Translate

பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆட்டோ ஓட்டுதலும் பதிவு போடுதலும் -பதிவர்கள் கவனத்திற்கு

"அரிசியென்று அள்ளுவாரும் இல்லை, உமி என்று ஊதுவாரும் இல்லை "னு  மொக்கையா சில பதிவுகளை போட்டுட்டு கவலைப்பட்ட நேரம் தம்பி சீனு என் வலை தளத்தை  தமிழ் மணத்துல இணைத்து விட்டாருங்க.

தமிழ் மண ஓட்டுகளை பற்றி  நண்பர் அதிரடி  ஹாஜா அதிரடியா ஒரு பதிவு போட்டார்.. ####..வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை  பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....

ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர்  பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் என்பது  எனக்குள் எழுந்த கேள்வி....


உதாரணத்துக்கு  இப்ப எனக்கு தெரிந்த 10 நண்பர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து  கொள்வோம்...நான் எழுதும் அல்லது என் நண்பர்கள் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் கேரன்டியாக  எங்களின்  10 ஓட்டுகள் விழுந்துவிடும்....அது எவ்வளவு பெரிய  மொக்கையான  பதிவுகளாக இருந்தாலும் கூட...


பட்டிக்காட்டான்  அண்ணாவும் நண்பர்கள் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் ஓட்டு போடுவேன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துருக்கார்.(பின்னூட்டம் -கேபிள்ஜி நீங்க செய்வது நியாயமா?)

அண்ணனுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு FRIEND REQUEST ...அண்ணே, ஏதோ பார்த்து செய்யுங்க. (என்னிடம் ஓட்டு பட்டை இல்லை...உண்மையாகவே இது உங்க நட்புக்காக மட்டுமே)

இந்த நிலை உண்மையா இல்லையா? ....எனக்கும் இந்த முறை பிடிக்கவில்லை ஆனா என்ன செய்ய?...

13 வருஷம் முன்னாடி நான் ஆட்டோ ஓட்டுன நேரம் நண்பன் ஒருத்தன்  புதுசா ஆட்டோ ஓட்ட வரப்போறேன்னு சொன்னான்.அதுக்கு ஒரு மூத்த ஓட்டுனர் கேட்ட முக்கிய  தகுதி  என்ன தெரியுமா?"ஆள் பழக்கம் உண்டா?"..அதாவது ஊர்ல கடைல  காட்டுலன்னு  எல்லார்கிட்டையும் நல்ல பழக்கம் இருக்கணும்.ஆள் தெரிஞ்சிருக்கனும்.

நாப்பது ஆட்டோ நிக்குற ஸ்டாண்டில நம்ம ஆட்டோவை மட்டும் தேடி வருகிற மாதிரி ஆள் பழக்கம் இருந்தா வா வண்டி நல்லா ஓடும்..இல்லைனா கஷ்டம்தான்னு சொன்னாரு.."அக்கு தொக்கு இல்லாதவனுக்குப் பக்க பலம் ஏது?"

கிட்டத்தட்ட அதே கதைதான் இங்கேயும் உங்களுக்கு கொஞ்சம் ஆள் பழக்கமும் அவசியம். அதாவது நட்பு.......ஆனா அப்படியெல்லாம் அமைந்திடுமா என்ன?எனக்கு ஈ எறும்பு கூட பதிவுலகில் தெரியாதுங்க.ஊர்  வட்டாரத்தில் வலைபூவா? அது என்ன கலருன்னு கேட்டு சாகடிக்கிறானுங்க. அப்படினா நானெல்லாம் எப்படி பதிவெழுதி நாலு பேரு படிக்கிறது?

 பஸ்ஸ்டான்ட் ,ரயில் நிலையம்,ஏர்போர்ட் போன்ற இடங்கள்தான் மகுடம்,சூடான இடுகை,வாசகர் பரிந்துரை போன்றவை.அங்கேதான் எல்லோரும் ஏறுவீர்கள் அதுதான் இயல்பு.எவ்வித ஆதரவும் இல்லாமல் வெளிப்புறமாகவும் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.இயல்பினை காரணம் காட்டி மற்ற புதிய பதிவர்களை காய விடாமல் பதிவுகளை பிடித்திருந்தால் மட்டும்  ஓட்டு போட்டால் நலமாக இருக்கும்.இதற்கு தேவை நேர்மை மட்டுமே.நட்பு அல்ல.

