ஒவ்வொரு ரயில் பயணங்களிலும் TTE யை சந்திக்கிறேனோ இல்லியோ கட்டாயம் நான் சந்தித்த மனிதர்கள் அரவாணிகள். சமூகத்தின் பார்வையில் கேலியாகவும்,விபச்சாரமாகவும் மட்டுமே கவனிக்கப்படும் இவர்களை நீங்கள் அங்கீகரிக்காத வரை நீங்களும் நானும் ஒரு வகையில் சமூக விரோதிகளே.
இனி கவிதை (??!!) இந்த கவிதை அரவாணிகளை பார்த்து புற்கள் பேசுவதாக புனையப்பட்டுள்ளது.( புரியணும்லா )
பனிப்பூக்கள் என்மேல் படுத்துறங்கும்
மழைத்துளி சற்று இறங்கி பார்க்கும்
சுள்ளென்ற வெயிலும்
சுகமாய் பரவிக்கொள்ளும் நான் புற்கள்.
ரோஜாப் பெண்ணின் முகமில்லை
முள்ளைப் போன்ற முரடன் இல்லை
இறைவன் படைப்பில் நான்
பாதம் பதித்துப்பார் கிச்சு முச்சு
படுத்து கொஞ்சம் உறங்கு-
நான் பட்டு மெத்தை
விலை என்ன கேக்காதே
நான் செல்லாக்காசு!
புயலுக்கும் தென்றலுக்கும் ஈடு செய்வேன்
வெள்ளத்து நீருக்கும் விடை சொல்வேன்
புணர்கின்ற அளவு ஏனோ
யாரும் புரிவதில்லை.
பூமி பெண்ணின் பச்சைதாவணி என்றாலும்
பூலோகம் மதிக்கா எச்சை துணி
எறும்பும் புழுவும் ஏறி நின்று
கொக்கரிக்கும்!
மதித்து நடப்பவர் யாருமில்லை
கூட்டமாய் இருந்தும்
தனியே தவிக்கிறேன்
உனக்கும் எனக்கும் பேதமென்ன அரவாணா?
பூஜையில் இல்லையென்றாலும்
சூடும் பூக்களோடு சூடிக்கொள்
என்னை நீயாவது...!!
-இப்படிக்கு புற்கள் (2001)
2001ல் எழுதிய இந்த கவிதைக்கு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய மறந்துடாதிங்கப்பு.....
கொசுறா ஒரு சின்ன கவிதை(?)
ஏய் யாரங்கே
கண்தானம் செய்யுங்கள்
இந்த இறைவனுக்கு!!
-2001
2001ல் எழுதிய இந்த ஒன்றே கால் கவிதைக்கு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய மறந்துடாதிங்கப்பு..... இந்த சொல் குத்தம் பொருள் குத்தம் எதுனாச்சும் கண்பிடிச்சிங்கனு வைங்க.அதுக்கெல்லாம் நண்பன் ஹாரியின் கேள்வி பதில்கள் பதிவுகளில் என் சார்பில் தம்பி சீனு விளக்கம் தருவார்.(சீனு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)
| Tweet | |||||
.jpg)

கவிதா கவிதா ரொம்ப நல்ல இருக்குன்னா....
பதிலளிநீக்குதாமத வருகைக்கு பொருத்தருள்க....
உணர்வுப் பூர்வமான வரிகள்..
அவர்களுக்கான தலம் இன்று எங்கும் அமைக்கப் படவில்லை என்பது வேதனையான விசயமே...
கடவுளுக்கு கண் தானம் செய்யச் சொல்லும் கவிதை அருமை...
//சீனு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//
அண்ணே ஒரு பிரபல பதிவர் ( ஹாரி) மற்றொரு பிரபல பதிவரை( சதீஷ்) பேட்டி எடுத்தால் பதில்களையும் அந்த பிரபலம் தான் கூற வேண்டும்.... அது தானே ஹாரி போன்ற பிரபலங்களுக்கு அழகு
அண்ணன் எஸ் டி டி மற்றும் ஹாரி எங்கிருந்தாலும் வருக சீனு பாக் டூ தா பார்ம்
அவர்ட்ட என்னோட பெட்டிக்கு அழைப்புவிடவில்லை தம்பி.இங்கே இருக்குற குறிப்பிட்ட மாநில பசங்ககிட்ட உங்க கேள்விகளுக்கு பதில் வாங்கி தர்றேன்னு சொன்னேன்,அவ்வளவுதான்,
பதிலளிநீக்குபிரபலமா? பிராப்ளமா? நீ சும்மா இரு ராசா...
##சீனு பாக் டூ தா பார்ம்## எல்லாரோட பார்மையும் பேக் பண்ணிடுவேன்னுதானே சொல்றீங்க ராசா...நமக்கு புரிஞ்ச ஆங்கிலம்பா!!!
//கவிதா கவிதா //
நீக்குயாரு தம்பி இந்த பொண்ணு..
//மாநில பசங்ககிட்ட உங்க கேள்விகளுக்கு பதில் வாங்கி தர்றேன்னு சொன்னேன்,//
நீக்குமோசமான தகவல் என்ன என்றால் இது குறித்து எனக்கு கிட்டத்தட்ட கருத்துரையில் வெளியிட முடியாத ஆபாச வார்த்தைகளே வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன.. சி.பி க்கு மூன்று பதிவுகள் தேத்தும் வண்ணம் கேள்வி வந்து விட்டது.. ஆனால் இந்த பகுதிக்கு மிக அபத்தம் நிறைந்த கேள்விகள் தான் வருகின்றன.. தம்பி அண்ணா (தம்பியா அண்ணாவா.. ஹி ஹி) உங்களுக்கு வந்த கருத்துரைகள் தான்.. என்ன கொஞ்சம் நாலு ஸ்பூன் கெட்ட வார்த்தை அரை டி காசன் ரொம்ப ஆபாச வார்த்தை அதிகம் .. அப்படி தான் வருகிறது.. இப்போது வரை.. நான் நாலு பதிவு எழுதி விடுவேன் அவ்வளவு பந்தி அமைப்பில் கருத்து வருகிறது.. சோ சேட்..
எதுனாலும் சரி இந்த கைப்புள்ளை களத்துல இறங்கிட்டான்னா ரத்தம் பார்க்காம வரமாட்டான்.உடனடியா அந்த நாலு ஸ்பூன் அறை டீ ஆபாசங்களை சூடு ஆறும் முன்னேயே தர வேண்டுகிறேன்.குறைந்த பட்சம் கீழே பின்னூட்டத்தில் தரவும்..எனக்காவாது ஒரு பதிவு தேறும்...:)
நீக்குஅப்படியே அனுப்பிவிடு ராசா...ஆவலா இருக்கேன்.கெட்ட வார்த்தைகளை கேட்டு வாங்கின முதல் ஆளு நான்தானோ?டீ யை சீக்கிரம் அனுப்புங்க ஹாரி..
கவிதா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...
நீக்குவருத்தப்பட வைக்கும் வரிகள்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா....
நீக்குkalakkam thanthathu varikal....
பதிலளிநீக்குyosikkanum...
வணக்கங்களும் வாழ்த்துக்களும் நண்பரே ...
பதிலளிநீக்குஇயல்பான சொற்களை கொண்டு அவர்களின் வாழ்வியலை பதிவு செய்து உள்ளீர்கள்