங்கள் நோக்கத்தை தவறாக உபயோகப்படுத்துபவர்களை உதாசீனப்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  23. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~13 மே, 2012 அன்று 7:50 AM

    சகோ தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்

    இதுபோன்ற முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள், அநீதிகள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள். வேறு வீண்விரயமான பதிவுகளை தவிர்த்து இதுபோன்ற பதிவுகளை எழுதுங்கள்.

    அல்லாஹ் உங்களுக்கு துணைபுரிவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நான் போட்ட பின்னூட்டம் இல்லை..!

      இதுபோல,
      எனது பெயரில் வந்து அனானி பின்னூட்டம் இடுவது, அநாகரிகம்..! இந்த கேவலமான 'நரித்தனத்திற்கு' எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!

      நீக்கு
    2. To
      Bro.Sathish Sellathurai,

      A kind information for you and others who know me..!

      The above comment is not mine..!
      I use my profile to post comments..!
      Please, note that... the above comment is not from my profile..!


      Note:-
      My previous reply has been deleted for ever.
      I shall be satisfied if i know the reason.
      Thanks bro.Sathish.

      நீக்கு
    3. சகோ ஆஷிக் நான் இது வரை எந்த கமெண்ட்களையும் நீக்க வில்லை.உங்கள் பெயரில் யார்?எனக்கு கணினி அறிவு நான் படித்த பத்தாம் வகுப்புக்கு இணையானது மட்டுமே.எநிதம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.வருகைக்கு நன்றி.இணைந்திருப்போம்.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே!!

    ஒரு விடயத்தை கவனித்தீர்களா.. தங்கள் பதிவுக்கு இஸ்லாமியர் அல்லாத எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டிருக்கிறார்கள்?

    இந்த பயங்கரவாத கும்பல் உங்கள் நோக்கத்தையே திசை திருப்பிவிடும். நீங்கள் எழுதிய நோக்கம் மனிதாபிமானமாக இருப்பினும் இவர்கள் எல்லோருமாக சேர்ந்து உங்களையும் தங்கள் கூட்டத்துடன் சேர்த்து கேவலமாக்கிவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
  25. பன்றிக்கூட்டம்13 மே, 2012 அன்று 7:58 AM

    அச்சச்சோ... மதவெறி கூட்டம் இங்கேயும் வந்துட்ட்டா... இனி இந்த ப்ளாக்கும் ஆமை புகுந்த வீடு போலத்தான்

    பதிலளிநீக்கு
  26. அயோக்கியன்13 மே, 2012 அன்று 7:59 AM

    ஏன் சகோ செல்லத்துரை!!

    எழுதுவதற்கு எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கும்போது இந்த பயங்கரவாத கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கி உங்கள் பெயரையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள். தவறான காரணத்துக்காக தமிழ்மண மகுடமேறிய நல்ல இடுகை. ஏன் மகுடமேறியது என்பது தெரியும்தானே?

    பதிவுலக அரசியலில் சிக்கிக்கொள்ளாதீர்கள். கூடி கும்மி அடிக்கவும் உங்களை பகடைகாயாக உபயோகப்படுத்திக்கொள்ளவும் இரு பக்கமும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  28. வேதனை அனுபவிப்பவர்கள் கட்டாயம் இதைதான் செய்வார்கள்.அனைத்தையும் மீறி ஒரு மனிதனாக முஸ்லிம் இல்லாத ஒருவர் வேதனையோடு ஒரு கருத்து எழுதியிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.தனது சமுதாய பற்றை விட இன்னொரு சமுதாயத்தின் மீதான வெறுப்பு அதிகமாக தெரியும் கருத்துக்கள் கவலையை தருகின்றன.

    பதிலளிநீக்கு
  29. ஸலாம்

    உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி ...

    உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு ....!!!

