| Tweet | |||||
Translate
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
ஆர்மி னா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?....
மிக மேலோட்டமாகவே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
இந்தியன் ஆர்மி என்றதும் துடிப்பாக விறைப்பாக துப்பாக்கி ஏந்திய பல சினிமா கதாநாயகர்கள் நியாபகத்துக்கு வரும்.உண்மைதான்.இவர்களை போன்று விறைப்பாக நிற்க்கும் இன்னும் பலரை உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக காஷ்மீரில் உயிரிழக்கும் வீரர்களை நமது செய்தியாளர்கள் பாதுகாப்புப்படையை சேர்ந்த இருவர் பலி என்ற அளவோடு முடித்து விடுவார்கள்.காஷ்மீர் போன்ற பதட்டமான இடங்களை ஆர்மி மட்டுமே காப்பதில்லை.அங்கு பலியாவது ஆர்மி வீரர்கள் மட்டுமில்லை.துணை ராணுவம் (para military force)என்று அழைக்கப்படும் எல்லை பாதுகாப்பு படை,சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படை போன்று பல்வேறு துணை ராணுவ வீரர்கள் பலியாகின்றனர்.செய்திகளில் பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் இவர்கள் ஆர்மிக்கு இணையான பணி புரிந்தும் ஆர்மிக்கு இணையான சலுகைகள் எதுவும் இவர்களுக்கு இல்லை என்பதே சோகமான உண்மை.
எல்லை பாதுகாப்பு படை ஆர்மியை போல தனியே ஆபரேஷன் செய்யும் அதிகாரம் கொண்டதாகும்.காஷ்மீரிலிருந்து கீழே இறங்கும் ஆர்மியின் பட்டாலியன் அமைதியான நகரங்களில் தங்கள் ஹெட் குவாட்டரில் குடும்பத்தோடு வாழ...எல்லை பாதுகாப்பு படை இந்தியாவின் மற்றுமொரு எல்லையில் காவல் காத்துகொண்டிருக்கும்.இவர்களின் ஹெட் குவார்ட்டர் ராஜஸ்தான் போன்ற இடங்களில் குறைந்தது 150கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஊரிலிருந்து அழைத்து வந்த மனைவியை காண இரு வாரங்களுக்கு ஒருமுறை காய்கறி வாங்கவரும் வண்டியில் வந்து ஓரிரவு இருக்க மட்டுமே வாய்ப்பு அமையும்.
காஷ்மீர்,வட கிழக்கு மாநிலங்கள்,சட்டீஸ்கர்,இந்தியாவின் எல்லை பகுதிகள்,தேர்தல் காவல்,என அனைத்து பணிகளையும் புரியும் இவர்களுக்கு ஆர்மி போல சலுகை விலை கடைகள்,பணி முடிந்த பின் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை,இரத்த உறவுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை,ரயில் பயணங்களுக்கு டிக்கெட் எடுக்க தனி அலுவலகமோ,ரயிலில் தனி பெட்டியோ கிடையாது.
இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு அதிக பட்ச தொகையை செலவிடும் அரசு, உள்துறை அமைச்சகதின் கீழே வரும் ஆர்மிக்கு இணையான பாதுகாப்பு அளிக்கும் எல்லை பாதுகாப்பு படைக்கு செய்யலாமா கூடாதா? நீங்களே சொல்லுங்களேன்.
இத்தனை வசதிகள் செய்தும் சத்தீஸ்கரில் பணி புரிய ஆர்மி மறுத்து விட்டது.crpf வீரர்கள் தினமும் பலியாகிறார்கள்.ஆர்மி வீரர்கள் எத்தனை வீரர்கள் எல்லையை பார்த்துள்ளனர்?கேட்டு பாருங்க சிரிப்பா சிரிக்கும் மானம்.
இது பற்றிய விரிவான பதிவு வெகு விரைவில்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவரை கேட்காத செய்தி. உங்களை போல் இதில் விஷயம் தெரிந்தவர் மட்டுமே எழுதமுடியும். எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி....இணைந்திருப்போம்.
பதிலளிநீக்குஇந்திய ராணுவத்தைப் பற்றி இதுவரை அறிந்திராத தகவல்கள். அங்கு வேலை செய்யும் ஒருவரே எழுதுவதால் கண்டிப்பாக நம்பலாம். அடுத்த பதிவை எதிர் நோக்கி
பதிலளிநீக்குஇப்போது தான் இது குறித்து அறிகிறேன்.. உங்கள் வருத்தத்தில் நானும் இணைகிறேன் சதீஷ்!!
பதிலளிநீக்கு