உங்களின் தேசப்பற்றில் ஒரு தோட்டாவை விட்டுள்ளான் இந்த அஸ்ஸாம் ரைபிள் வீரன்.
பேஸ்புக்கில்தான் அறிமுகம் .மிக சென்சிட்டிவாக உணர்ந்தேன் இந்த சேலத்து பையனை.
அவனின் இந்த கேள்வி சற்று குரூரமாக கூட தோன்றலாம்....குரூரமாக நடத்தப்பட்டதன் விளைவால் என்றால் ஒத்துக்கொள்ளவா போகிறோம்?
உங்களால் அந்த கேள்விகளை ஜீரணிக்க இயலாது.ஏனெனில் உண்மை நிலையை ஜீரணிக்க இயலாமல்தான் அவனிடமிருந்து இந்த கேள்விகள் கிளம்பியுள்ளன.
உங்களால் அந்த கேள்விகளை ஜீரணிக்க இயலாது.ஏனெனில் உண்மை நிலையை ஜீரணிக்க இயலாமல்தான் அவனிடமிருந்து இந்த கேள்விகள் கிளம்பியுள்ளன.
முடிந்தால் இந்த ராணுவ வீரனுக்கு பதில் சொல்லுங்கள்.....
இன்று ஒரு ராணுவ வீரன் இறந்தால் சாதி, மதம் கடந்து அனைவரும் துக்கப்படுகிறோம், இவர் நம் நாட்டை காக்க உயிர் நீத்தவர் என்று பெருமை கொள்கிறோம் இது தான் சாதிமத வேற்றுமையில் இந்தியா என்ற ஒற்றுமை என்பதாகும்.
ஆனால் அதே ராணுவ வீரன் சேரியில் பிறந்திருந்தால் அவர் உயிருடன் இருக்கம்போது அவரை கோவிலின் கருவரைக்கு உள்ளே விடுவீர்களா?, நாட்டை காக்கும் ராணுவ வீரனென்று உங்கள் சாதி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்களா? அல்லது உங்கள் வீட்டு சொம்பில் தான் தண்ணீர் கொடுப்பீர்ளா? அல்லது அவன் இறந்த பிறகு உங்கள் சுடுகாட்டில் தான் அடக்கம் செய்ய முடியுமா?
இப்போ எங்கையா போனது உங்கள் தேசபற்று?
சேரிகள் எப்போதும் இந்நாட்டின் அகதிகளே அவர் ராணுவ வீரனாக இருந்தாலும் சரி சாதாரன மனிதனாக இருந்தாலும் சரி
("" நல்ல இருக்கையா உங்க தேசப்பற்று"")
மாயக்கண்ணன்-அஸ்ஸாம் ரைபிள்ஸ்.
மேற்கண்ட கேள்விகளில் சொம்பு தண்ணீர் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என கருதுகிறேன்.
எந்த சாதியில்தான் சாதி பார்த்து திருமணம் முடிப்பதில்லை?.அந்த மாதிரியான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ஏனெனில் நாம் சார்ந்த மதம் அதைத்தான் கற்பிக்கிறது.மதத்தை ஆராய்தல் கடவுளை சோதிப்பதற்கு சமமாகும்.எதிர்கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டதன் விளைவு இந்த நான்கு வர்ணங்கள்.
பேஸ்புக்கில் இதற்கு கமெண்டிட்ட பலர் இஸ்லாமே தீர்வு என்றனர்......நாங்கள் விரும்புவது மத மாற்றமல்ல ...மன மாற்றமே.
உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட கேள்விகளில் சொம்பு தண்ணீர் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என கருதுகிறேன்.
எந்த சாதியில்தான் சாதி பார்த்து திருமணம் முடிப்பதில்லை?.அந்த மாதிரியான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ஏனெனில் நாம் சார்ந்த மதம் அதைத்தான் கற்பிக்கிறது.மதத்தை ஆராய்தல் கடவுளை சோதிப்பதற்கு சமமாகும்.எதிர்கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டதன் விளைவு இந்த நான்கு வர்ணங்கள்.
பேஸ்புக்கில் இதற்கு கமெண்டிட்ட பலர் இஸ்லாமே தீர்வு என்றனர்......நாங்கள் விரும்புவது மத மாற்றமல்ல ...மன மாற்றமே.
உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
| Tweet | |||||
வணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.
தற்போது பதிவை இணைக்கலாம்.
