Translate

இளவரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளவரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூலை, 2014

இழந்தது இளவரசனை மட்டுமல்ல !

ஆண்குறி பெண்குறியென்று
அறிவியல் சொல்ல ....
வன்னிய குறி பறக்குறியென்று
பிதற்றுகின்றன கேடு கெட்ட தற்குறிகள் !

கரைபவள் ஒருத்தி மரித்தவர் இருவர் 
எரிந்தது மூவூர் ...
வளர்வது கட்சி !
வாழ்பவன் அமைச்சன் !!

மனிதனாக தெரியாத மிருகங்கள்
தமிழனாக வேசம் போடுது ...
தமிழனுக்கு அடையாளம் சாதியென்று
கோசம் போடுது ..

கட்டியவன் தண்டவாளத்தில் ..
அறுத்தவன் பார்லிமெண்ட்டில்...
நீதியை மட்டும் காணவில்லை!
உச் கொட்டி கடந்து போகும் உங்களையும்தான் ...!!

மறுக்கப்பட்டது காதலல்ல ...
மறுத்தவன் மனிதனுமல்ல ...
மஞ்ச மாக்கானுங்க மத்தியில்
இது ஒன்றும் புதிதுமல்ல ...!!

கதறி அழுது தீர்த்துக்கொள்ள
திவ்யாக்களால் முடியும் ...
எம்மால்தான் இயலவில்லை -ஏனெனில்
இழந்தது இளவரசனை மட்டுமல்ல