Translate

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நீ யார் மூடனே?

⁠⁠⁠அப்படித்தானந்த தனியிரவு
கவிழ தொடங்கியது...
அர்த்தமான வார்த்தைகளை 
அர்த்தமற்ற சிரிப்பால் அனுமதித்தேன் ....

சிறகுகள் விரித்த சுதந்திரம்
இதழ் தொடங்கி சிணுங்கியது...
சம்மதமின்றி சாத்தியமில்லை
முத்தத்தின்  முறைப்பாடுகள்!

அணைத்த அழகுக்குள் 
அத்தனைக்கும் ஆசைப்பட்டாய்...
இதழ்களால் தொடுத்தாய்
தடங்கலின்றி எடுத்தாய்!

வெற்று மூங்கில்கள் 
புல்லாங்குழல் ஆவதில்லை..
வெற்று காற்று
இசை பாட முடிவதில்லை!

இசைந்த இசையாய்
இறை ஆடித்தீர்த்தது..
இலக்கை கடந்த காதலை
காமம் தீர்த்து வைத்தது!

ஆயிரம் காரணங்கள் 
நீயும் நானும் விலகி செல்ல...
நீ சொன்ன காரணமோ 
நான் காமுகியாம்..
நான் தே.... யாளாம்...

நான்தான் காமுகி எனில்
நான்தான் தே.....எனில்
நீ யார் மூடனே?
கம்பம் கண்டால் காலை தூக்கும் நாயா?
                                                                                       

புதன், 26 ஆகஸ்ட், 2015

முத்த அதிகாரங்கள் !

நாடு கடந்து,வீடு துறந்து வாழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் சமர்ப்பணம் இக்கவிதை...

இயலா பொழுதொன்றின்
அயல் நாட்டு விலை நிலையில்
கனவாய் விளைகிறது
முத்த அதிகாரங்கள்...

பிறழ்ந்த கை கமழ்த்தி
உதடு குவித்து ஊதி சிரித்து
மழலை பறத்திய 
பறக்கும் முத்தம்...

முக்காலிருட்டில் மூக்கு சிந்தி
விழிநீர் தேக்கி உதடு வடித்த 
உயிர் முட்டும் உரியவளின்
உன்னத முத்தம் ...

கை கடித்து ஊளையிட்டு அழைத்து
எக்கி தொடை பிடித்து முகம் தேடி
நா நக்கி நகல மறுத்த நாயின்
சொல்மொழி இயலா ப்ரிய முத்தம்

உயர்ந்த பனையின் நிழல் முத்தம்
மார்கழி கோலத்து பனி முத்தம்
மழை பேசிய மண் முத்தம்
நீங்கா நிழலாய் நினைவுகள் முத்தம்

உருகி கிடக்கும் உயிரோரம்
ஓராயிரம் முத்தங்கள் ஏங்கி தவிக்குது...
எதிர்காலம் காலாட்டி இளைப்பாற 
ஓடுகிறது  நிகழ்காலம் நிற்காமல்.

ரியாத்களும் டாலர்களும் ஆக்ரமித்த
அரபு தொழிற்சாலை வீதிகளில் 
இயலா பொழுதொன்றின் விலையில்
கனவாய் விரிந்து கண்களை  கரிக்கிறது 
முத்த அதிகாரங்கள்!!!

-அரபு நாடு என்றில்லாது வீடு துறந்து  தனியே தவிக்கும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இது பொருந்தும்.





புதன், 19 ஆகஸ்ட், 2015

ஒரு நாத்திகனின் திமிர் பேச்சு

பூச்சாண்டிக்கதைகளை நம்பிக்கொண்டிருக்கும் குழந்தைகளாகவே இருக்கிறோம்  இன்னும்.சொல்லப்போனால் குழந்தைகள் சூப்பர் மேன்களையும் சோட்டா பீம்களையும் ரசிப்பதோடு முடித்துக்கொள்கின்றனர். தடித்த புத்தியுடைய நாம்தான்  அவதாரக்கதைகளை  அறிவியலாக்கி நிரூபிக்க  அலட்டிக்கொண்டிருக்கிறோம்.

பரந்த வெளியில் பறப்பதை பைத்தியமாகவும் அடைக்கப்பட்ட கூண்டில் அம்மணமாய் கிடப்பதை சுதந்திரமாகவும் கற்பித்து கொண்டிருக்கிறது  ஆன்மீக ஆகமங்கள்.விழி திறந்த சர்ப்பத்தை வில்லனாகவும் தோட்டம் விட்டு துரத்தியவரை துதி பாடியும் திரிகிறது அடிமைக்கூட்டம்.

உபவாசம் நோன்பு விரதமென ஒரே செயலுக்கு ஒன்பது வார்த்தைகள்  வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மொழி புரியாது போனாலும் பசிக்கும் வயிற்றில் பைத்தியம் போல பக்தி பாடிகொண்டிருக்கிறோம் பரவசமாக ..

அரிதாரங்களின் தாழ்வாரத்தில் அவதார தெய்வங்கள் பிறந்து கொண்டிருக்கும் அதே கணத்தில்தான் பாலில்லா முலையில் முட்டி இறக்கின்றன பச்சைக்குழந்தைகள். மாடுகளை பலியிட்ட தயக்கம் தளர்ந்து மனிதனை பலி போட்டு பரவசமடைகிறது மதி கெட்ட மடையர்கள் உலகம்.

அரூப கடவுளின் அக்குளுக்குள் எடுக்கும் அரிப்பை சொரிந்து கொள்ள ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறது நமது கல்வியறிவு.அழகிய நதியின் அடிவயிற்றில் யாகங்களின் சாம்பல்கள்,புரண்டோடும் அழுக்காய்  பூஜைகளின் பாவங்கள். அசுத்தமாக்கும் அத்தனைக்கும் அலங்காரமாய்   இறை நம்பிக்கை பாவனைகள்.

அவசியமில்லா கடவுளுக்கு ஆயிரமாயிரம் கோவில்கள்,அரை ஜான் வயிற்றிற்கு அன்னமின்றி அலைந்து சாகிறது ஏழை ஜனம். தெய்வத்தின் திருவடியில் பலி கேட்கும் பூசாரியாக வடிவமிடும் ஜாதி முகங்கள் அந்த கண்மூடி கடவுளைக்காட்டிலும் கோரமானது.

இறை நம்பிக்கை தனிமனித கோடு கடந்து முக்குத்தேருவின் முனை வரை கோவில் கட்டி வாழ்கிறது.அவசரத்துக்கு வழியின்றி முட்டுச்சந்து நாறுகிறது. மனிதன் கட்டித்தான் கடவுள் வாழ வேண்டுமெனில் மனிதனல்லவா கடவுள்?எந்தக்கடவுள் பால் கேட்டான்? எந்தக்கடவுள் உண்டியல் வைத்தான்? எந்தக்கடவுள் மயிர் கேட்டான்? அப்படித்தான் ஒரு கடவுள் இருப்பாரெனில் அவர் ஒரு ஓரமாக இருந்து விட்டால்தான் என்ன?

