கடவுளாதல்
விடுதி அறை எண் 16 ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17 ல் நீங்கள்
தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.
அந்த நெரிசல் பேருந்தில்
அந்த பள்ளி சிறுமியிடம்
அந்த வயோதிகர்
அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு முன்னமே
இறங்கிக்கொள்கிறீர்கள்.
பார்க்கப்படாமால் கதறுகிறது
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல்
புது மோஸ்தர் அலைபேசியில்
புதிய நீலப் படங்களை
சேமிக்கத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.
பெருநோய் மூட்டை ஒன்று
ஒன்றே கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய்
ஒட்டியதாக
கள்ள லாவகத்துடன்
நிலம் தேய்த்தபடியே கடந்து செல்கிறீர்கள் .
அண்டைத் தீவில்
அழுகிய நரகலாய் வாழ்வு
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத் தாவுகிறீர்கள்.
இதில் கவலைப்பட
ஒன்றுமில்லை நண்பர்களே....
நீங்கள் தவணை முறையில்
கடவுளாகிக்கொண்டிருக்கி றீர்கள் !
-காலத்தச்சன்
ஆனந்தவிகடனா?குமுதமா? நியாபகம் இல்லை வார பத்திரிக்கையில் வந்த இந்த கவிதைதான் .என் வீட்டு வாசல் கதவில் வரவேற்கும்.மொழியறீயாத வட இந்திய நண்பர்களுக்கு மொழி பெயர்த்து சொல்வது ஒரு சுகமான அனுபவம்.அத்தோடு ஈழம் பற்றி எடுத்துரைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
நீங்கள் இடும் ஓட்டுக்கள் காலத்தச்சனுக்கு சமர்ப்பணம்.
| Tweet | |||||

illai nanpaa!
பதிலளிநீக்குniyaayam aneethi -
irandum kondathu vaazhvu!
neethikkaaka poraada solvathu-
kadavul!
manithanaiye thavrilaikkiraan-
kadavulalla!
uraikkumpadi sollideenga !
kavithai!
வலிகளை ஆழமாகப் பதிவு செய்யும் ஒரு கவிதை. அதை நீங்கள் பயபடுதும் விதமும் உங்கள் வாடா இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமும் அருமை
பதிலளிநீக்கு