Translate

ராணுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராணுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

வெடிகுண்டும் வில்லேஜ் விஞ்ஞானிகளும்...அவசியம் படிங்க..

அடிக்கடி ஆங்கில செய்திகளில் IED வெடித்து ராணுவம் பலி.பொதுமக்கள் பலி னு படிச்சிருப்பிங்க....இந்த IED நாளைக்கு நம்ம போற ரயிலிலோ இல்லை தியேட்டரிலோ மார்க்கெட்டிலோ கூட வெடிக்கலாம்.IED பற்றிய இந்த பகிர்வு உங்களுக்கு ஏதேனும் ஒரு நாள்  கட்டாயம் உதவலாம்.

ஏதேனும் அநாதை பெட்டியோ பையோ  கிடக்கும் பட்சம் அதை நீங்கள் தவிர்ப்பது நலம்.ஏன் என்பது இந்த பதிவின் முடிவில் நீங்கள் உணர்வீர்கள்.

IED என்றால் IMPROVISED EXPLOSIVE DEVICE. ஆங்கிலம் தெரிந்தவங்களுக்கு இத விளக்கனும்னு அவசியம் இல்லை. வெடி குண்டுகளை  வசதிக்குதக்க வாக்கா மாத்தி வெடிக்க வைக்கலாம் என்றால் அதுதான் IED.இதுக்கு இப்படித்தான் என்று எந்த எல்லையும் கிடையாது.எப்படினாலும் உருவாக்கிக்கலாம்.

இந்த IED குள்ளே நான்கு விசயங்கள் மிக அவசியமானது.அது என்னன்னா..
  1. EXPLOSIVE (வெடி மருந்து)
  2. DETONATOR (வெடி தூண்டி)
  3. POWER SOURCE (சக்தி உற்பத்தி ஸ்தானம்)
  4. INITIATION MECHANISM / SWITCH (துவக்கம் பொறி நுட்பம்) 
எளிதா சொல்லனும்னா ஒரு குண்டு வெடிக்க இது நான்கும் அவசியமாகும்.
இத பத்தி விவரமா பார்த்தா அப்புறம் நான் வெடிகுண்டு செய்ய கற்று கொடுத்ததா மேட்டராயிடும் அதனால இவ்வளவு விசயங்கள் போதும்.

இந்த IEDயை கிட்டத்தட்ட நான்கு வழிகளில் வெடிக்க வைக்கிறார்கள்

1.ANTI HANDLING MECHANISM:- இந்த முறை எப்படினா ஜெய்ஹிந்த் படத்துல,பேராண்மை படத்துல வைப்பான்களே கண்ணி வெடி..அதுதான் இந்த முறை.அந்த குண்டுகள் அமைந்துள்ள நிலையில்  அழுத்தம் கொடுத்தல், இழுத்தல்,தள்ளுதல்,எறிதல்,இறுக்குதல் போன்ற ஏதேனும் மாற்றத்தை கொடுக்கும்போது இவைகள் வெடிக்கும்.(IN THIS TYPE OF MECHANISM ANY DISTURBANCE TO IED LIKE,SHIFTING,PULLING,THROWING,LIFTING,TILTING, AND PROBING MAY CAUSE DETONATION)

2.DELAY MECHANISM:- இந்த முறை நம்ம எம் ஜி ஆர் காலத்துல வைப்பாங்களே டைம் பாம் அதே மாதிரி.இப்ப இதுக்குன்னே பல சுவிட்சுகள் தயாரிக்கப்படுகின்றன.எடுத்துக்காட்டுக்கு ஒரு மெழுகுவர்த்தி எரிந்து உருகி ஒரு குறிப்பிட்ட நிலையில் அத னோடு இணைக்கப்பட்டிருக்கும் டேட்டனேட்டரை தீ தொடும்போது வெடிக்கும்.குறிப்பிட்ட நேரத்தில் லைட் எரியவும் வெடிக்கும் முறை,கெமிக்கல் முறைகள் என பல உண்டு.கற்பனை திறன் உள்ளவன் ஊகிக்க முடியா முறையில் குறிப்பிட்ட நேரத்தில் குண்டுகளை இந்த முறையின் மூலம் வெடிக்க வைக்கலாம்.

3.AMBIENT CONDITION MECHANISM:- இது க்ளைமேட் மாறுவதை வைத்து வெடிக்கப்படும் ஒரு முறையாகும்.குறிப்பிட்ட அளவு வெயில் சூடு தீண்டும்போதோ இல்லை கார் என்ஜின் சூடானபின்போ வெடிப்பது போல திட்டமிடப்படும்.

