Translate

ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஒலக நாயகனும் ஓலம்போடும் படைப்புரிமைகளும் ...நகொபகா


தொடர்ந்து இணையத்தில் வரமுடியாமல் இருந்த சூழ்நிலையில் வந்ததும் வராததுமா தமிழ்மணம் முழுவதும் நிறைந்து கிடக்கும் விஸ்வரூப பதிவுகள் கலங்கடிக்கின்றன

சப்போர்ட் கமல் என்று கொடிபிடிக்கும் ரசிக கண்மணிகளுக்கு கமல் எந்தவிதத்திலும் தமது படத்திற்கான டிக்கெட்டை இலவசமாகவோ,சலுகையிலோ தரப்போவதில்லை.டீடிஹைச் முறையில் ஒளிபரப்ப முற்பட்ட போது அவர் கேபிள் டிவியில் பார்க்கும் தனது அடிமட்ட ரசிகனை அவர் யோசிக்கவும் இல்லை.தியேட்டரில் இது நாள் வரை அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட போது தனது சாமான்ய ரசிகனுக்காக கமல் எவ்வித குரலையும் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.(கமல் மட்டுமல்ல).

டிடிஹைச் முறையில் ஒளிபரப்ப முற்பட்டதும் அதன் பின் நடந்த தியேட்டர் அதிபர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையிலும் தமது படத்தின் டிக்கெட் விலையை அநியாயமாக விற்ககூடாது என்று எந்த கண்டிசனையும் தெரிவித்ததாக தெரியவில்லை.தன்னுடைய ரசிகனை பற்றிய எந்தவித கவலையும் இல்லாத நடிகனுக்கு நாம் சப்பரம் தூக்கவேண்டிய அவசியம் என்ன?

கமலுக்காக இல்லை படைப்புரிமைக்காக என்றால் மன்னிக்கவும் நண்பர்களே ...
ஆணிவேர் என்றதொரு ஈழப்படம் தமிப்படம்.பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கி நந்தா,மதுமிதா நடித்த படம்.சமீபத்தில் தேன்கூடு என்ற மற்றுமொரு தமிழ்ப்படம் ஈழம் சம்பந்தப்பட்டது.ஈழத்து அவலத்தை மையம் வைத்து தமிழ் மக்களை எழுச்சி செய்ய படைக்கப்பட்ட படம் இன்று வரை தமிழக திரையரங்கில் வரவில்லை.படைப்புரிமை குரல்கள் அந்த நேரம் எங்கு போயிருந்தன?


இப்போது கூட  அதற்க்கு குரல் கொடுத்திருக்கலாம்.உலக சினிமா தெரிந்த என் தமிழ் ரசிகனுக்கு தனது மொழி உணர்வு படங்கள் அறியாமல் போக முக்கிய காரணமே இந்த ரசிக எண்ணங்களும் அவர்களுக்கு காவடி தூக்கும் கண்றாவியும்தான்.
தனது பணம் முழுவதையும் சினிமாவிலேயே போட்ட உன்னத கலைஞன்  கமல் என்று கொண்டாடுகிறார்கள்..இதற்க்கு அவர் சம்பளம் வாங்கமலேயே பல நல்ல படங்களில் நடித்திருக்கலாமே.போகட்டும்.அவரே கமர்சியல் படம் என்றாலும் ரசிக குஞ்சுகள் கலை கலை என்று வரிந்து கட்டுவதுதான் வேடிக்கை.தனது மொத்த பணத்தையும் நூலகங்களுக்கு தந்த பாலம் அய்யாவை விடவா கமல் உன்னதமாகி விடுவார்?தனது உயிரையே ஈந்த முத்துகுமாரின் ஈகையை இதே மாதம் எத்தனை பேர் நினைக்கப்போகிறோம்?

பரமக்குடி தமிழன் என்று சிலிர்த்து எழும்பும் தமிழ் மக்களுக்காக  அந்த பரமக்குடி தமிழன் தமிழின மக்களின் எத்தனை போராட்டங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்திருப்பார்?
நூறு கோடி முதலிட்டு டீடிஹைச் ,தியேட்டர் என்று பேரம் பேசி தனது படைப்பை மிக கவனமாக விற்பனை செய்ய தெரிந்த ஒலக நாயகனுக்கு தமது படம் மீதான தடையையும் விலக்கி திரையிட முடியும்.இதுதான் உண்மை.

