Translate

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

எரிச்சலூட்டும் சில பிரபல பதிவர்கள்

சில பிரபல பதிவர்களின் பதிவுகள் நல்லா இருக்குதோ இல்லையோ  அவர்களின் தளம் எரிச்சலை தருகிறது.
                    என்ன பிரச்சனைனா இவங்க எழுத்து நல்லா இருக்குது என்பதாலும்,எப்பவுமே முகப்பு பகுதியில் இருப்பதாலும்,சுண்டி இழுக்குற மாதிரி தலைப்பு வைப்பதாலும்,நாம முதலில் இவங்க பதிவை படிக்க போனா IPL கணக்கா ஒரே விளம்பரம்...
                   விளம்பரத்துக்கு பின்னாடி இவங்க பதிவு..அந்த விளம்பரத்தை மூடிட்டு படிக்கலாம்னு  X க்ளிக் பண்ணுனா புது TAP திறக்குது.இவ்வளவு சோதனையும் கடந்து பதிவை படிச்சா அது விகடனில் வந்ததும்,ட்விட்டரில் ட் விட்டியதும்,ஒண்ணுமே கிடைக்கலைனா மொக்கை படமா பார்த்து விமர்சனம்னு விரட்டி விரட்டி அடிக்கிறதும்....  முடியலைடா சாமி.

                      ஒண்ணுமே அறியாத எனக்கு நிறைய கற்று கொடுத்த தொழில் நுட்ப பதிவு எழுதும் வாத்தியாருங்க சேட்டை இன்னும் அதிகம்.திரையின் நடுவில் என்னோடு முகநூலில் இணையுங்கனு 15 நொடிகள் அதிகாரம் பண்றாங்க.மனுஷனுக்கு படிக்கிற ஆசையே இல்லாம போயிடுது.
                        நல்ல படம் ஒன்றை விஜய் டிவியில் விளம்பரங்களுக்கு நடுவே பார்ப்பது போலத்தான் சில பதிவுகளும்.இன்னும் போக போக விளம்பரத்தின் மேல் க்ளிக் செய்தால்தான் பதிவை படிக்க முடியும் என்று தோன்றுகிறது.
                   சம்பந்தப்பட்ட பதிவர்கள் அளவான விளம்பரத்தோடு பதிவிட்டால் 
  நன்றாக இருக்கும்.பல்சுவை புத்தகம் போல நான் நினைக்கும் வலைப்பூக்கள் வியாபார பூக்களாக மாறிவிடுமோ என்று பயம் தோன்றுகிறது.
            யாரெல்லாம் இப்படி பதிவிடுகிறார்கள் என்று சொன்னால் தனி மனித தாக்குதல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் உறுமுவார்கள்.எனவே வேண்டாம்.

டிஸ்கி: .இந்த பதிவு முழுக்க முழுக்க என்  தளத்துக்கு ஒரு அறிமுகம் வேணும்கிற சுயநலத்தோடு கூடிய பொது நலத்தோடு எழுதியதே.நமக்குதான் யாரையாவது மெல்லாம தூக்கம் வராதே.(டிஸ்கினா என்னனு எனக்கு தெரியாதுங்க.நிறைய பேரு எழுதுறாங்கனு நானும் எழுதுறேன்.அதுக்கு தமிழில் என்னனு யாராவது சொன்னா நல்லது)

7 கருத்துகள்:

  1. //15 நொடிகள் அதிகாரம் பண்றாங்க.//

    உண்மைய சொல்லனும்னா உங்க பழைய பதிவுகளை விட இந்த பதிவு ரொம்பவே அழகாவும் தெளிவாவும்இருக்கு. அழகா டிசைன் செஞ்சிருகீங்க..

    // (டிஸ்கினா என்னனு எனக்கு தெரியாதுங்க.நிறைய பேரு எழுதுறாங்கனு நானும் எழுதுறேன்.அதுக்கு தமிழில் என்னனு யாராவது சொன்னா நல்லது //

    டிஸ்கி எல்லாருமே அவங்க ப்ளாக் ல போடுவாங்க. விகடன் படிசீங்கன்னா தெரியும், அதுல குட்டு சொட்டு நு போடுவாங்க. அத மாதிரி ஒன் லைன் ல அழகா மெசேஜ் சொல்லணும் அது தான். உங்க டிஸ்கி கூட அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. சத்தியமா எரிச்சல் வருது

    பதிலளிநீக்கு
  3. சீனு,ரேவதி,மணிமாறன், வருகைக்கு நன்றி.இணைந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  4. வேண்டாத விளம்பரங்களினால் நமக்கு எரிச்சல் வருவது உண்மைதான் நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. டிஸ்கி - சத்தியமா இது என்னன்னு எனக்கும் தெரியாது! :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....