4.COMMAND FIRE MECHANISM:ரிமோட் மூலமாக ,மொபைல் போன் மூலமாக ,லேசர் லைட் ,மின்சாரம் மூலமாக குறிப்பிட்ட பாதுகாப்பான தூரத்தில் இருந்து குண்டுகளை வெடிக்க வைப்பதுதான் இந்த COMMAND FIRE மெக்கானிசம்.




இதுல முதலாம் மற்றும் நான்காவது முறைதான் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் மேல் பயன்படுத்தப்படுகிறது.இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள DELAY மெக்கானிசம் பொது இடங்களில் வெடிக்க வைக்க பயன்படுகிறது.

இந்த IEDகள் எவ்வித உருவமும் பெற்றிருக்கலாம்.உங்கள் கண்களில் இவை போன்ற குண்டுகள் வாகன ரூபத்திலோ சூட்கேஸ் ரூபத்திலோ காண கிடைக்கலாம்.கதாநாயகன் போல அவற்றை தொடுவதோ திறக்க முயற்சிக்கவோ போன்ற எந்த டகால்டி வேலையும் செய்யாமல் நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை அதை விட்டு தானும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி கொள்வது....அதற்கடுத்த பணி உடனடியாக காவல் துறைக்கு தகவல் சொல்வது.உங்களுக்கு பாம் டிஸ்போசல் டீமின் முகவரி அறிந்தால் அவர்களுக்கும் தகவல் சொல்வது.

இத்தோடு உங்கள் பணி முடிந்தது.அதற்க்கு மேல் பாம் டிஸ்போசல் டீம் அதை கவனித்து கொள்ளும்.படத்தில் வருவது போல "பச்சை" வயரை கட் பண்ணும் ஒலக நாயகன்(வக்கிரமான சீன்-உங்களில் ஒருவன்) முறையெல்லாம் செல்லாது செல்லாது. .வயரை கட் பண்ணா வெடிக்கும் குண்டுகள் சர்வ சாதாரணமா வருகிறது.இது போல விழிப்புணர்வு இல்லாமல்  என்னுடன் பயிற்சி எடுத்த தமிழக பேட்ஜ் மேட் உட்பட சிலர் காஷ்மீரில்,சட்டிஷ்கரில்  பலியாகியுள்ளனர்.

மறந்து விடாதிர்கள்  அநாதை பொருட்களை கண்டால் உங்கள் வேலை காவல்துறைக்கு தகவல் சொல்வதும்,அந்த இடத்திலிருந்து தூரம் போவதும் மட்டுமே.முடிந்தால் அந்த பக்கம் செல்பவர்களை தடுக்கலாம்.

கூட்டம் கூடாதீர்கள்...இது அதிகபட்ச சேதத்தை விளைவிக்கும்.

தொடுவது ,சோதனை போடுவது,வேடிக்கை பார்க்க கூடுவது போன்ற வில்லேஜ் விஞ்ஞானி செயல்கள் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இன்னொரு முக்கிய விஷயம் வதந்திகளை பரப்பாதீர்கள்.

பதிவர்கள் போட்டோ எடுக்கிறேன் என்று FLASH அடித்து விடாதிர்கள்..FLASH மூலமாக வெடிக்கவைக்கும் முறையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சி நடந்ததாக சொல்வார்கள்.(ரொம்ப ப(ட)யம் காட்டுறேனோ?)

சென்னை சென்ட்ரலில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக கடை வரிசையில் BOMB DISPOSAL SQUAD பார்த்ததாக நியாபகம்.
சென்னை விமான நிலையம் Office of the Bureau of Civil Aviation Security (B.C.A.S)/ Bomb Disposal & Detection Squad (B.D.D.S)
Name
Designation
Office
Residence
T. K. Mitra
Commissioner of Security
Civil Aviation (COS- CA)
23311381
24101828
R. K. Singh
Addl. COS (CA)
23311467
26838446
R. C. Tayal
Addl. COS (CA)
23310799
24670095
K. P. S. Sinha
R. D. C. O. S Headquarters
23311602
25654545
Mahipalpur
25652486
-
J. S. Rana
ACS (CS)
25653220
-
Major T. V. Narayanan
DCOS(BDDS)
25652607
26123316