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
www.Nikandu.com
நிகண்டு.காம்
முக்கியமா பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தான் சகா. காசு தான் . பணம், இயற்கை வளம், அதிகாரம் போன்றவற்றை பங்கிட்டு கொள்ள விரும்பாதோரே மதம், இனம், புண்ணாக்கு என கிளப்பிவிட்டு வெறி தீர்ப்பார்கள். இனி வரும் காலத்தில் எல்லாருடைய பெயரையும் அழித்துவிட்டு எண்ணை மட்டும் கொடுத்து, எல்லோருக்கும் ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி சம்பளம், ஒரே மாதிரி கல்வி என அனைத்தையும் ஒரே மாதிரி கொடுத்து, வெளியே எந்த மதம், சாதி, இனம் என்பவற்றை எல்லாம் கூறுவதை தடுத்து ஒருவித உதோபியா சமூகத்தை உருவாக்கினால் ஒழிய, இது மாறாது.
பதிலளிநீக்குவன்முறையை தூண்டுவோரை கொண்டு செவ்வாயில் விடலாம். சாதி சண்டைகள் போட விரும்புவோரை கொண்டு போய் சந்திரனில் விட்டுவிட்டு சண்டையிடச் சொல்லலாம்.
அது வரைக்கும் பலசாலி பலமில்லாதவனை அழித்துக் கொண்டே இருப்பான்.. :( மதமாற்றம் எல்லாம் சுத்த பேத்தல், அது ஒரு குழுவின் பலத்தை அதிகரிக்க ஆள் எடுக்கும் பணி தான்.
எல்லோரும் ஒரே மதாமானக் கூட அப்புறம் அதில் ரெண்டு அணி உருவாகி அடிச்சிக்கும்.
காதலும் காமமுமே மனிதர்களை ஒன்று படுத்தி வந்துள்ளது, அதுவே ஒன்று படுத்தும் என்பது எனது எண்ணம். அல்லது கற்பித உதோபியா சமூகத்தை உருவாக்க வேண்டும். ஆனால் அது தனி மனித உரிமைகளுக்கு எதிரானதே.
இப்படியே பேசிட்டு இருப்போம், மாசு பெருகி, காலநிலை மாறி, சுற்றுச்சூழல் கெட்டு நம் மனித இனம் அழியும் வரை.
கற்பித உதோபியா சமூகத்தை அப்படியென்றால்
நீக்கு//இப்படியே பேசிட்டு இருப்போம், மாசு பெருகி, காலநிலை மாறி, சுற்றுச்சூழல் கெட்டு நம் மனித இனம் அழியும் வரை.// மிக சரி மதங்கள் மூலம் மனித இனம் அழியுமோ இல்லையோ நிச்சயம் இயற்கையை அழிப்பதன் மூலம் நாம் அழிவோம்...
அப்படின்னா சீனு உன்னோட அணுஉலை ஆதரவு நிலைப்பாடு?
நீக்குஅணு உலை குறித்து நான் இதுவரை எனது ஆதரவான அல்லது எதிரான கருத்துக்களை எங்கேயுமே பதிவு செய்ததில்லை... அணு உலை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும், அணு உலையை விடுங்கள் மன்னார்குடியில் ONGC பெட்ரோல் உருஞ்சுகிறேன் என்று சில கிராமங்களின் ஒட்டு மொத்த மக்களையும் பல வருடங்களாக பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள், அதைப்பற்றி யாருமே பேசக்காணோம், சொல்லபோனால் தெரியவும் இல்லை. இயற்கையா விஞ்ஞானமா என்றால் நான் இயற்கைக்கு மட்டுமே ஆதரவு. இதனை எனது இயற்கை சார்ந்த எந்த பதிவுகளிலும் காணலாம்...
நீக்குயாருமே பேசக்காணோம் என்றால் யார் பேசுவது? கையில் கணினியும் வாய்ப்புகளும் உள்ள நீயே இன்னும் எழுதவில்லை என்பது எனது ஆதங்கம்(பதிவை நான் மிஸ் செய்யவும் வாய்ப்புண்டு.).அணுஉலை குறித்து நீதான் ஒரு முறை போனில் குறிப்பிட்டாய் .அதான் அப்படி சொன்னேன் .சுற்றுப்புற சூழ்நிலைக்கு வெறும் எழுத்தோடு நிற்காமல் பல விசயங்களில் நம்மை நாமே சீர் செய்ய வேண்டியுள்ளது.எகா -பாலிதீன்,தண்ணீரை விரயமாக்குதல் ,மரம் வளர்க்காமை ..இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.முடிந்த அளவு முயற்சிக்கலாம்.
