TESO வில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டனர் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால் விசா கிடைக்காது என்று சோனியாவின் இந்திய வெளியுறவுத்துறை டெசோ வுக்கு அறிவித்துள்ளது.கருணாநிதி இது குறித்து எந்த கருத்தும் சொன்னது போல தெரியவில்லை.இலங்கையின் தாளத்திற்கு தப்பாமல் ஆட்டம் போடுகிறது மத்திய அரசு.காணாதது போல கபட நாடகம் ஆடுகிறார் கருணாநிதி.கீழே காணும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுப்பு நகலை பாருங்கள்....
போராட வேண்டிய நேரத்தில் தூவானம் பேசி தூங்கி களித்த தலைவருக்கு இன்று அரசியல் செய்ய ஈழம் தேவைப்படுகிறது.சிறுத்தைகளோ பெரிய கட்சி ஒன்றோடு கூட்டணி வைத்தால்தான் பாராளுமன்றத்தில் திருமா பேச முடியும் என்கின்றனர்.ஈழம் என்ற வார்த்தைக்கே தடை என்று கொண்டு வரும் அரசோடு நீங்கள் கூட்டணி இருந்து பாராளுமன்றத்தில் பேசி என்ன சாதிக்க போகிறீர்கள்? விடுதலை புலிகளுக்கு தடை,பிரபாகரன் படத்திற்கு தடை,இன்று ஈழம் என்ற சொல்லுக்கும் விசா தடை.
இதெல்லாம் செய்யும் காங்கிரசோடு கூட்டணியும் வைத்துக்கொண்டு, ஈழம் கேட்கமாட்டோம் என்று முன் ஜாமீனும் வாங்கி கொண்டு டெசோ மாநாடு நடத்துவார்களா?இல்லை மானாட மயிலாட ஆடுவார்களா?
டெசோவைக் கண்டு மத்திய அரசும் இலங்கையும் பயப்படுகிறது,அதனால்தான் இப்படியெல்லாம் செய்கிறது என்று நினைத்து விடாதிர்கள்.இதெல்லாம் நாம் காணும் சத்திய சோதனைகளில் ஒன்றே.
காங்கிரசில் இருந்து வெளியேறி சோனியாவை எதிர்த்து கருணாவும் திருமாவும் இந்த டேசொவில் ஈழம் கேட்டு ஒரு தீவிரமான போராட்டத்தின் மூலம் தமிழகத்தை எழ வைப்பார்கள் என்றால் மட்டுமே கொஞ்சமாவது டெசோவின் மீது நம்பிக்கை வரும்.மற்றபடி இது கருணா கதை வசனத்தில் திருமா நடிக்கும் நாடகமே.
ஆதாரத்தை முகநூலில் தந்த Sahaya Dass via pagalavan pa/rajkumar தோழர்களுக்கு நன்றி.
| Tweet | |||||

ஆரோக்கியமான ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு இந்தக் கடிதமே சாட்சி.ஈழம் என்ற வார்த்தை கூடாது என்று கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதற்குக் காரணம் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை.ஆனால்,அதனைத் தெரிவித்திக் கடிதமெழுதியிருக்கும் முகவரி `தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பு’.இதைவிட ஜனநாயகம் வேறு எந்த நாட்டில் இருக்கும்?அரசின் கொள்கை முடிவைத் தெரிவித்தாலும் மக்களின் குரலை மத்திய அரசு மதிப்பதாகவே கருதவேண்டும்.சும்மா...வழக்கம் போல உங்களைப் போல புலம்ப முடியாது நண்பர்களே...
பதிலளிநீக்குஅய்யா உங்க ஜனநாயகத்தை நினைச்சா புல்லரிக்குது..வாழ்க ஜனநாயகம்.நிலாவ பாக்க சொன்னா விரலை பாக்குற அரசியல் வேணாம் தோழரே...
பதிலளிநீக்கு// காங்கிரசில் இருந்து வெளியேறி சோனியாவை எதிர்த்து கருணாவும் திருமாவும் இந்த டேசொவில் ஈழம் கேட்டு ஒரு தீவிரமான போராட்டத்தின் மூலம் தமிழகத்தை எழ வைப்பார்கள் என்றால் மட்டுமே கொஞ்சமாவது டெசோவின் மீது நம்பிக்கை வரும்.மற்றபடி இது கருணா கதை வசனத்தில் திருமா நடிக்கும் நாடகமே. // முழுக்க முழுக்க உண்மையே அண்ணா
பதிலளிநீக்கு