 டெல்லி Bomb Disposal Squads
NamePhone Number
South West 26152810/801
New Delhi23361231 Extn. 3705
Delhi22512201 extn. 577
North23962281

மும்பை BOMB DISPOSAL SQUAD
NamePhone No.
Bomb Detection & Disposable Squad22080501
Bomb Detection & Disposable Squad22650707
Bomb Blast.Cell2262093

இத்தனை எண்ணும் நியாபகம் இருக்க அவர்கள் காதலர்கள் இல்லையே .....எனவே நீங்க அவசர உதவி 100க்கு அழைத்தால் போதும்.எளிதாக தகவல் அளித்திடலாம்.கூடவே ஆம்புலன்ஸ் 108,தீயணைப்புத்துறைக்கும் (101)௧தகவல் தரலாம்.தவறே இல்லை.

தங்களின் கேள்விகளை,கருத்துக்களை வரவேற்கிறேன்.உங்கள் கேள்விகள் மூலமாகத்தான்  இதை போல பல பதிவுகள் வெளிவரும்.

திங்கள், 1 அக்டோபர், 2012

மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் -ஒரு சிறிய தொடர்ச்சி

கடந்த பதிவில் மனித கேடயமாக்கப்படும் காஷ்மீரிகளை மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் எழுதியிருந்தேன்.பல கருத்துக்கள் முக நூலிலும் வந்தன..அதில் ஒன்று வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதி காஷ்மீரிகளை சுடுவதும் தவறுதானே அதை ஏன் சுட்டி காட்டவில்லை என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார்

போராளிகளோ தீவிரவாதிகளோ அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் அன்பும் மிக மிக முக்கியம்.அவர்கள் உதவியின்றி கொஞ்சமும் செயல்பட முடியாது.எனவே அவர்கள் வீட்டுக்குள் நுழையும் காஷ்மீரிகளை தாக்க மாட்டார்கள்.இதை பயன்படுத்திதான் ராணுவம் காஷ்மீரிகளை உள்ளே பலியாடாய் அனுப்புகிறது.

அப்படியானால் இதில் என்ன தப்பு ? அதுதான் ஆபத்தில்லையே என்று தோனுகிறதா? தப்புதான் நண்பர்களே,உள்ளே இருக்கும் ஆய்தவாதி கதவு திறக்கும்பட்சம் உடனடியாக தாக்குதல் நடத்துவார்.அங்கே எதுவும் தெரிய போவதில்லை.உள்ளே வருவது பொது மனிதனா?ராணுவமா? யோசிக்க முடியா சில  தாக்குதலில் பொது மக்கள் ,வாலிபர்கள் ஏன் பலியாக வேண்டும்?

நான்தானே சபதம் எடுத்து உங்கள் மத்தியில் நாயகன் போல துப்பாக்கி ஏந்தி களமாட சம்பளமும் இன்ன பிற சலுகைகளும் பெறுகின்றேன்.அந்த அப்பாவி வாலிபர்களை முன்னால் நிறுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?சில நேரம் ராணுவத்திற்காக வைக்க கூடிய குண்டுகள் வெடிக்கும் போது அவர்களும் வெடித்து சிதறலாம் ...என்ன கிடைக்கப் போகிறது அவர்களுக்கு வெடித்து சிதறினால்?தீவிரவாதி பட்டம்?

நான் தாக்குதலுக்கு ஆகும் பட்சம் எனக்கு விருதுகளும் பேரும் பென்சனும் சலுகைகளும் வேலை வாய்ப்பில் முன்னுரிமைகளும் காத்து கிடக்கின்றன.ஆனால் அந்த பலியாடுகளுக்கு?மனித கேடயங்களுக்கு?நான் சண்டையிட பயிற்சி கொடுக்கப்பட்டு அது போலவே சண்டையிட வரும் எதிரியிடம் சண்டையிட களத்தில் நிற்கிறேன்.இடையில் அப்பாவி மக்களை பலியாடாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சரி ராணுவத்திற்கும் சரி முக்கிய தேவை பொதுமக்களின் ஆதரவு. அதை சம்பாதிப்பது அவர்களின் நடவடிக்கைகளே.இப்படி அப்பாவி மக்களை பலியாடாய் பரிசோதனை செய்வதன் மூலம் பயத்தை விதைக்க முடியுமே தவிர அன்பையோ ஆதரவையோ அல்ல.

