Translate

திங்கள், 7 அக்டோபர், 2013

சேரிப்பையனும் - சிவகாசிக்காரனுக்கு பதில் கருத்தும்...

அந்த சாலையோரக் கோவிலின் நீண்ட சுற்றுச் சுவர் அப்படி ஒன்றும் வலிதல்ல... அதன் மேலுள்ள பீங்கான் துண்டுகள் நான் பொறுக்கி தந்தவையே....

நீங்கள் சிறுநீர் கழிக்கும் 
அதே சாலையோரம்தான் நான் வாழ்கிறேன் .... நீங்கள் வசிக்கிறீர்கள். !!

உங்கள் கழிவுகளால் நிரம்புகிறது
என் இருப்பிடம் ..
என் இருப்பினால் சுத்தமாகிறது
உங்கள் வீடுகள் ...

என் தமையனும் நானும் 
மலம் கழித்து எழுந்த போதுதான்
நீங்கள் நிழல் காயும் அந்த மரங்கள் வளர்ந்தெழுந்தன!! மூக்கை பொத்திக் கொள்ளுங்கள் ....

அப்படியாக 
உங்களில் ஒருவனாக நானோ என்னைப் போல ஒருவனாக நீங்களோ சொந்தமாகத்தான் இருக்கின்றோம் ...!! ஆயினும் .... 
அந்தக் கோவிலின் சுவர் வலிதாகவும் எனது அசுத்தத்தில் நீங்கள் சுத்தமாகவும் சொந்தம் கொல்லும் சொந்தமாகவும் அமைய ஜாதிதான் காரணமெனில் ..... காரணத்தின் காரணங்கள் 
அப்படியேத்தான் இருக்கிறது கழுவப்படாத குண்டியைப் போல... சலுகைகளும் வாக்குறுதிகளும் பவுசாக பல்லிளிக்கிறது வேண்டுமென்றே காண்பிக்கப்படும் ஜாக்கி ஜட்டியைப் போல....

-சேரிப்பையன்



மிக எதேச்சையாக சிவகாசிக்காரன் அவர்களின் ஜாதி வேண்டும்... என்ற ஒருபழைய பதிவு படிக்க நேர்ந்தது.....அந்த பதிவுக்கு மேலே உள்ள அண்ணல் அம்பேத்காரின் வரிகளை விட வேறு பதில் அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.....அவருக்கு வேண்டுமானால் வாசல் வரை சாதி இருக்கலாம்.ஆனால் வீதியில் செல்ல கூட சாதியையும் ,பூஜை செய்ய ஜாதியும்,வீடு வாடகைக்கும் ஜாதியையும் கேட்கிற இடத்துல சொல்ல உள்ளூர படும் வேதனை அறியவில்லையோ என்று நினைக்கிறேன்.

இப்போது இந்தக்கணம் நான் வசிக்கும் வீட்டின் ஓனர் சாதி கேட்ட போது தாழ்த்தப்பட்டவன் என்றதும் முகம் போன போக்கும் அதை தொடர்ந்து என் மனைவி ஜாதியை கூறியதும் சற்று ஆறுதலாக போனதையும் உணர்ந்தவனின் வலி புரிவது கஷ்டமே....

ஜாதி ஒழிய குரல் கொடுப்பவர்களை கிண்டுவதை விட ஜாதியை தூக்கி கொண்டு வீதிக்கு வந்துள்ளவர்களை கிண்டியிருக்கலாம்.ஜாதி ஒழிப்பாளர்கள் தருவது எதிர் வினையே....முதல் வினையை விட்டு எதிர் வினையை கேள்விகள் கேட்பது மேம்போக்கான பார்வையாகவே தோணுகிறது.....

ஜாதி வேறுபாடின்றி வாழ்வதுதான் நல்லது என்ற கூற்றுக்கு வாழ்த்துக்கள்......கல்யாண கலாச்சாரங்கள் மட்டுமில்ல ... உடன் கட்டை ஏறுதல்,விசேசங்களுக்கு விதவைகளை மறுத்தல் இது மாதிரி ஏகப்பட்ட கலாச்சாரங்கள் உண்டு ....அதையும் கடைப்பிடித்து வாழ வேண்டிக்கொள்கிறேன்.