பதிவின் மூலம் நண்பர்கள் உருவாகட்டும்.நண்பர்கள் மூலம் ஓட்டுக்கள் அல்ல.

ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் அழுது புரண்டால் வருமா?ன்னு என் இந்த பதிவிற்க்கு மைனஸ் ஓட்டு போடாம எல்லா ஆட்டோக்களுக்கும் சவாரி ஏற வேண்டுகிறேன்.

முக்கிய குறிப்பு: மேலே படத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் இணையத்தளம் வைத்துள்ளார்.தாஜ் கோரமண்டல் அருகில் உள்ள இவரை அவரது   இணையதள முகவரியில் காணுங்கள்.சென்னையில் உள்ளவர்களுக்கு பயன்படலாம்.தனது தொடர்பு எண்ணையும் அதில் கொடுத்துள்ளார்.(ஏதோ நம்மளால முடிஞ்ச விளம்பர உதவி)


வெள்ளி, 13 ஏப்ரல், 2012

எரிச்சலூட்டும் சில பிரபல பதிவர்கள்

சில பிரபல பதிவர்களின் பதிவுகள் நல்லா இருக்குதோ இல்லையோ  அவர்களின் தளம் எரிச்சலை தருகிறது.
                    என்ன பிரச்சனைனா இவங்க எழுத்து நல்லா இருக்குது என்பதாலும்,எப்பவுமே முகப்பு பகுதியில் இருப்பதாலும்,சுண்டி இழுக்குற மாதிரி தலைப்பு வைப்பதாலும்,நாம முதலில் இவங்க பதிவை படிக்க போனா IPL கணக்கா ஒரே விளம்பரம்...
                   விளம்பரத்துக்கு பின்னாடி இவங்க பதிவு..அந்த விளம்பரத்தை மூடிட்டு படிக்கலாம்னு  X க்ளிக் பண்ணுனா புது TAP திறக்குது.இவ்வளவு சோதனையும் கடந்து பதிவை படிச்சா அது விகடனில் வந்ததும்,ட்விட்டரில் ட் விட்டியதும்,ஒண்ணுமே கிடைக்கலைனா மொக்கை படமா பார்த்து விமர்சனம்னு விரட்டி விரட்டி அடிக்கிறதும்....  முடியலைடா சாமி.

                      ஒண்ணுமே அறியாத எனக்கு நிறைய கற்று கொடுத்த தொழில் நுட்ப பதிவு எழுதும் வாத்தியாருங்க சேட்டை இன்னும் அதிகம்.திரையின் நடுவில் என்னோடு முகநூலில் இணையுங்கனு 15 நொடிகள் அதிகாரம் பண்றாங்க.மனுஷனுக்கு படிக்கிற ஆசையே இல்லாம போயிடுது.
                        நல்ல படம் ஒன்றை விஜய் டிவியில் விளம்பரங்களுக்கு நடுவே பார்ப்பது போலத்தான் சில பதிவுகளும்.இன்னும் போக போக விளம்பரத்தின் மேல் க்ளிக் செய்தால்தான் பதிவை படிக்க முடியும் என்று தோன்றுகிறது.
                   சம்பந்தப்பட்ட பதிவர்கள் அளவான விளம்பரத்தோடு பதிவிட்டால் 
  நன்றாக இருக்கும்.பல்சுவை புத்தகம் போல நான் நினைக்கும் வலைப்பூக்கள் வியாபார பூக்களாக மாறிவிடுமோ என்று பயம் தோன்றுகிறது.
            யாரெல்லாம் இப்படி பதிவிடுகிறார்கள் என்று சொன்னால் தனி மனித தாக்குதல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் உறுமுவார்கள்.எனவே வேண்டாம்.

டிஸ்கி: .இந்த பதிவு முழுக்க முழுக்க என்  தளத்துக்கு ஒரு அறிமுகம் வேணும்கிற சுயநலத்தோடு கூடிய பொது நலத்தோடு எழுதியதே.நமக்குதான் யாரையாவது மெல்லாம தூக்கம் வராதே.(டிஸ்கினா என்னனு எனக்கு தெரியாதுங்க.நிறைய பேரு எழுதுறாங்கனு நானும் எழுதுறேன்.அதுக்கு தமிழில் என்னனு யாராவது சொன்னா நல்லது)