Translate

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் சந்திப்பு பதிவுகளில் சிறந்தவை எவை?

பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடந்துச்சு தடுக்கி விழுந்தாலும் பதிவர் சந்திப்புன்னு காதுல விழுது.தமிழ்மணம் முழுக்க ஒரே தமிழ் பதிவர் சந்திப்பு பதிவுகள்.சூடாக ,பரிந்துரையாக என்று பல பதிவுகள் இருந்தாலும் ஒரு சில பதிவுகள் சற்று சிறப்பாக இருந்தது.மத்ததுல்லாம் மொக்கயானு கேள்வி கேக்க கூடாது...அப்புறம் நானும் கேள்வி கேட்பேன்..மகா நதி படத்துல சுகன்யாக்கு அப்பாவா நடிச்சது யாரு?

ஒரு நிகழ்ச்சியை பல வேலைகளுக்கு நடுவில் நடத்தி தந்த உழைப்பாளிகளை நியாபகம் செய்த இந்த பதிவு பாராட்டத்தக்கது.சாப்பிட்டு விட்டு சர்வருக்கு டிப்ஸ் அளித்து விட்டு சமையல் செய்தவரையும்,எச்சில் பாத்திரம் தூக்குபவரையும் மறந்து செல்லும் மகா பிறவிகள்தானே நாம். முன்னுரைக்கும் முடிவுரைக்கும் காரணமான உழைப்பாளிகளை முகப்புரையில் தந்த இந்த பதிவு சிறப்பானது என்றால் மிகையில்லை.நீங்க நோகாமல் நுங்கெடுக்க பனை ஏறிய பதிவர்கள்  "(சென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்?)

நன்றிக்கு பேர் போன தமிழனின் குணத்திற்கு எடுத்துகாட்டாக மின்னல் வரிகள் தந்த நன்றி மழை இது...திருவிழாவை சிறப்பித்த நட்புகளுக்கு நன்றி

பதிவர் சந்திப்பை வைத்து ஹிட்ஸ் தேடும் பதிவர்களுக்கும் தேடாத பதிவர்களுக்கு பரபரப்பான பத்து தலைப்புகளை கொடுத்து அது மாதிரி யாரும் போட்டுவிடாமல் மறைமுகமாக பதிவுலகை காப்பாற்றிய இந்த பதிவுக்கு கோடானு கோடி நன்றிகள்.தாராளமாய் நம்மை நாமே பார்த்து சிரிக்கலாம்....அப்படி ஒரு பதிவு பதிவர் சந்திப்பு-பரபரப்பான பத்து தலைப்புக்கள்

கடைசியாக ஒரு மன்னிப்பு பதிவு...எப்படி எப்படியோ தலைப்பை கொடுத்து வரவைக்கும் பதிவர்களில்  பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் என்று நண்பன் ஒருவர் எல்லாருக்கும் பல்ப் கொடுக்க....காட்டமான விமர்சனங்களை சந்தித்தாரா இல்லை மனசுக்கு தவறாக தோன்றியதா ...எப்படி என்று தெரியவில்லை.அடுத்த நாளே மன்னிப்பு கோரியிருந்தார்.அந்த பெருந்தன்மைக்கு ஒரு மரியாதை செய்தே ஆக வேண்டும்.....தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

இன்னும் ஒரு சிறப்பான பதிவு உள்ளது ஆனால் அதை சொன்னால் உனக்கேன் இந்த விளம்பரம்னு சீனு கேட்பான்...பதிவர் சந்திப்புக்கு முன்னும் பின்னும் சில வேண்டுகோள்கள் என்கிற  அந்த பதிவ இதே வலைப்பூவில் வலது பக்கத்தில் தேடி படிச்சிடாதீங்க ....படிச்சாலும் பாராட்டிடாதீங்க...ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்..

அதுக்காக மத்த பதிவுகள் நல்லா இல்லை என்று அர்த்தம் இல்லை .என் சிற்றறிவுக்கு எட்டிய வரை குறிப்பிட்டுள்ளேன்...நீங்கள் உங்கள் பதிவுகளை தவிர வேறு சிறந்த பதிவுகளை பின்னூட்டத்தில் தரலாமே...எதிர் பார்க்கிறேன்.

21 கருத்துகள்:

  1. //எப்படி எப்படியோ தலைப்பை கொடுத்து வரவைக்கும் பதிவர்களில் ஒரு பதிவர்//

    பாசித் அப்படி எழுதுவதில்லை அண்ணா அவர் "பிளாக்கர் நண்பன்" தளத்தில் தான் பதிவு எழுதுவது வழக்கம்.. நண்பன் பக்கம் தளம் ஜாலிக்ககாக அவர் எழுதியதாக தான் நினைகிறேன்.. ஹிட்சுக்காக பாசித் எழுத (அந்த தளத்தில்) வாய்ப்பே இல்லை..

