ஒரு முத்துகுமார் தூத்துக்குடியிலிருந்து கிளம்பி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை எழுச்சியை எழுப்பி தந்தான்.அதே தூத்துக்குடியில் இருந்து இன்னொரு முத்து ராணுவத்தில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளான்.ராணுவத்தின் சிப்பாய் ஜாதியின் சார்பில் முத்த வணக்கம் அவனுக்கு.
ராணுவத்தில் என்ஜினியர் ரெஜிமென்ட்டில் பணிபுரிகிறார் முத்து (35). தன்னை 5வருடங்களில் 5 முறை பணி மாறுதல் செய்ததாகவும்,8 மாதமாக சம்பளம் தரவில்லை என்றும்,ஷூ பாலீஸ் செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டும் முத்து தன்னை போல பல வீரர்கள் கஷ்டப்படுவதாகவும்,டார்ச்சர் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.தான் தனது வேலையை ராஜினாமா செய்வதாகவும் காகிதத்தில் எழுதி வீசிய முத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி வந்து பேசினால்தான் இறங்குவேன் என்று கூறியுள்ளார்.அதற்காக டெல்லியில் செல்போன் கோபுரத்தில் ஏறி நான்கு நாட்களாக இறங்காமல் போராடும் முத்து துரதிருஷ்ட வசமாக அண்ணா ஹஷாரே போல் இல்லாத காரணத்தினால் ஊடகங்களால் புறக்கணிக்கவும் படுகிறார்.
முதலில் அவர் ராணுவத்தில் இருந்து கொண்டு வெளியே வந்து போராடிய தைரியத்தை பாராட்டனும்.பொது வாழ்வில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம்.ஆனால் ராணுவத்தில் மறுத்து பேசினால் கூட அது குற்றம்தான்.அப்படி ஒரு நிலையில் பூனைக்கு மணி கட்ட கோபுரம் ஏறிய முத்துவின் போராட்டம் வெல்லட்டும்.இந்த இந்திய தேச பற்றாளர்கள் கவனிக்கவும்...இந்த போராட்டமும் ஒரு சுதந்திரம் வேண்டியே..யாரை நினைத்து பெருமையாக கொண்டாடிணீர்களோ அவர்களுக்கே சுதந்திரம் இல்லை...உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
வெளியில் இருந்து பார்க்கும்போது வருடத்தில் விடுமுறை.ரயிலில் இலவச பயணம்,கான்டீன் வசதி,மருத்துவம்,இப்படி அடுக்கிக்கொண்டே போகும் சலுகைகளுக்கு வீரர்கள் கொடுக்கும் விலை இளமையும்,தன் மானமும் மரியாதையும் என்றால் மிகையாகாது...
முத்து முதல் நான் வரை இந்த கொத்தடிமை தொழிலை எதிர்க்க இல்லை வெறுக்க மிக முக்கிய காரணம் மேலதிகாரிகளின் ஆதிக்க வெறியினாலேயே.ராணுவ சட்டங்கள் மேலதிகாரியை எதிர்த்து பேசவிடுவதில்லை.இந்த சட்டங்கள் வானளாவ அதிகாரங்களை அவர்களுக்கு கொடுத்துள்ளது.ஒருவர் நல்லபடியாக தன் வேலையை முடித்து பென்சன் வாங்க வேண்டுமானால் இவர்களை இவர்களின் முட்டாள்தனமான சில கட்டளைகளுக்கு பணிந்துதான் ஆக வேண்டும்.
விடுமுறை கிடைக்காமல் தற்கொலை செய்த சிப்பாய்கள் வன்முறையில் ஈடுபட்ட சிப்பாய்கள் என்று பல அவலங்கள் கொட்டி கிடக்குது பாதுகாப்பு படைகளுக்குள்.
அதிகாரிகளின் காலணியை பாலிஷ் போடுவது ,அவரின் மனைவி சொகுசாக டிவி பார்க்க அவளின் குழந்தைகளின் பீத்துணி துவைக்கும் வரை அடிமை தொழில் நடை பெறுகிறது.வீட்டில் தன் பிள்ளையை கொஞ்ச மட்டுமே தூக்கியவன் இங்கு எவன் வீட்டு பிள்ளைக்கோ பள்ளி பையை தூக்கி திரிவான்.கார் துடைத்தல்,வீடு துடைத்தல் அனைத்து பணிகளும் இவர்களுக்கு ஒரு சிப்பாய் செய்தே ஆக வேண்டும்.மறுக்கும் பட்சம் சரியான நேரத்தில் விடுமுறை அளிக்காமல் நோகடிப்பது,ஏதேனும் கஷ்டமான பயிற்சிகளுக்கு அனுப்புதல் என்று பந்தாடப்படுவார்கள்.
ஒரு மேலதிகாரி நினைத்தால் ஷூ லேஸ் சரியாக கட்டவில்லை,பட்டன் போடவில்லை என்று ஒரு சிறிய விசயத்தை வைத்து சிகப்பு மையால் ஒரு சிப்பாயின் சர்வீஸ் ரெக்கார்டில் கை வைக்கலாம்.தண்டனை கொடுக்கலாம்.கிட்ட தட்ட ஆபீசர்கள் அரசர்களாகவும்,சிப்பாய்கள் அடிமைகளாகவும் உள்ளார்கள் என்பதே உண்மை.
கட்டளைகளுக்கு மறுபேச்சு இருக்காது.கிணத்தில் குதி என்றால் குதிக்கவேண்டும் அதுதான் பட்டாளம் என்று சிலர் பெருமையா சொல்வார்கள்.கிணத்தில் குதிக்க சொல்றவனுக்கு அறிவு வேண்டாமா?தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் இருக்கும் வரை முத்து போன்றோர் போராட்டம் ஓயாது.
