Translate

புதன், 17 அக்டோபர், 2012

விழுந்து கிடக்கும் "குடிமகன்கள்"-கைவிடப்பட்ட குடிமகன்கள்

சாலையோரம் விழுந்து கிடக்கும் மனிதர்களை வெகு சுலபமாக குடிகாரனாக்கி விடுவதில் நமக்கு அப்படி ஒரு சுகம்.அது ஒரு மறைமுகமான எஸ்கேப்பிசம் என்று மனசுக்குள் தோன்றினாலும் அதைத்தான் தொன்று தொட்டு செய்து வருகிறோம்.

எனது பக்கத்து வீட்டில் உள்ளவர் வயது 60 இருக்கும்...தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் .அந்த வயதிலும் மனைவியோடு மிக காதலாக வாழ்ந்து வந்தவர்.படிக்கட்டில் அமர்ந்து தன் மனைவிக்கு பேன் எடுத்து கொண்டே பேசி கொண்டிருப்பார்.

காலையில் தாமிரபரணிக்கு சென்று குளித்து விட்டு துணிகளை துவைத்து பொறுப்பாக வரக்கூடியவர் நேரம் கடந்தும் வரவில்லை. தேடி சென்ற போது அவர் சாலையோரம் விழுந்து கிடந்திருந்தார்.பசியினாலும்,LOW BPயினாலும் சாலையோரம் மயங்கி விழுந்தவரை யாரும் கவனிக்கவில்லை.கவனித்திருந்தாலும் காலையிலேயே குடிச்சிட்டு கிடக்குறத பாருன்னு சொல்லி கடந்து செல்வோமே தவிர உண்மை நிலையை அறிய கூட முயலப்போவதில்லை.அப்படியாக கைவிடப்பட்ட அவர் அதே இடத்தில் இறந்தும் போனார்.

சில வருடம் முன்பு எனது தந்தை தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இதே LOW BP காரணத்தால் மயங்கி விழுந்தார்.மதியம் விழுந்த அவரை அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் யாரும் சீண்ட வில்லை.அனைவருக்கும் அவர் ஒரு குடிகாரன் குடிச்சிட்டு கிடக்குறான்.அவ்வளவுதான்.மாலை தானாக எழுந்து தன்னைத்தானே சுதாரித்து வீடு வந்து சேர்ந்தார்.

மேற்கண்ட இருவரும் தங்கள் வாழ்க்கையில் மதுவினை தொடாதவர்கள். ஒருநாளும் குடித்ததில்லை...ஆனால் அவர்கள் கைவிடப்பட்டனர்.ஒருவர் இறந்தும் போனார்.யார் காரணம்?குடிமகன்களா? குடிமக்களா?

மூதாட்டி ஒருவர் வெயிலில் மயங்கி விழ 108 ஊழியர்கள் அவருடன் யாரும் மருத்துவமனை வர தயாரில்லாத காரணத்தினால் அங்கேயே விட்டு சென்றனராக இணையத்தில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எனவே நண்பர்களே,சாலையோரம் விழுந்து கிடக்கும் அனைவரும் குடித்து விட்டு விழ வேண்டுமென்று அவசியம் இல்லை.சற்று கூர்ந்து நோக்குங்கள் அவர் உங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியராக கூட இருக்கலாம்...தெரிந்தவராக இல்லை என்றாலும் மனிதனாகதான் இருப்பார்.

குடித்துவிட்டு விழுந்தாலும் காப்பாற்ற கூடாது என்று இல்லை.மனித உயிர் அவரை பொருத்தவரை ஒன்றுமில்லாமல் போனாலும் அவர் பின் இருக்கும் குடும்பம் கருதியாவது உதவித்தான் ஆக வேண்டும்.குறைந்த பட்ச உதவியாக நீர் கொடுத்தோ அருகில் உள்ள காவல்துறையினர் கவனத்திற்கோ கொண்டு செல்லலாமே....ஆம்புலன்ஸ்க்கு தகவல் தரலாமே.

