Translate

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆட்டோ ஓட்டுதலும் பதிவு போடுதலும் -பதிவர்கள் கவனத்திற்கு

"அரிசியென்று அள்ளுவாரும் இல்லை, உமி என்று ஊதுவாரும் இல்லை "னு  மொக்கையா சில பதிவுகளை போட்டுட்டு கவலைப்பட்ட நேரம் தம்பி சீனு என் வலை தளத்தை  தமிழ் மணத்துல இணைத்து விட்டாருங்க.

தமிழ் மண ஓட்டுகளை பற்றி  நண்பர் அதிரடி  ஹாஜா அதிரடியா ஒரு பதிவு போட்டார்.. ####..வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை  பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....

ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர்  பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் என்பது  எனக்குள் எழுந்த கேள்வி....


உதாரணத்துக்கு  இப்ப எனக்கு தெரிந்த 10 நண்பர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து  கொள்வோம்...நான் எழுதும் அல்லது என் நண்பர்கள் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் கேரன்டியாக  எங்களின்  10 ஓட்டுகள் விழுந்துவிடும்....அது எவ்வளவு பெரிய  மொக்கையான  பதிவுகளாக இருந்தாலும் கூட...


பட்டிக்காட்டான்  அண்ணாவும் நண்பர்கள் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் ஓட்டு போடுவேன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துருக்கார்.(பின்னூட்டம் -கேபிள்ஜி நீங்க செய்வது நியாயமா?)

அண்ணனுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு FRIEND REQUEST ...அண்ணே, ஏதோ பார்த்து செய்யுங்க. (என்னிடம் ஓட்டு பட்டை இல்லை...உண்மையாகவே இது உங்க நட்புக்காக மட்டுமே)

இந்த நிலை உண்மையா இல்லையா? ....எனக்கும் இந்த முறை பிடிக்கவில்லை ஆனா என்ன செய்ய?...

13 வருஷம் முன்னாடி நான் ஆட்டோ ஓட்டுன நேரம் நண்பன் ஒருத்தன்  புதுசா ஆட்டோ ஓட்ட வரப்போறேன்னு சொன்னான்.அதுக்கு ஒரு மூத்த ஓட்டுனர் கேட்ட முக்கிய  தகுதி  என்ன தெரியுமா?"ஆள் பழக்கம் உண்டா?"..அதாவது ஊர்ல கடைல  காட்டுலன்னு  எல்லார்கிட்டையும் நல்ல பழக்கம் இருக்கணும்.ஆள் தெரிஞ்சிருக்கனும்.

நாப்பது ஆட்டோ நிக்குற ஸ்டாண்டில நம்ம ஆட்டோவை மட்டும் தேடி வருகிற மாதிரி ஆள் பழக்கம் இருந்தா வா வண்டி நல்லா ஓடும்..இல்லைனா கஷ்டம்தான்னு சொன்னாரு.."அக்கு தொக்கு இல்லாதவனுக்குப் பக்க பலம் ஏது?"

கிட்டத்தட்ட அதே கதைதான் இங்கேயும் உங்களுக்கு கொஞ்சம் ஆள் பழக்கமும் அவசியம். அதாவது நட்பு.......ஆனா அப்படியெல்லாம் அமைந்திடுமா என்ன?எனக்கு ஈ எறும்பு கூட பதிவுலகில் தெரியாதுங்க.ஊர்  வட்டாரத்தில் வலைபூவா? அது என்ன கலருன்னு கேட்டு சாகடிக்கிறானுங்க. அப்படினா நானெல்லாம் எப்படி பதிவெழுதி நாலு பேரு படிக்கிறது?

 பஸ்ஸ்டான்ட் ,ரயில் நிலையம்,ஏர்போர்ட் போன்ற இடங்கள்தான் மகுடம்,சூடான இடுகை,வாசகர் பரிந்துரை போன்றவை.அங்கேதான் எல்லோரும் ஏறுவீர்கள் அதுதான் இயல்பு.எவ்வித ஆதரவும் இல்லாமல் வெளிப்புறமாகவும் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.இயல்பினை காரணம் காட்டி மற்ற புதிய பதிவர்களை காய விடாமல் பதிவுகளை பிடித்திருந்தால் மட்டும்  ஓட்டு போட்டால் நலமாக இருக்கும்.இதற்கு தேவை நேர்மை மட்டுமே.நட்பு அல்ல.

பதிவின் மூலம் நண்பர்கள் உருவாகட்டும்.நண்பர்கள் மூலம் ஓட்டுக்கள் அல்ல.

ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் அழுது புரண்டால் வருமா?ன்னு என் இந்த பதிவிற்க்கு மைனஸ் ஓட்டு போடாம எல்லா ஆட்டோக்களுக்கும் சவாரி ஏற வேண்டுகிறேன்.

