Translate

வெள்ளி, 25 மே, 2012

சேகுவேரா - "சே" என்றால் என்ன அர்த்தம்?

உலகெங்கும் புரட்சியாளர்கள் கொண்டாடும் உன்னத பெயர் "எர்னஸ்டோ சே குவேரா " ! :"சே" என்றால் தோழன்,நண்பன் என்று கேள்விப்பட்டிருந்த எனக்கு இது புது தகவலாகும்.
எர்னஸ்டோ என்பது அவரது தந்தையான டான் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்  அவர்களை கௌரவிக்கும் விதமாக அவரது தாய் சிலியாவினால் சூட்டப்பட்ட பெயராகும்.
குவேரா என்பது குடும்பப்பெயராகும்.
 சே என்றால்...?...?
தென் அமெரிக்க பம்பாஸ் புல்வெளி பகுதி வாழ்வோருக்கு "சே"என்னும் சொல்-பயன்படுத்தப்படும் இடத்தாலும்,உச்சரிக்கப்படும் முறையாலும் -ஆச்சரியம்,ஆனந்தம்,நாணயம்,அங்கீகாரம், அல்லது ஆட்சேபம் போன்ற மானுட உணர்வுகளின் ஒட்டுமொத்த பல வண்ண சித்திரத்தை வெளிப்படுத்தும் சொல்லாகும்.

இந்த வியப்புகுறியீட்டுச்  சொல்லின் மீதுள்ள காதலின் காரணமாகத்தான் கியூபப் புரட்சியாளர்கள் எர்னஸ்டோ குவேராவை  "சே" என்று செல்லப்பெயர் சூட்டியழைத்தனர்.அதுவே அவரின் காலத்தை வென்ற பெயராயிற்று.
கியூப வெற்றிக்குப் பின் கியூபன் தேசிய வங்கியின் டைரக்டராக பொறுப்பேற்ற  குவேரா வெளியிடப்பட்ட புதிய பணத் தாள்களில் "சே" என்றே கையெழுத்திட்டார்.


ஒரு சமயம் அவரிடம் இந்தப் பெயரை விரும்புகிறீர்களா என்று கேட்ட போது அதற்க்கு அவர்,"என்னைப் பொருத்தவரை "சே" எனது வாழ்க்கையில் மிக மதிப்பு வாய்ந்த அதி முக்கியமான விசயங்கள் அனைத்தையும் குறிக்கிறது.அப்படியன்றி வேறு எப்படியும் இருக்க முடியாது.எனது முதற் பெயரும்,குடும்பப் பெயரும் சிறியதான,தனிப்பட்டதான,முக்கியத்துவமற்ற சில விசயங்களை மட்டுமே குறிக்கின்றன."என்று சொன்னார்.

எது எப்படியோ "சே"  என்றால் புரட்சி என்று  தோன்றுவதை யாராலும் மறுக்கமுடியாது என்பதுதான் உண்மை.


டிஸ்கி:"சே"  அவர் வீட்டில் செல்லமாக" டேட்டி" என்று அழைக்கப்பட்டார்.


மேலும் தகவலுக்கும் அரியபுகைப்படங்களுக்கும்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் எர்னஸ்டோ சே குவேரா புத்தகத்தை படியுங்கள்.

2 கருத்துகள்:

  1. கிழக்குப் புதகள் வெளியிட்ட சே பற்றிய புத்தகம் படித்துள்ளேன், அவருக்கு ஆஸ்மா உண்டு , ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் உலகிற்காக போராடிய உன்னத போராளி அவன்.

    பதிலளிநீக்கு
  2. இனிய தகவல்.. காலம் அழிக்க இயலாத மாமனிதன் குறித்து!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....