நீக்குநன்றி திரு.இக்பால் செல்வன் ,சீனு
நீக்குநாங்கள் விரும்புவது மத மாற்றமல்ல ...மன மாற்றமே
பதிலளிநீக்குபொருளாதாரரீதியான மாற்றமும் வரவேண்டும். அப்போதுதான் முழுதீர்வு கிடைக்கும். இப்படியெல்லாம் கேள்வி எழுப்பாமல், "போடா -------" என்று போய்க்கொண்டே இருப்போம்.
ha ha ha உண்மைதான் ...நன்றி குட்டிப்பிசாசு
நீக்குஅந்த வீரரின் ஆதங்கத்தில் உண்மை உள்ளது! மனங்கள் மாறாதவரையில் இதற்கு தீர்வு காண முடியாதுதான்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் அண்ணா
நீக்குவணக்கம் நண்பர்களே
பதிலளிநீக்குஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
பார்ப்பானே சுயமாக தங்கள் சுய லாபத்துக்காக இது வரை புளுகி வைத்ததை ஒத்து கொண்டாலும் , மற்றவர் இந்த சாதி என்ற கேவலத்தை விட மாட்டார்கள். (அனைத்து சாதி கட்சிகளும், அதன் தலைவர்களும் இதற்கு முக்கிய காரணம் ) மருத்துவம் மற்றும் மேலான படிப்பு படித்து உள்ளோரும் இதை செய்வது அவல நிலை. இதற்கு கல்வி பெறாமலே இருந்து இருக்கலாம்
பதிலளிநீக்குபடிச்சவன் படிக்காதவன்னு எந்த வித்தியாசமும் இல்ல...நன்றி .
நீக்குஇந்த அளவிற்காவது தேசப் பற்று இருக்கிறதே என்பதை நினைத்து சந்தோசப் படும் நிலையில்தான் உள்ளோம் !
பதிலளிநீக்குத ம 6
நன்றி பகவான்ஜி ஜி
நீக்குசேரியிலிருந்து வரும் ராணுவ வீரர் என்று இல்லாமல், பொதுவாக ராணுவம் என்றாலே யாரும் பெண் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். சாதி, மதம், இனம், மொழி எனபதையும் தாண்டி ஒரு ஒருவித பயமே இதற்க்கு காரணம் என்பது என் கருத்து...
பதிலளிநீக்குஅதென்னவோ உண்மைதான் விக்னேஷ் நண்பா...இங்கு அந்த பயத்தினால் வரும் தயக்கத்தை கூட ஒத்துக்கலாம்..ஆனா சாதி?நன்றி திரு.விக்னேஷ்
நீக்குநல்ல கேள்வி..
பதிலளிநீக்குபதிலும் உள்ளது...
பெரியாரே சொன்னதுதான் இன இழிவு ஒழிய....!!
இதற்கு பிறகு என்ன வருமென்று நீங்களே தேடிக்கொள்ளுங்கள்..
இல்லை சீனி கவிதை சகோ...மேலே இக்பால் செல்வனின் பின்னூட்டம் சரியாக கூறப்பட்டுள்ளது.
நீக்குஇஸ்லமாம் மத சாதி கலப்பு திருமணத்தை ஆதரிக்கிறதா என்ன ? ஏக இறைவனனை தவிர வேறு கடவுள் இல்லை என்று சொல்லும் மதம் எப்படி ஒற்றுமை வளர்க்கும் இங்கு மத மாற்றம் தேவை இல்லை ,மனதின் சீழ் பிடித்த சிந்தனையின் மாற்றம் தான் தேவை .முதலில் எப்போதும் முஷ்டி உயர்த்தாமல் சாதி மத கலப்பு திருமணத்தை செய்வோம் நமது குடும்பத்தில் ,அப்படி செய்பவர்களை தங்குவோம் அவர்களின் கடின சமயத்தில் .அப்படி செய்ய முடியாமல் இருப்பவன் பொத்தி கொண்டு இருக்காலம் ,சாதியில் ஒரு மாற்றமும் கொண்டு வராமல் தொடக்க நிலை கூட தாண்டாமல் சாதி ஒழிக்க பட வேண்டும் என்று கத்துவது சுத்த பொங்காட்டம்
பதிலளிநீக்குசரியாக சொன்னிங்க ஜானி...தொடர்ந்து வரவும்.நன்றி தோழர்.
நீக்குநமக்கு அறிமுகபடுத்தபட்ட மதங்களுக்கும் ஜாதிக்கும் பழகிய நமக்கு அனைத்து மதங்களும் கற்றுவிக்க முயலும் மனிதநேயம் புரியாமல் போனதுதான் காரணம்
பதிலளிநீக்குநிச்சயமாய் மதமாற்றம் தீர்வல்லதான், அதே நேரத்தில் நாம் அனைவரும் மனதுவைத்தால் மனமாற்றம் நிச்சயம் !
சமூக அவலங்களை ஒரு தனிமனிதனால் நிச்சயம் மாற்ற முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் " நம்மால் முடியும் " பதிவை என் வலைப்பூவில் பதித்த சமயத்தில் உங்களின் இந்த பதிவு என் கண்ணிபட்டது விந்தைதான் !
நேரமிருந்தால் படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை பதியுங்கள்
நம்மால் முடியும் : http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr