நடுத்தர மக்களுக்கு நிலம் வாங்குவது என்பது மாபெரும் போராட்டம் என்றான பின்பும் ஆசை யாரை விட்டது?ஒரு வீடு கட்ட வாங்கப்படும் நிலம் மெல்ல மெல்ல வியாபாரமாக மாறியதன் காரணம் பேராசை இல்லாமல் வேறென்ன?
இந்த நிலம் பற்றிய ஒரு சிறிய கதை பேராசை பிடித்த நமக்கு ஒரு உண்மையை உணர்த்தலாம்....
ஒரு நாள் ஒரு அப்பாடக்கர் பிராமணன் ஒருவன் அரசனுக்கு காது குளிர ரெண்டு பாட்டை பாடி கொடையா நிலம் வேண்டும் என்றானாம்.அரசனை கேட்கவா வேணும்? அய்யா பண்டிட் சாமி உங்களுக்கு போகத்தான் மீதி....ஆனா condition apply னு ஒரு star போட்டாரு. அது என்னனா உனக்கு எவ்வளவு நிலம் வேணுமோ அவ்வளவு தூரம் நீ நடந்து போயிட்டு வரணும்.உன் காலடி பட்ட நிலமெல்லாம் உனக்குத்தான்...ஆனா சூரியன் அஸ்தமிக்கும் முன்னாடி வந்துடனும்.
அப்பாடக்கர் பிராமணனுக்கு ஒரே குஜால்தான்.நடக்க ஆரம்பிச்சாரு..மாமி சாப்பிட கூப்பிட்டும் போனாரா மனுஷன்? கல்யாணமான புதுசுல பார்த்த வேகத்தை மறுபடியும் பார்த்த மாமி பெருமூச்சி விட்டுட்டு நின்னாங்க.மதியம் உச்சி வெயில்...சாமிக்கு மட்டும் குளிரடிச்ச மாதிரி இருந்திருக்கும் போல ...நடந்துகினே இருந்தாரு...இன்னும் கொஞ்சம்,இன்னும் கொஞ்சம்கொஞ்சம்,கொஞ்சமே கொஞ்சம்ன்னு நடந்து குறுக்கு வழி புகுந்து வேர்வை சொட்ட சொட்ட பசி மயக்கத்தோடு அரசனிடம் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்து நின்றார்.
மந்திரிங்க எல்லாரும் டாகுமென்ட் ரெடி
செய்ய ஆரம்பிக்க நாள் முழுவதும் சாப்பாடு தண்ணி இல்லாம நிக்காம நடந்த
அப்பாடக்கருக்கு தலை சுத்த ஆரம்பிச்சது..மண்டையில மாங்கு மாங்குன்னு யாரோ
அடிச்சா மாதிரி ஒரு பீல்..அரசன் படியிறங்கி வந்து பரிசு கொடுக்கிறதுக்கு
முன்னாடி சாமி 'பொத்'னு விழுந்தவரு எமன் கையில் எருமை மாடு மேல போயிட்டு
இருந்தவருக்கு காதுல கேட்டது .... அரசன் மந்திரிங்களுக்கு சொன்னானாம், ஆறடி நீளம் மூன்றடி
அகலம் நிலம் போதும் இவனுக்கு, கொண்டு போய் புதையுங்கனு.
அதெல்லாம் சரி ...மாமி என்னஆனாங்க?
அப்பீலுக்கு வந்த மாமி அரசனோடு அப்பீட் ஆனது தனி கதை.
| Tweet | |||||


அதனால் நண்பர்களே, பேராசை பெரு நஷ்டம்.... தேவைக்கு வாங்குங்க...தேவதையா வாழுங்கள்.

நல்ல கருத்துள்ள கதை படங்கள் ரொம்ப்ப நல்லா இருக்கிறது இப்படி பட்ட சுவாரஸ்யமான கதைகளை எழுத வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு