Translate

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கேபிள் கவிதைகள் -2 பொண்ணுங்க பீலிங்

கேபிள் சங்கர் அவர்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.வாசகர்களின் பலத்த ஆதரவுகளுக்கு இடையே மீண்டும் கேபிள் கவிதைகள் களமிறங்குகிறது .போதாகுறைக்கு ஆங்கிலத்தில் எல்லாம் பாராட்டுக்கள் வருது. தக்காளி,இங்கிலீஷ்காரன் கூட நம்ம கேபிள் கவிதையை படிக்கிறாப்லனா பாத்துக்கோங்களேன்.....எல்லா புகழும் கேபிளுக்கே...

கேபிள் கவிதைகள் -1 ஆண்கள் பீலிங் என்றால் இது பொண்ணுங்க பீலிங் ....

அனுபவித்த உணர்வுகளில் 
சிறந்த உணர்வு 
காதலிக்க பயந்த முதல் உணர்வு!!

திரும்பி பார்க்க மறுத்த பயம்
திரும்பி  பார்க்க வாய்த்த தைரியம் 
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல்தான் நீ!
அவ்வளவு சுகம்!!

முற்றும் துறந்த இரவை விட 
முக்காடு போட்டு முத்தம் தந்த 
வெயில் நினைவு இனிது!!

ஓரமாக பார்த்தால்தான் 
அழகு!
நேராக பார்த்தால் அது 
இயல்பு!!

கைபேசி இல்லா இரவுகளில் 
உணருகிறேன் -பெண்கள் 
நாங்கள் ஏழைகள் என்றும் 
அடிமைகள் என்றும் !!

சுகமான பேருந்து பயணம் 
உன்னை மட்டும் எழுப்பினாள் 
மகளிர் இருக்கையாம்! 
பெண்ணுரிமை தேவையில்லை !!

துள்ளி வரும் இந்த 
மாசக்கடைசி புலம்பல்கள் 
எங்கே கிடந்தது காதலின் போது?

கேபிள் கவிதைகள் 1 படிக்க சுட்டவும் இங்கே ..இது ஆம்பள பீலிங்

டிஸ்கி: ஏண்டா இப்படி கொலைவெறி பிடிச்சி அலையுறேன்னு நீங்க கேட்பது தெரியுது ..அதனால அடுத்தாப்ல கேபிள அறுத்து விட்டுட்டு அப்படியே இந்தியா பாகிஸ்தான் பக்கமா இல்லைனா காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுக்கு போகலாம் ரைட் ...

13 கருத்துகள்:

  1. ஆழ்ந்த சொல்லாடல்கள்....அருமையான கருத்துக்கள்...மனப்பாடம் செய்துகொண்டேன்! :D

    BTW., கவித அரும..! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லாடல்கள் ?என்னலாமோ சொல்றீங்க அண்ணா ..மனப்பாடமா ?என்னையா நடக்குது இங்கே? நன்றி அண்ணா..

      நீக்கு
    2. அண்ணே இந்த BMW மன்னிக்க BTW னா என்னன்னே?

      நீக்கு
    3. by the way-ங்ற அர்த்தத்தில் நான் போடுறேன்...எதற்கு வேறு பொருள் இருந்தால் கம்பெனி பொறுப்பல்ல!

      ராணுவ வீரரே நான் ரொம்ப சின்ன பையன் நீங்க என்னை தம்பினே சொல்லலாம்! :)

      நீக்கு
  2. // மகளிர் இருக்கையாம்!
    பெண்ணுரிமை தேவையில்லை !!// ஹா ஹா ஹா அருமையோ அருமை அண்ணா

    வரிகள் ஒவ்வொன்றும் பின்னிப் பெடல் எடுக்கின்றன

    பதிலளிநீக்கு
  3. வரலாறு அவர்களே

    BMW என்றேரே
    BTW ஆக மாற்றிநீரே
    அண்ணா என்று அழைத்தோரை
    தம்பியாக மாற்றிநீரே

    உங்கள் பாடாவதி கருத்துக்கள் ஆகச்சிறந்த கருத்துகளாக மாற வேண்டும் என்று விநாயகனை வேண்டுகிறேன்...

    மேற்கூறிய உங்கள் கருத்துகளை மனபாடம் செய்து கொள்கிறேன்....

    மேற்கூறிய கருத்துக்கள் நான் மனபாடம் செய்த இடங்களில் இருந்து கற்றுக் கொண்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

    பதிலளிநீக்கு
  4. தம்பி சீனு,அண்ணன் வரலாறுக்கு சிறந்த கருத்தாளர் பட்டம் கிடைத்துள்ளது தெரியுமா? அவர்கிட்டே கேளு சொல்லுவார்...

    பதிலளிநீக்கு

  5. // முற்றும் துறந்த இரவை விட
    முக்காடு போட்டு முத்தம் தந்த
    வெயில் நினைவு இனிது!!//


    இது செம டச்சிங்.... தொடர்ந்து எழுதுங்க சதீஷ்....

    பதிலளிநீக்கு
  6. அட...உங்களுக்கு இப்படியும் எழுத வருமா..!!!
    நமக்கு கவித ஆகாது ..[கவிதபோபியா]
    இருந்தாலும் சில கவிதை வரிகள்..சூப்பர்
    இராணுவ வீரரே...ஜமாய்ங்க

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....