அத்தனையும் மோசடி. அங்கிங்கெனாத படி நீக்கமற நிறைந்திருக்கும் பகவானின் முன்பு அவன் பெயரிலேயே மோசடி.பணம் பறித்து உண்ட கூட்டம் இப்போது பதவி கோதாவில் பழக்கிப்பார்க்கிறது பைத்தியக்கார கடவுளை.பலியாகி கொண்டிருக்கும் நாம் பவிசாக கூவுகிறோம் ஜெய் ஸ்ரீ ராம்... 

படையலின் பெயரில் ஏப்பமிட்டு கொண்டிருக்கும் அந்த குருசுவாமிகள்தான்,ஆண்டவன் பெயரில் ஆட்சி செய்ய துடிக்கும் அரசியல்வாதிகள்தான் பூச்சாண்டிகள் என்றால் நம்பவா போகிறீர்கள்? நமது மத நம்பிக்கைகளில் நடனமாடிக் கொண்டிருக்கிறது கட்சிகளின் நாற்காலி ஆசைகள். அரசியல் பூஜைக்கு மனித ரத்தம் கேட்கிறது மதக்கலவரங்கள்.கடவுள்களை போலவே வடிவமைக்கப்படுகிறது கலவரங்களும்.

இன்னொரு முறை ஏதேன் தோட்டத்து சைத்தானின் சர்ப்பம் கண்டால் அத்தனை ஆப்பிளையும் கேட்டு வைப்போம் நல்லது கெட்டது அறிந்து கொள்ள. கண்முன்னே உண்மை உரைக்கும் அறிவியலை  விட காணக்கிடைக்கா கற்பனைகளில் கவிழ்ந்து கிடக்கும் நாம் தொடர்ந்து  நம்புவோம் சர்ப்பங்கள் வந்து பழம் கொடுத்து பாடமெடுக்கும் என்று.....ஆமென்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

நம்பிக்கை மனுசிகளும் தற்போதைய தேவையும்

சில கடினங்கள் உபாதைகளை வார்த்தைகளில் விவரித்து விட்டால்  வலிகளுக்கும் வேதனைகளுக்கும் அர்த்தமற்றுப் போகும்.Muscular Dystrophy   என்ற நோயும் அந்த வகையானதுதான்.உடலின் ஒவ்வொரு தசையும் செயலிழந்து இறுதியாக உயிரை முடிக்கும் இந்த நோய் ஒரு வாழும் நரகம்  என்றால் மிகையல்ல.உடலின் ஒவ்வொரு செல்லாக உயிரை உறிஞ்சும் இந்த நோய் தாக்கியவர்கள் பிறர் உதவியின்றி வாழ்வதென்பது சாத்தியமற்றது.

விடியல் முதல் விழி மூடும் வரை தனக்கென வேண்டிய நீரை அருந்த தன் உடலே ஒத்துழைக்காத கொடுமையை   பொருத்தி பார்த்தால் அதன் வீரியத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.தனக்கு தானே உணவாகி கொள்ளலாம் என்பதை தாண்டி இந்த நோய் உணவருந்த வேறு வாய்ப்பு எதுவும் தருவதில்லை.

மரணத்தை தீண்டினால் என்ன என்று எண்ணத் தூண்டும் இந்த நோயின் பிடிக்குள்  இருந்து கொண்டு அதனை வென்று கொல்ல துடிக்கும் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும்
   இரு சகோதரிகளை பற்றி நம்பிக்கை மனுசிகள்  என்ற குறும்படத்திலோ இல்லை இணைய தளத்தின் மூலமாகவோ நாளிதழ்கள் வழியாகவோ அறிந்திருக்கலாம்  .உச் கொட்டி கடந்திருக்கலாம். இரக்கத்தோடு நீங்கள் கடந்து மறந்து போனதை நியாபகம் கலைக்கும் சிறு சப்தம்தான்  இந்தப்பதிவு.




தன்னைபோல இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி செய்ய தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ள இந்த இருவரையும்  இருளும் வாழ்விலிருக்கும் பலர் வெளிச்சமாக கண்டு வருகின்றனர். சக்கர  நாற்காலியில் சுழலும் சகோதரிகள் ஊர் ஊராக சென்று விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர்.

பன்னாட்டு கம்பெனிகளின் சோதனை கூடமான இந்தியாவின் எலிகளாக ஆனதன் விளைவுதான் இந்த நோய் என உறுதியாக சொல்லும் சகோதரிகள் அவைகள் தரும் நன்கொடைகளை புறக்கணிக்கின்றனர்.உங்களுக்கு மட்டும் மருத்துவம் இலவசம் என்று கூறிய மருத்துவமனையிடம்  என்னை போன்ற மற்றவர்களுக்கு மருத்துவம் கொடுங்கள் அதன் பின் எங்களுக்கு தரலாம் என தன்மையாக மறுத்து அறம் போற்றும் இந்த சகோதரிகள் தமது வாழ்வு முடியும் முன் மருத்துவமனை ஒன்றை கட்டமைத்து பலருக்கு வாழ்வளிக்க துடிக்கின்றனர்.

இந்நோயால் தக்க மருத்துவ வசதியின்றி இறந்து போன ஆதவ் என்ற சிறுவனின் நியாபகமாக  சகோதரிகள் வைத்துள்ள ஆதவ் அறக்கட்டளை மூலம் கட்ட இருக்கும் மருத்துவமனையின் தொகுப்பு மதிப்பீடு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்.இது அதிகமாகலாமே தவிர குறைய வாய்ப்பில்லை இத்திரு நாட்டில்.

தற்போது  மருத்துவமனை கட்ட நிலம் வாங்கிய நிலையில் பொருளாதார சிக்கலில் நிற்கிறது கட்டுமானப்பணிகள்.

பன்னாட்டு கம்பெனிகளின் நன்கொடையை தவிர்த்து  கட்டி முடிப்பது சாத்தியமா ?அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வீர்கள் என்றால் இளைஞர் ஒருவர் தமது ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பாதியை மாதா மாதம் கொடுத்துதவ வந்ததை சொல்லும் சகோதரிகள் நல்ல மனிதர்கள்தான் எங்கள் நம்பிக்கை என்கின்றனர்.

அந்த நல்ல மனிதர்களின் நம்பிக்கையாக ஏன் நாமாக கூடாது? இது போல ஆயிரம் கதைகளை கடந்த நாம் ஒரு முறை அது போலொரு வாழ்வியல் துன்பத்தின் வலிக்கு நம்மாலான ஒரு மருந்தாக இருக்க கூடாது?

