அடிக்கடி ஆங்கில செய்திகளில் IED வெடித்து ராணுவம் பலி.பொதுமக்கள் பலி னு படிச்சிருப்பிங்க....இந்த IED நாளைக்கு நம்ம போற ரயிலிலோ இல்லை தியேட்டரிலோ மார்க்கெட்டிலோ கூட வெடிக்கலாம்.IED பற்றிய இந்த பகிர்வு உங்களுக்கு ஏதேனும் ஒரு நாள் கட்டாயம் உதவலாம்.
ஏதேனும் அநாதை பெட்டியோ பையோ கிடக்கும் பட்சம் அதை நீங்கள் தவிர்ப்பது நலம்.ஏன் என்பது இந்த பதிவின் முடிவில் நீங்கள் உணர்வீர்கள்.
தொடுவது ,சோதனை போடுவது,வேடிக்கை பார்க்க கூடுவது போன்ற வில்லேஜ் விஞ்ஞானி செயல்கள் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இன்னொரு முக்கிய விஷயம் வதந்திகளை பரப்பாதீர்கள்.
பதிவர்கள் போட்டோ எடுக்கிறேன் என்று FLASH அடித்து விடாதிர்கள்..FLASH மூலமாக வெடிக்கவைக்கும் முறையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சி நடந்ததாக சொல்வார்கள்.(ரொம்ப ப(ட)யம் காட்டுறேனோ?)
ஏதேனும் அநாதை பெட்டியோ பையோ கிடக்கும் பட்சம் அதை நீங்கள் தவிர்ப்பது நலம்.ஏன் என்பது இந்த பதிவின் முடிவில் நீங்கள் உணர்வீர்கள்.
IED என்றால் IMPROVISED EXPLOSIVE DEVICE. ஆங்கிலம் தெரிந்தவங்களுக்கு இத விளக்கனும்னு அவசியம் இல்லை. வெடி குண்டுகளை வசதிக்குதக்க வாக்கா மாத்தி வெடிக்க வைக்கலாம் என்றால் அதுதான் IED.இதுக்கு இப்படித்தான் என்று எந்த எல்லையும் கிடையாது.எப்படினாலும் உருவாக்கிக்கலாம்.
இந்த IED குள்ளே நான்கு விசயங்கள் மிக அவசியமானது.அது என்னன்னா..
- EXPLOSIVE (வெடி மருந்து)
- DETONATOR (வெடி தூண்டி)
- POWER SOURCE (சக்தி உற்பத்தி ஸ்தானம்)
- INITIATION MECHANISM / SWITCH (துவக்கம் பொறி நுட்பம்)
இத பத்தி விவரமா பார்த்தா அப்புறம் நான் வெடிகுண்டு செய்ய கற்று கொடுத்ததா மேட்டராயிடும் அதனால இவ்வளவு விசயங்கள் போதும்.
இந்த IEDயை கிட்டத்தட்ட நான்கு வழிகளில் வெடிக்க வைக்கிறார்கள்
1.ANTI HANDLING MECHANISM:- இந்த முறை எப்படினா ஜெய்ஹிந்த் படத்துல,பேராண்மை படத்துல வைப்பான்களே கண்ணி வெடி..அதுதான் இந்த முறை.அந்த குண்டுகள் அமைந்துள்ள நிலையில் அழுத்தம் கொடுத்தல், இழுத்தல்,தள்ளுதல்,எறிதல்,இறுக்குதல் போன்ற ஏதேனும் மாற்றத்தை கொடுக்கும்போது இவைகள் வெடிக்கும்.(IN THIS TYPE OF MECHANISM ANY DISTURBANCE TO IED LIKE,SHIFTING,PULLING,THROWING,LIFTING,TILTING, AND PROBING MAY CAUSE DETONATION)
2.DELAY MECHANISM:- இந்த முறை நம்ம எம் ஜி ஆர் காலத்துல வைப்பாங்களே டைம் பாம் அதே மாதிரி.இப்ப இதுக்குன்னே பல சுவிட்சுகள் தயாரிக்கப்படுகின்றன.எடுத்துக்காட்டுக்கு ஒரு மெழுகுவர்த்தி எரிந்து உருகி ஒரு குறிப்பிட்ட நிலையில் அத னோடு இணைக்கப்பட்டிருக்கும் டேட்டனேட்டரை தீ தொடும்போது வெடிக்கும்.குறிப்பிட்ட நேரத்தில் லைட் எரியவும் வெடிக்கும் முறை,கெமிக்கல் முறைகள் என பல உண்டு.கற்பனை திறன் உள்ளவன் ஊகிக்க முடியா முறையில் குறிப்பிட்ட நேரத்தில் குண்டுகளை இந்த முறையின் மூலம் வெடிக்க வைக்கலாம்.
3.AMBIENT CONDITION MECHANISM:- இது க்ளைமேட் மாறுவதை வைத்து வெடிக்கப்படும் ஒரு முறையாகும்.குறிப்பிட்ட அளவு வெயில் சூடு தீண்டும்போதோ இல்லை கார் என்ஜின் சூடானபின்போ வெடிப்பது போல திட்டமிடப்படும்.
4.COMMAND FIRE MECHANISM:ரிமோட் மூலமாக ,மொபைல் போன் மூலமாக ,லேசர் லைட் ,மின்சாரம் மூலமாக குறிப்பிட்ட பாதுகாப்பான தூரத்தில் இருந்து குண்டுகளை வெடிக்க வைப்பதுதான் இந்த COMMAND FIRE மெக்கானிசம்.
இதுல முதலாம் மற்றும் நான்காவது முறைதான் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் மேல் பயன்படுத்தப்படுகிறது.இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள DELAY மெக்கானிசம் பொது இடங்களில் வெடிக்க வைக்க பயன்படுகிறது.
இந்த IEDகள் எவ்வித உருவமும் பெற்றிருக்கலாம்.உங்கள் கண்களில் இவை போன்ற குண்டுகள் வாகன ரூபத்திலோ சூட்கேஸ் ரூபத்திலோ காண கிடைக்கலாம்.கதாநாயகன் போல அவற்றை தொடுவதோ திறக்க முயற்சிக்கவோ போன்ற எந்த டகால்டி வேலையும் செய்யாமல் நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை அதை விட்டு தானும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி கொள்வது....அதற்கடுத்த பணி உடனடியாக காவல் துறைக்கு தகவல் சொல்வது.உங்களுக்கு பாம் டிஸ்போசல் டீமின் முகவரி அறிந்தால் அவர்களுக்கும் தகவல் சொல்வது.
இத்தோடு உங்கள் பணி முடிந்தது.அதற்க்கு மேல் பாம் டிஸ்போசல் டீம் அதை கவனித்து கொள்ளும்.படத்தில் வருவது போல "பச்சை" வயரை கட் பண்ணும் ஒலக நாயகன்(வக்கிரமான சீன்-உங்களில் ஒருவன்) முறையெல்லாம் செல்லாது செல்லாது. .வயரை கட் பண்ணா வெடிக்கும் குண்டுகள் சர்வ சாதாரணமா வருகிறது.இது போல விழிப்புணர்வு இல்லாமல் என்னுடன் பயிற்சி எடுத்த தமிழக பேட்ஜ் மேட் உட்பட சிலர் காஷ்மீரில்,சட்டிஷ்கரில் பலியாகியுள்ளனர்.
மறந்து விடாதிர்கள் அநாதை பொருட்களை கண்டால் உங்கள் வேலை காவல்துறைக்கு தகவல் சொல்வதும்,அந்த இடத்திலிருந்து தூரம் போவதும் மட்டுமே.முடிந்தால் அந்த பக்கம் செல்பவர்களை தடுக்கலாம்.
கூட்டம் கூடாதீர்கள்...இது அதிகபட்ச சேதத்தை விளைவிக்கும்.
கூட்டம் கூடாதீர்கள்...இது அதிகபட்ச சேதத்தை விளைவிக்கும்.
