Translate

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கைதாகிறேன்-உதயகுமார் அறிவிப்பு முழு விபரம்

தமிழ்நாடு முழுவதும் கூடங்குள போராட்டத்திற்கு ஆதரவு பரவி வரும் நிலையில் இன்றிரவு கைதாவேன் என்று திரு.உதய குமார் அறிவித்துள்ளார்.சரண் என்று சொல்வது சரியல்ல என்று சொல்லும் உதயகுமார் புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அதிரடி பேட்டி தந்துள்ளார்.அந்த பேட்டியின்(அறிவிப்பு) விபரங்கள் பின்வருமாறு...

அகிம்சையான முறையில் போராடும் எங்கள் மக்களை பெண்களை குழந்தைகளை மேலும் தாக்க தொந்திரவு கொடுக்க திட்டமிட்டுள்ளது காவல் துறை.பொருளாதார நிலையிலும் நெருக்கடிக்குள் ஆளாகியுள்ளனர்

இரண்டு பெண் ஆய்வாளர்கள் ,மூன்று ஆண் காவல் துறை அதிகாரிகளும் மக்களால் சிறைபிடிக்கப்பட்டு வைத்துள்ளதாக வதந்திகளை கிளப்பிவிட்டு அவர்களை தேடுகிறோம் என்ற போர்வையில்  ஊருக்குள் நுழைய மிகுதியான காவல் படைகள் கிளம்புவதாக செய்திகள் வருகின்றன....இதன் மூலம் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாவார்கள்.

கூடங்குள இடிந்தகரை மக்கள்முன்னோக்கு எண்ணம் கொண்டு  தங்கள் எதிர்காலத்தை தங்களின் குழந்தைகளின்,பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறவழியிலேயே தங்கள் போராட்டத்தை தொடருவார்கள்.அறவழியிலேதான் போராட வேண்டும் என்று பணிவான கட்டளையை அவர்களுக்கு முன் வைக்கிறேன்.

மக்களுக்கு இன்னல்களும் நெருக்கடிகளும் ஏற்படுவதை தவிர்க்கும் எண்ணத்திலும் காவல்துறைக்கு ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்கும் பொருட்டும் இந்த போராட்டத்தை நடத்திவரும் உதயகுமாராகிய நானும்,நண்பர்களாகிய புஷ்பாராயனும்,ஜேசுராஜும்,முகிலனும் நாடறியப்பட்ட முக்கியமான தலைவர் முன்னிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் இன்றிரவு 9 மணிக்கு கைதாவதற்கு தயாராக இருக்கிறோம்.



####காவல்துறையினர் பொதுமக்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.மக்கள் போராட்டம் வெல்லும்.வென்ற கதை உலகம் பேசும் போது இவரின் பெயரும் மின்னும்.####

1 கருத்து:

  1. இந்த அடக்குமுறை அரசுக்கு ஆப்பு வைக்கும் நாள் வெகுதொலைவிலில்லை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....