எதிரிக்கு கூட வரக்கூடாது என்று சொல்ல வைக்கும்  உடல் நலமின்மை என்பது  போதி மரமாகும்.மீண்டெழுந்து நிற்கும்போது போதி மரத்தை  நர்ஸ் கையில் டிப்ஸாகவோ உண்டியலின் ஓட்டையிலோ வெட்டி முறித்து வீசியிருப்போம்.அவ்வளவுதான் நாமறிந்த நன்றிக்கடன்.பிறவிப்பயன்.அதை தாண்டி ஏன் வரக்கூடாது?



இது ஒரு வாய்ப்பு.நமது மனிதத்தை நாம் காண்பிக்க ,சக மனிதனின் துன்பத்தில் பங்கேற்க உங்களால் ஆன உதவிகளை ஆதவ் அறக்கட்டளைக்கு அனுப்பலாம்.ஏனெனில் சகோதரிகள் இருவரும் நம்புவது உங்களை என்னை போன்ற மனிதரைத்தான் அன்றி நோயின் ஊற்றுக்கண்ணாகிய பெரு முதலாளிகளை அல்ல.

சமீபத்தில் தனது வீடு ஒன்று விற்றுப் போனால் ஐம்பதாயிரம் ரூபாய் பெருமாள் கோவிலுக்கு படைப்பதாக ஒருவர் கூறியதை கேட்டு அதிர்ந்துருந்தேன்,அப்படியான உங்கள் வேண்டுதலை ஆதவ் அறக்கட்டளையை கோவிலாக கருதி படைக்கலாம் தப்பில்லை.

கிருத்துவரின் தசம பாகம், இஸ்லாமியத்தின் மெக்கா செலவுகள் என ஆன்மீக அன்பர்கள் தங்கள் கடவுளை இங்கே காணலாம்.கடவுளவனின் விருப்பமும் அதுதான்.பிறந்த நாள் கொண்டாட்ட செலவை அளித்து   பிறந்ததன் அர்த்தத்தை உணர்ந்து பார்க்கலாம்.

சிறு துளி பெரு வெள்ளம் .வெல்லமாகட்டும். நம்பிக்கை மனுசிகளின் நம்பிக்கை நீங்களும் நானும்தான் அன்றி வெளி நாட்டு வேட்டையாளர்கள் அல்ல.

வாருங்கள் கரம் கொடுப்போம்.ஒளிர்வோம் வழியாக. 

இந்தப்பதிவு எழுத தூண்டிய உதவிய  நாம் நண்பர்கள் தளத்தின் ஜானிக்கு நன்றி.

படங்கள் நன்றி -ராஜ தரிசனம் வலைப்பூ

பண உதவி ,கட்டுமானப் பொருட்கள் உதவி என உங்கள் உதவிகளை அளிக்க...
Aadhav Trust,
489-B, Bank Staff Colony,
Hasthampatty,
Salem – 636007,
Tamil Nadu, INDIA
வங்கி விவரம்
A/c Name : AADHAV TRUST
SB Ac No.: 1219101036462
Bank : CANARA BANK
Branch: Suramangalam
IFSC Code: CNRB0001219
MICR Code: 636015005..

சொந்த வீட்டில் இட வசதி இல்லாததன் காரணத்தால் தற்போது வாடகை வீட்டில் தங்கள் மருத்துவ சேவையை தொடர்ந்து தரும் சகோதரிகள் முகவரி
ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1, எழில் நகர்போடிநாயக்கன்பட்டிசேலம் – 636005, அலைபேசி :   99763 99403 .9976399409 
ஆதவ் அறக்கட்டளையின் பேஸ்புக் தொடர்புக்கு AADHAV TRUST

பெரு முதலாளிகளை புறம் தள்ளி கொள்கையோடு வாழும் நம்பிக்கை மனுசிகள்க்கு மனமார்ந்த வணக்கங்கள்.


வெள்ளி, 4 ஜூலை, 2014

இழந்தது இளவரசனை மட்டுமல்ல !

ஆண்குறி பெண்குறியென்று
அறிவியல் சொல்ல ....
வன்னிய குறி பறக்குறியென்று
பிதற்றுகின்றன கேடு கெட்ட தற்குறிகள் !

கரைபவள் ஒருத்தி மரித்தவர் இருவர் 
எரிந்தது மூவூர் ...
வளர்வது கட்சி !
வாழ்பவன் அமைச்சன் !!

மனிதனாக தெரியாத மிருகங்கள்
தமிழனாக வேசம் போடுது ...
தமிழனுக்கு அடையாளம் சாதியென்று
கோசம் போடுது ..

கட்டியவன் தண்டவாளத்தில் ..
அறுத்தவன் பார்லிமெண்ட்டில்...
நீதியை மட்டும் காணவில்லை!
உச் கொட்டி கடந்து போகும் உங்களையும்தான் ...!!

மறுக்கப்பட்டது காதலல்ல ...
மறுத்தவன் மனிதனுமல்ல ...
மஞ்ச மாக்கானுங்க மத்தியில்
இது ஒன்றும் புதிதுமல்ல ...!!

கதறி அழுது தீர்த்துக்கொள்ள
திவ்யாக்களால் முடியும் ...
எம்மால்தான் இயலவில்லை -ஏனெனில்
இழந்தது இளவரசனை மட்டுமல்ல 

ஞாயிறு, 4 மே, 2014

இந்த ராணுவ வீரனின் கேள்விக்கு பதிலுண்டா உங்களிடம்?

உங்களின் தேசப்பற்றில் ஒரு தோட்டாவை விட்டுள்ளான் இந்த அஸ்ஸாம் ரைபிள் வீரன்.

பேஸ்புக்கில்தான் அறிமுகம் .மிக சென்சிட்டிவாக உணர்ந்தேன் இந்த சேலத்து பையனை.
 அவனின்  இந்த கேள்வி சற்று குரூரமாக கூட தோன்றலாம்....குரூரமாக நடத்தப்பட்டதன் விளைவால் என்றால் ஒத்துக்கொள்ளவா போகிறோம்?

உங்களால் அந்த கேள்விகளை ஜீரணிக்க இயலாது.ஏனெனில் உண்மை நிலையை  ஜீரணிக்க இயலாமல்தான் அவனிடமிருந்து இந்த கேள்விகள் கிளம்பியுள்ளன.

முடிந்தால் இந்த ராணுவ வீரனுக்கு பதில் சொல்லுங்கள்.....


இன்று ஒரு ராணுவ வீரன் இறந்தால் சாதி, மதம் கடந்து அனைவரும் துக்கப்படுகிறோம், இவர் நம் நாட்டை காக்க உயிர் நீத்தவர் என்று பெருமை கொள்கிறோம் இது தான் சாதிமத வேற்றுமையில் இந்தியா என்ற ஒற்றுமை என்பதாகும். 

ஆனால் அதே ராணுவ வீரன் சேரியில் பிறந்திருந்தால் அவர் உயிருடன் இருக்கம்போது அவரை கோவிலின் கருவரைக்கு உள்ளே விடுவீர்களா?, நாட்டை காக்கும் ராணுவ வீரனென்று உங்கள் சாதி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்களா? அல்லது உங்கள் வீட்டு சொம்பில் தான் தண்ணீர் கொடுப்பீர்ளா? அல்லது அவன் இறந்த பிறகு உங்கள் சுடுகாட்டில் தான் அடக்கம் செய்ய முடியுமா? 

இப்போ எங்கையா போனது உங்கள் தேசபற்று?

சேரிகள் எப்போதும் இந்நாட்டின் அகதிகளே அவர் ராணுவ வீரனாக இருந்தாலும் சரி சாதாரன மனிதனாக இருந்தாலும் சரி

("" நல்ல இருக்கையா உங்க தேசப்பற்று"")

மாயக்கண்ணன்-அஸ்ஸாம் ரைபிள்ஸ்.

மேற்கண்ட கேள்விகளில் சொம்பு தண்ணீர் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என கருதுகிறேன்.
எந்த சாதியில்தான் சாதி பார்த்து திருமணம் முடிப்பதில்லை?.அந்த மாதிரியான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ஏனெனில் நாம் சார்ந்த மதம் அதைத்தான் கற்பிக்கிறது.மதத்தை ஆராய்தல் கடவுளை சோதிப்பதற்கு சமமாகும்.எதிர்கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டதன் விளைவு இந்த நான்கு வர்ணங்கள்.

பேஸ்புக்கில் இதற்கு கமெண்டிட்ட பலர் இஸ்லாமே தீர்வு என்றனர்......நாங்கள் விரும்புவது மத மாற்றமல்ல ...மன மாற்றமே.

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், 1 மே, 2014

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.

புதியதலைமுறையில் குண்டு வெடிப்பு என்று முக்கிய செய்தி ஓட செய்தியாளர் இது குண்டுவெடிப்புதானா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என கூறுகிறார்.பரவாயில்லை கண்முன் நடந்ததுதானே விடுங்க.அதனை தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையை தகர்க்க திட்டமிடப்பட்டது குரிப்பிடத்தக்கதுன்னு முத்தாய்ப்பாக தமது எதிராளியை குற்றவாளியாக நிறுத்துகிறது..

ஒரு குண்டுவெடிப்பிற்கு பின் எந்த அடிப்படையில் இவர்களாக தீர்மானிக்கிறார்கள் என தெரியவில்லை.இப்படியான சூழ்நிலையில் காவல்துறை பல தீவிர ஆய்வுகளுக்கு பிறகே தமது விசாரணையின் கோணத்தை ஆரம்பிக்கும்.

வெடிகுண்டின் மூலப்பொருட்கள் என்ன? அது அதிகமாக கிடைக்குமிடம் எது? அதன் விற்பனையில் யார்? யார்? இதற்கு முன் இப்படியான மூலப்பொருட்கள் அடங்கிய குண்டு வெடிப்ப்பு யார் செய்தது? எங்கு?அவர்களுக்கு இங்கு ஆதரவு நிலை எப்படி?

குண்டு வெடிக்கப்படும் விதம் வேறு சம்பவங்களோடு ஒத்து வருகிறதா? அதில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புக்கு இங்கு வாய்ப்புள்ளதா? அனுதாபம் உண்டா? நாள் ,கிழமை என பல விடயங்கள் ஆராயப்படும்.

குண்டு வெடிக்க வைக்கப்படும் விதம் கொண்டும் விசாரணை அவசியப்படும்.ரிமோட் எனில் ஆள் அந்த பகுதியில்தான் இருந்துள்ளான்.வேறு முறைகள் எனில் அந்த குண்டு எங்கு பொருத்தப்பட்டது? அந்தப்பகுதிகளை குறித்த விசாரணை...

குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள சமூக பிரச்சனைகள்,அதன் தீவிரம் என்ன?
இப்படியாக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதற்கு  முன்னேயே ஊடகங்கள் தமது எதிரியை இல்லை எவரையாவது குற்றவாளியாக்கி கொலை செய்ய துடிப்பதுதான் வேதனையே.

இதனைப்போன்ற தொடர் செய்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல் மூலம் மிகப்பெரும் நஞ்சை விதைத்து வருவது புரிகிறதா? நெல்லை என்பதால் எனது தம்பி மட்டும் ஒரு ஹோட்டலில் அருவா கத்தி இருக்கிறதா என சோதிக்கப்பட்டபோது கூனி நின்றான்.அதை இஸ்லாமியர்களுக்கு பொருத்தி பார்க்கும்போது உண்மையை புரிந்தும் கொண்டான்.

திருநெல்வேலியில் கொலை நடந்தது என்பதால் நானும் கொலைகாரனா?அங்கு சாதி கலவரம் நடந்தால் நானும் சாதி வெறி பிடித்தவனா? இல்லை மத்த ஊரில் கொலைகள் நடக்கலியா? மத்த ஊர்களில் சாதி வெறியே இல்லியா?அனைத்தும் அனைத்திலும் உள்ளது.ஆனால் ஹரி காட்டியதும் விதைத்ததும் நெல்லையாச்சே....

இதனை இஸ்லாமியர்களுக்கும் பொருத்தி பாருங்கள்.உங்களோடு பணிபுரியும் இஸ்லாமியர்,இங்கு பதிவெழுதும் இஸ்லாமிய பதிவர்கள்,உங்களோடு பள்ளியில் படித்த இஸ்லாமியர் இவர்கள் வெடிகுண்டுகளோடு சுற்றுகிறார்களா என்ன? என்னோடு படித்த சாகுல் ஹமீது டீக்கடையில்தான் வேலை பார்க்கிறான்.அவனையும் ஸ்லிப்பர் செல் என்று வக்கிர எண்ணத்தின் நவீன பதிப்பான துப்பாக்கியில்  முருகதாஸ் எச்சரிக்கை செய்கிறார்.இயல்பான ஒருவனின் வாழ்வை உடைத்துப்போட்டு அவனை தீவிரவாதியாகவே மாற்றி விடுதல் சரிதானா?

மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?

பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?

சக மனிதனை தனிமைப்படுத்தும் இந்த செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் இணைந்து கொண்டு  சமூகத்தை உடைத்து போடுகிறோம் நாம்.

சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும்  சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.

ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான்  (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு  வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.

என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும்  ,செயல்பாடுகளும் .

ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின்  மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை  கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?


எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.


புதன், 19 மார்ச், 2014

என்எல்சி ஊழியர் கொலை இனவெறியாலா?