என் மனைவியின் அம்மா ஜாதியை வீட்டுக்குள் வைத்திருந்தவர்தான்......என் அம்மா பெண் கேட்டு சென்ற போது எட்டி நின்னு தண்ணி வாங்கி குடிக்கிறவங்க படியேறி பொண்ணு கேட்டு வர்றாங்க என்று சொன்ன போது அந்த ஜாதிக்கு வீடும் தெரில வீதியும் தெரில.......ஒரு வழியா சம்மதிச்சப்ப...ஊர்க் கூட்டம் போட்டு கணவன் இல்லா அவரை இரக்கமே இல்லாமல் வீடு காலி செய்ய சொன்னார்கள்.செய்யப்பட்டார்.அவர்களின் ஜாதி தெரியுமா? நாடார் ஜாதிதான்.... உங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு கலாச்சாரம் நாடார் ஜாதியில் இருப்பது துரதிருஷ்டவசமே...

ஒவ்வொரு ஜாதிகளின் கலாச்சாரமும் பண்பாடும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு தாழ் ஜாதியில் பிறந்தவனின் சுய மரியாதை.அதை சீண்டுவது ஜாதிதான் என்றால் அதை கடாசுவதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் பரவாயில்லை.....விரும்புவர்களையும் திசை திருப்பும் பதிவாகி விடுமோ என்ற அச்சம் எழுகிறது.....அந்த அச்சத்தின் விளைவே இந்த பதிவு(?!?!) நன்றி.

உங்களின் மற்றொரு பதிவு ..."சசிக்குமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க " பதிவு அருமை.இதையே சுந்தரப்பாண்டியன் வந்த போதே எழுதியிருந்தேன்.சினிமாவை சினிமாவா பார்க்க சொன்னாங்க....


குறிப்புகள்;
ஜாக்கி என்பது ஜாக்கி சேகரையோ ஜாக்கிசானையோ குறிக்காது :)

கு வார்த்தை தவிர்க்க முடியவில்லை ..மன்னிக்கவும்.

மறக்காமல் குற்றங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..பாரட்டுக்களை ஓட்டு பெட்டியில் பதிக்கவும்.கழுவி ஊத்துவதற்க்கு காமெடி கும்மியில் தொடர்பு கொல்லவும்....

மிகுந்த காலத்துக்குப் பின் எழுதின இந்த கவிதையில் (?!?!) பொருட் குற்றம் சொல் குற்றம் எது இருப்பினும் தயவு செய்து குறிப்பிடவும்.நன்றி.தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,தம்பி ,
thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi thambi 

34 கருத்துகள்:

  1. எழுதிப் போட்டு ரெண்டு மணிநேரம் ஆயிடுச்சு ..ஒரு பயலையும் காணோம்..இப்படி கடைய காய விட்டுட்டியே தம்பி....

    பதிலளிநீக்கு
  2. இப்படி கருத்துள்ள, சமுதாய பிரச்சனையை பற்றி பேசும் பதிவு எழுதினா எப்படி கூட்டம் வரும்?? அஜித் , விஜய் பற்றி, நஸ்ரியா தொப்புள் பிரச்சனை பத்தி எழுதுங்க. கூட்டம் பிச்சிக்கும். . . .

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கோபம் புரிகிறது ...ஆனால் மாறுவதற்கு ரொம்ப நாள் ஆவும் போல இருக்கே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறும் ... நம்புறேன்.என் காலத்தில் இல்லைனாலும் ஏன் மகன் காலத்திலாவது மாறும் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும் தங்களின் மாறாத மறக்காத அன்புக்கும் நன்றி சீனி கவி ...

      நீக்கு
  5. Dear sir,
    Nice article.
    How about religion?
    We need them or not?

    Let God exist. I understand that.
    But why religion?

