ஆயுத பூஜை....பஞ்ச பாண்டவர்கள் வெட்டியா சீட்டாடி தோற்ற பிறகு யாருக்கும் தெரியாம கொஞ்ச நாள் பூவுலகுக்கு டேக்கா கொடுத்துட்டு காட்டுக்கேள்ளே போய் குந்திகிட்டாங்களாம்.அந்த நாட்களில் அவங்க தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் (வன்னி என்றால் மரமும் வருகிறது ...ராமதாஸ் சரித்திரப் புகழ் போல) மறைத்து வைத்து இருந்தார்களாம்.
அப்பால திருப்பி பூவுலகிற்கு வந்தப்ப அந்த ஆயுதங்களை எடுத்து பூஜை பண்ணின்னாங்களாம்.அதான் ஆயுத பூஜையாம்.இப்படித்தான் ஆயுத பூஜைனு பேர் வந்ததாம் .
இன்னைக்கு பைக்,சைக்கிள் னு எல்லாமே ஆயுதம் ஆகி விட்டது.சும்மா வளைச்சி வளைச்சி பூஜைதான்.கொஞ்ச நேரம் நாம அசையாம இருந்தா நம்மளையும் பூஜை பண்ணி பொலி கொடுத்துருவாங்க போல..பயபுள்ளைங்க எலிய கூட விடலை பட்டயடிச்சு பாலாபிசேகம்தான்.
சட்டம் போட்டு சட்டம் காக்கிற (?) காவல் துறை துருப்பிடிச்ச ரத்தம் நனைந்த மொத்த துப்பாக்கியையும் எடுத்து பூஜை பண்ணுறாங்க.(பாவம் தொலைக்கவா?)அரசு அலுவலகத்தில் இவையெல்லாம் தடையாம்..சொன்னா கேட்டால்தானே?
பக்தி பக்தி பக்தி எவ்வளவு கண்ணை மறைச்சாலும் சில இடங்களில் சில பொருட்களில் மட்டும் கரெக்ட்டா கண்ண தெறந்துகுது.....அட ஆமாங்க ,இவ்வளவு தீவிரம் காட்டுற பூஜையிலே பாரபட்சம் பார்த்தா எப்படிங்க நியாயம்?
நமக்கு என்னானா எதை எல்லாமோ பூஜை பண்ணுறாங்க நம்மள சுத்தமா வைச்சிருக்கிற இந்த செருப்பு,துடைப்பம்,இதுக்கும் பூஜை பண்ணினா என்ன தப்பு? சுத்தம் வேணும் ஆனா சூத்திரன் கொண்ட ஆயுதம் வேண்டாமோ?
இதெல்லாம் நீங்க வேணும்னு ஒதுக்கலைனு எனக்கு தெரியுது சார் ...அதனால் என்ன இன்னைக்கு முதல் இவைகளுக்கும் இடப்பங்கீடு தரலாமே...என்னது அசுத்தமா இருக்குமா?உங்க வண்டி மட்டும் எத்தனை இடத்துல ஏறி இறங்குது? அட வண்டிய விடுங்க நம்மளையே எடுத்துப்போம் ....அவ்வளவு சுத்தமா நாம?
ஜனவரில போகி பண்டிகைன்னு சொல்லி இவைகளை கொளுத்துவதைதானே இத்தனை நாளாய் செய்துள்ளோம் நண்பர்களே?
ஏன் இந்த ஓரவஞ்சனை?
உங்களிடம் நேர்மையான பதில் இருந்தால் பின்னூட்டத்தில் தரவும்.இல்லைனா ஓட்டுப் போடவும்.
இந்த படத்தை முகநூலில் தந்து பதிவை தூண்டிய தியோடர் E.ஜான் அவர்களுக்கு நன்றி.
அப்பால திருப்பி பூவுலகிற்கு வந்தப்ப அந்த ஆயுதங்களை எடுத்து பூஜை பண்ணின்னாங்களாம்.அதான் ஆயுத பூஜையாம்.இப்படித்தான் ஆயுத பூஜைனு பேர் வந்ததாம் .
இன்னைக்கு பைக்,சைக்கிள் னு எல்லாமே ஆயுதம் ஆகி விட்டது.சும்மா வளைச்சி வளைச்சி பூஜைதான்.கொஞ்ச நேரம் நாம அசையாம இருந்தா நம்மளையும் பூஜை பண்ணி பொலி கொடுத்துருவாங்க போல..பயபுள்ளைங்க எலிய கூட விடலை பட்டயடிச்சு பாலாபிசேகம்தான்.
சட்டம் போட்டு சட்டம் காக்கிற (?) காவல் துறை துருப்பிடிச்ச ரத்தம் நனைந்த மொத்த துப்பாக்கியையும் எடுத்து பூஜை பண்ணுறாங்க.(பாவம் தொலைக்கவா?)அரசு அலுவலகத்தில் இவையெல்லாம் தடையாம்..சொன்னா கேட்டால்தானே?
பக்தி பக்தி பக்தி எவ்வளவு கண்ணை மறைச்சாலும் சில இடங்களில் சில பொருட்களில் மட்டும் கரெக்ட்டா கண்ண தெறந்துகுது.....அட ஆமாங்க ,இவ்வளவு தீவிரம் காட்டுற பூஜையிலே பாரபட்சம் பார்த்தா எப்படிங்க நியாயம்?
நமக்கு என்னானா எதை எல்லாமோ பூஜை பண்ணுறாங்க நம்மள சுத்தமா வைச்சிருக்கிற இந்த செருப்பு,துடைப்பம்,இதுக்கும் பூஜை பண்ணினா என்ன தப்பு? சுத்தம் வேணும் ஆனா சூத்திரன் கொண்ட ஆயுதம் வேண்டாமோ?
இதெல்லாம் நீங்க வேணும்னு ஒதுக்கலைனு எனக்கு தெரியுது சார் ...அதனால் என்ன இன்னைக்கு முதல் இவைகளுக்கும் இடப்பங்கீடு தரலாமே...என்னது அசுத்தமா இருக்குமா?உங்க வண்டி மட்டும் எத்தனை இடத்துல ஏறி இறங்குது? அட வண்டிய விடுங்க நம்மளையே எடுத்துப்போம் ....அவ்வளவு சுத்தமா நாம?
ஜனவரில போகி பண்டிகைன்னு சொல்லி இவைகளை கொளுத்துவதைதானே இத்தனை நாளாய் செய்துள்ளோம் நண்பர்களே?
ஏன் இந்த ஓரவஞ்சனை?
உங்களிடம் நேர்மையான பதில் இருந்தால் பின்னூட்டத்தில் தரவும்.இல்லைனா ஓட்டுப் போடவும்.
இந்த படத்தை முகநூலில் தந்து பதிவை தூண்டிய தியோடர் E.ஜான் அவர்களுக்கு நன்றி.
| Tweet | |||||


ரொம்ப நியாயமான யோசனை .
பதிலளிநீக்குஇவைகெல்லாம் யாரும் பூஜை 'போடுவதில்லை' என்று நினைக்கிறீர்களா...? இல்லை தெரியவில்லையா...? Link ஏதும் வேண்டுமோ...?
பதிலளிநீக்குஉலகத்திலேயே அசிங்கமான, அழுகிப் போகிற, வெறும் சாம்பல் ஆகப் போகிற உடம்பு... /// அவ்வளவு சுத்தமா நாம? ///
மனதையும் அப்படி வைத்துக் கொண்டால் எப்படி...? மனதை எதனால் சுத்தம் செய்வது...?
தனிமனித ஒழுக்கம் வளர வேண்டும்... அதற்குள் ஏன் இந்த ஓர வஞ்சனை...?
லிங்க் கொடுங்க அண்ணா,அதுவும் இந்த பூஜையில உண்டா அண்ணா?ஏன்னா நான் எங்கேயும் பாக்கலை..ஒரு வேளை இவைகள் பிரபலம் இல்லியோ?உங்க மூலம் அந்த பூஜைகள் பிரபலமாகட்டுமே...
நீக்குதனிமனித ஒழுக்கம் ....முழு மனதோடு வரவேற்கிறேன்.தனி மனித ஒழுக்கத்திற்கு ஒரு பதிவு என் தம்பி கேட்டிருக்கிறான்.நீங்க எழுதுனா சரியாக இருக்கும்.....எதிர்பார்க்கிறேன்.
mmmm....
பதிலளிநீக்குyosikka koodiya visayam....
பகுத்தறிவு என்பது ஆன்மீகத்துக்கு புறம்பானது அல்ல,,,
பதிலளிநீக்குஆன்மிகம் பகுத்தறிவை மட்டுப்படுத்துகிறது என்பது சரிதானா?
நீக்குஅண்ணன் அவர்களே இதோ எனது பதில் :
பதிலளிநீக்குபழையன கழித்தல் தானே போகி அதை தானே போகியில் செய்கிறோம் அல்லது ஆத்திகர்கள் செய்கிறார்கள் ( நான் உட்பட)
அதற்காக இயற்கையை மாசுபடுத்தும் செயலில் எனக்கு உடன்பாடு இல்லை, சங்க காலத்தில் எப்படி இருந்தது இன்று எப்படி மருவியது என்ற அளவில் எனது ஆராய்ச்சியும் இல்லை
பாடப் புத்தகத்துடன் ஏன் செக்ஸ் புத்தகத்தையும் சேர்த்து பூஜை செய்யவில்லை என்று கேட்பீர்களா?