விடுதலை புலிகள்,கூடங்குள போராட்டக்காரர்கள் பெண்களை குழந்தைகளை முன்னிறுத்தி மனிதகேடயமாக பயன்படுத்தி போராடினார்கள் போரிட்டார்கள் என்றும் அதை தவறு என்றும் சொல்வீர்கள் என்றால் இங்கு காஷ்மீரில் அப்பாவி வாலிபர்களை வலுகட்டாயமாக துப்பாக்கிகளுக்கு முன்னால் நிறுத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?

கூடங்குள போராட்டம் ஆயுதம் ஏந்தாமல் போராடும் அறப்போராட்டம்.அதற்கே அப்படி பெண்களை குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துகிறார் உதயகுமார் என்று சொல்லும் அலறும்  நண்பர்களே இந்த காஷ்மீர் மனித கேடயங்களை அரசே செய்வது எப்படி சரியாகும்?

மனசாட்சியோடு சிந்தியுங்கள்....இங்கே உங்கள் தேசப்பற்றை தூக்கி தூர வையுங்கள்.ராணுவத்தின் மீது உங்கள் பற்றை காண்பிக்காமல் ஒரு இளம் வயது உயிர்களின் போராட்டங்களையும் வாழ்க்கை முறை கஷ்டங்களையும் உணருங்கள்.

எனது பெயரையோ எனது மதத்தையோ தேடாமால் உண்மைகளை உணருங்கள்.கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன.


திங்கள், 17 செப்டம்பர், 2012

எல்லை பாதுகாப்புப்படை -ஒரு சின்ன அறிமுகம்.

ராணுவத்திற்கும்  துணை ராணுவத்திற்கும் வித்தியாசம் தெரியாம நிறைய பேர் இருப்பதினால் இந்த பதிவு.ராணுவம் என்றால் INDIAN ARMY துணை ராணுவம்னா PARAMILITARY FORCE.இந்தியாவில் துணை ராணுவத்தில் பல படைகள் உள்ளது.அதில் ஒன்றுதான்  எல்லை பாதுகாப்பு படை..வெள்ளைக்காரன் மொழில BSF(BORDER SECURITY FORCE).....BSF பற்றி அறிந்து கொள்ளுதல் இனி வரும் என் பதிவுகளுக்கும் உங்களின் பொது அறிவுக்கும் உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

கொசுவத்தி கொளுத்துங்கப்பா..கொஞ்சம் பிளாஷ்பேக்.முன்னாடி சுதந்திர இந்தியாவில் வடக்கே உள்ள எல்லைகளை அந்தந்த மாநில காவல்துறைகளே "கவனித்து" கொண்டன. குப்புற படுத்துட்டு காலாட்டி (இது எப்படி சாத்தியம்?) காவல் பார்த்த மாநில ஆயுத படைகளை பார்த்து பாகிஸ்தானுக்கு ஒரு குடைச்சல்.ஊடல் இல்லைனா காதல் எப்படி விளங்கும்?

1965ல ஏப்ரல 9ம் நாள் குஜராத்தாண்டை சர்தார் போஸ்ட் மற்றும்  சில இடங்களில் பாக் மூக்கை நீட்ட இந்தியா நாக்கை துருத்த ஒரு ஐந்து வாரம் பல்லாயிரம் உயிர்களின் குருதியோடு  உசாராயி இந்தியாவின் மேல்படிகளான  சர்மாக்கள்,மேனன்கள் யோசிச்சி இந்தியாவோட எல்லைக்காகவே உருவாக்குனதுதான் BSF.1965 டிசம்பர் 1ம் தேதி BSF உருவாக்கி  கே எப் ருஷ்டம்ஜி னு ஒரு அதிகாரியை  தலைவராக்கி அவரை BSF தந்தைனு எழுதிகிட்டாங்க.
இத பாருங்கப்பா DUTY UNTO DEATH


அன்னைக்கு வேலி கட்டி பாதுகாக்க ஆரம்பித்த BSF இன்று பாகிஸ்தான், பங்களாதேஷ்  எல்லைகளில் பெண்கள்(ஆமா பாஸ் பஞ்சாப் எல்லையில்) உட்பட 2,40,000 பேர் பணி புரிய பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லை பகுதியில் காவலுக்கு நிற்கிறது.