    Why not many are supporting eradication of religion?
    Can I expect another article, against religions?
    I am sure you wont dare to do that.

    Pon Vannan.

    P.S.
    We are all paper tigers, including you and me.
    நான் சொல்ல வந்தது இது தான். நீங்கள் நல்லவர் போல் நடிக்கிறீர்கள்.
    You are no better than me and Sivakasikaran.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி திரு.பொன் வண்ணன்....மெனெக்கெட்டு எனக்கு நடிகன் சான்றிதழ் வழங்கியமைக்கு நன்றி.....வேறென்ன சொல்ல?
    சாதி வேண்டும் ..வேண்டாம் ..அவ்வளவுதான் பேச்சு .உங்களுக்கு சுகமான ஒன்று எனக்கு சுமையாகி போனது ......
    paper tiger....என் பணியை பொறுத்தவரை இங்கே எழுதுவதே ஒரு போராட்டம்தான்.....அந்த வகையில் உங்களை வேண்டுமானால் paper tiger என்று சொல்லி கொள்ளுங்கள்.....என்னை சேர்க்க வேண்டாம்.....என்னுடைய பதிவுகளில் சில என்னை ஜெயிலில் தள்ள கூடியவை....
    ##You are no better than me and Sivakasikaran.## சந்தோசமா இருக்கு ....ஆக சிறந்தவர்கள் இந்த எளியவனின் பதிவிற்கு பதில் சொல்ல வந்தது யாம் பெற்ற பாக்கியமே....

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு ஜாதிகளின் கலாச்சாரமும் பண்பாடும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு தாழ் ஜாதியில் பிறந்தவனின் சுய மரியாதை.
    >>
    கண்டிப்பாய் அவனுக்கான மரியாதையை தந்தே ஆகனும். எனக்கு தெரிஞ்சு ஜாதி இல்லைன்னு சொல்லிக்கிட்டே ஜாதி வெறியை தன் பிள்ளைகளிடத்திலும் வளர்ப்பவர்கள் அதிகம்தான். கண்டிப்பாய் இந்நிலை மாறனும்.

    பதிலளிநீக்கு
  8. :( ### நீங்க ஏதாவது எழுதணும் சென்ட்ராயன் ..இப்படி சிம்பிளா சிம்பல் போட்டா புரியாது எனக்கு ..-குபேரன்

    பதிலளிநீக்கு
  9. சுதந்திரப் போராட்டத்திலேயே மிதவாதிகள் .தீவிரவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பவர்கள்தானே இந்தியர்கள்..சாதிகள் ஒழிந்தாலும் மனித இனம் கருத்துவேறுபாடு கொண்ட சில குழுக்களாகத்தான் அலைந்து கொண்டிருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து வேறுபாடுகளை சமாளித்து விடலாம் ...இதைத்தாம் சமாளிக்க முடியாது...நன்றி நண்பரே.

      நீக்கு
  10. இதெல்லாம் பெரியவர்கள் என்பவர்கள் வளர்த்து விடுகிறார்கள். ஆக தேவை இவர்களுக்கு தெளிவு ஏற்படுத்துவது. இந்த வலி ஒரு நிலை கீழே இருப்பவனுக்கு நன்றாக தெரியும். இதை ஒழிக்க உண்மையிலே சரியானவர் , ஜெ மட்டுமே. அவர் மட்டும் மனம் வைத்தால் இதை ஒழித்து, உலக புகழ் பெறலாம்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...ஜெ ? ஆச்சரியமாக உள்ளது உங்கள் பார்வை நேரமிருப்பின் விரிவாக கூறுங்கள்..நன்றி

    பதிலளிநீக்கு
  12. கவிதையும் கருத்தும் நெத்தியடி!

    வெங்கட்

    பதிலளிநீக்கு
  13. தம்பி நம்ம தான் விழிப்புணர்வை கொண்டு வரனும் அப்படின்னு என் பசங்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி என்ற இடத்தை நிறப்பக்கூடாது என்று போன முதலில் ஜாதிச்சான்றிதழ் இருந்தா தான் உள்ளே அனுப்புவாங்களாம்.. என்ன சொல்ல ?

