ஒரு தொப்புளுக்கு கமிசனர் அலுவலகம் கொடுக்கும் மரியாதை பல பாலியல் கொடுமை புகார்களுக்கும் கொடுக்கப்படுகிறதா?
அன்றொரு நாள் அப்படித்தான்
எப் ஒன் காவல் நிலையத்தில்
காக்கி பேனா திறக்கவே இல்லை
தனது மூடியை - வன் கொடுமையான
இந்த பட்டதாரி ஏழைப் பெண்ணிற்கு....
அனுமதியின்றி திறக்கப்பட்ட
யோனியின் சொந்தக்காரிக்கு
நீதிக்கு பதில் நீட்டப்பட்ட லத்தி
மற்றுமொரு ஆண் குறியே...
ஒரு பகல் பதிப்பு குப்பையில்
நான் புரிந்து கொண்டது...
மினுக்கப்பட்ட தொப்புள்கள்
காவல் நிலையத்தின் சாவியாகலாம்
சிதைக்கப்பட்ட குறிகளல்ல.....!!!
மேல் வீட்டுப் பையனின்
மேற்படி தொப்புள் கவலைக்கு
அவனப்பன் வேறு பெயரில்
விருப்பமிட்ட போதுதான் புரிந்தது
தொப்புள் கொடி உறவுகள் ....
வார இறுதியின் கடைசி காட்சியில்
தொப்புள் ஆட்ட போதையில்
காவல் நிலையங்கள்
மூடிக் கொள்ளட்டும்
உங்கள் மனதைப் போலவே ...
என் பெண்மையின் குறி
நஸ்ரியாவின் தொப்புளில்
கேள்விக்குறியான போது
நெஞ்சு பறையடித்தது...
நீதிகள் மறுக்கப் படுவதில்லை
ஒதுக்கப்படுகிறதென்று ...!!!
-நீதி ஒதுக்கப்பட்டவள்
காவல்துறையும் இன்ன பல துறைகளும் பல சந்தர்ப்பங்களில் பிரபலங்களின் பிரச்சனைகளை எளிதாக தீர்த்து வைப்பதும்
நம் போன்ற சாமானியர்களின் குரல் கவனிக்கபடாமாலேயே இருந்து விடுவதும்
அதை குறித்த எந்த கவலையும் இன்றி கிண்டலாகவே வாழ்வை நகர்த்துவதும் மாபெரும் சாபமே ..
நம் போன்ற சாமானியர்களின் குரல் கவனிக்கபடாமாலேயே இருந்து விடுவதும்
அதை குறித்த எந்த கவலையும் இன்றி கிண்டலாகவே வாழ்வை நகர்த்துவதும் மாபெரும் சாபமே ..
| Tweet | |||||
.jpg)