ஒரு சிப்பாயை தன் வீட்டில் பணி செய்ய வைப்பதின் மூலம் ஒரு அதிகாரி அரசுக்கு ஒரு மாதத்தில் ரூபாய் 20000 வரை நஷ்டத்தை கொடுக்கிறார்.ஆம் அந்த சிப்பாய் எங்கேனும் காவல் பணியில் ஈடுபடுத்தபடவேண்டியவரே.அவரை தன் வீட்டு பணியில் வைத்து அரசை மற்றும் மக்களின் வரிப்பணத்தை மறைமுகமாக கொள்ளையடிக்கின்றனர் அதிகாரிகள்.ஒரு அதிகாரி 20000ரூபாய்க்கு நஷ்டம் கொடுக்கிறார் என்றால் இந்திய ராணுவம்,துணை ராணுவம் இரண்டிலும் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள்?வருடத்திற்கு எத்தனை ரூபாய் எமாற்றப்படுகிறது என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.2G, கிரானைட் ஊழல் பிச்சை வாங்கும்..
எல்லையை சீர்படுத்த வரும் பணங்களுக்கும், வேலிகளுக்குள் வளரும் புற்களை அழிக்க தரும் மருந்துகளுக்கும் எந்த கணக்கு வழக்கும் கிடையாது.ஒரு நாளைக்கு 5 மணி நேரமே உறங்கும் சிப்பாய் வேலிக்குள் அமர்ந்து புல் புடுங்கும் கொடுமை வேறுநடைபெறும் .இந்த வேலிக்குள் அமர்ந்து ஊர்ந்து பணி செய்யும் போது பாம்பு ,தேள் போன்று ஆபத்தான உயிரினங்கள் எதிர்ப்பட்டால் தப்பிக்க வழி?முதுகை நிமிர்த்தாலே முள் வேலி குத்தும் வேலிக்குள் அமர்ந்து யோசியுங்கள்.
ஒவ்வொரு INSPECTIONக்கும் சிப்பாய்களின் மெஸ்ஸில் இருந்து பணம் செலவழிக்கப்படுகிறது.ஒரு ரெஜிஸ்டர் வாங்க வேண்டுமானாலும் அதற்கும் சிப்பாய்களின் மெஸ் பணம்தான்.ஸ்டேஷனரி வாங்க ஒவ்வொரு பட்டாலியனுக்கும் வரும் பணம் என்ன ஆகிறது என்றே தெரியவில்லை.அப்படியே பத்தாமல் போனாலும் வெறும் சிப்பாயின் பணத்திலேயே ஏன் கைவைக்க வேண்டும்?
எல்லைப்புற கிராமத்து ஆட்களை வைத்து எல்லைகளை சீர் செய்யலாம் அவர்களுக்கு அது ஒரு வேலை வாய்ப்பாகவும் அமையும் என்று ஒரு திட்டம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.ஆனால் இதுவரை எங்கும் பார்க்கவில்லை.அப்படி இருந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி தொகை எங்களால் வேலை வாங்கப்பட்டு கொள்ளயடிக்கபடுகிறது என்றே அர்த்தம்.
எல்லையில் இரவும் துப்பாக்கியை தூர வைத்துவிட்டு மண்வெட்டி பிடித்து வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் சிப்பாய்களை தள்ளிவிடும் அதிகாரிகள் மிக எளிதாக கட்டளை பிறப்பித்து விட்டு உறங்கிவிடுகிரார்கள்.அவ்வாறு இரவு வேலை பார்த்து கொண்டே 163பட்டாலியனை சேர்ந்த ஒரு மூத்த சிப்பாய் விரக்தியாக சொன்னார்.."ஆங்கிலேயன் காலத்திலா அடிமையாக இருந்தோம்?இப்போத்தான் உண்மையான அடிமையாக இருக்கிறோம்.."
மூன்று வருடங்களுக்கு முன் நான் விடுமுறை கேட்ட போது எனது அதிகாரி என்னிடம் அவ்வளவு அவசியம் என்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போ என்று அலட்சியமாக சொன்னான்.அதே அதிகாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் யாரை கேட்டு மூத்திரம் இருக்க போனாய் என்றான்.நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் எங்கள் பயிற்சி பசங்களுக்கு நாங்கள் தினமும் பயிற்சி கொடுத்து விட்டு மாலை வீட்டிற்கு வருவோம். அந்த நிலையில் எங்களைசுமார் 13 நாள்கள் அங்கேயே தங்க வைத்து ஆதிக்க வெறி காட்டினான் அவன்.அந்த 13 நாளில் எனது மனைவி இல்லாத நிலையில் என் குழந்தை இரு இரவுகள் சுகமில்லாமல் போன போது மொழியும் தெரியாமல் நானும் இல்லாமல் எனது மனைவியின் படிப்பறிவில்லா வயதான தாய் கஷ்டப்பட்டது இது போன்ற அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலமே.
முத்துவின் போராட்டம் மிக நியாயமானதே....கிரிக்கெட்டில் கிளப் டீமுக்கு ஆடும் தோனிக்கும்,சினிமா நடிகருக்கும் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி கொடுக்கும் ராணுவம் ராணுவத்தை சேர்ந்த ஒலிம்பிக் வெள்ளி வீரன் பதவி உயர்வு தருவதில் சுணக்கம் காட்டுவது ஏன்?அவருக்கும் கொடுக்கலாமே கௌரவ பதவி...அங்கு அந்த பதவியில் அவரை இவர்களால் வைத்து பார்க்க முடியாது.ஒரு சாதாரண சுபேதாராக இருந்தவனுக்கு சல்யூட் அடிக்க வெட்கமாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.
சுருக்கமாக சொன்னால் இந்தியாவின் உயர்சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக்குவது போல இங்கு உயரதிகாரிகள் கீழே உள்ளவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனர்.
போற போக்கில் ஒரு வதந்தி...கார்கில் போரில் எதிரிகளால் கொல்லப்பட்ட அதிகாரிகள் போல உள்ளேயே வெறுப்பில் இருந்த வீரர்களாலும் அதிகாரிகள் பலியானார்கள் என்று சொல்வார்கள். இதில் எத்தனை உண்மை என்பது கேள்விக்குறிதான் என்றாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதும் நியாபகத்திற்கு வந்து நிற்கிறது.