என்எல்சி ஊழியர் ஒருவரை மத்திய தொழிற்ப் படை வீரர் ஒருவர் சுட்டு கொன்றது மிகவும் கண்டிக்கத்தக்கது,வருந்ததக்கது,தண்டனைக்குரியது.

அதே போலொரு படையில் இருப்பவன் என்ற முறையில் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல் என்பதை உணர்கிறேன்.அரசு அந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் (எந்த இழப்பீடும் உயிருக்கு நிகரானதல்ல) குடுமப்த்தினருக்கு வேலை வாய்ப்பும் அளிக்கட்டும்.

இந்த பதிவின் அவசியம் அதுவல்ல.உணர்ச்சிவசப்பட்ட ஒரு நிலையில்  ஒரு பாதுகாப்பு படை சிப்பாய் ஒரு ஊழியரை சுட்டு தள்ளியதை, வடக்கிந்தியன் தமிழனை கொன்று விட்டான் தமிழர்களே வாங்க தமிழினத்தை காப்போம்னு சொல்லி இதிலேயும் உணர்ச்சிகளை தூண்டி விடும் பேஸ்புக் போராளிகள்  ஆச்சரியத்தை தருகின்றனர்.

பேஸ்புக்கில் எமது நிலக்கரியை எடுத்தது அல்லாமல் எமது தமிழனின் உயிரையும் எடுத்துள்ளது வடக்கு என்றெல்லாம் ஸ்டேட்டஸ் வருகிறது.

சுட்டது வடக்கிந்தியந்தான்.ஆனால் தமிழன் என்ற காரணத்திற்க்காகவா சுட்டான்?இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததில் உணர்ச்சிவசப்பட்டு நடத்திய வெறிச்செயல் அது.இப்போது அந்த சிப்பாய் கட்டாயம் தன் நிலை உணர்ந்து தன் செயலுக்கு வருந்தி கொண்டுதான் இருப்பான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பளத்திற்கு வீடு ,மனைவி,குழந்தைகள் விட்டு வந்தவன் வேலை பார்க்க மட்டுமே வந்திருப்பான்.அதிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் வன்முறை நிகழ்த்தி பார்க்க வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அந்த ஊழியருக்கு உண்டான அவ்வளவு அறிவே அந்த சிப்பாயிடம் உண்டு.அந்த ஊழியருக்கு உண்டான குடும்பம் பொருளாதாரம் போலவேதான் அவருக்கும்.இங்கு எவ்வித இன துவேசமும் இருக்க வாய்ப்பே இல்லை.நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.அது கொலையாக மாறும் அளவுக்கு அல்ல.

இதைப்போல சம்பவங்கள் பாதுகாப்பு படை  உள்ளேயே நடந்துள்ளன.சமீபத்தில் ஜம்முவில் தன்னுடன் பணிபுரியும் ஐவரை சுட்டு கொன்றுவிட்டு தானும் சுட்டு கொண்டது
போன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஒன்றாக காவலில் பேசிக்கொண்டிருக்கோம் போதே கோபத்தில் சுட்டுக்கொண்ட சம்பவங்களும் உண்டு.

விடுமுறை மறுப்பு,தாயை குறித்த இழிவான வார்த்தை பிரயோகித்தல்,மது, பணி அழுத்தம்,தேவையில்லாத அடக்குமுறைகள்,அதிகார திமிர், போன்ற காரணங்கள் படையில் உள்ளவர்களின் இது போல உள்ள செயல்களுக்கு காரணிகளாக சொல்லலாம்.

அதே என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவரை  கடந்த மூன்றாம்தேதி அவருடைய நண்பரே வாக்குவாதத்தில் தீ வைத்து கொளுத்த முயன்றதும் உணர்ச்சிவசப்பட்டுதான்.(முழுமையான செய்திக்கு இங்கே சுட்டுங்கள் ).பீடிக்கும்,வடைக்கும் ,பத்து ரூபாய்க்கும் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்த வரலாற்றில் தமிழனுக்கும் இடம் உண்டு  என்பதை மறந்து விட வேண்டாம்.

 தலித்களை கொல்ல தூண்டும் ராமதாஸ்,மரணவியாபாரி மோடியை ஆதரிக்கும் வைகோ,ஈழ கொலையாளியுடன் கைகுலுக்கி துரோகியுடன் ஆட்சியில் இருந்த திருமா என அனைத்து அரசியல் வியாதிகளும் இது குறித்து  அறிககை விடுவதுதான் நகை முரண்.

தமிழகத்தில், பாதுகாப்பு படையில் தமிழக வீரர்கள்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம்  அரசியல்வாதிகள் அறிக்கைகளில் அடித்து தள்ளுகின்றனர். .இந்த தலைவர்களுக்கு தமிழர் நலன் குறித்து உண்மையான அக்கறை இருந்தால் முதலில் இவர்கள் ஒற்றுமையாகட்டும் ..அதுக்கப்புறமா பாதுகாப்பு படையில் தமிழ்நாட்டில் தமிழர்களை மட்டும் நிறுத்துவதை பேசிக்கொள்ளலாம்.

வடகிழக்கு மாநிலங்களில்,சட்டீஸ்கரில்,காஸ்மீரில் பாதுகாப்பு படை அப்பாவிகள் மீது  நடத்தும் துப்பாக்கி சூடுகளை கண்டித்து பதிவு செய்யட்டுமே இந்த அரசியல்வாதிகள்.

இந்த அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக ஸ்டேட்டஸ் இடுவதை போன்ற வதைதான் மாபெரும் சமூககொலையாக இருக்கும்.இது போல ஸ்டேட்டஸ் இட்டவர்களுக்கு நேற்றைய பொழுதில் ஈரோட்டில் ஏழுபேர் விசா வாயு தாக்கி இறந்தது கவனத்தில் வராமல் போவது எப்படி என்றுதான் தெரியவில்லை.அவர்களின் கட்சி  தலைவர்களுக்கும் இது போன்ற சம்பவங்களில் ஏதும் கவனம் இருப்பதாக தெரியவில்லை.

தொழிற்சங்கங்கள் இத்தகைய அரசியல்வாதிகளை புறம் தள்ளி  ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற  போராடட்டும்.அப்படியான இழப்பிட்டீற்க்கு போராடும் அவசியத்தை கொடுக்காமலேயே அரசு தானாகவே தர வ்ண்டியது கடமையாகும்.

முக்கிய குறிப்பு; இந்த பதிவு எக்காரணம் கொண்டும் கொலை செய்த நோமனுக்க்கு ஆதரவானது அல்ல.அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்.அவரது செயல் மிகவும் தவறானது.இந்தப்பதிவு  இந்த சம்பவத்தில் தமிழ், வடக்கு என்று இழுத்து விடுவதை கருத்தில் கொண்டு மட்டுமே பதியப்படுகிறது.