கமலின் விஸ்வரூபத்தில் நமக்கான  பிரச்சினைகளையும்,போராட்டங்களையும் அதற்க்குண்டான ஆதரவு குரல்களையும் மழுங்க விட்டுவிட வேண்டாம் நண்பர்களே...

குறிப்பு: தனது விஸ்வரூப இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கரின் அன்புதான் என் ஆணிவேர்,அச்சாணி,பலம் என்றெல்லாம் பேசிய கமல்ஆணிவேருக்குண்டான தடை குறித்து அறியாது போனது உலக நாயகனின் உள்ளூர் அறிவை எண்ணி வியக்க வைக்கிறது.

ஒலக நாயகனும் ..ஓலம்போடும் படைப்புரிமைகளும் ...நகொபகா (நடுவுல கொஞ்சம் படைப்புரிமையை  காணோம்)





சனி, 11 ஆகஸ்ட், 2012

புதிய டெசோ விளம்பரங்கள் -கருணா அதிரடி (EXCLUSIVE)

உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, நாளை நடக்கப்போகும் டெசோ மாநாட்டிற்கு பல முனைகளிலும் இருந்து வரும் பளார் பளார் அடிகள் விழுந்தாலும் தளராமல் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் நாம்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஆட்சியில் அமர்ந்த அம்மையாரின் நாடகம் மௌனமாக நடக்கும் நேரத்தில் நாம் நமது டெசோ நாடகத்தை அதிரடி விளம்பரங்களின் மூலமே நடத்த முடியும் என்பதால் மகள் கனிமொழி தேர்ந்தெடுத்த பதாகைகளை உங்களுக்கு முரசொலிக்கு கொடுக்கும் முன்னேயே தருகிறேன்.விழித்தெழு உடன்பிறப்பே...
இததான் நாம நுழை வாயிலில் வைக்க போறோம்.ஒரே படத்தில் தலைவரை காட்ட போறோம்.

டெசோ வின் ஒருமித்த குரல் இதுதான்.
இது சும்மா லு லு லு லு ...
ஈழம் மட்டுமே உடன்பிறப்பின் மானம் என்பதை சிம்பாலிக்கா சொல்றதா வைச்சுடலாம் 
நமக்கு வாய்த்த அடிமை ராமதாசை விட சிறந்தவன் அல்லவா ?திருமாவுடன் ஒரு பதாகை 
டெடிகேட்டடு டு சத்திய தாய் சோனியாவுக்கு  
கொள்கை விளக்க பதாகையடா உடன்பிறப்பே..
தலைவனின் நாவன்மைக்கு எடுத்துக்காட்டாக இந்த பதாகை 
நம்மை பற்றி யாருக்கும் எந்த குழப்பமும் வரக்கூடாது கண்மணியே  

தக்காளி இவனுங்க நம்மலையே மிஞ்சிட்டானுங்க 
சீரியஸா யாரும் வரகூடாது அதுக்குதான் இந்த சிரிப்பு படம் 
தமிழகம் ஈழத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது என்பதற்கு டேசொவும் ஒரு உதாரணமே...

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஈழம் என்றால் விசா கிடையாது-இந்திய வெளியுறவு துறை(ஆதாரத்துடன்).தூங்கும் கருணா, திருமா

TESO வில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டனர் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால் விசா கிடைக்காது என்று சோனியாவின் இந்திய வெளியுறவுத்துறை டெசோ வுக்கு அறிவித்துள்ளது.கருணாநிதி இது குறித்து எந்த கருத்தும் சொன்னது போல தெரியவில்லை.இலங்கையின் தாளத்திற்கு தப்பாமல் ஆட்டம் போடுகிறது மத்திய அரசு.காணாதது போல கபட நாடகம் ஆடுகிறார் கருணாநிதி.கீழே காணும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுப்பு நகலை பாருங்கள்....
போராட வேண்டிய நேரத்தில் தூவானம் பேசி தூங்கி களித்த தலைவருக்கு இன்று அரசியல் செய்ய ஈழம் தேவைப்படுகிறது.சிறுத்தைகளோ பெரிய கட்சி ஒன்றோடு கூட்டணி வைத்தால்தான் பாராளுமன்றத்தில் திருமா பேச முடியும் என்கின்றனர்.ஈழம் என்ற வார்த்தைக்கே தடை என்று கொண்டு வரும் அரசோடு நீங்கள் கூட்டணி இருந்து பாராளுமன்றத்தில் பேசி என்ன சாதிக்க போகிறீர்கள்? விடுதலை புலிகளுக்கு தடை,பிரபாகரன் படத்திற்கு தடை,இன்று ஈழம் என்ற சொல்லுக்கும் விசா தடை.

