Translate

பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் சந்திப்பு பதிவுகளில் சிறந்தவை எவை?

பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடந்துச்சு தடுக்கி விழுந்தாலும் பதிவர் சந்திப்புன்னு காதுல விழுது.தமிழ்மணம் முழுக்க ஒரே தமிழ் பதிவர் சந்திப்பு பதிவுகள்.சூடாக ,பரிந்துரையாக என்று பல பதிவுகள் இருந்தாலும் ஒரு சில பதிவுகள் சற்று சிறப்பாக இருந்தது.மத்ததுல்லாம் மொக்கயானு கேள்வி கேக்க கூடாது...அப்புறம் நானும் கேள்வி கேட்பேன்..மகா நதி படத்துல சுகன்யாக்கு அப்பாவா நடிச்சது யாரு?

ஒரு நிகழ்ச்சியை பல வேலைகளுக்கு நடுவில் நடத்தி தந்த உழைப்பாளிகளை நியாபகம் செய்த இந்த பதிவு பாராட்டத்தக்கது.சாப்பிட்டு விட்டு சர்வருக்கு டிப்ஸ் அளித்து விட்டு சமையல் செய்தவரையும்,எச்சில் பாத்திரம் தூக்குபவரையும் மறந்து செல்லும் மகா பிறவிகள்தானே நாம். முன்னுரைக்கும் முடிவுரைக்கும் காரணமான உழைப்பாளிகளை முகப்புரையில் தந்த இந்த பதிவு சிறப்பானது என்றால் மிகையில்லை.நீங்க நோகாமல் நுங்கெடுக்க பனை ஏறிய பதிவர்கள்  "(சென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்?)

நன்றிக்கு பேர் போன தமிழனின் குணத்திற்கு எடுத்துகாட்டாக மின்னல் வரிகள் தந்த நன்றி மழை இது...திருவிழாவை சிறப்பித்த நட்புகளுக்கு நன்றி

பதிவர் சந்திப்பை வைத்து ஹிட்ஸ் தேடும் பதிவர்களுக்கும் தேடாத பதிவர்களுக்கு பரபரப்பான பத்து தலைப்புகளை கொடுத்து அது மாதிரி யாரும் போட்டுவிடாமல் மறைமுகமாக பதிவுலகை காப்பாற்றிய இந்த பதிவுக்கு கோடானு கோடி நன்றிகள்.தாராளமாய் நம்மை நாமே பார்த்து சிரிக்கலாம்....அப்படி ஒரு பதிவு பதிவர் சந்திப்பு-பரபரப்பான பத்து தலைப்புக்கள்

கடைசியாக ஒரு மன்னிப்பு பதிவு...எப்படி எப்படியோ தலைப்பை கொடுத்து வரவைக்கும் பதிவர்களில்  பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் என்று நண்பன் ஒருவர் எல்லாருக்கும் பல்ப் கொடுக்க....காட்டமான விமர்சனங்களை சந்தித்தாரா இல்லை மனசுக்கு தவறாக தோன்றியதா ...எப்படி என்று தெரியவில்லை.அடுத்த நாளே மன்னிப்பு கோரியிருந்தார்.அந்த பெருந்தன்மைக்கு ஒரு மரியாதை செய்தே ஆக வேண்டும்.....தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

இன்னும் ஒரு சிறப்பான பதிவு உள்ளது ஆனால் அதை சொன்னால் உனக்கேன் இந்த விளம்பரம்னு சீனு கேட்பான்...பதிவர் சந்திப்புக்கு முன்னும் பின்னும் சில வேண்டுகோள்கள் என்கிற  அந்த பதிவ இதே வலைப்பூவில் வலது பக்கத்தில் தேடி படிச்சிடாதீங்க ....படிச்சாலும் பாராட்டிடாதீங்க...ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்..

அதுக்காக மத்த பதிவுகள் நல்லா இல்லை என்று அர்த்தம் இல்லை .என் சிற்றறிவுக்கு எட்டிய வரை குறிப்பிட்டுள்ளேன்...நீங்கள் உங்கள் பதிவுகளை தவிர வேறு சிறந்த பதிவுகளை பின்னூட்டத்தில் தரலாமே...எதிர் பார்க்கிறேன்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

பதிவர் திருவிழாவிற்கு முன்னும் பின்னுமாய் சில வேண்டுகோள்கள்

வலைபதிவர்கள் மாநாடு மயிலாடு என்று களை கட்டுவதை காணமுடியாமல் கண்கட்டுகிறது எனக்கு.நீங்க எப்படினாலும் நினைத்து கொள்ளுங்கள்...ரொம்பவும் ஓவராத்தான் போகுது உங்க அலும்பு...முதலில் கவிதை வீதியில் ஆரம்பித்த பதிவர் மாநாடு அழைப்பு பதிவு அப்புறமா தினமும் வாட்டு வாட்டுன்னு வாட்டுது...