மாற்றுக்கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.எனது பதிவில் தவறு என்று  உணர்த்தினால்  நீக்கி கொள்ள தயாராகவே உள்ளேன்.

தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி 


தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பிதம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பிதம்பி தம்பி தம்பி தம்பி  தம்பி தம்பி தம்பி






வியாழன், 17 அக்டோபர், 2013

விளக்கமாக விளக்கப்படுகிறது ....

இருட்டில் புணரும் சாதி நாய்க்கு 
நாய் மட்டுமே அவசியப்பட்டது 
சாதி நாய் அல்ல ....

ஆண்டவர்களின் செங்கோல்கள் 
இருட்டான குழிகளில் மட்டும்
சாதி நிறம் கேட்பதில்லை ..

மாட்டுக்கறியின் வீச்சம்
மல்லிகைப்பூவாய் சாத்தியமாவது
இருட்டான முகர்தலில் மட்டுமே....

விடியல் பதிப்பில் மட்டும்
விளக்கமாக விளக்கப்படுகிறது
இன்ன ஜாதி இன்ன ரகத்தில்
பெண்ணொன்று வேண்டுமென்று....

விளக்கமாக விளக்கபடுகிறது
விலக்கப்பட்ட சாதிகள்
உள்ளதென்று .......



இது கண்டிப்பாக சாதிப் பிரியர்களுக்கு ......சாதி அடிப்படையில் கலப்பு திருமணத்தை எதிர்ப்பவர்களுக்கு ....




ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஆண்களே, நீங்கள் விலகிப்போகலாமே...?


பேருந்திலும் பணிபுரியுமிடத்திலும் பெண்கள் மீதான  பாலியல் கொடுமைகள் நிகழ நமது மவுனமும் ஒரு காரணமாகி விடுகிறது.... அவர்களின் இயலாமை ஆணின் தைரியமாகி விடுகிறது....   

விரிந்து விழுங்கும் விழிகளுடன்
பொங்கி வழியும் ஆண்மையுடன்
பேருந்தில் முட்டும் அவனின் உடைகள்
ஆணுறையாகவே உணரப்படுகிறது ....
உங்களின் பாதுகாப்பான மவுனத்தை போல!!!
 
அவனின்  ஆணுறையின் சாட்சியிலும்
எனது மவுனத்தின் சாட்சியிலும்  
என் வேலை நிரந்தரமாகவும்
வாழ்க்கை அடிமையாகவும்
கையெழுத்திடப்படுவது  அறீவிர்களா?

மவுனம் சம்மதமாகிறது 
அவனின் ஆணுறைகளுக்கு...
மவுனம் சம்மதமாகிறது
என் இயலாமை வாழ்விற்கு .....
மவுனம் கேள்வியாகிறது
உங்கள் மவுனமான பார்வைக்கு .....!!

விலகிப்போகலாமே?
சரக்குக்கும் சைடிஷ்க்கும்
இடைப்பட்ட இடைவெளியில்
அவன் சார்பான  உங்களின் கேள்வியை
உங்களிடமே  கடத்துகிறேன்
பதில் சொல்லுங்கள்.........
விலகிப்போகலாமே??? 

அவன் விலகிப்போகலாமே....??? 

                                                  - நர்ஸ்,வேலைக்காரி,போலீஸ்காரி,டைப்பிஸ்ட்,பயணி,ஆசிரியர்,சேல்ஸ் கேர்ள் ,நடிகை ,இன்னும் பலரின் கேள்வி இது......

குறை நிறைகளை பின்னூட்டத்தில் மறக்காமல் தெரிவியுங்கள்...பிடித்திருந்தால் பகிருங்கள்....புரிகிற மாதிரி எழுதியுள்ளேன் என்றுதான் நம்புகிறேன்..நன்றி.


வெள்ளி, 11 அக்டோபர், 2013

சாதி தாஸ்க்கும் வெட்டியான அல்லக்கைகளுக்கும்*......

தருமபுரி மரக்காணம் என கலவர தீ யை கொளுத்தி விட்டு வேடிக்கை  பார்த்து இன்று ஜாதி சங்கங்களுடன் என்று சொல்ல தைரியமற்று சமுதாய இயக்கங்களுடன் போட்டி  என ஓட்டு பொறுக்கும் தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் இந்த உரைநடை கவிதையின் கடைசி கேள்வி அர்ப்பணம்...

மாட்டுக்கறிதான்
பிரச்சனையென்றால் மனிதக்கறி விழுங்கும் உன் தலைவனை கேள் முதலில் நீ எந்த சாதி மிருகமென்று? சாதிதான் பிரச்சனையென்றால் ரத்தம் வேண்டிய அவசர இரவில் தைரியமாகக் கேள் ரத்த வங்கியில் இது வன்னியன் ரத்தமா? பறையன் ரத்தமா? ஆண்டதும் பேண்டதும் வீரமென்றால் உயிர் கொன்றதும் தின்றதும் தீரமென்றால் பயிர் களஞ்சியம் கொண்ட சாதியென்றால் உயிர் வாழ உன் சாதி தகப்பெனவனும் பிச்சையெடுத்து உண்பதில்லை என உறுதியாக சொல்வாயா? அது இது என ஆயிரம் காரணிகள் இருக்கிறது நீ உயிர் வாழ...... உண்டு கழிக்க ...... அதிலொரு காரணி நானாயிருந்தால் செத்து விடுவாயா என்ன?


*இந்தப் பதிவு மருத்துவர் அய்யா,தமிழ் குடி தாங்கி திரு.ராமதாஸ் அவர்களையோ பாமக கட்சியினையோ குறிக்காது.....சாதி வெறி பிடித்த தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்

உங்கள் ஆதரவை எதிர்ப்பை பின்னூட்டத்தில் ,ஓட்டுப்பெட்டியில், பகிர்தலில் என பல விதங்களில் வெளிப்படுத்தலாம் .......

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கேள்விக்குறியாகும் நஸ்ரியாவின் தொப்புள்....18+

ஒரு தொப்புளுக்கு கமிசனர் அலுவலகம் கொடுக்கும் மரியாதை பல பாலியல் கொடுமை புகார்களுக்கும் கொடுக்கப்படுகிறதா?

அன்றொரு நாள் அப்படித்தான் 
எப் ஒன் காவல் நிலையத்தில் 
காக்கி பேனா திறக்கவே இல்லை 
தனது மூடியை  - வன் கொடுமையான 
இந்த பட்டதாரி ஏழைப் பெண்ணிற்கு.... 

அனுமதியின்றி திறக்கப்பட்ட 
யோனியின் சொந்தக்காரிக்கு 
நீதிக்கு பதில் நீட்டப்பட்ட லத்தி 
மற்றுமொரு ஆண் குறியே...

