Translate

வெள்ளி, 11 அக்டோபர், 2013

சாதி தாஸ்க்கும் வெட்டியான அல்லக்கைகளுக்கும்*......

தருமபுரி மரக்காணம் என கலவர தீ யை கொளுத்தி விட்டு வேடிக்கை  பார்த்து இன்று ஜாதி சங்கங்களுடன் என்று சொல்ல தைரியமற்று சமுதாய இயக்கங்களுடன் போட்டி  என ஓட்டு பொறுக்கும் தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் இந்த உரைநடை கவிதையின் கடைசி கேள்வி அர்ப்பணம்...

மாட்டுக்கறிதான்
பிரச்சனையென்றால் மனிதக்கறி விழுங்கும் உன் தலைவனை கேள் முதலில் நீ எந்த சாதி மிருகமென்று? சாதிதான் பிரச்சனையென்றால் ரத்தம் வேண்டிய அவசர இரவில் தைரியமாகக் கேள் ரத்த வங்கியில் இது வன்னியன் ரத்தமா? பறையன் ரத்தமா? ஆண்டதும் பேண்டதும் வீரமென்றால் உயிர் கொன்றதும் தின்றதும் தீரமென்றால் பயிர் களஞ்சியம் கொண்ட சாதியென்றால் உயிர் வாழ உன் சாதி தகப்பெனவனும் பிச்சையெடுத்து உண்பதில்லை என உறுதியாக சொல்வாயா? அது இது என ஆயிரம் காரணிகள் இருக்கிறது நீ உயிர் வாழ...... உண்டு கழிக்க ...... அதிலொரு காரணி நானாயிருந்தால் செத்து விடுவாயா என்ன?


*இந்தப் பதிவு மருத்துவர் அய்யா,தமிழ் குடி தாங்கி திரு.ராமதாஸ் அவர்களையோ பாமக கட்சியினையோ குறிக்காது.....சாதி வெறி பிடித்த தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்

உங்கள் ஆதரவை எதிர்ப்பை பின்னூட்டத்தில் ,ஓட்டுப்பெட்டியில், பகிர்தலில் என பல விதங்களில் வெளிப்படுத்தலாம் .......

19 கருத்துகள்:

  1. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    என்னுடைய வலைத்தள முகவரி இதோ...https://2008rupan.wordpress.com....வாருங்கள்...வாருங்கள்
    தொலைவில் இருந்து ஒரு குரல்.... பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன் நண்பரே....உங்கள் தளத்திற்கு நேற்றே வர வேண்டியது....மன்னிக்கவும்...இப்போதே வருகிறேன்..

      நீக்கு
  2. மிக அருமையான கேள்விகள்... உரைக்க வேண்டியவர்களுக்கு உரைக்கவே உரைக்காது என்பதுதான் மாறாத தலைவிதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாய்ரோஸ் அவர்களே...

      நீக்கு
  3. சரியான சாட்டையடி. அல்லக்கைகள் மட்டுமல்ல சாதி கட்சி தலைவர்களுக்கும் இது பொருந்தும். தலைவன் எவ்வழியோ.., மக்களும் அவ்வழியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி அக்கா......எங்கே என்னை சாதி வெறியனாக்கி விடுவார்களோ என்று பயந்திருந்தேன்.....சாதி வெறி பிடித்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.......அப்படியான புரிதலுக்கு மிகவும் நன்றி அக்கா.....

      நீக்கு
  4. இக்கவிதை சாதியைவைத்தும் மதத்தைவைத்தும் மக்களை துண்டாடும் அனைவருக்கும் பொருந்தும்.
    வாழ்த்துக்கள்...

    நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சீனி கவி சகோ.....உங்களிமுகநூலில் கவிதை ஒன்றை இன்று பகிர போகிறேன்...

      நீக்கு
  5. சதிஷ்:
    கவிதை பிரமாதம்!
    நானும் ஒரு கவி தான்; குரங்கு அல்ல; அவ்வையாரின் தம்பி! கம்பனின் சகோதரன்: திருவள்ளுவரின் பேரன்..!

    உங்கள் இடுகைக்கு ஒரு plus 1 vote;

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வையாரின் தம்பி! கம்பனின் சகோதரன்: திருவள்ளுவரின் பேரன்..!நம்பள்கி சகோதரனுக்கு நன்றி.....

      நீக்கு
  6. சாதி வெறியரை பற்றி எழுதிய மத வெறியருக்கு நன்றி.

