Translate

புதன், 11 ஏப்ரல், 2012

இந்திய பாக் எல்லையில் ஜவான் உறங்குமிடம் (புகைப்படம் இணைப்பு)

இந்திய ராணுவத்திற்கு எத்தனையோ கோடி செலவழிக்கும் நமது அரசு,உலகின் மிகப்பெரிய துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படைக்கு செலவழிக்கும் தொகை எவ்வளவு என்று தெரியவில்லை.செலவழித்தாலும் அது கடைசி ஜவான் வரை கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை.
வசந்த மாளிகை?
                நீங்கள் மேலே காணும் புகைப்படம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இரவில் காவலுக்கு நாங்கள் தங்குமிடம் உறங்குமிடம் ஆகும்.BOP  எனப்படும் BORDER OUT POST நாங்க இருக்குமிடமாகும்.BOPயிலிருந்து  2கிலோ மீட்டர் தூரத்திலிருந்து  5 கிலோ மீட்டர் வரை நாங்க காவல் புரியும் இடம் இருக்கும்.  ஒவ்வொருவருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் கண்காணிக்கும் பகுதியின் நீளம் அமையும். மூவர் அணி ஒரு இரவுக்கு காவல் புரியும்.ஒருவர் காவல் புரிய மற்றவர் உறங்க நாங்க பயன்படுத்தும் இடம்தான் நீங்கள் புகை படத்தில் காண்பது.
                 குளிர்,மழை,வெயில்,என அனைத்து நேரமும் எங்கள்  உறைவிடம் இதுதான்.சில இடங்களில் கூரைக்கு போடும் டின் ஷீட் படுக்கை..BOPயில் நல்ல வசதிகள் இருந்தாலும் இரவும் பகலும் இது போன்ற இடங்கள்தான் எங்களுக்கு எப்போதும்.
                   இது சுமார் 4வருடம்  முன்னே ராஜஸ்தான் மாநிலம் பாட்மீர் (barmer) ரில் எடுக்கப்பட்டதாகும்.


கொசுறு :ஒரு ஜவான் ஒரு நாளில் உறங்கும் அதிகபட்ச உறக்கம் 5 மணி நேரம் மட்டுமே..

2 கருத்துகள்:

  1. // செலவழித்தாலும் அது கடைசி ஜவான் வரை கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை. //

    மிகவும் வருந்தத்தக்க செய்தி. நாட்டைக் காக்கும் உங்களைக் காக்க அரசியல்வாதிகள் தயாராக இல்லை என நினைகிக்கும் பொது வருத்தமாகத் தான் உள்ளது. இருந்தும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் எங்களைக் காக்கும் உங்களை அந்த இறைவன் தான் காக்க வேண்டும். அடுத்த புதிய தகவலுக்காக ஆவலுடன் உள்ளேன்

    பதிலளிநீக்கு
  2. காஷ்மீர் இளைஞனின் மனிதாபிமானம் குறித்த பதிவுமூலம், உங்களது வலைத்தளம் வந்தேன். எல்லையில் காவலிருக்கும் ராணுவ வீரர்களின் இருபக்கங்களையும் நேர்மையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....