குடிப்பவர்கள் தங்கள் நிலை புரியாமல் விழுந்து கிடக்கும் அவலத்தால் சில அப்பாவிகளும் கைவிடப்படுகின்றனர்.இது போக சாலை விபத்துகளும் குடியினால் வெகுவாக நிகழ்கின்றன.தான் விழுவது இல்லாமால் எதிரே வருபவரையும் விழ வைப்பதில் குடியும் ஒரு காரணம்தானே.

குடிப்பவர்கள்,குடிக்காதவர்கள்.....மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.விசயமிது.

இதை பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.....

26 கருத்துகள்:

  1. மூக்கு என்று மனிதனுக்கு ஒன்று இருக்கு தானே...? வாடை தெரியாதா...?

    முதலில் உதவ வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. கருத்துரைக்கு நன்றி...சகோதரரே
    பிறர் எப்படிப்பட்ட சூழலில் இருப்பின் எவராயினும் உதவ முன்வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே....உதவனும் நண்பரே...இல்லைனா அன்று ஒரு வேளை என் தந்தையும் இறந்திருப்பார்..

      நீக்கு
  3. அருமையான பகிர்வு அண்ணா.. ஒரு வாரம் நான் வலைபூ பக்கம் வரவில்லை அதற்குள் அனாயசமாக பதிவுகளை அள்ளித் தெளித்து இருகிறீர்கள், இதற்காகவே ஒரு பாராட்டு பதிவு போட்டு விடவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீ சும்ம்மா இரு ராசா.உன் பதிவு என்னாச்சு?தினமும் பாக்குறேன் வர மாட்டேங்குறே...ஹாரியையும் காணோம்....எங்கேடா டூர் போய்டீங்களா?பதிவு நல்லா இருக்குதான்னு பார்த்து சொல்லு...தப்பு இருந்தா சொல்லு...அது போதும் ராசா....

      நீக்கு
  4. குடித்துவிட்டு கீழே விழுந்து கிடப்பவர்களுக்கு போலீஸ் மூலம் அபராதம் விதிக்கலாம், இதனால் இவர்களின் எண்ணிக்கை குறையும். நாமும் கீழே விழுந்து கிடப்பவர்களை தைரியமாக தண்ணீர் கொடுத்து எழுப்பலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கூல் பையன்ட்ட இருந்து இப்படி ஒரு தெளிச்சலா கருத்தா? நீங்க ஸ்கூல் பையன் இல்ல இனிமே பிரின்சிபால்....வருகைக்கும் மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி நண்பரே...அப்பாவை கேட்டேன்னு சொல்லு ராசா......

      நீக்கு
  5. இதுவரை அவ்வாறு விழுந்து கிடக்கும் மனிதர்களை பார்த்து நான் குடியால் விழுந்து கிடக்கிறார்கள் என்றே எண்ணியிருக்கிறேன். என் தவறை திருத்த உங்களின் பதிவு உதவியது. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு விளைவை எதிர்பார்த்துதான் இந்த பதிவை பதிவு செய்தேன்.....மிக மிக நன்றி மாஸ்டர்....இணைந்திருப்போம்.

      நீக்கு
  6. நல்ல பதிவுங்க அண்ணே ..
    என்ன ஒன்று இந்த அவசர யுகத்தில் தெரிந்த முகங்களுக்கே உதவுவதை தவிர்த்து எப்படி தவிர்க்கலாம் என்று தள்ளி நிற்கும் கலாச்சாரம் நிறைய சமீப காலமாக அதிகரித்து வருவது நல்லதல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதாபிமானம் காணாம போகுது தலிவா...தனக்கு வரும்போது உணர்ந்தாலும் மறுபடியும் எப்பவும் போலதான் வாழ்கிறோம்...சூழ்நிலைகள் நம்மை விட எதிர்கால சந்ததிகளை அதிகம் பாதிக்கபோகுது தலைவா...வருகைக்கு நன்றி..

      நீக்கு
  7. ஆனா ஒண்ணு. வடிவேலு காமெடில மயில்சாமியும், இன்னொரு காமெடியனும் போதைல கிடக்க, வடிவேலு ப்ளீச் ப்ளீச்னு சோடா வாங்கி அடிச்சு அல்லல் படுவாரே? அந்த நிலைமை வந்திட்டா?