    //இன்னும் ஒரு சிறப்பான பதிவு உள்ளது ஆனால் அதை சொன்னால் உனக்கேன் இந்த விளம்பரம்னு சீனு கேட்பான்..//

    நான் கூட பார்த்தேன் அந்த பதிவர் நன்றாக தான் எழுதி இருந்தார் ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாரி நண்பா முதல் கருத்துக்கு நன்றி...அவரை பற்றிய அந்த வரிகளை திருத்தி விட்டேன்..அது சரளமான வரிகளோடு அவரை மட்டும் சுட்டியது போல வந்ததை கவனிக்கலை.அவர் பதிவுகளை இதுக்கு முன்னால் படிக்கவில்லை...இனிமே தொடரணும்.ஆமா இந்த பதிவுக்கு இதில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் நன்றி சொல்லுவாங்களோ? எனக்கு கூச்சம் கூச்சமா வருதுங்க...

      நீக்கு
    2. @ஹாரி

      ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நண்பா!

      நீக்கு
  2. தகவல்கள் அருமை சார்! இனிதான் நீங்க சொல்லி இருக்க மற்ற பதிவுகளைப் படிக்கனும், மின்னல் வரிகள் தவிற!

    பதிலளிநீக்கு
  3. அய்யகோ என்ன கொடுமை இது?என்னை போய் சார்னு சொல்லிக்கிட்டு...என்னை அண்ணா என்றோ,தம்பி என்றோ,இல்லை பேர் சொல்லியோ,சகோதரன் என்றோ,தோழன் என்றோ அழைக்கவும்....தமிழ் பேசும் நல்லுலகில் பெண் ஒருவர் முதல் முறையாக என்னை சார் என்று கூறியது இந்த பத்தாங்கிளாசுக்கு ரொம்ப ஓவர்...மற்ற பதிவுகளையும் படிங்க சகோதரி....வருகைக்கு மிகவும் நன்றி....

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... அதுல என்ன இருக்கு! சகோ என்றே அழச்சுட்டாப் போச்சு! நேத்தே உங்கப் பதிவ படிக்க ஆறம்பிச்சுட்டேன்!


        ஒரு கோழைப் பதிவருக்கு வீரம் வந்தது எப்படி??

    பதிலளிநீக்கு
  5. இப்படி கூட பதிவெழுதலாமா? நல்லா தான் இருக்கு நண்பரே!

    //.காட்டமான விமர்சனங்களை சந்தித்தாரா //

    அப்படி இருந்தாலும் கூட பரவாயில்லையே...

    "நீ ரொம்ப நல்லவன்"-னு சொல்லி செண்டிமெண்டால தாக்கிட்டாங்க...

    :D :D :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. <
      நீ ரொம்ப நல்லவன்"-னு சொல்லி செண்டிமெண்டால தாக்கிட்டாங்க...
      >

      இவங்ககிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதுதான் பிரதர்! நாமளும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது! :D

      நீக்கு
    2. நல்லவங்களா பார்த்து ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும்?யாராவது ஒரு நல்லவன் இதற்க்கு ஏற்பாடு செய்தால் நலம்...

      வருகைக்கும் வலிக்காத மாதிரி பின்னூட்டம் போட்ட பெருந்தன்மைக்கும் இருவருக்கும் நன்றி..நன்றி...நன்றி..

      நீக்கு
  6. அடப்பாவிகளா... அப்ப நாந்தான் சந்திப்பு பத்தி இன்னும் பதிவு போடலையா???.

    சரி விடுங்க சகோதரர்கள் எழுதியதே போதும்... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை அந்த கொடுமைய நீங்க செய்யாம இருந்தின்களே....உங்கள மாதிரி நல்லவங்க இருக்கிறதினாலதான் எங்களை மாதிரி "ரொம்ப நல்லவங்க" பதிவர்கள் வாழ்ந்து வருகிறோம்...வருகைக்கு நன்றி பாஸ்...

      நீக்கு
  7. பதிவுகளைத் திரட்டி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் நன்றிக்கும் வந்தனங்கள் ,நன்றிகள் சகோ...

      நீக்கு
  8. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா..

      நீக்கு
  9. அண்ணே பதிவுலகச் சூறாவளியாக மாறி விட்டீர்கள் போலும்... நடந்ததது நடப்பது நடக்கப்போவது அனைத்தும் அறிவீரோ.. நான் போன பதிவைச் சொன்னேன்... ஹி ஹி ஹி... உற்சாகமான இந்தப் பதிவு மகிழ்வாய் உள்ளது... உங்கள் கடந்த இரு பதிவிலும் இந்தத் தம்பியை அறிமுகம் செய்தது ஆகோ ஓகோ...

    தம்பியை (உங்கள் வலைப்பூவை) அறிமுகம் செய்ய தக்க நாள் பார்த்துக் கொண்டுள்ளேன்...

    பதிலளிநீக்கு
  10. உள்ளததானே சொன்னேன் சீனு...உண்மையிலேயே நானும் எல்லாரையும் போல பதிவர் சந்திப்பு பதிவை போடா வேண்டிய கட்டாயமானது போல இருக்குது.தம்பி உன் பேரை மட்டுதான் சொன்னேன்...அவ்வளவு பிரபலமா இருக்கிங்க.தம்பிய மறக்காம இருந்தா அதுவே போதும் சீனு...இன்னைக்கு தமிழ்மணம் மூலம் வரும் ஒவ்வொரு பார்வைக்கும் நீதான் காரணம்.நன்றிலாம் சோராது கிடையாதுன்னு பதிவில் சொல்லியதால் நன்றி தவிர்க்கபடுகிறது.நீ ரொம்ப நல்லவன்டா.....அந்த நல்லவன் இல்லை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....