இதன் பெயர் பகுத்தறிவு என்றல் எனக்கு அது இல்லை
செருப்பு, பியிந்த விளக்குமாறு இவற்றின் பயன்பாடுகள் வேறு.
இதே கேள்வி வேறு தலத்தில் வேறு இடத்தில கூறி இருந்தால் நான் பதில் கூறாமல் போயிருப்பேன், காரணம் ஆத்திகமும் நாத்திகமும் அதனதன் எல்லையை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை, இதனால் என்னைப் பொறுத்த வரை இது கால விரயம்...
எவ்வளவு புத்திசாலி தனமாக நீங்கள் அனைவரும் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டல் என் பதில் எப்போதும் ஒன்று தான்
"தத்வமசி அகம்பிரமாம்சி "
உள் கடந்தால் நானும் கட வுள்
என் உள் கடக்க நான் தேர்ந்த பாதையில் கொண்டாடங்கள் இருந்தால் கொண்டாடுவேன். யார் எப்படி எதிர்த்தாலும்
கடவுளும் மதமும் எனக்கு தவறான பாதையை காண்பிக்கவில்லை என்னும் பொழுது கடவுளையும் மதத்தையும் நான் விரும்புகிறேன்
சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்கள் செக்ஸ் புத்தகமாக அவதானிக்கப்படுவதுதான் இந்த சமூகத்தின் சாபம்....
நீக்குஉடன்பாடில்லை என்றாலும் போகி தொடரும் ஏனென்றால் அது ஒரு ஆன்மிக சடங்கு...அப்படித்தான் நடக்கும்...அப்போதெல்லாம் உள் கடக்காத நானும் கடவுள் இப்போது வந்து விடுவது ஆச்சரியமே..
கடவுளாதலை விட சக மனிதனை மதிக்கவும் சமமாக பாவிக்கவும் மட்டுமே அந்த கடவுளின் ஆசையாக இருக்க கூடும்.அதைத்தான் பல மந்திரங்கள் திரித்து விடுகின்றன."கடவுளை மற மனிதனை நினை"
விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் கடைபிடித்தலுக்கும் அதன் மூலம் யாரையோ சிறுமைபடுத்துவதும் நடக்குமாயின் அப்படி ஒரு கடவுளோ அதன் பாதையோ அவசியம் இல்லை.
எல்லைகளை கடப்பது இல்லை? ஒரு தீவிர மதவாதிதான் இன்று இப்படி பதிவெழுதுவது....ஒரு தீவிர நாத்திகவாதிதான் இன்று இஸ்லாமியத்திர்க்கு மாறியுள்ள பெரியார் தாசன்....
சிறப்பான ஆரோக்கியமான கருத்திற்கு நன்றி தம்பி சீனு..
சக மனிதனை மதிக்க மதம் வேண்டாம் அண்ணா, ஆனால் விழாக்களுக்கு மதம் வேண்டும் கலாச்சாரம் வேண்டும், கலாச்சாரங்களே மதங்களாக மருவி கூட இருக்கலாம்...
பதிலளிநீக்குசுத்தம் செய்யும் பொருட்களை கும்பிட வில்லை என்று யார் சொன்னார்கள் அண்ணா, அப்படி என்றல் தென்காசி நகராட்சியில் நான் பார்த்ததை மாயை என்று சொல்லவா, அவரவர் தொழில் சார்ந்த விசயங்களை கும்பிடுகிறார்கள், செருப்பில் ஒட்டி இருப்பது அசுத்தம் செக்ஸ் புத்தகத்தில் ஒட்டி இருப்பது அசுத்தம் என்ற அர்த்தத்தில் நான் கூறினேன், இப்போது விளக்கமும் கொடுத்து விட்டேன்.
//விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் கடைபிடித்தலுக்கும் அதன் மூலம் யாரையோ சிறுமைபடுத்துவதும் நடக்குமாயின் அப்படி ஒரு கடவுளோ அதன் பாதையோ அவசியம் இல்லை.//
இங்கே புரிதல் வேறு, ஒருவேளை அப்படி சிறுமைப்படுத்தும் சிலர் இருப்பதால் மதத்திற்கு அழிவும் வந்துவிடாது..