கடந்த பதிவை போல இதற்கும் தங்களின் மேலான ஆதரவு அவசியப்படுகிறது.ஏனெனில் எளியவர்களின் போராட்டங்கள் மிக எளிதாக முரியடிக்கப்டுகின்றன.குறைந்த பட்சம் அவனுடைய ஆதங்கமாவது பிரச்சனையாவது மக்களிடம் சேரட்டுமே....மக்களின் அதிசய பார்வைகள் மாறட்டும்.அடுத்த முறை நீங்கள் ஒரு பாதுகாப்பு படை மனிதனை பார்க்கும் போது ஒரு அடிமையாகவே நினைக்க வேண்டும்.மாறாக தேசப்பற்றில் குதித்து விட வேண்டாம்.சுதந்திர இந்தியாவின் மற்றுமொரு அடிமையே பாதுகாப்பு படை சிப்பாய்கள்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்த நீயா நானாவுக்கு அழைப்பு விடுக்கிறேன்.இறையாண்மை என்ற போர்வையில் உறங்கி ஊடகம் புக முடியாத பாதுகாப்பு படையின் உள்ளே நடக்கும் அவலங்களை வெளிக்கொணர பெரு நிகழ்ச்சியும் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை. திருநெல்வேலி அந்தோணி மற்றும் கோபிநாத் முயன்றால் நடத்தலாம்...இப்போது பணியில் உள்ளவர்கள் பங்கு பெற முடியாது என்றால் ஓய்வு பெற்றவர்களை வைத்து நிகழ்ச்சி தயாரிக்கலாம்.இன்னும் ஆழமாக போனால் ராணுவம் துணை ராணுவம் இருவரையும் தனி தனியாக நிறுத்தி பணி சுமை சம்பள மற்றும் சலுகை வித்தியாசங்களை காண்பிக்கலாம்.செய்வார்களா?
மனதில் உள்ளதை இறக்கிவைத்துவிட்டேன்.தயவு செய்து இதை பரப்புங்கள்.குறைந்த பட்சம் வீட்டு வேலை செய்ய வைக்கும் அவலமாவது நிற்கட்டும்.கொடுக்கும் கட்டளையை யோசித்து கொடுக்கும் அளவுக்கு இவர்களை பற்றிய விமர்சனங்கள் ஊடகம் மூலமாக போய் சேரட்டும்.இது குறித்து எங்கு வேண்டுமானாலும் நான் பேச தயார்.உங்களை கேள்விகள் கேட்க கோருகிறேன்.....
மனித உரிமை கழகங்கள் கேள்விகள் எழுப்பலாம்,வினவு போன்ற பிரபல இணைய தளங்கள் எங்களையும் கொத்தடிமைகளாக கணக்கிட்டு ஆதரவு தரலாம் ,கட்சிகள் கழகங்கள் குரல் தரலாம்.நடக்குமா?
ராணுவத்தில் என்ஜினியர் ரெஜிமென்ட்டில் பணிபுரிகிறார் முத்து (35). தன்னை 5வருடங்களில் 5 முறை பணி மாறுதல் செய்ததாகவும்,8 மாதமாக சம்பளம் தரவில்லை என்றும்,ஷூ பாலீஸ் செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டும் முத்து தன்னை போல பல வீரர்கள் கஷ்டப்படுவதாகவும்,டார்ச்சர் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.தான் தனது வேலையை ராஜினாமா செய்வதாகவும் காகிதத்தில் எழுதி வீசிய முத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி வந்து பேசினால்தான் இறங்குவேன் என்று கூறியுள்ளார்.அதற்காக டெல்லியில் செல்போன் கோபுரத்தில் ஏறி நான்கு நாட்களாக இறங்காமல் போராடும் முத்து துரதிருஷ்ட வசமாக அண்ணா ஹஷாரே போல் இல்லாத காரணத்தினால் ஊடகங்களால் புறக்கணிக்கவும் படுகிறார்.
![]() |
| போராட்ட கோபுரத்தில் முத்து |
வெளியில் இருந்து பார்க்கும்போது வருடத்தில் விடுமுறை.ரயிலில் இலவச பயணம்,கான்டீன் வசதி,மருத்துவம்,இப்படி அடுக்கிக்கொண்டே போகும் சலுகைகளுக்கு வீரர்கள் கொடுக்கும் விலை இளமையும்,தன் மானமும் மரியாதையும் என்றால் மிகையாகாது...
முத்து முதல் நான் வரை இந்த கொத்தடிமை தொழிலை எதிர்க்க இல்லை வெறுக்க மிக முக்கிய காரணம் மேலதிகாரிகளின் ஆதிக்க வெறியினாலேயே.ராணுவ சட்டங்கள் மேலதிகாரியை எதிர்த்து பேசவிடுவதில்லை.இந்த சட்டங்கள் வானளாவ அதிகாரங்களை அவர்களுக்கு கொடுத்துள்ளது.ஒருவர் நல்லபடியாக தன் வேலையை முடித்து பென்சன் வாங்க வேண்டுமானால் இவர்களை இவர்களின் முட்டாள்தனமான சில கட்டளைகளுக்கு பணிந்துதான் ஆக வேண்டும்.
விடுமுறை கிடைக்காமல் தற்கொலை செய்த சிப்பாய்கள் வன்முறையில் ஈடுபட்ட சிப்பாய்கள் என்று பல அவலங்கள் கொட்டி கிடக்குது பாதுகாப்பு படைகளுக்குள்.