இவங்க வேலை என்னானா எல்லை ஊடுருவல் தடுத்தல் ,கடத்தல்களை தடுத்தல்,எல்லையை பாதுகாத்தல்.....அதே மாதிரி போர் வந்துச்சுன்னா அப்பாடக்கர் ஆர்மி முன்னாடி வந்துரும்.அதுக்காக அந்த நேரம்  BSF தயிர் கடைய போய்டாது...கொஞ்சம் மொக்கையா எதிர் பார்ட்டி இருக்குற இடத்துல பாதுகாப்பு,முக்கியமான இடங்களை பாதுகாப்பது,அகதிகள் கட்டுப்பாடு,மற்றும் சில பிகர் உள்ள இடமா(எதிரி நாட்டுக்குள்னு அர்த்தம்ங்க ) ஊடுருவல் பண்ணுறது.இது போக நாட்டுக்குள்ளே அரசியவாதிகளை எதிர்த்து கூட்டம் போட்டா கலைக்கிறது, கை வைக்கிறதுன்னு உப தொழிலும் பார்க்கணும்.(CRPF வேலையே இதுதான்.கூட நாங்களும் தொடுப்புக்கு)

காஷ்மீரில் தனியாக ஆபரேசன் செய்யும் அதிகாரம் ராணுவத்திற்கு உண்டென்றால் BSFக்கும் உண்டு.CRPF தனியா ஆபரேசன் பண்ண முடியாது.எல்லையிலும் காவல் காத்து காஷ்மிரிலும் கலவரம் பண்ணி(??!!) மன்னிக்க கலவரம்  அடக்கி தேர்தலுக்கும் காவல் காத்து  இப்படி எல்லா இடங்களிலும் பணி செய்வதால் ஆல் ரவுண்டர்னு நீங்க சொல்லலாம்.நாங்க எங்களுக்குள்ளே சொல்வது என்னானா BSF ஒரு விபச்சாரி.யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்.(எங்க கஷ்டம் எங்களுக்கு).

அப்படினா BSF ராணுவம் இல்லியா? இல்லை பாஸ் இது ஒரு துணை ராணுவம்.தின்னு தின்னு தூங்கி வழியிற ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கையில் இருக்கும் சுகபோகி. BSF என்பது உள்துறை அமைச்சகத்தின் கையில கிடக்கும் ஒரு சவலைபிள்ளை.(CRPF,ITBP,SSB,CISF னு பல பிள்ளைங்க இருக்குதுங்க.)

ஏன் அப்படி?அது அப்படித்தான்...இரண்டிற்கும் பல சலுகை வித்தியாசங்கள் உண்டு.ராணுவத்தில் வேலை குறைவு  சலுகை அதிகம்.BSFல வேலை அதிகம் சலுகை குறைவு.இது BSF க்கு அண்ணாவான CRPFக்கும் பொருந்தும்.கூர்ந்து கவனியுங்கள்... இன்று சட்டிஷ்கரில் பலியாவது இவர்கள்தானே தவிர ராணுவத்தினர் இல்லை.

இப்படிப்பட்ட BSF பற்றி தெரியாமல் பச்சை சட்டை போட்டவன்லாம் ராணுவத்தான்னு நினைச்சிகிட்டு  ரம் கேக்குறது ,காண்டீன்ல சோப்பு வாங்கி தர சொல்றதுன்னு காமெடிலாம் நடக்கும்.இதெல்லாம் உண்டுதான் ஆனா ராணுவ அளவுக்கு இல்லை.

அவங்க அவங்கதான் ..நாங்க நாங்கதான்.அவர்கள் இந்தியாவின் மிக பலம் வாய்ந்த ஆயுதங்களை  வைத்திருப்பார்கள்.நாங்க கொஞ்சம்(ரொம்ப                                                                                      ) மொக்கை பீசுங்க..ஆனா கடின உழைப்பாளிங்க.

இரண்டுக்குமே பொது என்னனா சிப்பாய் என்பவன் அனைத்து இடங்களிலும்  அடிமையே.

இனி வரும் பதிவுகளில் பல எல்லை புற நிகழ்வுகள்,பங்களா தேஷ் எல்லை, காஷ்மீர் ஆபரேசன் செய்யும் விதம்,மீறப்படும் மனித உரிமைகள் பதியப்படும்.கூடவே படை வீரர்களின் தரப்பையும் எடுத்து சொல்லப்படும்.

BSF பற்றி விக்கியில் தேடினால் நிறைய தருவார்கள்.கூடவே வங்காள கொடுமைகளையும் தருவார்கள்.உண்மைகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு ஏற்றுகொள்வது உங்கள் மனதில்...