    [I repeat : You are no better than Rama Doss. Do not act smart.]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ###சாதி வெறியரை பற்றி எழுதிய மத வெறியருக்கு நன்றி.#### ஹா ஹா ஹா ஹா ஹா லு லு லு லு லு லு


      மறுபடியும் உங்க சான்றிதழுக்கு நன்றி.......என்னை ஸ்மார்ட்டா ஆக்ட் கொடுக்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்......

      நீங்க அடிக்கடி வந்து பின்னூட்ட்டமிட்டு சிரிப்பு காட்டிகினே இருக்கணும் தலைவா.....ஐயாம் லைக் யூ ....

      நீக்கு
    2. Looks like you are hurt. So you agree you are a matha veriyan.
      And you are proud of that. India velangirum.

      நீக்கு
  7. யார் பாஸ் அந்த பொன்வண்ணன்?? அடிக்கடி வந்து கிச்சு கிச்சு மூட்டுறார்.

    பதிலளிநீக்கு
  8. இன்று ஓட்டு வாங்க அதிகம் பயன்படுவது பணம், சாதி, மதம் தான்.

    பதிலளிநீக்கு
  9. இதை எப்படி எடுத்துக்கறதுனே தெரியலீங்க..
    முழுக்க முழுக்க வன்மம்..

    //*தருமபுரி மரக்காணம் என கலவர தீ யை கொளுத்தி விட்டு வேடிக்கை பார்த்து இன்று ஜாதி சங்கங்களுடன் என்று சொல்ல தைரியமற்று சமுதாய இயக்கங்களுடன் போட்டி..*//
    பொதுபுத்தியின் புதையுண்ட வரிகள். கலவரத்திற்க்கான காரணம் தெரியாதா..? இவ்வரிகள் காழ்ப்புணர்வின் வெளிப்பாடாவோ அல்லது தான் புரட்சியாளன், முற்ப்போக்காளன் என காட்டிகொள்வதற்க்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.

    தலைப்பிலும் குறியீட்டிலும் சாதிதாஸ், ஆனால் குறிப்பில் மருத்துவரையோ, பா.ம.க வினரையோ குறிக்காது என்ற சொல்லாடல்.

    சாதி மோதல்கள் என்னவோ வன்னியருக்கும் பறையருக்கும் மட்டுமே இருப்பதை போல ஒரு கவிதை.

    இடையே மருத்துவரை இழிவுபடுத்தி ஒரு நையாண்டி கேலி சித்திரம்.

    ஒப்புக்கொள்கிறேன் நீங்களும் ஒரு முற்ப்போக்கு(!) புரட்சியாளர்தான்(!).. வாழ்த்துக்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  10. இவ்வரிகள் காழ்ப்புணர்வின் வெளிப்பாடாவோ அல்லது தான் புரட்சியாளன், முற்ப்போக்காளன் என காட்டிகொள்வதற்க்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.////
    ##ஒரு பதிவுக்கே உங்களுக்கு இப்படி தோணுகிறது என்றால் அத்தனை சம்பவங்களும் அதைதொடர்ந்து வரும் நிகழ்வுகளும் அதற்க்கு நியாயம் பாடுபவர்களையும் நினைத்தால் எனக்கு இது போல எழுத தோணாதா?உங்க மனசு உங்க உரிமை ...அதே மாதிரி....


    ///தலைப்பிலும் குறியீட்டிலும் சாதிதாஸ், ஆனால் குறிப்பில் மருத்துவரையோ, பா.ம.க வினரையோ குறிக்காது என்ற சொல்லாடல்.///
    ##யாருக்கும் புரியாம போயிட கூடாது பாருங்க ....

    ///சாதி மோதல்கள் என்னவோ வன்னியருக்கும் பறையருக்கும் மட்டுமே இருப்பதை போல ஒரு கவிதை.///
    இது சண்டையிடும் அனைத்து ஜாதி பிரியர்களுக்கும் பொருந்தும் ..உதாரணமாக காட்டப்பட்டது....அதோடு இரு ஜாதியிலும் ஜாதி பாராதவர்கள் உள்ளார்கள் அவர்களை குறிக்கவில்லை இந்த கவிதை...

    ///பொதுபுத்தியின் புதையுண்ட வரிகள். கலவரத்திற்க்கான காரணம் தெரியாதா..?///
    பொதுப்புத்தியாவே இருக்கட்டும் ..காரணங்கள் என்ன என்பதை நீங்க சொல்லுங்க ......

    ///
    ஒப்புக்கொள்கிறேன் நீங்களும் ஒரு முற்ப்போக்கு(!) புரட்சியாளர்தான்(!).. வாழ்த்துக்கள் நண்பரே..///

    முற்போக்கு பிற்போக்கு இதெல்லாம் நமக்கு தெரியாது சகோ....உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....