அதிகாரிகளின் காலணியை பாலிஷ் போடுவது ,அவரின் மனைவி சொகுசாக டிவி பார்க்க அவளின் குழந்தைகளின் பீத்துணி துவைக்கும் வரை அடிமை தொழில் நடை பெறுகிறது.வீட்டில் தன் பிள்ளையை கொஞ்ச மட்டுமே தூக்கியவன் இங்கு எவன் வீட்டு பிள்ளைக்கோ பள்ளி பையை தூக்கி திரிவான்.கார் துடைத்தல்,வீடு துடைத்தல் அனைத்து பணிகளும் இவர்களுக்கு ஒரு சிப்பாய் செய்தே ஆக வேண்டும்.மறுக்கும் பட்சம் சரியான நேரத்தில் விடுமுறை அளிக்காமல் நோகடிப்பது,ஏதேனும் கஷ்டமான பயிற்சிகளுக்கு அனுப்புதல் என்று பந்தாடப்படுவார்கள்.
ஒரு மேலதிகாரி நினைத்தால் ஷூ லேஸ் சரியாக கட்டவில்லை,பட்டன் போடவில்லை என்று ஒரு சிறிய விசயத்தை வைத்து சிகப்பு மையால் ஒரு சிப்பாயின் சர்வீஸ் ரெக்கார்டில் கை வைக்கலாம்.தண்டனை கொடுக்கலாம்.கிட்ட தட்ட ஆபீசர்கள் அரசர்களாகவும்,சிப்பாய்கள் அடிமைகளாகவும் உள்ளார்கள் என்பதே உண்மை.
கட்டளைகளுக்கு மறுபேச்சு இருக்காது.கிணத்தில் குதி என்றால் குதிக்கவேண்டும் அதுதான் பட்டாளம் என்று சிலர் பெருமையா சொல்வார்கள்.கிணத்தில் குதிக்க சொல்றவனுக்கு அறிவு வேண்டாமா?தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் இருக்கும் வரை முத்து போன்றோர் போராட்டம் ஓயாது.
ஒரு சிப்பாயை தன் வீட்டில் பணி செய்ய வைப்பதின் மூலம் ஒரு அதிகாரி அரசுக்கு ஒரு மாதத்தில் ரூபாய் 20000 வரை நஷ்டத்தை கொடுக்கிறார்.ஆம் அந்த சிப்பாய் எங்கேனும் காவல் பணியில் ஈடுபடுத்தபடவேண்டியவரே.அவரை தன் வீட்டு பணியில் வைத்து அரசை மற்றும் மக்களின் வரிப்பணத்தை மறைமுகமாக கொள்ளையடிக்கின்றனர் அதிகாரிகள்.ஒரு அதிகாரி 20000ரூபாய்க்கு நஷ்டம் கொடுக்கிறார் என்றால் இந்திய ராணுவம்,துணை ராணுவம் இரண்டிலும் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள்?வருடத்திற்கு எத்தனை ரூபாய் எமாற்றப்படுகிறது என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.2G, கிரானைட் ஊழல் பிச்சை வாங்கும்..
![]() |
| இப்படியே ஒரு நூறு மீட்டர் தூரத்துக்கு புல் புடுங்கோனும் |
எல்லையை சீர்படுத்த வரும் பணங்களுக்கும், வேலிகளுக்குள் வளரும் புற்களை அழிக்க தரும் மருந்துகளுக்கும் எந்த கணக்கு வழக்கும் கிடையாது.ஒரு நாளைக்கு 5 மணி நேரமே உறங்கும் சிப்பாய் வேலிக்குள் அமர்ந்து புல் புடுங்கும் கொடுமை வேறுநடைபெறும் .இந்த வேலிக்குள் அமர்ந்து ஊர்ந்து பணி செய்யும் போது பாம்பு ,தேள் போன்று ஆபத்தான உயிரினங்கள் எதிர்ப்பட்டால் தப்பிக்க வழி?முதுகை நிமிர்த்தாலே முள் வேலி குத்தும் வேலிக்குள் அமர்ந்து யோசியுங்கள்.
![]() |
| சுருள் சுருளான வேலிக்குள் புல் புடுங்கும் உங்கள் கொத்தடிமை வீரர்கள் |
ஒவ்வொரு INSPECTIONக்கும் சிப்பாய்களின் மெஸ்ஸில் இருந்து பணம் செலவழிக்கப்படுகிறது.ஒரு ரெஜிஸ்டர் வாங்க வேண்டுமானாலும் அதற்கும் சிப்பாய்களின் மெஸ் பணம்தான்.ஸ்டேஷனரி வாங்க ஒவ்வொரு பட்டாலியனுக்கும் வரும் பணம் என்ன ஆகிறது என்றே தெரியவில்லை.அப்படியே பத்தாமல் போனாலும் வெறும் சிப்பாயின் பணத்திலேயே ஏன் கைவைக்க வேண்டும்?
எல்லைப்புற கிராமத்து ஆட்களை வைத்து எல்லைகளை சீர் செய்யலாம் அவர்களுக்கு அது ஒரு வேலை வாய்ப்பாகவும் அமையும் என்று ஒரு திட்டம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.ஆனால் இதுவரை எங்கும் பார்க்கவில்லை.அப்படி இருந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி தொகை எங்களால் வேலை வாங்கப்பட்டு கொள்ளயடிக்கபடுகிறது என்றே அர்த்தம்.
![]() |
| ஆங்கிலேயனிடம் அல்ல இப்போதுதான் அடிமை என்றவர் இரவு மண்வெட்டியோடு |
மூன்று வருடங்களுக்கு முன் நான் விடுமுறை கேட்ட போது எனது அதிகாரி என்னிடம் அவ்வளவு அவசியம் என்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போ என்று அலட்சியமாக சொன்னான்.அதே அதிகாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் யாரை கேட்டு மூத்திரம் இருக்க போனாய் என்றான்.நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் எங்கள் பயிற்சி பசங்களுக்கு நாங்கள் தினமும் பயிற்சி கொடுத்து விட்டு மாலை வீட்டிற்கு வருவோம். அந்த நிலையில் எங்களைசுமார் 13 நாள்கள் அங்கேயே தங்க வைத்து ஆதிக்க வெறி காட்டினான் அவன்.அந்த 13 நாளில் எனது மனைவி இல்லாத நிலையில் என் குழந்தை இரு இரவுகள் சுகமில்லாமல் போன போது மொழியும் தெரியாமல் நானும் இல்லாமல் எனது மனைவியின் படிப்பறிவில்லா வயதான தாய் கஷ்டப்பட்டது இது போன்ற அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலமே.
