Translate

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கேள்விக்குறியாகும் நஸ்ரியாவின் தொப்புள்....18+

ஒரு தொப்புளுக்கு கமிசனர் அலுவலகம் கொடுக்கும் மரியாதை பல பாலியல் கொடுமை புகார்களுக்கும் கொடுக்கப்படுகிறதா?

அன்றொரு நாள் அப்படித்தான் 
எப் ஒன் காவல் நிலையத்தில் 
காக்கி பேனா திறக்கவே இல்லை 
தனது மூடியை  - வன் கொடுமையான 
இந்த பட்டதாரி ஏழைப் பெண்ணிற்கு.... 

அனுமதியின்றி திறக்கப்பட்ட 
யோனியின் சொந்தக்காரிக்கு 
நீதிக்கு பதில் நீட்டப்பட்ட லத்தி 
மற்றுமொரு ஆண் குறியே...

ஒரு பகல் பதிப்பு குப்பையில் 
நான் புரிந்து கொண்டது... 
மினுக்கப்பட்ட தொப்புள்கள்  
காவல் நிலையத்தின் சாவியாகலாம்
சிதைக்கப்பட்ட குறிகளல்ல.....!!!  

மேல் வீட்டுப் பையனின் 
மேற்படி தொப்புள் கவலைக்கு 
அவனப்பன் வேறு பெயரில் 
விருப்பமிட்ட போதுதான்  புரிந்தது
தொப்புள் கொடி உறவுகள் .... 

வார இறுதியின் கடைசி காட்சியில்
தொப்புள் ஆட்ட போதையில் 
ஜிப்புகள் திறக்கப்படலாம்....  
காவல் நிலையங்கள் 
மூடிக் கொள்ளட்டும்  
உங்கள் மனதைப் போலவே ...

என் பெண்மையின் குறி 
நஸ்ரியாவின் தொப்புளில் 
கேள்விக்குறியான போது 
நெஞ்சு  பறையடித்தது... 
நீதிகள் மறுக்கப் படுவதில்லை 
ஒதுக்கப்படுகிறதென்று ...!!! 

                                               -நீதி ஒதுக்கப்பட்டவள்

காவல்துறையும் இன்ன பல துறைகளும்  பல சந்தர்ப்பங்களில் பிரபலங்களின் பிரச்சனைகளை எளிதாக தீர்த்து வைப்பதும்
 நம் போன்ற சாமானியர்களின் குரல் கவனிக்கபடாமாலேயே இருந்து விடுவதும்
அதை குறித்த எந்த கவலையும் இன்றி கிண்டலாகவே வாழ்வை நகர்த்துவதும் மாபெரும் சாபமே ..


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அதை சற்று ஊடகங்களில் தேடினால் படித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோ...வருகைக்கு நன்றி சீனி கவி

      நீக்கு
  2. ஒரு தொப்புளுக்கு போரா ...ஒரே அக்கபோரா இருக்கே .... :-)

    பதிலளிநீக்கு
  3. அவங்க நெனைச்சா ஒரு சின்ன கேஸ் குடுக்க கூட தாராளமா கமிஷனர் ஆபீஸ் போகலாம்

    பேசமா கமிஷனர் பேர மாத்தி
    சிறப்பு தொப்புள் ஆய்வாளர் நு வச்சிக்கலாம் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத விட நம்ம மக்களே வேகமா ஆராய்ந்துடுவாங்க தியாகு.....நன்றி தியாகு

      நீக்கு
  4. சாட்டை அடி பதிவு.காவல் துறையும் (விபசார) ஊடகங்களும் முக்காடு போட்டு கொள்ளட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி Barari ...தங்களின் வார்த்தைகள்படியே நடக்கட்டும்...

      நீக்கு
  5. வர வர கமிஷனரிடம் எதற்கு புகார் கொடுப்பது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது! கவிதை அருமை! சிந்திக்க வைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் நண்பரே...

      நீக்கு
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.....இப்போதுதான் கவனித்தேன்....உங்களின் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி அண்ணா....