ஒரு பகல் பதிப்பு குப்பையில் 
நான் புரிந்து கொண்டது... 
மினுக்கப்பட்ட தொப்புள்கள்  
காவல் நிலையத்தின் சாவியாகலாம்
சிதைக்கப்பட்ட குறிகளல்ல.....!!!  

மேல் வீட்டுப் பையனின் 
மேற்படி தொப்புள் கவலைக்கு 
அவனப்பன் வேறு பெயரில் 
விருப்பமிட்ட போதுதான்  புரிந்தது
தொப்புள் கொடி உறவுகள் .... 

வார இறுதியின் கடைசி காட்சியில்
தொப்புள் ஆட்ட போதையில் 
ஜிப்புகள் திறக்கப்படலாம்....  
காவல் நிலையங்கள் 
மூடிக் கொள்ளட்டும்  
உங்கள் மனதைப் போலவே ...

என் பெண்மையின் குறி 
நஸ்ரியாவின் தொப்புளில் 
கேள்விக்குறியான போது 
நெஞ்சு  பறையடித்தது... 
நீதிகள் மறுக்கப் படுவதில்லை 
ஒதுக்கப்படுகிறதென்று ...!!! 

                                               -நீதி ஒதுக்கப்பட்டவள்

காவல்துறையும் இன்ன பல துறைகளும்  பல சந்தர்ப்பங்களில் பிரபலங்களின் பிரச்சனைகளை எளிதாக தீர்த்து வைப்பதும்
 நம் போன்ற சாமானியர்களின் குரல் கவனிக்கபடாமாலேயே இருந்து விடுவதும்
அதை குறித்த எந்த கவலையும் இன்றி கிண்டலாகவே வாழ்வை நகர்த்துவதும் மாபெரும் சாபமே ..


திங்கள், 7 அக்டோபர், 2013

சேரிப்பையனும் - சிவகாசிக்காரனுக்கு பதில் கருத்தும்...

அந்த சாலையோரக் கோவிலின் நீண்ட சுற்றுச் சுவர் அப்படி ஒன்றும் வலிதல்ல... அதன் மேலுள்ள பீங்கான் துண்டுகள் நான் பொறுக்கி தந்தவையே....

நீங்கள் சிறுநீர் கழிக்கும் 
அதே சாலையோரம்தான் நான் வாழ்கிறேன் .... நீங்கள் வசிக்கிறீர்கள். !!

உங்கள் கழிவுகளால் நிரம்புகிறது
என் இருப்பிடம் ..
என் இருப்பினால் சுத்தமாகிறது
உங்கள் வீடுகள் ...

என் தமையனும் நானும் 
மலம் கழித்து எழுந்த போதுதான்
நீங்கள் நிழல் காயும் அந்த மரங்கள் வளர்ந்தெழுந்தன!! மூக்கை பொத்திக் கொள்ளுங்கள் ....

அப்படியாக 
உங்களில் ஒருவனாக நானோ என்னைப் போல ஒருவனாக நீங்களோ சொந்தமாகத்தான் இருக்கின்றோம் ...!! ஆயினும் .... 
அந்தக் கோவிலின் சுவர் வலிதாகவும் எனது அசுத்தத்தில் நீங்கள் சுத்தமாகவும் சொந்தம் கொல்லும் சொந்தமாகவும் அமைய ஜாதிதான் காரணமெனில் ..... காரணத்தின் காரணங்கள் 
அப்படியேத்தான் இருக்கிறது கழுவப்படாத குண்டியைப் போல... சலுகைகளும் வாக்குறுதிகளும் பவுசாக பல்லிளிக்கிறது வேண்டுமென்றே காண்பிக்கப்படும் ஜாக்கி ஜட்டியைப் போல....

-சேரிப்பையன்



மிக எதேச்சையாக சிவகாசிக்காரன் அவர்களின் ஜாதி வேண்டும்... என்ற ஒருபழைய பதிவு படிக்க நேர்ந்தது.....அந்த பதிவுக்கு மேலே உள்ள அண்ணல் அம்பேத்காரின் வரிகளை விட வேறு பதில் அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.....அவருக்கு வேண்டுமானால் வாசல் வரை சாதி இருக்கலாம்.ஆனால் வீதியில் செல்ல கூட சாதியையும் ,பூஜை செய்ய ஜாதியும்,வீடு வாடகைக்கும் ஜாதியையும் கேட்கிற இடத்துல சொல்ல உள்ளூர படும் வேதனை அறியவில்லையோ என்று நினைக்கிறேன்.

இப்போது இந்தக்கணம் நான் வசிக்கும் வீட்டின் ஓனர் சாதி கேட்ட போது தாழ்த்தப்பட்டவன் என்றதும் முகம் போன போக்கும் அதை தொடர்ந்து என் மனைவி ஜாதியை கூறியதும் சற்று ஆறுதலாக போனதையும் உணர்ந்தவனின் வலி புரிவது கஷ்டமே....

ஜாதி ஒழிய குரல் கொடுப்பவர்களை கிண்டுவதை விட ஜாதியை தூக்கி கொண்டு வீதிக்கு வந்துள்ளவர்களை கிண்டியிருக்கலாம்.ஜாதி ஒழிப்பாளர்கள் தருவது எதிர் வினையே....முதல் வினையை விட்டு எதிர் வினையை கேள்விகள் கேட்பது மேம்போக்கான பார்வையாகவே தோணுகிறது.....

ஜாதி வேறுபாடின்றி வாழ்வதுதான் நல்லது என்ற கூற்றுக்கு வாழ்த்துக்கள்......கல்யாண கலாச்சாரங்கள் மட்டுமில்ல ... உடன் கட்டை ஏறுதல்,விசேசங்களுக்கு விதவைகளை மறுத்தல் இது மாதிரி ஏகப்பட்ட கலாச்சாரங்கள் உண்டு ....அதையும் கடைப்பிடித்து வாழ வேண்டிக்கொள்கிறேன்.

என் மனைவியின் அம்மா ஜாதியை வீட்டுக்குள் வைத்திருந்தவர்தான்......என் அம்மா பெண் கேட்டு சென்ற போது எட்டி நின்னு தண்ணி வாங்கி குடிக்கிறவங்க படியேறி பொண்ணு கேட்டு வர்றாங்க என்று சொன்ன போது அந்த ஜாதிக்கு வீடும் தெரில வீதியும் தெரில.......ஒரு வழியா சம்மதிச்சப்ப...ஊர்க் கூட்டம் போட்டு கணவன் இல்லா அவரை இரக்கமே இல்லாமல் வீடு காலி செய்ய சொன்னார்கள்.செய்யப்பட்டார்.அவர்களின் ஜாதி தெரியுமா? நாடார் ஜாதிதான்.... உங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு கலாச்சாரம் நாடார் ஜாதியில் இருப்பது துரதிருஷ்டவசமே...