அட ஆமாங்க யாரை பார்த்தாலும் பதிவர் சந்திப்பை மாநாட்டை பற்றி கொடுரமா ஒரு தலைப்பை கொடுத்து படிக்க வைக்கிறாங்க .உள்ளே போய் பார்த்தா வழிஞ்சிகிட்டே அப்பத்தான் நீங்க படிக்க வருவீங்கனு மொக்கையா எழுதி கடுப்பை கிளப்புறாங்க...நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது?நீங்களே சொல்லுங்க...

சென்னையில இருக்குறவங்கள கேக்கவே வேண்டாம்...பதிவர் கூட்ட ஆலோசனைல கலந்துக்கிறேன்னு போய்ட வேண்டியது,காலுக்கு கீழே ரெண்டு போட்டோ,தலைக்கு மேலே ரெண்டு போட்டோ...அடுத்த நாள் பாத்தா பயபுள்ளங்க   வெவரமா ஒரு பதிவை தேத்திடுறாங்க...

நாம வெளியூர்க்காரங்க என்னடா செய்யலாம்னு பார்த்தா ஒன்னும் முடியலை...எத்தனை நாள்தான் விரல் சூப்பிட்டு பாத்துகிட்டே இருக்குறது?அதான் கோவத்தில களம் இறங்கிட்டோம்....களத்துல இறங்கியாச்சே பதிவர் சந்திப்பை பற்றி ரெண்டு பதிவ படிக்கலாம்னு பார்த்தா ஒரே அக்கப்போர்....

குடிக்கிற ஜாதி..குடியாத ஜாதி..நீயா நானா? பதிவர் சந்திப்பு என்னும் பெயர் மாறி,பதிவர் குடிப்பவர் மாநாடு,குடிக்காதவர் மாநாடு என்று அமைந்துவிடுமோ என பயமாக உள்ளது.எப்படியோ கொஞ்ச பேருக்கு இதுதான் இந்த வாரத்துக்கு எழுத்தா இருக்குது.

பதிவர் சந்திப்பின் சுவராசியத்தை கெடுத்து விடுமோ என்று பயத்தை தருகிறது  பதிவுகள்.முதல் பதிவாக கவிதை வீதி அவர்களின் பதிவையும்.தம்பி சீனுவின் இரண்டு பதிவையும் படித்தேன்...அதன் பின் இப்போதுதான் பதிவர் சந்திப்பை பற்றிய பதிவுகளை படிக்கிறேன்.கலந்துக்குரவங்க பேரை கொடுத்திருந்தார்கள்.வேற சுவராஸ்யமா எதுவும் இல்லை.பவர் ஸ்டார் வருகிரார்னு மறுபடியும் கவிதை வீதியில் காயவிட்டார் அண்ணன் திரு கவிதை வீதி சௌந்தர்.

முக்கியமான  பிரச்சனை என்னனா பதிவர் சந்திப்பை பற்றிய முக்கிய அறிவுப்புகள் வந்தாலும் என்னை போல உள்ளவன் சும்மா எதுனாச்சும் கிளப்புவாங்கனு படிக்காமலேயே அப்பீட் ஆயிடுவோம். அதாவது புலி வருது கதையாகும்னு சொல்றேன்....யப்பா,நான் சரியாத்தானே பேசுறேன்?

சரி நடந்தது நடந்து போச்சு...இனிமே பதிவர் சந்திப்பில் கலந்து கொல்பவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் என்னனா...நீங்க சந்திப்பில் இருக்கும்போது ஒரு பதிவர் என்பதை மறந்து விடவும்.இல்லைனா அன்னைக்கு இரவே ஒரு பதிவு போட மேட்டர் தேடுவீங்களே தவிர சந்தோசமா இணைந்திருக்க மாட்டீங்க.

பதிவர் சந்திப்பு முடிந்து ரெண்டு நாளைக்கு அதை பற்றி யாரும் எழுத கூடாதுன்னு ஒரு சட்டம் போடணும்.ரெண்டு நாளைக்கு அப்புறமும் எது மனசுல நிக்குதோ அதுதான் நீங்கள் மிகவும் ரசித்ததாகவும் சுவராஷ்யமாகவும் அமையும்.அதை படிக்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.