இதெல்லாம் செய்யும் காங்கிரசோடு கூட்டணியும் வைத்துக்கொண்டு, ஈழம் கேட்கமாட்டோம் என்று முன் ஜாமீனும் வாங்கி கொண்டு டெசோ மாநாடு நடத்துவார்களா?இல்லை மானாட மயிலாட ஆடுவார்களா?

டெசோவைக் கண்டு மத்திய அரசும் இலங்கையும் பயப்படுகிறது,அதனால்தான் இப்படியெல்லாம் செய்கிறது என்று நினைத்து விடாதிர்கள்.இதெல்லாம் நாம் காணும் சத்திய சோதனைகளில் ஒன்றே.

காங்கிரசில் இருந்து வெளியேறி சோனியாவை எதிர்த்து கருணாவும் திருமாவும் இந்த டேசொவில் ஈழம் கேட்டு ஒரு தீவிரமான போராட்டத்தின் மூலம் தமிழகத்தை எழ வைப்பார்கள் என்றால் மட்டுமே கொஞ்சமாவது டெசோவின் மீது  நம்பிக்கை வரும்.மற்றபடி இது கருணா கதை வசனத்தில் திருமா நடிக்கும் நாடகமே. 


ஆதாரத்தை முகநூலில் தந்த Sahaya Dass via pagalavan pa/rajkumar தோழர்களுக்கு நன்றி.

சனி, 2 ஜூன், 2012

தமிழீழம் பங்குபெறும் விவா உலககோப்பை கால்பந்து 2012

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விவா உலக கோப்பை கால் பந்து(VIVA WORLD CUP FOOTBALL) போட்டியில் விளையாட உள்ளது தமிழீழ கால்பந்து அணி.




ஈராக்கியகுர்திஸ்தான் என்னும் இடத்தில் ஜூன் 4முதல் 9 வரை நடைபெறும் இந்த போட்டியில் 9அணிகள பங்கு பெறுகின்றன. வெற்றி பெறும் அணிக்கு நெல்சன் மண்டேலா கோப்பை வழங்கப்படும்.

நெல்சன்மண்டேலா கோப்பை
தமிழீழ அணி வெற்றி பெற வாழ்த்துவோம்.தொலைக்காட்சியில் நேரலை உண்டா என்பது பற்றி தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லலாமே...
மேலான தகவலுக்கு....2012 VIVA WORLD CUP

இந்த தகவலை முகநூலில் தந்தANANTH Bm அவர்களுக்கும் அவரிடமிருந்து பகிர்ந்த Chitra Sobramanian அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

சனி, 26 மே, 2012

கடவுளாதல்-முகத்தில் அடிக்கும் காலத்தச்சன் கவிதை .

கடவுளாதல்
விடுதி அறை எண் 16 ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17 ல் நீங்கள் 
தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.

அந்த நெரிசல் பேருந்தில் 
அந்த பள்ளி சிறுமியிடம் 
அந்த வயோதிகர் 
அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு முன்னமே 
இறங்கிக்கொள்கிறீர்கள்.

பார்க்கப்படாமால் கதறுகிறது 
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல் 
புது மோஸ்தர் அலைபேசியில் 
புதிய நீலப் படங்களை 
சேமிக்கத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.

பெருநோய்  மூட்டை ஒன்று 
ஒன்றே கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய் 
ஒட்டியதாக 
கள்ள லாவகத்துடன் 
நிலம் தேய்த்தபடியே கடந்து செல்கிறீர்கள் .

அண்டைத் தீவில் 
அழுகிய நரகலாய் வாழ்வு 
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத் தாவுகிறீர்கள்.

இதில்  கவலைப்பட 
ஒன்றுமில்லை நண்பர்களே....
நீங்கள் தவணை முறையில் 
கடவுளாகிக்கொண்டிருக்கி றீர்கள் !
                                                                -காலத்தச்சன்
 ஆனந்தவிகடனா?குமுதமா? நியாபகம் இல்லை வார பத்திரிக்கையில் வந்த இந்த கவிதைதான் .என் வீட்டு வாசல் கதவில்  வரவேற்கும்.மொழியறீயாத வட இந்திய நண்பர்களுக்கு மொழி பெயர்த்து சொல்வது ஒரு சுகமான அனுபவம்.அத்தோடு ஈழம் பற்றி எடுத்துரைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

 நீங்கள் இடும் ஓட்டுக்கள் காலத்தச்சனுக்கு சமர்ப்பணம்.