குறிப்பு :A R RAHMAN இசையில் BSF பாடலை பார்க்கவும்.பாட்டும் சரி படமாக்கியதும் சரி நல்லா இருந்தது.ஆனால் எங்கேயுமே தீவிரவாதின்னா தாடி வைக்கிற கான்செப்ட்தான் சரியில்லை.BSF THEME SONG BY AR RAHMAN
இதில் பறக்கும் தேசிய கொடிக்கு கூடவே பறக்கும் தேசிய பற்று உணர்ச்சிகளை குறைந்த பட்சம் கூடங்குள மக்களுக்கும் ராமேஷ்வர மீனவர்களுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்.


ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஆர்மி னா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?....

மிக மேலோட்டமாகவே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. இந்தியன் ஆர்மி என்றதும் துடிப்பாக விறைப்பாக துப்பாக்கி ஏந்திய பல சினிமா கதாநாயகர்கள் நியாபகத்துக்கு வரும்.உண்மைதான்.இவர்களை போன்று விறைப்பாக நிற்க்கும் இன்னும் பலரை உங்களுக்கு தெரியுமா? பொதுவாக காஷ்மீரில் உயிரிழக்கும் வீரர்களை நமது செய்தியாளர்கள் பாதுகாப்புப்படையை சேர்ந்த இருவர் பலி என்ற அளவோடு முடித்து விடுவார்கள்.காஷ்மீர் போன்ற பதட்டமான இடங்களை ஆர்மி மட்டுமே காப்பதில்லை.அங்கு பலியாவது ஆர்மி வீரர்கள் மட்டுமில்லை.துணை ராணுவம் (para military force)என்று அழைக்கப்படும் எல்லை பாதுகாப்பு படை,சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படை போன்று பல்வேறு துணை ராணுவ வீரர்கள் பலியாகின்றனர்.செய்திகளில் பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் இவர்கள் ஆர்மிக்கு இணையான பணி புரிந்தும் ஆர்மிக்கு இணையான சலுகைகள் எதுவும் இவர்களுக்கு இல்லை என்பதே சோகமான உண்மை. எல்லை பாதுகாப்பு படை ஆர்மியை போல தனியே ஆபரேஷன் செய்யும் அதிகாரம் கொண்டதாகும்.காஷ்மீரிலிருந்து கீழே இறங்கும் ஆர்மியின் பட்டாலியன் அமைதியான நகரங்களில் தங்கள் ஹெட் குவாட்டரில் குடும்பத்தோடு வாழ...எல்லை பாதுகாப்பு படை இந்தியாவின் மற்றுமொரு எல்லையில் காவல் காத்துகொண்டிருக்கும்.இவர்களின் ஹெட் குவார்ட்டர் ராஜஸ்தான் போன்ற இடங்களில் குறைந்தது 150கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஊரிலிருந்து அழைத்து வந்த மனைவியை காண இரு வாரங்களுக்கு ஒருமுறை காய்கறி வாங்கவரும் வண்டியில் வந்து ஓரிரவு இருக்க மட்டுமே வாய்ப்பு அமையும். காஷ்மீர்,வட கிழக்கு மாநிலங்கள்,சட்டீஸ்கர்,இந்தியாவின் எல்லை பகுதிகள்,தேர்தல் காவல்,என அனைத்து பணிகளையும் புரியும் இவர்களுக்கு ஆர்மி போல சலுகை விலை கடைகள்,பணி முடிந்த பின் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை,இரத்த உறவுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை,ரயில் பயணங்களுக்கு டிக்கெட் எடுக்க தனி அலுவலகமோ,ரயிலில் தனி பெட்டியோ கிடையாது. இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு அதிக பட்ச தொகையை செலவிடும் அரசு, உள்துறை அமைச்சகதின் கீழே வரும் ஆர்மிக்கு இணையான பாதுகாப்பு அளிக்கும் எல்லை பாதுகாப்பு படைக்கு செய்யலாமா கூடாதா? நீங்களே சொல்லுங்களேன். இத்தனை வசதிகள் செய்தும் சத்தீஸ்கரில் பணி புரிய ஆர்மி மறுத்து விட்டது.crpf வீரர்கள் தினமும் பலியாகிறார்கள்.ஆர்மி வீரர்கள் எத்தனை வீரர்கள் எல்லையை பார்த்துள்ளனர்?கேட்டு பாருங்க சிரிப்பா சிரிக்கும் மானம். இது பற்றிய விரிவான பதிவு வெகு விரைவில்....