முத்துவின் போராட்டம் மிக நியாயமானதே....கிரிக்கெட்டில் கிளப் டீமுக்கு ஆடும் தோனிக்கும்,சினிமா நடிகருக்கும் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி கொடுக்கும் ராணுவம் ராணுவத்தை சேர்ந்த ஒலிம்பிக் வெள்ளி வீரன் பதவி உயர்வு தருவதில் சுணக்கம் காட்டுவது ஏன்?அவருக்கும் கொடுக்கலாமே கௌரவ பதவி...அங்கு அந்த பதவியில் அவரை இவர்களால் வைத்து பார்க்க முடியாது.ஒரு சாதாரண சுபேதாராக இருந்தவனுக்கு சல்யூட் அடிக்க வெட்கமாக இருக்குமோ என்றே தோன்றுகிறது.
சுருக்கமாக சொன்னால் இந்தியாவின் உயர்சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக்குவது போல இங்கு உயரதிகாரிகள் கீழே உள்ளவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனர்.
போற போக்கில் ஒரு வதந்தி...கார்கில் போரில் எதிரிகளால் கொல்லப்பட்ட அதிகாரிகள் போல உள்ளேயே வெறுப்பில் இருந்த வீரர்களாலும் அதிகாரிகள் பலியானார்கள் என்று சொல்வார்கள். இதில் எத்தனை உண்மை என்பது கேள்விக்குறிதான் என்றாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதும் நியாபகத்திற்கு வந்து நிற்கிறது.
கடந்த பதிவை போல இதற்கும் தங்களின் மேலான ஆதரவு அவசியப்படுகிறது.ஏனெனில் எளியவர்களின் போராட்டங்கள் மிக எளிதாக முரியடிக்கப்டுகின்றன.குறைந்த பட்சம் அவனுடைய ஆதங்கமாவது பிரச்சனையாவது மக்களிடம் சேரட்டுமே....மக்களின் அதிசய பார்வைகள் மாறட்டும்.அடுத்த முறை நீங்கள் ஒரு பாதுகாப்பு படை மனிதனை பார்க்கும் போது ஒரு அடிமையாகவே நினைக்க வேண்டும்.மாறாக தேசப்பற்றில் குதித்து விட வேண்டாம்.சுதந்திர இந்தியாவின் மற்றுமொரு அடிமையே பாதுகாப்பு படை சிப்பாய்கள்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்த நீயா நானாவுக்கு அழைப்பு விடுக்கிறேன்.இறையாண்மை என்ற போர்வையில் உறங்கி ஊடகம் புக முடியாத பாதுகாப்பு படையின் உள்ளே நடக்கும் அவலங்களை வெளிக்கொணர பெரு நிகழ்ச்சியும் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை. திருநெல்வேலி அந்தோணி மற்றும் கோபிநாத் முயன்றால் நடத்தலாம்...இப்போது பணியில் உள்ளவர்கள் பங்கு பெற முடியாது என்றால் ஓய்வு பெற்றவர்களை வைத்து நிகழ்ச்சி தயாரிக்கலாம்.இன்னும் ஆழமாக போனால் ராணுவம் துணை ராணுவம் இருவரையும் தனி தனியாக நிறுத்தி பணி சுமை சம்பள மற்றும் சலுகை வித்தியாசங்களை காண்பிக்கலாம்.செய்வார்களா?
மனதில் உள்ளதை இறக்கிவைத்துவிட்டேன்.தயவு செய்து இதை பரப்புங்கள்.குறைந்த பட்சம் வீட்டு வேலை செய்ய வைக்கும் அவலமாவது நிற்கட்டும்.கொடுக்கும் கட்டளையை யோசித்து கொடுக்கும் அளவுக்கு இவர்களை பற்றிய விமர்சனங்கள் ஊடகம் மூலமாக போய் சேரட்டும்.இது குறித்து எங்கு வேண்டுமானாலும் நான் பேச தயார்.உங்களை கேள்விகள் கேட்க கோருகிறேன்.....
மனித உரிமை கழகங்கள் கேள்விகள் எழுப்பலாம்,வினவு போன்ற பிரபல இணைய தளங்கள் எங்களையும் கொத்தடிமைகளாக கணக்கிட்டு ஆதரவு தரலாம் ,கட்சிகள் கழகங்கள் குரல் தரலாம்.நடக்குமா?
| Tweet | |||||

நாட்டைக் காப்பாற்றுபவர்களை காப்பாற்ற வேண்டியதிருக்கிறது என்பது கவலை தருகிறது.
பதிலளிநீக்குஒரு பிரபல சிறந்த பதிவரின் முதல் வருகையும் கருத்துரையும் ஊக்கம் தருகிறது..நன்றி அண்ணா...
நீக்குபரிதாபமான விஷயம். நீங்கள் எதிர்பார்க்கும் விமோசனம் வருவது என்பது காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு எதிர்பார்ப்பது போல.
பதிலளிநீக்குமசுர கட்டி மலைய இழுப்போம் வந்தா மலை போனா மசுரு..இப்படிதான் நமக்கு நாமே தேத்திக்கணும்.காவேரி தண்ணீர் வரும் ஒருநாள் நம்பிக்கை இழக்க வேண்டாம் நண்பா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..
பதிலளிநீக்குமிகவும் பரிதாபகரமான நிகழ்ச்சிகளாக உள்ளன. இந்திய இராணுவத்தில் அதிகாரிகள் நடத்தும் அவலங்களை திறம்பட எழுதி பதிவுலகம் அறிய கொடுத்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குஉண்மையான நாட்டுப் பற்றுடைய எந்த அதிகாரியும் தனது சக பட்டாளத்தாரை ஒருபோதும் அதிகார அத்து மீரல் செய்யமாட்டார்.