    பதிலளிநீக்கு
  30. நண்பரே உங்கள் நோக்கம் உண்மை என்றால் . உங்கள் கருத்துக்கள் உங்களை சந்தேகம் கொள்ள வைக்கிறது ..
    இது ராணுவத்தின் அத்து மீறிய செயல் தான் . இது இந்தியா ராணுவம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நடப்பது தான் .. உ. பி ..ஜார்க்கன்ட் , ஓடிஸா ,,, இங்கெல்லாம் பழங்குடியின மக்களை மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் சித்திரவதை செய்கிறார்கள் .. இதில் முஸ்லீம் பிரெச்சனை எங்கிருந்து வந்தது ?
    மனித உரிமை பிரெச்சனை தான் இது ஆனால் வசதியாக முஸ்லீம் இந்த நாட்டில் கொடுமை படுத்தபடுகிறார்கள் என்கிற திசையில் இருக்கிறது உங்கள் பதிவு . நான் ஒன்று கேட்கிறேன் பாக்கிஸ்தானில் ஒரு கிருஸ்தவ சிறுமி நபியை இறைத்தூதர் என்று ஒத்துகொள்ள மறுத்ததால் போலிஸ் நிலையத்தில் வைத்து தாக்க பட்டால் (காரணத்தை கவனிக்கவும் ) இதை தவறு என்று கண்டித்த கவர்னர் பத்வா போட்டு கொல்லபட்டார் .கொன்றவனின் தூக்கை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது . இஸ்லாமிய நாடுகளில் மனித உரிமை அதிகமாக உள்ள ஒரு நாட்டை நீங்கள் காட்ட முடியுமா? மனித உரிமைக்கு இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..
    மதவாதிகள் வலையில் விழவேண்டாம் என்று இங்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு உங்கள் பதிலையும் ...
    மதவாதிகள் என்று கருத படுபவர்களுக்கு நீங்கள் அளித்த பதிலையும் பார்த்தேன் .............
    சாரி பாஸ் ரௌத்திரம் தவறாக பழகிகொண்டிருக்கிரீர்கள்...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,நான் நமது சமுதாயத்தில் இஸ்லாமியர்களை கவனிக்கும் கண்ணோட்டம் உண்மையா?இல்லையா? வட இந்தியாவில் இது இன்னும் அதிகம்.பழங்குடியின மக்களை பார்க்கும் கண்ணோட்டமும் இஸ்லாமியர்களை பார்க்கும் கண்ணோட்டமும் வேறு நண்பரே.பாகிஸ்தானில் நடந்த சம்பவம் மட்டுமில்லை. இது போல உள்ள சம்பவங்கள் அனைத்தும் கண்டிக்கத்தக்கதே.மற்ற நாடுகளை விட நாம்தான் ஜனநாயகம்,மத சார்பற்ற நாடு என்கிறோம்.தங்கள் வருகைக்கு நன்றி.இணைந்திருப்போம்.

      நீக்கு
    2. உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு

      நீக்கு
  31. தன் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுக்க சொன்னால் அவன் வீட்டில் பார் அதிகம் குப்பை அதனால் இந்த குப்பையாய் எடுக்க மாடேன் என்று கூறுவது போல் உள்ளது சில மனிதாபிமானம் இல்ல சிலரின் கருத்துக்கள் ....
    காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரரே,அதிலும் என் வீடு அப்படி இப்படி என்று பெருமை வேறு .....வருகைக்கு நன்றி சகோதரா...

      நீக்கு
  32. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள்
    BEST WISHES FROM
    HAMEED
    PONDICHERRY

    பதிலளிநீக்கு
  33. ALLAH UNGALAI NERVAZHI PADUTHI,UNGAL ELLA KARIYANGALAIYUM SEERPADUTHUVAANAGA....

    பதிலளிநீக்கு
  34. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."

    பதிலளிநீக்கு
  35. தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,
    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,
    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,
    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்பதான் நாங்க ஈசியா இந்தியாவை இசுலாமிய நாடா மாத்த முடியும்.
      அல்லாஹூ அக்பர்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இது பேக் ஐடின்னு பட்டவர்த்தனமா தெரியுது..

      நீக்கு
  36. உங்கள் கறுத்துடன் ஒத்து போகிறேன் நானும் இராண்டு வருடம் அங்கு இருந்தேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....