    ஹி ஹி ... சும்மா சொன்னேன். அருமையான கருத்து நண்பா ... நான் கூட எப்பவும் ஒதுங்கிப் போய்விடுவது வழக்கம். இனிமே திருத்திக்க ட்ரை பண்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா சொன்னாலும் சொல்லியாச்சே காத்தாடி.....நீங்க வடிவேலுவா இருந்தா அதுதான் நடக்கும்.:):)
      திருத்திக்க ட்ரை பண்றேன்னு சொன்னிங்க பாருங்க..அது போதும் நண்பா...நன்றி..

      நீக்கு
  8. இதுக்கு தான் “தேவையான சந்தர்ப்பங்களில்” எப்பவும் நம்ம கூட ஒரு ஃப்ரெண்ட வச்சிக்கணும். முக்கியம் ... நாம ஸ்டெடியா இல்லாட்டியும், அவன் ஸ்டெடியா இருக்கணும். அப்புறம் நீங்க சொன்ன விஷயமெல்லாம் நமக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவிகளா..இந்த பதிவையே மாத்திடுவாங்க போல..சங்கத்துல இனிமே சென்சார் போர்ட் வைக்கணும் சாமி...

      ஒத்தைல வேண்டாம் ஒண்ணா மண்ணா பழகிட்டோம்...அப்படியே சேர்ந்து போய்டலாம்னு முடிவு செய்திட்டா நல்ல ஒரு "ஸ்டெடி" யான நண்பனை சேர்த்துக்கோங்க...

      நீக்கு
  9. தெரிந்தவராக இல்லை என்றாலும் மனிதனாகதான் இருப்பார்.// சத்தியமான வார்த்தைகள்... ஆனால் நாம்தான் மனிதத்தையே தொலைத்து விட்டோமே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்ன வார்த்தைகள் மிக மிக கவனத்திற்குரியது.தொலைத்ததை தேடி எடுப்போம் நண்பரே...வருகைக்கும் மதிப்பான கருத்துக்கும் நன்றி நண்பா...

      நீக்கு
    2. பதிவை படித்துவிட்டு இந்த வரிகளை காப்பி செய்து கொண்டு வந்து பார்த்தால் நான் சொல்ல வந்ததையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் ராபர்ட்.

      சகோ. சதீஷ். பதிவுகளால் எந்த அளவிற்கு பயன் கிடைக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த பதிவின் பயன் சொல்ல தேவையில்லை.

      நீக்கு
    3. உண்மையில் நானே எதிர்பார்க்கவில்லை அண்ணா..குறைவாகத்தான் பர்வையிடப்பட்டுளது.ஆனா மனசுக்கு நிறைவான பதிவா அமைந்துவிட்டது.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

      நீக்கு
  10. நல்ல விழிப்புணர்வு பதிவு.
    நானும் குடித்துவிட்டு தான் கிடக்கிறார்கள்
    என்று கண்டும் காணாமல் சென்றிருக்கிறேன்....
    இனி அந்தத் தவற்றைத் திருத்தி்க்கொள்கிறேன்.
    நன்றி.

    (நண்பரே... “எப்பவும் நம்ம கூட ஒரு ஃபிரெண்ட வச்சிக்கனும்“ என்று நம்ம ஹாலிவுட் ரசிகன் சொன்னது போல
    சீனு சாரும் ஹாரி சாரும் ஒத்துமையா கிளம்பி போய்
    ஸ்டெடி இல்லால் இருந்தார்களோ...
    நான் போறேன். எனக்கு ஏன் வம்பு...)

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் எனது தந்தை விழுந்த பின்தானே சிந்திப்பே வந்தது...நன்றி அருணா அண்ணே

    சங்கத்துல உள்ள பெரிய தலைங்களுக்கு நடுவுல கோர்த்து விடதுக்குனே ஒரு க்ருப்பா க்ருடலா கிளம்பியிருக்காங்கப்பா.....மருந்தும் போட்டு சொறிஞ்சும் விட்ட அருணா அண்ணே நீங்க நல்லா வருவீங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....