      நீக்கு
  7. நண்பரே, தங்களின் கவிதை நெஞ்சில் அடித்த மாதிரி இருந்தது.
    தாங்கள் எப்பொழுதும் இராணுவத்தினரை குறை சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள் ராஜஸ்தான் ஆல்laது பஞ்சாப் இருந்தால் இராணுவத்தினர் காஷ்மீர் சியாசின் பனிமலை, கார்கில் போன்ற இடங்களில் வேலை பார்க்கிறார்கள். நீங்கள் எப்படி அவர்களை குறை சொல்கிறேர்களோ அவர்கள் உங்களை சொல்கிறார்கள். இக்கரைக்கு அக்கறை பச்சை , தயவு செய்து குறை சொல்வதை விட்டு தாங்கள் பணிகளை சிறப்பாக செய்யயவும்.

    நன்றியுடன்,

    தினகரன்

    முன்னால் ராணுவ வீரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னால் ராணுவ வீரருக்கு வணக்கம்....ராணுவத்தினரை குறை சொல்கிறேன் என்பதை விட உங்கள் அளவுக்கு வேலை பார்க்கும் எங்களை கொஞ்சமும் மதிப்பதில்லை என்பதுதான் ஆதங்கமே.....ஆதங்கத்தில் தவறாக குறிப்பிட்டிருந்தால் மனமார மன்னிப்பு கோருகிறேன்....

      உங்களுக்கு அமைந்தது போல சியாசின் மலை முடிந்ததும் அமைதியான இடத்தில் பணி வாய்ப்புகளும் குடும்பத்தோடு இருக்கும் வழிமுறைகளும் இதர சலுகைகளும் எங்களுக்கும் கிடைக்கும்பட்சம் சவால் நிறைந்த HIGH ALTITUDE பணி BSFக்கும் சம்மதமே..

      ஒரு பக்கம் எல்லையிலும் மறுபக்கம் சட்டிஸ்கர் போன்ற இடங்களில் CRPFக்கு இணையாகவும் ரவுண்ட் கட்டி அடிக்கப்படும் நிலையை யோசித்து பாருங்கள்...ஊர்களில் குறைந்த பட்சம் கேண்டீன் வசதி கூட செய்து தர மறுக்கும் அரசாங்கங்களை என்ன செய்வது.?.
      BSFலியே ஆயிரம் ஓட்டைகள் உள்ளது .....எழுதினால் ..இதே போன்ற குறை கூறுகிறான் என்ற விமர்சனம் எழும் என்பதால்தான் கிட்டதட்ட நிறுத்தி விட்டேன்....சமீபத்தில் ராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வேறு பல செய்திகள் ராணுவத்தினர் வாயிலாகவே கேள்விப்பட்டேன்...குறை கூறனும் என்றால் எழுதி தள்ளியிருக்கலாம்...செத்தது என்னைப்போல சிப்பாய் ஜாதி....

      இருபது வருடமாக STANDING DUTYயில் எந்த ப்ரமொசனும் இன்றி கடந்து போகும் ஒவ்வொரு BSF சிப்பாய்க்கும் ரயிலில் நாயக் ரேங் கொண்ட தன்னை விட ஜூனியர்களை உஸ்தாத் என்றழைக்க உறுத்தலாகத்தான் உள்ளது.

      விட்டால் இங்கே இன்னொரு பதிவே வந்து விடும் போல....காயப்படுத்தியிருந்தால் வருத்தம் கேட்கிறேன்..

      தங்களின் ஆதரவை என்றும் நாடும் உங்கள் -தம்பி

      நீக்கு
  8. //நீதிக்கு பதில் நீட்டப்பட்ட லத்தி
    மற்றுமொரு ஆண் குறியே...//

    வீரியமான வரிகள் ...

    பதிலளிநீக்கு
  9. புரட்சிகரமான வரிகள்... இப்படிப்பட்ட கவிதை எழுத இன்னும் நிறையபேர் உருவானால் சந்தோஷப்படுவேன்...
    அருமையான எழுத்து சகோதரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி சகோதரரே....சந்தோசமாக உள்ளது உங்களின் உற்சாகம் கூட்டும் வாழ்த்துக்கள்..நன்றி

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....