செருப்பையும் விளக்குமாறையும் யாரும் வீட்டினுள்ளே கூட அனுமதிப்பது இல்லை, அதற்காக அந்த தொழில் புரிபவர்களை இங்கே இழுக்க வில்லை, அவர்களும் செருப்பை எங்கே விடுவார்கள் என்பது எனக்கு தெரியும். தொழில் வேறு உபயோகம் வேறு என்ற அளவில் மட்டும் பாருங்கள். எனது தொழில் கணினி அதற்காக நான் கணினியைக் கும்பிடவில்லை, புத்தகங்களை மட்டுமே கும்பிட்டேன்,
செருப்பும் வாரியலும் இடம் பெறவில்லை என்பதற்காக மதம் ஒரு சமூகத்தை ஓரம் கட்டுகிறது என்ற பார்வையில் முற்றிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
##இங்கே புரிதல் வேறு, ஒருவேளை அப்படி சிறுமைப்படுத்தும் சிலர் இருப்பதால் மதத்திற்கு அழிவும் வந்துவிடாது..##
பதிலளிநீக்குசிலர் இல்லை தம்பி..இன்றும் என்னோடு பணி புரியும் PT INSTRUCTOR மனைவி தனக்கு பக்கத்து வீட்டில் உள்ள தமிழ் குடும்பத்தில் தன்னை உயர்ந்த ஜாதியாக கூறி வாழுகிறார்.
எனக்கு வீடு மறுத்த சம்பவமும் உண்டு..
சாதி பார்த்தல் என்றால் வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது என்ற நிலையோடு முடிவது அல்ல..அந்த பெண்ணுக்கு ஏன் தன் ஜாதியை பொய் சொல்லி வாழ வேண்டும்?
யாரையோ கேவலப்படுத்தும் கலாச்சாரம்தான் மதம் என்றால் அந்த கலாச்சாரத்தை தீயிட்டு கொளுத்திடலாம்.
##செருப்பும் வாரியலும் இடம் பெறவில்லை என்பதற்காக மதம் ஒரு சமூகத்தை ஓரம் கட்டுகிறது என்ற பார்வையில் முற்றிலும் எனக்கு உடன்பாடு இல்லை.##
தம்பி......என் ஊருக்கு வந்த காஞ்சி சாமி தரையில தன காலை வைக்கலை..மாலையை கைல வாங்காம கொம்புல வாங்குனார்?ஏனாம்? ஒரு சமூகம் கடவுளோடு நெருங்கியும் பல சமூகங்கள் வெளியேயும் நிற்பதுதான் உண்மையான நிலையே...
செக்ஸ் என்பது ஒரு இயல்பான ஒன்று..அதை தவறாக ஊக்கப்டுத்தும் சரோஜா புத்தகங்கள் அசிங்கம் என்றால்......கடவுள் என்பது சரியான ஒன்றே அதை தவறாக ஊக்கபடுத்தும் மதங்களும்,வழிநடத்துபவர்களும் அசிங்கம் இல்லையா?
இப்போதும் சொல்கிறேன் அண்ணா புரிதல் வேறு
பதிலளிநீக்குஒரு குறிப்பிட்ட சமுகம் தன இந்து மதம் என்று நினைத்துக் கொண்டு உள்ளீர்கள். என் போன்றவர்களுய்ம் அந்த மதத்தில் இருக்கிறோம் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள், அப்படி என்றால் என் மனதில் மனிதம், இல்லை என்கிறீகளா? குறிப்பிட்ட சமுதாயம் எனக்கும் பிடிக்காது ஆனால் எல்லாரும் இல்லை, என்னை அவன் வீட்டில் அமர வைத்து சாப்பாடு போடும் அந்த சமுகத்து நண்பன் எங்களுக்கு உள்ளான், எங்கள் நட்பில் அணைத்து ஜாதியும் உண்டு, நாங்கள் எங்கு சென்றாலும் பெரும்பாலும் ஒன்றை தன செல்வோம்.
//தவறாக ஊக்கப்டுத்தும் சரோஜா புத்தகங்கள் அசிங்கம் என்றால்.....// அப்படி என்றால் அந்தப் புத்தகத்தை பொதுவில் நான் படித்தால் ஒத்துக் கொள்வீர்களா, அதில் இருக்கும் வக்கிர வார்த்தைகளுடன் படத்தில் சேர்க்கலாம் என்று சொல்கிறீகளா, நயம் என்பது வேறு நஞ்சு என்பது வேறு,
மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை வருகிறேன், மதத்தை அல்ல, செக்ஸ்சில் இருக்கும் வக்கிரத்தை வருகிறேன் செக்ஸ்சை அல்ல...