அப்புறம் இந்த பிரபல பதிவர்களை மூத்த பதிவர்களை பேட்டி எடுக்கிறது,அவர் கவிதை அரங்கத்தில் காதை சொறிந்தார்,ஒரே நேரத்தில் மூணு டம்ளர் தண்ணி குடிச்சார்,தயிர் கடைந்தார்னு கவனிச்சு கவனிச்சு பதிவு எழுதி யாரும் எங்களை கடுப்பாக்காதீங்க ..சொல்லிப்புட்டேன்.

யாருமே நல்லா இல்லைன்னு எழுத மாட்டீங்க...பேசா பொருள்கள் பேச மறுக்கும் பொருள்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.அவற்றை குற்றமாக எழுதாமல் அடுத்த முறை சிறப்பாக எடுத்து செய்ய வழிவகுக்கும் முறையில் திட்டம் தீட்டி கொடுங்கள்.

இந்த மடிக்கணினி,காமெரா இதெல்லாம் கொண்டு போய் அங்கே இருந்தே லைவ் பதிவு போட்டு கொலைவெறி பண்ணிடாதிங்க மக்களே...போவது பதிவர் சந்திப்பு என்பதையும் செய்தி சேகரிக்க இல்லை என்பதையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

எழுதுரவனுக்கு பொதுவா சுய மரியாதை அதிகம் இருக்கும்னு சொல்வாங்க..யாரும் யாரோடும் கருத்து சண்டை போடாமால் சுமூகமாக நிகழ்ச்சியை முடித்து வரவும்.இந்த பின்னூட்ட சண்டை போட்டவர்களை ஒரே மேடையில் நிறுத்தி பேச விட்டு பார்த்தால் எப்படி இருக்கும்?

பதிவர் சந்திப்பின் பதிவு என்றால் மற்றவர்கள் பதிவை ஒருமுறை படித்து விட்டு அப்புறமா இடுங்கள்.இல்லைனா ரெண்டுபேருமே ஒரே மாதிரி எழுதி வைக்க போறீங்க....

அப்புறமா இந்த வெளியூர் பதிவர்களின்  பயணக்கட்டுரைகள்...பஸ் கிடைக்கலை ரயில்ல முட்டிகிட்டேன்,கடல்ல காலை நினைச்சேன் ஈரமாச்சு,வெயிலில் வந்தேன் காஞ்சிடுச்சுனு யாராவது பதிவு போட்டீங்க...மொட்டை போன் அடிச்சு ஊருக்குள்ள கலவரத்தை கிளப்பிடுவேன் ஆமா...

அண்ணனின் பெருந்தன்மை எனக்கு இருக்க நாற்காலி கொடுத்தார் ,சாப்பாடு ஊட்டினார்னு நெக்குருகும் தம்பிகளை எப்படி தடுத்தாலும் எழுதத்தான் போறீங்க.நானும் ரத்த கண்ணீர் வடிக்கத்தான் போறேன்.எவ்வளோவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா என்ன?

இந்த நன்றிப் பதிவுகள் (சென்டிமென்ட்??!!)வேறு என்ன பாடு படுத்த போகிறதோ...இப்பவே வயித்துக்கும் தொண்டைக்கும் வைரமுத்து ஆப்பிள் பயம் காட்டுகிறது.அதிலும் நன்றிக்கு வரப்போகும் கவிதைகள்...ஷ்..இப்பவே கண்ணை கட்டுதே.

எப்படியோ பாஸ் பதிவர் சந்திப்பில் கலந்துக்க முடியாத காட்டத்திலேயும்,நீங்க அதை பத்தி எழுதி எழுதி இன்னும் கடுப்பை கிளப்புவிகளே என்ற நல்லெண்ணத்திலும் நம்ம பங்குக்கு எதையாவது எழுதி வைப்போம்னு எழுதிட்டேன்...நல்ல படியா சிறப்பா சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்.அடுத்த திருவிழாவை இப்போவே அறிவிக்க வேண்டுகிறேன்.

வழி தெரியலையா?இங்கே சுட்டுங்கள் மதுமதி அவர்கள் பதிவர் திருவிழாவிற்கு வர வழிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு காண நிரலையும் தருகிறார்.
வருவதற்கு வழி காட்டும் தெய்வங்களே திரும்பி செல்லவும் வழி சொல்ல வேண்டுகிறேன்..


குறிப்பு: எந்த பதிவரிடம் கேட்டாலும் பரிசு தொகையை வென்றால் பாதி பணம் எனக்கு தருவதாக சொல்கிறார்கள்...அப்படி என்னப்பா நான் செய்துட்டேன்? எந்த  பதிவர்கள் பணம் வென்றாலும்  பாதி பணம் அனுப்ப முகநூல் மூலமாக என்னை அணுகலாம்....(இது வதந்தி இல்லை என்று ரா உறுதி செய்துள்ளது)