ஒவ்வொரு ஜாதிகளின் கலாச்சாரமும் பண்பாடும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு தாழ் ஜாதியில் பிறந்தவனின் சுய மரியாதை.அதை சீண்டுவது ஜாதிதான் என்றால் அதை கடாசுவதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் பரவாயில்லை.....விரும்புவர்களையும் திசை திருப்பும் பதிவாகி விடுமோ என்ற அச்சம் எழுகிறது.....அந்த அச்சத்தின் விளைவே இந்த பதிவு(?!?!) நன்றி.

உங்களின் மற்றொரு பதிவு ..."சசிக்குமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க " பதிவு அருமை.இதையே சுந்தரப்பாண்டியன் வந்த போதே எழுதியிருந்தேன்.சினிமாவை சினிமாவா பார்க்க சொன்னாங்க....


குறிப்புகள்;
ஜாக்கி என்பது ஜாக்கி சேகரையோ ஜாக்கிசானையோ குறிக்காது :)

கு வார்த்தை தவிர்க்க முடியவில்லை ..மன்னிக்கவும்.

மறக்காமல் குற்றங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..பாரட்டுக்களை ஓட்டு பெட்டியில் பதிக்கவும்.கழுவி ஊத்துவதற்க்கு காமெடி கும்மியில் தொடர்பு கொல்லவும்....

மிகுந்த காலத்துக்குப் பின் எழுதின இந்த கவிதையில் (?!?!) பொருட் குற்றம் சொல் குற்றம் எது இருப்பினும் தயவு செய்து குறிப்பிடவும்.நன்றி.தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,
thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஒலக நாயகனும் ஓலம்போடும் படைப்புரிமைகளும் ...நகொபகா


தொடர்ந்து இணையத்தில் வரமுடியாமல் இருந்த சூழ்நிலையில் வந்ததும் வராததுமா தமிழ்மணம் முழுவதும் நிறைந்து கிடக்கும் விஸ்வரூப பதிவுகள் கலங்கடிக்கின்றன

சப்போர்ட் கமல் என்று கொடிபிடிக்கும் ரசிக கண்மணிகளுக்கு கமல் எந்தவிதத்திலும் தமது படத்திற்கான டிக்கெட்டை இலவசமாகவோ,சலுகையிலோ தரப்போவதில்லை.டீடிஹைச் முறையில் ஒளிபரப்ப முற்பட்ட போது அவர் கேபிள் டிவியில் பார்க்கும் தனது அடிமட்ட ரசிகனை அவர் யோசிக்கவும் இல்லை.தியேட்டரில் இது நாள் வரை அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட போது தனது சாமான்ய ரசிகனுக்காக கமல் எவ்வித குரலையும் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.(கமல் மட்டுமல்ல).

டிடிஹைச் முறையில் ஒளிபரப்ப முற்பட்டதும் அதன் பின் நடந்த தியேட்டர் அதிபர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையிலும் தமது படத்தின் டிக்கெட் விலையை அநியாயமாக விற்ககூடாது என்று எந்த கண்டிசனையும் தெரிவித்ததாக தெரியவில்லை.தன்னுடைய ரசிகனை பற்றிய எந்தவித கவலையும் இல்லாத நடிகனுக்கு நாம் சப்பரம் தூக்கவேண்டிய அவசியம் என்ன?

கமலுக்காக இல்லை படைப்புரிமைக்காக என்றால் மன்னிக்கவும் நண்பர்களே ...
ஆணிவேர் என்றதொரு ஈழப்படம் தமிப்படம்.பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கி நந்தா,மதுமிதா நடித்த படம்.சமீபத்தில் தேன்கூடு என்ற மற்றுமொரு தமிழ்ப்படம் ஈழம் சம்பந்தப்பட்டது.ஈழத்து அவலத்தை மையம் வைத்து தமிழ் மக்களை எழுச்சி செய்ய படைக்கப்பட்ட படம் இன்று வரை தமிழக திரையரங்கில் வரவில்லை.படைப்புரிமை குரல்கள் அந்த நேரம் எங்கு போயிருந்தன?


இப்போது கூட  அதற்க்கு குரல் கொடுத்திருக்கலாம்.உலக சினிமா தெரிந்த என் தமிழ் ரசிகனுக்கு தனது மொழி உணர்வு படங்கள் அறியாமல் போக முக்கிய காரணமே இந்த ரசிக எண்ணங்களும் அவர்களுக்கு காவடி தூக்கும் கண்றாவியும்தான்.
தனது பணம் முழுவதையும் சினிமாவிலேயே போட்ட உன்னத கலைஞன்  கமல் என்று கொண்டாடுகிறார்கள்..இதற்க்கு அவர் சம்பளம் வாங்கமலேயே பல நல்ல படங்களில் நடித்திருக்கலாமே.போகட்டும்.அவரே கமர்சியல் படம் என்றாலும் ரசிக குஞ்சுகள் கலை கலை என்று வரிந்து கட்டுவதுதான் வேடிக்கை.தனது மொத்த பணத்தையும் நூலகங்களுக்கு தந்த பாலம் அய்யாவை விடவா கமல் உன்னதமாகி விடுவார்?தனது உயிரையே ஈந்த முத்துகுமாரின் ஈகையை இதே மாதம் எத்தனை பேர் நினைக்கப்போகிறோம்?

பரமக்குடி தமிழன் என்று சிலிர்த்து எழும்பும் தமிழ் மக்களுக்காக  அந்த பரமக்குடி தமிழன் தமிழின மக்களின் எத்தனை போராட்டங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்திருப்பார்?
நூறு கோடி முதலிட்டு டீடிஹைச் ,தியேட்டர் என்று பேரம் பேசி தனது படைப்பை மிக கவனமாக விற்பனை செய்ய தெரிந்த ஒலக நாயகனுக்கு தமது படம் மீதான தடையையும் விலக்கி திரையிட முடியும்.இதுதான் உண்மை.

கமலின் விஸ்வரூபத்தில் நமக்கான  பிரச்சினைகளையும்,போராட்டங்களையும் அதற்க்குண்டான ஆதரவு குரல்களையும் மழுங்க விட்டுவிட வேண்டாம் நண்பர்களே...

குறிப்பு: தனது விஸ்வரூப இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கரின் அன்புதான் என் ஆணிவேர்,அச்சாணி,பலம் என்றெல்லாம் பேசிய கமல்ஆணிவேருக்குண்டான தடை குறித்து அறியாது போனது உலக நாயகனின் உள்ளூர் அறிவை எண்ணி வியக்க வைக்கிறது.

ஒலக நாயகனும் ..ஓலம்போடும் படைப்புரிமைகளும் ...நகொபகா (நடுவுல கொஞ்சம் படைப்புரிமையை  காணோம்)