தொடுவது ,சோதனை போடுவது,வேடிக்கை பார்க்க கூடுவது போன்ற வில்லேஜ் விஞ்ஞானி செயல்கள் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இன்னொரு முக்கிய விஷயம் வதந்திகளை பரப்பாதீர்கள்.
பதிவர்கள் போட்டோ எடுக்கிறேன் என்று FLASH அடித்து விடாதிர்கள்..FLASH மூலமாக வெடிக்கவைக்கும் முறையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சி நடந்ததாக சொல்வார்கள்.(ரொம்ப ப(ட)யம் காட்டுறேனோ?)
சென்னை சென்ட்ரலில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக கடை வரிசையில் BOMB DISPOSAL SQUAD பார்த்ததாக நியாபகம்.
மும்பை BOMB DISPOSAL SQUAD
| சென்னை விமான நிலையம் Office of the Bureau of Civil Aviation Security (B.C.A.S)/ Bomb Disposal & Detection Squad (B.D.D.S) | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
டெல்லி Bomb Disposal Squads
| ||||||||||||||||||||||||||||||||||||
| Name | Phone No. |
| Bomb Detection & Disposable Squad | 22080501 |
| Bomb Detection & Disposable Squad | 22650707 |
| Bomb Blast.Cell | 2262093 |
இத்தனை எண்ணும் நியாபகம் இருக்க அவர்கள் காதலர்கள் இல்லையே .....எனவே நீங்க அவசர உதவி 100க்கு அழைத்தால் போதும்.எளிதாக தகவல் அளித்திடலாம்.கூடவே ஆம்புலன்ஸ் 108,தீயணைப்புத்துறைக்கும் (101)௧தகவல் தரலாம்.தவறே இல்லை.
தங்களின் கேள்விகளை,கருத்துக்களை வரவேற்கிறேன்.உங்கள் கேள்விகள் மூலமாகத்தான் இதை போல பல பதிவுகள் வெளிவரும்.
| Tweet | |||||
.gif)

ஹ்நல்ல வித்யாசமான விழிப்புணர்வு பதிவு... நிச்சயம் அனைவரும் அறிந்து பயனடைய வேண்டிய தகவல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சுடர் விழி...
பதிலளிநீக்குதெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
பதிலளிநீக்குஉங்கள் பாணியில் விளக்கமும் அருமை...
நன்றி...
tm3
நன்றி அண்ணா....தம க்கு சிறப்பு நன்றி அண்ணா..
நீக்குஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள விழிப்புணர்வு மிக்க செய்திகள்.மேலும் இது போன்ற அரிய தகவல்களை தருமாறு வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துத்துக்கும் நன்றி barari அவர்களுக்கு நன்றி..தொடர்ந்து இது போல தகவல்கள் வரும் நன்றி..
நீக்குபலருக்கும் பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ....
நீக்குஅருமையான விழிப்புணர்வு பதிவு அண்ணா ... எழுதினா இப்படி எழுதுங்கா, இன்ட்ரெஸ்டிங்
பதிலளிநீக்குஇப்படி எழுதுனா ஒரு பய படிக்க மாட்டுக்கான்....இந்த வரலாறு கூட இப்படித்தான் எழுத சொல்லுச்சு..ஆனா படிக்கவே வரல.....என்ன கொடும சீனு இது?
நீக்குnalla pakirvu sako..
பதிலளிநீக்குநன்றி சீனி கவிதை சகோ...
நீக்குஏதோ திகில்கதை வாசிக்கிற மாதிரியே இருந்தது.... (தலைப்புல எச்சரிக்கை கொடுங்கப்பா :((... எங்களுக்கெல்லாம் ரொம்ப இளகிய மனசு :))
பதிலளிநீக்குநீங்க பயந்துட்டிங்கனு நான் நம்பிட்டேனுங்க.....குண்டுகள் உறுதியான கற்களை உடைக்கலாம் இளகிய நீரை அல்ல....:):)
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி பதினாறு....
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குno muslims commented for this post?
பதிலளிநீக்குwrite something good about muslims whole gang will be here praising you like Mohammed
ஹா ஹா ஹா ஏன் உங்களுக்கு ஏதாவது "அரிப்பு?"
நீக்கு