பல கனவுகளுடன் பட்டாளத்துடன் இனைந்த பல வீரர்களிள் வாழ்க்கையை பாழ்படுத்தும் கீழ்தர புத்தி அதிகாரிகளின் செயல்கள் மிகுந்த கண்டனத்திற்கு உறியது.
அக்கிரமங்களை அம்பலப் படுத்த நீங்கள் கையெடுத்திருக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நாட்டுப்பற்று என்பது எதிராளி வரும்போதே வெளிப்படுகிறது.உள்ளே கொஞ்சமும் மனிதாபிமானமும் சக மனிதனை மதிக்கும் மனோபாவம் வந்தால் ஒன்றிணைந்து திருப்தியாக பணிபுரியலாம்.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாசிலா....
நீக்குநாட்டைக்காக்கும் ராணுவ வீரருக்கே இந்த நிலைமையா...நம் நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது?
பதிலளிநீக்குநாடு எங்கேயும் போகாது அண்ணா,நாங்கதான் கோபுரத்துல ஏறி உண்ணாவிரதம் இருக்கணும்.வருகைக்கு நன்றி அண்ணா..
நீக்குஇப்படி இருக்கும் என்று நினைத்தது தான். உங்கள் வாயால கேட்டதும் இன்னும் நிதர்சனமாகுது. நம்மூரு கான்ஸ்டபிள் பிழைப்பே அங்கயும். நண்பரே, இப்படியான உண்மைகளை எழுதும் போது பெயரை மறைத்து எழுத முயலுங்க. சொந்தப் பெயரில் வேண்டாம்.
பதிலளிநீக்குஆம் அப்படியேதான் இங்கேயும் காவல் துறையில் இப்படி நடப்பதாக சவுக்கு சங்கரின் பதிவிலும் என்னோடு கோர்ஸ் செய்த தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்தவர்களும் இதைதான் சொன்னார்கள்.கடலூரை சேர்ந்த அவர் எனக்கு பிரியும் போது இவ்வாறு என் டயரியில் எழுதி சென்றார்...
நீக்குI LV UR DRILL
I LV UR DICIPLINE
I LV UR FITNESS
I LV UR DRESS
BUT
I HATE UR LIFE.....தங்களின் அறிவுரைக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா...என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை அண்ணா,பணி உயர்வு என்பது கூட 20 வருட முடிவில் கிடைக்காது.நன்றி.
விஆர்எஸ் மாதிரி ரிடையர்மென்ட் ஸ்கீம் அங்கு உண்டா? இருந்தால் வாங்கிட்டு சொந்த ஊரில் செட்டில் ஆக முயற்சிக்கலாம். இப்படிப்பட்ட அதிகாரமீறல்களை தனிநபர் ஒருத்தரால் சரிப்படுத்த இயலாது என்பது எனது எண்ணம். மாற்றாக, உங்களால் பதவியில் மேலே முன்னேற முயலும் என்றால், முன்னேறி உங்கள் கீழுள்ளவர்களை மரியாதையுடன் நடத்தலாம்.
பதிலளிநீக்குஉங்கள் எண்ணம் சரியானதே நண்பரே,முன்னேற வழியில்லை அண்ணா,பத்தாம் வகுப்புக்கு அவ்வளவுதான் வழி.விஆர்எஸ் மாதில்லாம் எதுவும் இல்லை.ராணுவத்தை சேர்ந்தவர்கள் கூட 15 வருடங்களில் வந்து விடலாம்.துணை ராணுவத்திற்கு 20வருடம்.இன்னும் ஏழு வருடம் ஓட்டனும்.உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி அண்ணா...
நீக்குநானும் ஒரு முன்னாள் இராணுவ படை வீரன். நான் பணியாற்றியது இந்திய விமானப் படையில். ARMY- ஜவான்களின் வாழ்க்கை மிகவும் பரிதாமானதே ! ! ஸ்ரீநகர் - Army Transit camp-ல் ஒரே ஒரு நாள்தான் இருந்தேன். ஜவான்களின் வாழ்க்கையை கண்டு அதிர்ந்தேன்.
பதிலளிநீக்குபோராடும் முத்து-வின் வீரம் பாராட்டுக்குரியது
மிகவும் நன்றி சார்..உங்களை போன்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நினைத்தால் போராட்டங்களை முன்னெடுக்கலாம்.குறைந்த பட்சம் தவறுகளை ஓங்கி பொட்டில் அடித்தாற் போல எடுத்து வைக்கலாம்.ஒரு அதிகாரியாவது அதை கண்டு பயந்தோ திருந்தியோ தன் நிலையை மாற்றினால் சந்தோசமே...நன்றி சார்.
நீக்குநான் ஜோத்பூரில் 1985 முதல் 1989 வரை இருந்தேன். பாலைவனத்திலும் சோலையான மண்டூர் கார்டன் அழகு. தீபாவளியன்று ஊரே ஜெகஜோதியாயிருக்கும்
பதிலளிநீக்குஇப்போ முன்பை போல் இல்லை சார்..கொஞ்சம் கொஞ்சமாக மேற்பார்வை இல்லாமல் சீரழிகிறது.ஆனால் கூட்டத்திற்கு குறைவில்லை.உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா...
நீக்குநீங்க பார்த்த இடமெல்லாம் ஒரே கட்டிடங்களாக முளைத்துள்ளன...
படிப்பதற்கே கஷ்டமாக உள்ளது அண்ணா... இன்னும் சில நாட்களில் இந்தப் பதிவை மீள் பதிவாக எனது தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேண்டும். அந்த வெளிக்குள் இருக்கும் பொழுது பாம்பு வந்தால் என்று குண்டை தூக்கிப் போடீர்கலே, நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது....
