தொடர்ந்து இணையத்தில் வரமுடியாமல் இருந்த சூழ்நிலையில் வந்ததும் வராததுமா தமிழ்மணம் முழுவதும் நிறைந்து கிடக்கும் விஸ்வரூப பதிவுகள் கலங்கடிக்கின்றன
சப்போர்ட் கமல் என்று கொடிபிடிக்கும் ரசிக கண்மணிகளுக்கு கமல் எந்தவிதத்திலும் தமது படத்திற்கான டிக்கெட்டை இலவசமாகவோ,சலுகையிலோ தரப்போவதில்லை.டீடிஹைச் முறையில் ஒளிபரப்ப முற்பட்ட போது அவர் கேபிள் டிவியில் பார்க்கும் தனது அடிமட்ட ரசிகனை அவர் யோசிக்கவும் இல்லை.தியேட்டரில் இது நாள் வரை அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட போது தனது சாமான்ய ரசிகனுக்காக கமல் எவ்வித குரலையும் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.(கமல் மட்டுமல்ல).
டிடிஹைச் முறையில் ஒளிபரப்ப முற்பட்டதும் அதன் பின் நடந்த தியேட்டர் அதிபர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையிலும் தமது படத்தின் டிக்கெட் விலையை அநியாயமாக விற்ககூடாது என்று எந்த கண்டிசனையும் தெரிவித்ததாக தெரியவில்லை.தன்னுடைய ரசிகனை பற்றிய எந்தவித கவலையும் இல்லாத நடிகனுக்கு நாம் சப்பரம் தூக்கவேண்டிய அவசியம் என்ன?
கமலுக்காக இல்லை படைப்புரிமைக்காக என்றால் மன்னிக்கவும் நண்பர்களே ...
ஆணிவேர் என்றதொரு ஈழப்படம் தமிப்படம்.பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கி நந்தா,மதுமிதா நடித்த படம்.சமீபத்தில் தேன்கூடு என்ற மற்றுமொரு தமிழ்ப்படம் ஈழம் சம்பந்தப்பட்டது.ஈழத்து அவலத்தை மையம் வைத்து தமிழ் மக்களை எழுச்சி செய்ய படைக்கப்பட்ட படம் இன்று வரை தமிழக திரையரங்கில் வரவில்லை.படைப்புரிமை குரல்கள் அந்த நேரம் எங்கு போயிருந்தன?
இப்போது கூட அதற்க்கு குரல் கொடுத்திருக்கலாம்.உலக சினிமா தெரிந்த என் தமிழ் ரசிகனுக்கு தனது மொழி உணர்வு படங்கள் அறியாமல் போக முக்கிய காரணமே இந்த ரசிக எண்ணங்களும் அவர்களுக்கு காவடி தூக்கும் கண்றாவியும்தான்.
தனது பணம் முழுவதையும் சினிமாவிலேயே போட்ட உன்னத கலைஞன் கமல் என்று கொண்டாடுகிறார்கள்..இதற்க்கு அவர் சம்பளம் வாங்கமலேயே பல நல்ல படங்களில் நடித்திருக்கலாமே.போகட்டும்.அவரே கமர்சியல் படம் என்றாலும் ரசிக குஞ்சுகள் கலை கலை என்று வரிந்து கட்டுவதுதான் வேடிக்கை.தனது மொத்த பணத்தையும் நூலகங்களுக்கு தந்த பாலம் அய்யாவை விடவா கமல் உன்னதமாகி விடுவார்?தனது உயிரையே ஈந்த முத்துகுமாரின் ஈகையை இதே மாதம் எத்தனை பேர் நினைக்கப்போகிறோம்?
பரமக்குடி தமிழன் என்று சிலிர்த்து எழும்பும் தமிழ் மக்களுக்காக அந்த பரமக்குடி தமிழன் தமிழின மக்களின் எத்தனை போராட்டங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்திருப்பார்?
நூறு கோடி முதலிட்டு டீடிஹைச் ,தியேட்டர் என்று பேரம் பேசி தனது படைப்பை மிக கவனமாக விற்பனை செய்ய தெரிந்த ஒலக நாயகனுக்கு தமது படம் மீதான தடையையும் விலக்கி திரையிட முடியும்.இதுதான் உண்மை.
கமலின் விஸ்வரூபத்தில் நமக்கான பிரச்சினைகளையும்,போராட்டங்களையும் அதற்க்குண்டான ஆதரவு குரல்களையும் மழுங்க விட்டுவிட வேண்டாம் நண்பர்களே...
குறிப்பு: தனது விஸ்வரூப இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கரின் அன்புதான் என் ஆணிவேர்,அச்சாணி,பலம் என்றெல்லாம் பேசிய கமல்ஆணிவேருக்குண்டான தடை குறித்து அறியாது போனது உலக நாயகனின் உள்ளூர் அறிவை எண்ணி வியக்க வைக்கிறது.
ஒலக நாயகனும் ..ஓலம்போடும் படைப்புரிமைகளும் ...நகொபகா (நடுவுல கொஞ்சம் படைப்புரிமையை காணோம்)

| Tweet | |||||
.jpg)