காஞ்சி சங்கரச்சாரி மட்டுமே ஹிந்து மதம் இல்லை, விவேகனதரும் ராமக்ரிஷ்ணரும் சாய்பாபாவும் அப்படி இருந்தது இல்லை, அவர்களை மட்டுமே நான் மனித தெய்வங்களாக மதிக்கிறேன். வேறு யாரையும் அல்ல.
அந்த குறிப்பிட்ட சமூகம்தான் வழிகாட்டி...இன்னைக்கு பல கோவில்களில் மற்ற சமூக பூசாரிகள் பூஜை செய்ய நீதிமன்றத்தில் தடை வாங்கி உள்ளது அந்த சமூகம் தான்.அதை பொறுத்தே பூஜைகளும் வழிபாடுகளும்....ஹையங்கார் என்று மற்றவர்களை கீழே தள்ளுவதும் அதுதானே....
பதிலளிநீக்குஒரு பக்கம் உயர் ஜாதி இந்துக்களின் மனவியல் துன்புறுத்தல்,மறுபக்கம் ஆதிக்க சாதிகளின் வன்முறைகள்....இத்தனையும் சுமந்து நிற்கும் இந்து மத தாழ்த்தப் பட்டவர்கள் ..இவற்றை சாடாமல் பெருமை பேசும் மனிதர்கள்..
தம்பி நீ விவேகானந்தா போன்றவர்கள் விதிவிலக்குகள்.....இன்னும் பல கொடுமைகள் நடக்கும் போது கிருஷ்னாய்யரும்,ஞானியும் குரல் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
நட்பை மீறி இன்னும் நெருங்கட்டும் சாதிகள்.....அப்போது கட்டாயம் வரவேற்கிறேன்.
சரோஜா புத்தகத்தை வைத்து இன்னும் பதில் சொல்லலாம் ....சீனு தம்பி..இது ஒதுக்குபவர்களுக்கு,அதை பற்றி வழி நடப்பவர்களுக்கு மட்டுமே ..நீ சமத்துவமா நடக்கிறாய் என்றால் இந்த பதிவை இல்லை இது போன்ற பதிவை நீ கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை.
கர்ப்பகிரக பிரவேசங்கள் அனைவருக்கும் சமமாகும் போது இந்து மதத்தை மதிக்கிறேன்...அது வரை என்னால் சம்மதிக்க முடியாது தம்பி மன்னிக்கவும்..
எனக்கும் நண்பர்கள் உள்ளார்கள்......அதுவும் படையில் ....பல சடங்குகளை தொலைத்து விட்டார்கள்.ஆனாலும் கோவில் பூஜையை விடவில்லை.
செக்ஸ் ஆபாசம் என்றால் ஆண்டாள் பாட்டுகளும் தான்!
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் பகவான் வீதி உலா போறதும் தான்!
அவ்வளவு ஏன் நாம் கும்பிடும் சாமிகள் அடிக்காத செக்ஸ் லூட்டியா? நாமெலாம் செக்ஸ் விஷயத்தில் நம்ம கடவுள்கள் முன்னால் ஜூ ஜூ பீ!
உண்மை நண்பரே..நம்மைத் தாங்கும் செருப்பை விடவும்,நம்மைக் தூய்மையாய் காக்கும் துடபத்தை விடவும் பூஜைக்கு ஏற்ற பொருள் வேறில்லை..
பதிலளிநீக்குசொன்னா கேட்டாதானே...செருப்புக்கும் துடைப்பத்துக்கும் உள்ள நிலையாக இதை விட்டுவிட முடியாது....அதை பயன்படுத்தும் மக்களையும் ஒதுக்கியே வைத்துள்ளனர்....அதன் பொருட்டே இந்த பதிவு...நன்றி அண்ணா...
நீக்குஉண்மை நண்பரே..நம்மைத் தாங்கும் செருப்பை விடவும்,நம்மைக் தூய்மையாய் காக்கும் துடபத்தை விடவும் பூஜைக்கு ஏற்ற பொருள் வேறில்லை..
பதிலளிநீக்குOk brother. I agree. But as a Muslim, you do not have the right to say this.
பதிலளிநீக்குThanks for understanding Hindu's sentiments.
யோவ் நம்புங்கய்யா நான்ம முஸ்லிம் இல்ல.....இப்ப கூட இஸ்லாம்தான் இந்தியாவுக்கு தீர்வான்னு எழுதப்பட்ட பதிவில் எதிர் கருத்து போட்டுருக்கேன்....
பதிலளிநீக்குநன்றி நண்பரே