    உணர்ந்தவனின் வலி புரிவது கஷ்டமே....உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கு நன்றி அக்கா...தங்கள் பிள்ளைகளை ஜாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க அரசாணை உண்டு....மேலும் தகவல் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளவும் .....உங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் ....இது போன்ற காரியங்களில் கணவரும் குடும்பமும் துணை நிற்க வேண்டும்....அப்படியாக நீங்கள் பாக்கியசாலியே..வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கும்...

    பதிலளிநீக்கு
  15. பிள்ளைகளை ஜாதி சான்றிதழ் வாங்கியே சேர்த்து விட்டோம் சகோ. தகவலுக்கு நன்றி.
    இன்று வலைச்சரத்தில் தங்களின்இந்த பகிர்வை அறிமுகம் செய்திருக்கேன் . நேரம் இருப்பின் வருகை தரவும்.

    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி......அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி அக்கா.....அதிலும் இந்த சேரிப்பையன் கவிதையின்(?!?!) மூலம் அறிமுகம் ஆனதில் மிகுந்த சந்தோசம்.....

      நீக்கு
  16. "காமெடி கும்மியில் தொடர்பு கொல்லவும்" கொள்ளவும் என்பதை கொல்லவும் என்று குறிப்பிட்டது காமெடிக்காகவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யயோ இப்படிலாம் பட்டுன்னு கேட்டுட்டா எப்படி? ஆமாங்க எப்பவுமே இப்படித்தான் முன்னெச்சரிக்கையா நாமளே இப்படி போட்டுகிடனும் இல்லன்னா கும்மிடுவாங்க.....:)

      நீக்கு
  17. 'உடன் கட்டை ஏறுதல்,விசேசங்களுக்கு விதவைகளை மறுத்தல் ' என குறிப்பிட்டுள்ளீர்கள். இன்று உடன் கட்டை ஏறுதல் இல்லவே இல்லையே. விசேசங்களுக்கு விதவைகளை மறுத்தல் ' கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவே தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ...அவைகளை எதிர்த்த போது இதை போல கலாச்சாரம் கைவிடப்படுகிறது என்று பற்றி கொண்டிருந்தால் என்னவாயிருக்கும்? விதவைகளை வெறுப்பாக அபசகுனமாக பார்ப்பது குறைந்து வருகிறது ...அதை மறுபடியும் அதிகரிக்க வேண்டாம் என்றுதான் வேண்டுகிறேன்..அதன் மூல அடிப்படை சாதிகளும் ,மத சம்பிரதாயங்களும் என்பதனாலும்....அவை நம்மாலேயே படைக்கப்பட்டவை என்பதாலும் நாம்தாம் அவற்றை புறந்தள்ள வேண்டும் என்கிறேன் ...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Viya Pathy

      நீக்கு
  18. உங்கள் கவிதை படித்தவுடன் 'தூப்புக்காரி' கதை நினைவுக்கு வந்தது.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா......'தூப்புக்காரி' கதை படித்ததில்லை .....லிங்க் இல்லை கூடுதல் தகவல் தந்தால் வாங்கி படிக்க விரும்புகிறேன்...
      நன்றி அம்மா....

      நீக்கு
    2. அன்பு சதீஷ்,
      தூப்புக்காரி பற்றிய ஒரு பதிவு. எழுதியவர் திருமதி எழில். பதிவர் விழாவில் சந்தித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      இணைப்பு :http://nigalkalam.blogspot.in/2013/08/blog-post_12.html

      எழில் அவர்களின் பதிவிலேயே இன்னொரு இணைப்பு இருக்கிறது அதையும் படித்துப் பாருங்கள்.

      'சிலிகான் ஷெல்ப்' வலைபதிவிலும் இந்த நாவல் பற்றி வந்திருக்கிறது.

      நீக்கு
  19. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....