மேரி கோம் -மணிப்பூர் தந்த மற்றுமொரு வலிமையான பெண்மணி. மேரி கோல்ட் என்றும் அழைக்கலாம் இந்த பெண் சிங்கத்தை.
- 1983 மார்ச் மாதம் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் மேரி கோம்.
- தனது பள்ளி படிப்பில் 10ம் வகுப்பில் கோட் அடித்தவர் மேரி கோம்.
- மேரி கோம் குத்து சண்டை வீராங்கனையாகும் முன்னே தடகள வீராங்கனையாக இருந்தார்.
- DINGKO SINGH என்ற இந்தியர் ஆசிய குத்துசண்டையில் தங்கம் வென்று வந்தபோது அதில் ஈர்க்கப்பட்டு குத்து சண்டையை தேர்வு செய்தார் மேரி கோன்.
- 2005ல் மணிப்பூர் அரசு மேரி கோன் பதக்கங்களுக்கு மதிப்பளித்து SUB INSPECTORராக மணிப்பூர் காவல் துறையில் பணி தந்தது.
- 2008ல் INSPECTORராக பதவி உயர்வு அளிக்க பட்டது
- மீண்டும் 2010ல் DEPUTY SUPERINTENDENT OF POLICE (DSP) பதவி உயர்வு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
- உலக அளவிலான போட்டிகளில் 14தங்க பதக்கங்களும்,2 வெள்ளி பதக்களையும்,ஒரு வெண்கல பதக்கத்தையும் தட்டியுள்ளார் மேரி கோன்.
- மணிப்பூர் விளையாட்டு கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு மேரி கோன் சாலை என்று பெயரிட்டு மேரியை பெருமை செய்துள்ளது மணிப்பூர் அரசு.
- 2004ல் அர்ஜுனா விருது,2006 ல்பத்ம ஸ்ரீ ,மற்றும் இந்திய அரசின் விளையாட்டு வீரர்க்கான உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருதுகளுக்கும்(2009) சொந்தக்காரர் ஆனார் மேரி கோம்.
- 2000ல் மணிப்பூர் சாம்பியன் ஆன மேரி கோம் தனது 2001ல் நடந்த முதல் உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- BBC இவரை பற்றிய 45 நிமிட காணொளி ஒளிபரப்பியது மேரியின் திறமைக்கு கிடைத்த மதிப்பு.
- தனது மகளின் வெற்றி பெற்ற புகைப்படத்தை நாளிதழில் பார்க்கும் வரை அவரது தந்தைக்கு அவர் குத்து சண்டை வீராங்கனை ஆனது தெரியாது.
- இது வரை தான் பங்கு பெற்ற அனைத்து உலக கோப்பையிலும் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை மேரி கோம் மட்டுமே.(திருத்தம்-2012 தவிர)
- ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்திய போட்டியில் மேரி கோம் பெற்ற வெற்றி சற்று சிறப்பானது.ஏனென்றால் அன்று அவரது இரட்டை குழந்தைகளின் பிறந்த தினமாகும்.
- கபில் தேவ்,டோனி,மற்றும் அபினவ் பிந்த்ரா வரிசையில் இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெறப்போகும் முதல் பெண்மணி மேரி கோம் ஆவார்.
- மணிப்பூரில் 2011ல் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் போது மேரியும் தப்பவில்லை.விறகு கூட்டி சமையல் செய்ததாக சிரிக்கிறார் மேரி கோம்.
- 400மீட்டர் ஓட்டமும் ஜாவ்லினும் மேரிக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்கள் ஆகும்.
- லண்டன் ஒலிம்பிக் போட்டியின் முதல் ஆட்டத்தில் மேரி கோன் 3கிலோ ஏற்றியும் எதிரே போலந்து அணியின் வீராங்கனை 3கிலோ குறைத்தும் 51 கிலோ எடைப்பிரிவில் மோதினர்.கடைசி ரவுண்டில் தளர்ச்சி அடைந்தாலும் விவேகமான ஆட்டத்தால் வெற்றி பெற்றார் மேரி கோம்.
- இரட்டை குழந்தைகளுக்கு தாயான பின் இரண்டுமுறை உலக கோப்பை வென்றார் மேரி கோம்.
- INTERNATIONAL BOXING ASSOCIATIONனின் மகளிருக்கான குத்துசண்டை AMBASSADORராக 2009ல் நியமிக்கப்பட்டார் மேரி கோம்.
- இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் ஆடும் குத்துசண்டை வீரர்களில் வீராங்கனை என்றால் மேரி கோன் ஒருவர் மட்டுமே.
- மேரி கோம் உலக மகளிர் குத்துசண்டை தர வரிசையில் தற்போது 4ம் இடத்தில் உள்ளார்.
- AIBA International Boxing Association 2008ல் "MAGNIFICENT MARY" என்று பட்டம் அளித்து பெருமை செய்தது.
- மல்லேஸ்வரி,சாய்னாக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லப்போகும் மூன்றாம் இந்திய பெண்மணி மேரி கோம் ஆவார்.
| Tweet | |||||


மிக மிக சிறப்பான பதிவு அண்ணா. மேரி பற்றிய தகவல்களை ஒரே ஒரு பதிவில் முழுமையாக அறிந்தது கொண்டது போல உள்ளது.. நன்றி... உங்களுக்கு நேரம் இருக்கும் என்றால் நீங்களும் யுத்தம் ஆரம்பம் தொடரில் இணைந்து கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குஇதற்க்கு மேல் அவரை பற்றி தெரிந்து கொள்ள விடும் என்றால் அவர் கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே முடியும்.என்னால் முடிந்த அளவு தேடி கிடைத்த தகவல்களை தந்துள்ளேன் சீனு.மீதி உன் கையில்.நல்லா ஓடுற வண்டியை பஞ்சர் பண்ண வேண்டாம்னுதான் யுத்தத்தில் வரவில்லை.நான் ரசிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்.கொஞ்சம் பாத்திரங்களை குறைத்தால் இன்னும் சிறப்பாக வரும்.
நீக்குஇந்தியாவின் சார்பில் பதக்கம் வெல்லுவார் என்று நானும் நம்பிக்கையோடு இருக்கிறேன்...
பதிலளிநீக்குஉங்கள் நம்பிக்கை வீண் போகாது அண்ணா அய்யா
பதிலளிநீக்குஅருமையான பதிவு சகா... ஒரே ஒரு திருத்தம்... டிங்கோ சிங் பெண்மணி அல்ல... ஆண் :))
பதிலளிநீக்குதகவலுக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி சகா...இணைந்திருப்போம் திருத்தி விடுகிறேன்.
பதிலளிநீக்குintersting..info..
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றி விக்னேஷ் தன்ராஜ்...இணைந்திருப்போம்.
நீக்கு