முக்கிய குறிப்பு: மேலே படத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் இணையத்தளம் வைத்துள்ளார்.தாஜ் கோரமண்டல் அருகில் உள்ள இவரை அவரது   இணையதள முகவரியில் காணுங்கள்.சென்னையில் உள்ளவர்களுக்கு பயன்படலாம்.தனது தொடர்பு எண்ணையும் அதில் கொடுத்துள்ளார்.(ஏதோ நம்மளால முடிஞ்ச விளம்பர உதவி)


18 கருத்துகள்:

  1. தம்பி உங்க பதிவு இன்னும் தமிழ்மனத்துல இணக்கக்கானோம்.ஓட்டுப்போடமுடியலை :((((

    பதிலளிநீக்கு
  2. // அண்ணனுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு FRIEND REQUEST ...அண்ணே, ஏதோ பார்த்து செய்யுங்க. //

    என்ன செய்யனும்னு தெளிவாச் சொன்னீங்கனா முறைப்படி செஞ்சிப்போடலாம்...

    அதான் அல்ரெடி நட்பு வட்டத்துலதான தம்பி நீர் இருக்கீரு...

    // (என்னிடம் ஓட்டு பட்டை இல்லை...உண்மையாகவே இது உங்க நட்புக்காக மட்டுமே) //

    ஒன்னியும் புரியலை... பதிவெழுதும் போது ட்ரிப்பிலெக்ஸ் சாப்டிருந்தீங்களா தம்பி. :-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. XXX...அதை சாப்ட்டுட்டு எழுதியிருந்தா சரியா புரியற மாதிரி எழுதியிப்பேன்னு நினைக்கிறேன்.பரவாயில்லை அண்ணா நீங்க ட்ரிப்பிலெக்ஸ் சாப்ட்டுட்டு படிச்சி பாருங்களே....

      நட்பு வட்டத்தில் இருக்கிறது கூட தெரியாமஇருக்கேன்னா பாருங்களேன் நான் எவ்வளவு பெரிய அறிவாளின்னு....

      நன்றி அண்ணா...

      நீக்கு
  3. பின்னூட்டம், ஓட்டுகள், ஹிட்ஸ்கள் இவை நாக்கு வழிக்கக்கூட உதவாதவை. நமக்கு எங்கேயோ அரிப்பு எடுப்பதால் பதிவு எழுதுகிறோம். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
      மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள் (784)
      நீங்க எப்பவுமே இப்படித்தானா?இல்லை இப்படித்தான் எப்பவுமா?

      வயசுல பெரியவங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

      நன்றி அய்யா...

      நீக்கு
  4. சதீஷ்,

    நல்லா தானே எழுதுறிங்க, அப்புறம் ஏன் தமிழ்மணம், சூடான இடுகைன்னு கவலைப்படுறிங்க, அதெல்லாம் நட்பு வட்டம் வைத்துக்கொண்டு மொக்கையாக எழுதுறவங்களுக்கு உதவுற ஒன்று.

    அந்த 20 பேரும் ஆளுக்கு ஆள் மாத்தி மாத்தி ஓட்டு, அப்புறம் ,கலக்கிட்ட தல,நல்ல பகிர்வு, த.ம.9 , சினிமா விமர்சனம் என்றால் 120 ரூ மிச்சம் இதுக்கு மேல பின்னூட்டம் கூட எழுத தெரியாதவங்க.

    நீங்க எல்லாம் திரட்டியாவது ,த்ஒரட்டியாவது என எழுதலாம், போய் அந்த மாய வட்டத்தில் சிக்கிக்க வேண்டாம்.

    இடுகைக்கு தலைப்பு வைக்கும் போது செர்ச் எஞ்சின்(தேடு பொறி) இல் எளிதாக சிக்க சில ஆங்கில சொற்களைப்போட்டுக்கோங்க, லேபிளில் கூட சில ஆங்கில சொல் பயன்ப்ப்படுத்துங்க, கூகிள் மூலம் படிக்க வருவாங்க.

    பதிவில் படங்கள், மற்றும் யூட்டூப் வீடியோ எல்லாம் இணைத்தாலும் அது குறித்து தேடும் போதும் மற்றவர்கள் கண்ணில் படும், இப்படி தேடு பொறிக்கு எளிதாக பதிவினை எழுதி ,உண்மையான படிக்கும் மக்களிடம் உங்கள் கருத்தினை கொண்டு சேர்க்கலாம்.

