Translate

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

நேயர் நிருபர் திட்டம் -புதிய தலைமுறை தரும் அரிய வாய்ப்பு.

பதிவர்கள் நிருபர்களாக ஒரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது.

பெரும்பாலான பதிவர்களுக்கு பத்திரிக்கைத்துறை மிகவும் பிடித்ததாகவே இருக்கும்.அங்கு ஒரு நிருபராக பணிபுரிய நினைத்திருக்கலாம்,ஆசை கொண்டிருக்கலாம்....காலம் சுழற்றிய சுழற்றில் உங்களின் கனவுகள் வேறெங்கோ காணாமல் போயிருக்கலாம்.இந்த வலைப்பூக்கள் உங்களின் கனவுகளுக்கு சற்று நனவளித்தாலும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சி உங்களுக்கு "நேயர் நிருபர்" திட்டம் மூலமாக நிருபராக வாய்ப்பை அளிக்கிறது.


  • விருப்பம் உள்ளவர்கள்   nirubar@puthiyathalaimurai.tv என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யலாம்.தொலைபேசி குறுஞ்செய்தி மூலமாகவும் பதிவு செய்யலாம்.www.puthiyathalaimurai.com மூலமாகவும் பதிவு செய்யலாம்.குறுஞ்செய்தி மூலம் எப்படி பதிவு செய்யலாம் என்பதை மொத்தமாக 9ரூபாய் கொடுத்த துக்கத்தில் என்னால் பகிர இயலவில்லை.மன்னிக்கவும்.

குறுஞ்செய்தி மூலம் பண்ணுபவர்கள் உஷார்...மூணு ரூபாய் பழுத்துவிடும்.ஒரு எழுத்து தவறினாலும் 3ரூபாய் போச்சு.அதனால சிரமம் பார்க்காம இணையதளம்,மின்னஞ்சல் மூலமா பதிவு பண்ணுங்க.அப்புறமா அவங்களே விவரம் தருவாங்களாம்.

 முயற்சி செய்யும் தகுதியானவர்கள் அனைவரும் நிருபராக  வாழ்த்துக்கள்.கடந்த பத்திரிக்கையாளர் திட்டத்திற்கும் இந்த திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே நம்பவேண்டும்.அதன் விதிகளை இந்த திட்டத்திற்கு  தவறுதலாக பதிவிட்டதும் சுட்டிக்காட்டிய Prabu Krishna அவர்களுக்கு என் மாபெரும் நன்றியை கூற கடமை பட்டுள்ளேன்.

சுட்டி காட்டியதோடு இல்லாமல் மேலும் இந்த திட்டம் தொடர்பாக  ஒரு நிரலியை தந்தார்.இந்த லிங்கில் சென்று உங்களை மிக எளிதாக பதிவு செய்யுங்கள்.லிங்க் தந்த நண்பர் பிரபு கிருஷ்ணாவை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.புதிய தலைமுறையில் உங்களை பதிய  இங்கே சுட்டுங்கள் ..பதியுங்கள் உங்களை பற்றி..

பதிவு செய்யும் வருங்கால தூண்களுக்கு வாழ்த்துக்கள்.

23 கருத்துகள்:

  1. ஹி ஹி நகைச்சுவையா நல்ல விசயத்த சொல்லிடிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாரி நண்பா இங்கே மேட்டர் ட்ராஜெடி ஆயிடுச்சு..நீங்கதான் ரசித்து சிரித்த கடைசி ஆள்.

      நீக்கு
  2. என்னாங்க இது முடிஞ்சு மூணு மாசம் ஆச்சு போலவே. May 15 கடைசி தேதியா இருக்கு. http://www.puthiyathalaimurai.com/pathirikkaiyallar-thittam

    இதில் உள்ள PDF ஐ பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அய்யா சாமி காப்பாத்து(நீங்க)...அது வேற இது வேற போல..அவசரப்பட்டுட்டேன்..நன்றி.தவறுக்கு மன்னிப்பு கேட்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி ஹி பரவால்ல விடுங்க. அந்த புதுச பத்தி கொஞ்சம் விவரமாக பகிரவும்.

      நீக்கு
  4. நல்லதொரு தகவல்... நல்ல பகிர்வு

    என் பதிவில் இன்று "வேண்டாம் தூக்கு கயிறு"....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி Ayesha Farook...ஆனா உங்க பதிவுக்கு போக முடியல.லிங்க் கொடுங்க.

      நீக்கு
    2. உங்க பதிவிற்கான லிங்க் தரவும்...நன்றி.

      நீக்கு
  5. நல்ல பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    பதிலளிநீக்கு
  6. hello sir na ithahta ehtirpatha THANK YOU FOR PUTHIYATHALAI MURAI NETWORK.I WAS SAW T THE MANY MEDIA BUT UNTILL THE BRST MEDIA FOR OUR COUNTRY THANK YOU FOR PUTHIYATHALAIMURAI M.D BY A.PRABAKARAN FROM
    PALLIPUTHUPATTU

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபாகரன்.நிருபராக தேர்ந்தேடுக்கபட்டால் தகவல் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. hai intha inaiyathalathil poga sariyana information illa koncham help pannunga please

    பதிலளிநீக்கு
  9. நண்பரே இணைய முகவரி - http://puthiyathalaimurai.tv/new/?page_id=15575

    இதையும் பதிவில் சேர்த்து விடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தலைவா ....எனக்கும் மேற்கொண்டு தகவல் கிடைக்கவில்லை.மிக மிக நன்றி நண்பா./..

      நீக்கு
  10. பதில்கள்
    1. http://puthiyathalaimurai.tv/new/?page_id=15577 இந்த லிங்க் போய் பாருங்க.மிக எளிதாக பதிவு செய்யலாம்.

      நீக்கு
  11. WHEN WILL THE NEXT PATHIVAR THIRUVIZHA CELEBRATE

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....