Translate

திங்கள், 9 ஏப்ரல், 2012

மச்சி ,ஒரு குவார்ட்டர் சொல்லேன்...





  கள்ளு குடிப்போர்,பட்டை சாராயம் குடிப்போர், மிலிட்டரி ரம் அடிப்போர்  ,ஓசி யில் சரக்கடிப்போர், மூவேளையும் மூக்கு முட்ட குடிப்போர்,பார்ட்டியில் மட்டும் வாய் நனைப்போர், வாய் நனைப்பதற்க்காகவே பார்ட்டி வைப்போர்,சிறு குடிகாரர்கள்,பெரும் குடிகாரர்கள்,டாஸ்மார்க்கின் தீவிர ரசிக கண்மணிகள்,நிரந்தர உறுப்பினர்கள்,கார்பரேசன் முதல் கார்ப்ரேட் வரை என அனைத்துலக குடிமகன்களுக்கும் இந்த சிறு கதை சமர்ப்பணம்.
            


 ஒரு ஊரில் நல்லவன் நல்லவன்னு ஒரு நல்லவன் இருந்தானாம்.பயபுள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாதாம். டாஸ்மார்க் எங்கேன்னு கேட்டா கூட  அது..ஜப்பான்ல அமெரிக்கால எங்கேயோ இருக்குன்னு சொல்லுவான்னா பார்த்துக்கோங்களேன் ...
                பார்வதி எதோ கிளப் மீட்டிங்க்னு பிஸிய இருக்க நம்மாளு சிவபெருமான் நேரம் போகாம தமிழ் நாட்டுக்கு வந்தாரு.வந்தவரு தெரியாத்தனமா நல்லவன் ஊருக்கு வர நல்லவனுக்கு இருந்த பேரை கேட்டு ஒரே ஆச்சரியம் .தக்காளி, இவன் மட்டும் நமக்கு போட்டியா கடவுளா ஆயிட்டா நம்ம உண்டியல் நிறையாதுடான்னு  ஒரு பிளான் போட்டாரு.
                   காட்டுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தவன் முன்னாடி வந்து நின்னவரு சொன்னாராம்..மகனே நல்லவா, நீ எவ்வளவு நல்லவனா இருந்தாலும் மனிதனாக பொறந்தால் ஒன்னு ரெண்டு தப்பு செய்யணும்,இல்லேன்னா எம தர்மன் உன் மேல எந்த கேஸ்ல பாசகயித்தை போடுவான்?நீ எப்படி சொர்க்கம் போவ னு கேட்டுட்டு அவன் முன்னாடி ஒரு ரம் பாட்டில்,சிக்குனு ஒரு கில்மா பிகரு,ஒரு குழந்தை னு மூணு விஷயத்தை வைச்சு ஒரு செக் வைத்தாராம்.

ஒன்னு மது அருந்தனும்

                                                                              

Add caption

 இல்லேன்னா கில்மாவோடு ஜல்சா பண்ணனும்

                          அதுவும் முடியலைனா இந்த குழந்தையை கொன்னு போடணும்.















இந்த மூணுல ஏதாவது ஒன்னு செய்யணும். இது கடவுள் கட்டளைனு சொல்லிட்டாரு. நல்லவனுக்கு ஒரே யோசனை...குழந்தையை கொல்ல முடியாது பாவம்...நினைத்தாலே கொலை நடுங்கியது .அந்த கில்மா...நோ ஒரு வயசு பிள்ளை வாழ்க்கையில் விளையாடுவதா?    மது ? இது ஓகே.நம்ம பாட்டுக்கு குடிப்போம்,யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை..நல்லவனுக்கு நிம்மதி பிறந்தது.
                     யாருக்கும் பிரச்சனை இல்லாமல் குடிக்கலாம்னு முடிவு செய்து குடிக்கலானான்.குடிக்க குடிக்க போதை ஏற ஏற பக்கத்தில் இருந்த கில்மாவை  இப்போ ரேப் பண்ண ஆரம்பிச்சிட்டான்.குழந்தை பயத்துல அழ ஆரம்பிக்க நல்லவனுக்கு குழந்தையோட அழுகை தொந்திரவு கொடுதுருக்கும் போல ...போதையில் குழந்தையை கல்லில் அடித்து கொன்று வீசினான்.கில்மாவையும் ரேப் பண்ணி முடிச்சான்.
                       அனைத்தும் முடிந்து போதை இறங்கிய போது தான் மதுவின் மாயை ,வலிமை புரிந்தது.குற்ற உணர்ச்சி தாங்காமல்தற்கொலை செய்து கொண்டான்.அவன் கல்லறையில் இப்படி எழுதப்பட்டுள்ளது  "ஆசையே துன்பத்துக்கு காரணம் மதுவோ எல்லா துன்பத்துக்கும் ஆரம்பம் "

3 கருத்துகள்:

  1. அறிவுமையான அறிவுரை கூறிய கதை... இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. மதுவின் கொடுமையை இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இதை படித்து ஒருவராவது திருந்தினால் கட்டுரை முழுமையடையும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....