பதிலளிநீக்குஅடிமை அடிமை அடிமை எங்கு காணினும் அதிகரமிருப்பவன் ஆள்கிறான் மற்றவனெல்லாம் அடிபணிந்து போகிறான் கொடுமை மிகக் கொடுமை
ரொம்பவே தைரியமா உங்க எண்ணங்களை பதிவு செஞ்சு இருக்கேங்க..இந்த பதிவை முடிந்த அளவு நிறைய மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்...
பதிலளிநீக்குசீனு நீ எப்போ வேணும்னாலும் எந்த பதிவை வேண்டுமானாலும் மீள பதிவு செய்யலாம்...எப்படியாவது அதிக மக்களிடம் போய் சேரவேண்டும் .அதுதான் என் நோக்கம்.உன் மூலமாக நடக்கிறது என்றால் இன்னும் மகிழ்வேன்.
பதிலளிநீக்கு###அடிமை அடிமை அடிமை எங்கு காணினும் அதிகரமிருப்பவன் ஆள்கிறான் மற்றவனெல்லாம் அடிபணிந்து போகிறான் கொடுமை மிகக் கொடுமை###
உண்மை உண்மை உண்மை தம்பி...
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீர்கள். இந்திய ராணுவ வீரர்களின் வழியை அனைவர்க்கும் உரைக்கும் படி சொல்லி இருக்கேங்க.கண்டிப்பாய் இந்த பதிவு பலரை சென்று அடைய வேண்டும்.
பதிலளிநீக்குதமிழ்மணம் ஒட்டு பட்டை வையுங்கள்.. எங்கள் ஓட்டை பதிவு செய்கிறோம். திரட்டிகள் முலம்தான் நல்ல பதிவுகளை கொண்டு சேர்க்க முடியும்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா, இதே போல் முன்பு நீங்கள் பதிவு போட்டதற்கு "பதிவுலக மத வெறியர்கள்" வந்து கும்மி அடித்து, பதிவை மகுடத்தில் ஏற்றினார்கள். ஏன் இப்பொழுது அந்த வெறியர்கள் யாரும் வரவில்லை...???
இந்த பதிவில் எங்காவது முஸ்லிம் என்ற வார்த்தை இருந்தால் மோப்பம் பிடித்து வந்து இருப்பார்கள்.
தயவு செய்து அவர்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நல்ல மனிதர், முஸ்லிம் மத வெறியர்கள் வலையில் விழ வேண்டாம்.
-ராம்
//தங்களின் மேலான ஆதரவு அவசியப்படுகிறது//
பதிலளிநீக்குIf you write about Muslims and atrocities against muslims, we will support you. Otherwise, sorry - we are busy growing Islam.
அடப்பாவமே...இதுக்கு நம்மூர் அரசியல்வாதிகளே தேவலாம் போல....நான் என் முன்னால் நடந்த நான் பார்த்த அனுபவித்ததை மட்டுமே எழுதிள்ளேன்.இந்து மதத்தால் நான் பெற்ற பெருமைகளை அவசியம் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.....இணைந்திருங்கள்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇங்கும் மதத்தின் ஊடுருவலா ??
நீக்குவேண்டாமே..
நன்றி தியாகராஜன் குமரேசன் நண்பரே...என்ன செய்ய சொல்லுங்கள்?
நீக்குநண்பர் சதீஷ்
நீக்குநீங்கள் எழுதிய இந்த கட்டுரை
முத்து என்னும் மனிதர் அவர் உரிமைக்காக போராடுவதை
மக்கள் தெரிந்து கொள்ள .
இங்கே யாரோ பெயர் கூட வெளி இட விரும்பாத ஒருவர்
இப்படி கருத்து தெரிவித்ததால், நீங்கள் அதை ஒரு பொருட்டாகவே
மதிக்க வேண்டாம்.
இதில் ஜாதி, மதம், தேவை இல்லை.
வளர்ந்து வரும் இஸ்லாம் அன்பரே
மனித நேயம் காக்க மனிதனை அவனது இயல்பு, ஒழுக்கம், அறம், பண்பு
ஆகியவை கொண்டு பாருங்கள், அவனது பிறப்பு, ஜாதி, மதம் கொண்டு பார்காதீர்கள்
இது ஒரு சக மனிதனின் வேண்டுகோள் மட்டுமே !
சரியான பதில் நண்பரே..நன்றி.
நீக்குஇந்த கருத்தை பார்த்தாலே அது முஸ்லிம் எழுதவில்லை என்பது புரியும். இதனையும் நம்பி தாங்கள் பதில் அழிப்பது தான் வருத்தம்.
நீக்குஎனக்கும் இது சற்று தாமதமாகதான் தோன்றியது.எனக்கு இந்து மதம் தந்த பெருமை என்னவென்றால் தாழ்த்தப்பட்டவன் என்ற பெருமையே...அதை பற்றி எழுத நினைத்துள்ளேன்.நீங்களும் ஏன் பெயரில்லாமல் பின்னூட்டம் இடுகிறீர்கள்?
நீக்குரொம்ப நல்லா சொல்லி இருக்கீர்கள். இந்திய ராணுவ வீரர்களின் வழியை அனைவர்க்கும் உரைக்கும் படி சொல்லி இருக்கேங்க.கண்டிப்பாய் இந்த பதிவு பலரை சென்று அடைய வேண்டும்.
பதிலளிநீக்குதமிழ்மணம் ஒட்டு பட்டை வையுங்கள்.. எங்கள் ஓட்டை பதிவு செய்கிறோம். திரட்டிகள் முலம்தான் நல்ல பதிவுகளை கொண்டு சேர்க்க முடியும்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா, இதே போல் முன்பு நீங்கள் பதிவு போட்டதற்கு "பதிவுலக மத வெறியர்கள்" வந்து கும்மி அடித்து, பதிவை மகுடத்தில் ஏற்றினார்கள். ஏன் இப்பொழுது அந்த வெறியர்கள் யாரும் வரவில்லை...???
தயவு செய்து அவர்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நல்ல மனிதர், முஸ்லிம் மத வெறியர்கள் வலையில் விழ வேண்டாம்.
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீர்கள். இந்திய ராணுவ வீரர்களின் வழியை அனைவர்க்கும் உரைக்கும் படி சொல்லி இருக்கேங்க.கண்டிப்பாய் இந்த பதிவு பலரை சென்று அடைய வேண்டும்.
பதிலளிநீக்குதமிழ்மணம் ஒட்டு பட்டை வையுங்கள்.. எங்கள் ஓட்டை பதிவு செய்கிறோம். திரட்டிகள் முலம்தான் நல்ல பதிவுகளை கொண்டு சேர்க்க முடியும்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா, இதே போல் முன்பு நீங்கள் பதிவு போட்டதற்கு "பதிவுலக மத வெறியர்கள்" வந்து கும்மி அடித்து, பதிவை மகுடத்தில் ஏற்றினார்கள். ஏன் இப்பொழுது அந்த வெறியர்கள் யாரும் வரவில்லை...???
தயவு செய்து அவர்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நல்ல மனிதர், முஸ்லிம் மத வெறியர்கள் வலையில் விழ வேண்டாம்.
-ராம்
இந்த பதிவில் எங்காவது முஸ்லிம் என்ற வார்த்தை இருந்தால் மோப்பம் பிடித்து வந்து இருப்பார்கள்.
பதிலளிநீக்குகார்ப்பரேட் சாமியாரிடமே பம்மும் நீயா நானா- நிகழ்ச்சி கண்டிப்பாக இதை பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் என்பது திண்ணம்...
பதிலளிநீக்குநேற்றைய Times of India நாளிதழில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் பணத்தை எடுத்து உயர் அதிகாரிகளின் மனைவிகளுக்கு நல்லி பட்டு புடவை , அதிகாரிகளுக்கு சரக்கு என்று செலவு செய்திருந்ததை பற்றி எழுதியிருந்தார்கள்....
அதற்கான இணைப்பு
http://articles.timesofindia.indiatimes.com/2012-08-20/india/33287148_1_assam-rifles-mha-officials-home-ministry
இதுல்லாம் தெரியாம நான்பாட்டுக்கு அழைப்பு கொடுக்கிறேன்....இன்னும் அறியா சிறுவனாகவே இருக்கிறேன்.கூடுதல் தகவலுக்கும்,வருகைக்கும் நன்றி அண்ணா..
நீக்குநாட்டை காக்கும் நாயகர்கள் இவ்வாறு கொடுமைப்படுத்தபடுவது அநியாயமானது! குரல் கொடுப்போம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..
நீக்குரொம்ப நல்லா சொல்லி இருக்கீர்கள். இந்திய ராணுவ வீரர்களின் வழியை அனைவர்க்கும் உரைக்கும் படி சொல்லி இருக்கேங்க.கண்டிப்பாய் இந்த பதிவு பலரை சென்று அடைய வேண்டும்.
பதிலளிநீக்குதமிழ்மணம் ஒட்டு பட்டை வையுங்கள்.. எங்கள் ஓட்டை பதிவு செய்கிறோம். திரட்டிகள் முலம்தான் நல்ல பதிவுகளை கொண்டு சேர்க்க முடியும்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா, இதே போல் முன்பு நீங்கள் பதிவு போட்டதற்கு "பதிவுலக மத வெறியர்கள்" வந்து கும்மி அடித்து, பதிவை மகுடத்தில் ஏற்றினார்கள். ஏன் இப்பொழுது அந்த வெறியர்கள் யாரும் வரவில்லை...???
தயவு செய்து அவர்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நல்ல மனிதர், முஸ்லிம் மத வெறியர்கள் வலையில் விழ வேண்டாம்.
இந்த பதிவில் எங்காவது முஸ்லிம் என்ற வார்த்தை இருந்தால் மோப்பம் பிடித்து வந்து இருப்பார்கள்.
தங்களின் பதிவு என் கண்களில் நீரை தேங்க செய்துவிட்டது.
பதிலளிநீக்குவருகைக்கும் கண்ணீர கலந்த அன்பிற்கும் நன்றி அய்யா...
பதிலளிநீக்குராணுவத்துறை சீர்திருத்தம் செய்ய பரவலான கருத்தை சமூகத்தில் விதைக்க வேண்டும் !
பதிலளிநீக்குஉங்கள் எண்ணங்கள் இந்த சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் தோன்றினால் நல்லது.உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.
பதிலளிநீக்குDo you have any update on this situation now. What happen to him now.
பதிலளிநீக்குநான்காம் நாள் போராட்டத்தின் நிலையில் உடல்நிலை குன்றிய அவரை கயிறு கட்டி இறக்கி மருத்துவமனை எடுத்து சென்றனர்.இனி அவருக்கு பல விசாரணைகளும்,தண்டனைகளும் அவர்க்கு கிடைக்கலாம்.வேலையை விட்டு நிற்கும் பட்சம் பென்சன் கிடைக்காமலும் போகலாம்.தொடர் தகவலுக்கு ராணுவ நண்பர்களை தேடுகிறேன்.
நீக்குகொடுமை தான்... உங்கள் பணியில் இருக்கும் பல கஷ்டங்களை அறிவேன்.... இன்னும் ஆங்கிலேய பாணியிலேயே நடக்கிறது பல விஷயங்கள்....
பதிலளிநீக்குமிகுந்த வலியையும், வேதனையையும் தந்த பதிவு. மிகவும் உயர்வாக கருதிக்கொண்டிருந்த ராணுவத்திற்கும் இன்னொனொரு கோர முகம் உண்டென்பதை உணர்த்தியது உங்களின் பதிவு. மன உறுதியிலும், முனைப்புத்தன்மையோடு செயலாற்றுவதிலும் நான்காவது இடத்தில் இருப்பதாக கூறும் நமது ராணுவத்தின் கறுப்பு பக்கங்கள். உங்களின் உணர்வுகளின் வேதனை புரிகிறது நண்பரே.. என்றாவது ஒருநாள் இவற்றிற்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களொடு....
பதிலளிநீக்கு