    தமிழ்மணத்தில் ஆர்வமுடன் செயல்படும் பதிவர்கள் முழுசாக எப்பதிவையும் படிக்கவே மாட்டார்கள் என்பது எனது அவதானிப்பு :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ##நல்லாத்தான் எழுதுறீங்க##....ரொம்ப நன்றி அண்ணா..
      இந்த மாயவலைகள் நிறைய நல்ல பதிவுகளை கானாமோ பண்ணிடுது.எல்லாருமே தான் எழுதுறது நல்லாத்தான் இருக்குன்னு நினைக்கிறாங்க.நல்லா இல்லாட்டியும் நம்மளை மாதிரியோ இல்லை நம்மளை விட மொக்கைய உள்ள ஒரு பதிவு பல பேர் பாக்குற இடத்தில இருந்தா சில நேரம் கடுப்பா இருக்கும்.அந்த கடுப்பான நேரத்தில் விளைந்ததுதான் இந்த பதிவு.

      அருமையான டிப்ஸ் தந்துருக்கிரீங்க.நீங்க சொன்ன மாதிரியே பயன்படுத்துறேன்.பதிவுகள் தரும் நட்பு உள்ளங்களுக்கு நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு.நன்றி அண்ணா...

      நீக்கு
  5. உனக்கா ஆளுங்க இல்ல ? ரொம்ப ரீல் ஓட்டடாத. உனக்கு தான் முஸ்லிம் மத வெறியர்கள் சப்போர்ட் இருக்கே.
    அப்புறம் எல்லை பாதுகாப்பு படையில வேலை செய்றுதா நீ சொல்லுற பொய்யை நம்பி, இந்தியாவை பத்தி கேவலமா நீ எழுதுற பதிவுகளுக்கு ஒட்டு பட்டையே இல்லாம 15~20 தமிழ்மணம் ஒட்டு போடுற உன்னோட முஸ்லிம் கூட்டாளிகள் இருக்க தானே செய்றாங்க.
    பேசாம நீ உன்னோட உண்மையான முஸ்லிம் பேருலே எழுதலாமே ? எதுக்கு வேற பேருல எழுதி எல்லாத்தையும் ஏமாத்துற ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ##முஸ்லிம் மத வெறியர்கள் சப்போர்ட்....##உங்களுக்கு வந்தா அது பக்தி முஸ்லிம்க்கு வந்தா வெறி? நான் என் முன்னால் நடந்ததை எழுதினேன்.அது அவர்களின் நிலைக்கு ஆதரவாக இருந்தது ஓட்டு போட்டார்கள்..என்னுடைய மற்ற பதிவுகளில் அந்த நண்பர்கள் இல்லை என்கும்போதே தெரியவேண்டாமா?இந்தியாவை பற்றி அப்படி எழுதுற மாதிரி இருக்குன்னா நான் என்ன செய்ய?எல்லை பாதுகாப்பு படையில இருந்தா அப்படி எழுத கூடாதா?எனது பதிவுகளின் உண்மைகளை தவறுகளை ஆராயுங்கள்.ஏன் வேலை மதம் தேடுகிறீர்கள்?

      நீக்கு
  6. பதில்கள்
    1. உருவாகும் நட்புகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி அண்ணே....

      நீக்கு
  7. தரமாக எழுதினால் தானாக நட்பும் வாசகரும் சேர்வார்கள் இது என் அனுபவம்! நானும் முதலில் இது பற்றி பெரிதாக கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன்! இப்போது அதை தவிர்த்து விட்டேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    பதிலளிநீக்கு
  8. அன்பு நண்பரே, இந்த ஓட்டு, ரேங்க் இதெல்லாம் தள்ளுங்க. இதெல்லாம் ஒரு நயா பைசாவுக்குக் கூட உபயோகமாகாது. உங்களுடைய பதிவுகளின் தரம், மற்றும் சுவாரஸ்யத்தில் தானாக நட்பு வட்டம் சேரும் கவலையே வேண்டாம். நான் நீங்கள் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் என்று படித்தவுடனேயே உங்களுடைய பதிவை subscribe செய்துள்ளேன். எழுதும் விஷயமும் பதிவும் உங்களுக்கு திருப்தியாய் இருக்கவேண்டும், மற்றவை தானாக வரும் :) இது கண்டிப்பாக அட்வைஸ் இல்லை...just a friendly suggestion.

    நட்புடன்
    டுபுக்கு

    பதிலளிநீக்கு
  9. நன்றி நண்பா.....உங்களின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.தரம் மற்றும் சுவராஸ்யம் எனக்கு பயத்தை தருகிறது என்றாலும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக பதிவிடுவேன்.உங்களை SUGGESTION நட்போடு வந்ததால் மிகவும் மகிழ்ச்சி...

    ##எழுதும் விஷயமும் பதிவும் உங்களுக்கு திருப்தியாய் இருக்கவேண்டும்,###
    கட்டாயம் நண்பா....மிகவும் நன்றி நண்பா....

    பதிலளிநீக்கு
  10. சதீஷ் , ரொம்ப நல்லா எழுதிரிங்க keep it up.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....