நம்மகிட்டே நிலத்தை வாங்கி கடை போட்டு நம்மகிட்டே லாபம் பார்த்து நம்ம வீட்டு பிள்ளைங்களை கடைக்குள் விடாமல் துரத்தி விட்டா எப்படி இருக்கும்?
கடந்த வாரம் இங்கே ஜோத்பூரில் சத்யம்,MC DONALD,மற்றும் பல பெரும் கடைகள் உள்ள ROYAL PLAZA என்ற ஷாப்பிங் மாலில் படம் பார்த்து திரும்பும் போது நான்கைந்து சிறுவர் சிறுமிகளை மால் உள்ளே நுழைய விடாமல் தடுத்து கொண்டிருந்தார் காவலாளி......அந்த சிறுவர்கள் தங்களின் உச்ச பட்ச நல்ல உடைகளோடும்,அலங்காரத்தோடும் இருந்தாலும் பார்த்த உடனேயே தெரிந்து விடும் இவர்கள் வசதியான வீட்டுப் பிள்ளைகள் அல்ல என்று....
நானும் நண்பர்களும் சற்று கூர்ந்து கவனித்தோம்..காவலாளி விடுவதாயில்லை.என்னால் பொறுக்க முடியவில்லை காவலாளியுடன் நான் காரணம் கேட்க..அவர் இல்லை சார் இந்த பசங்க எஸ்கலேட்டர்ல ஏறி விளையாடி விழுந்துடுவாங்கனு சப்பை கட்டு கட்டினார்....நான் இவங்க என் கூட வந்துருக்காங்க உள்ளே விடுங்க என்ற போதும் மறுக்க...ஆட்டோமெட்டிக்கா நம்ம சப்தம் கூடுதலாக,நண்பர்களும் துணைக்கு வர மாலின் நாகரிகம்(???) கருதி உடனடியாக உள்ளே செல்ல அனுமதித்தார் அவர்.
![]() |
| மண்ணின் மைந்தர்கள்...சரிதானே. |
அந்த சிறுவர்களுக்கு எப்படி MC DONALD ஐஸ் க்ரீம் தெரிந்ததோ தெரியவில்லை...மிக ஆசையுடன் வாங்கி கொண்டார்கள்....வெளியே செல்லும் வரை தேங்க்ஸ் அங்கிள் தேங்க்ஸ் அங்கிள் என்ற அந்த சிறுவர்களுக்கு வீடு அந்த மாலின் பின்புறமே.....அங்கே இந்த கட்டிடம் வரும் முன்னே கட்டாயம் அவர்களின் அண்ணன்களோ அக்காக்களோ விளையாடியிருக்கலாம்.....அந்த மண்ணின் புழுதி இப்போதும் அவர்களின் சுவாசத்தில் எங்கேனும் தங்கியிருக்கலாம்...ஆனால் அதை ஏசி கட்டிடங்களின் கண்ணாடி கதவுகள் அனுமதிப்பதில்லை என்பதுதான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தரும் பரிசு....
திரும்பி செல்லும்போது அவர்கள் பெற்றோரோடு வந்தால் பிரச்சினை இல்லை என்று இன்னொரு காவலாளி (மேற்பார்வையாளர் போல) எனக்கு சொல்ல....இது நடக்குற விசயமா?நானே அன்னைக்குத்தான் முதன் முதலா அந்த கடைக்கு உள்ளே போனேன்....அங்க வர்றவங்க போறவங்க உடைகளுக்கும்,பாவனைகளுக்கும் பயந்தே நான் நுழைந்ததில்லை.இதுல அந்த சிறுவர்களின் பெற்றோரா? சாத்தியமே இல்லை.
இதே பணம் உள்ள பசங்க வந்தா கட்டாயம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க...அந்த பசங்க எஸ்கலேட்டரில் விழ மாட்டாங்க ஏன்னா பணம் இருந்தா எஸ்கலேட்டர் கூட மதிக்கும்...அப்படித்தானே.
மௌனகுரு படத்தில் வரும் பேராசிரியர் சொல்லுவாரே"லுங்கி கட்டிருந்தா அடிப்பிங்களா?" அதே மாதிரிதான் "ஏழையா இருந்தா அவமானமா?"
| Tweet | |||||
.jpg)

காவலாளியிடம் சண்டைபோட்டு அநத ஏழை சிறுவர்களை சந்தோசம் அடையசெய்தமைக்கு நன்றி சதீஷ் .
பதிலளிநீக்குசெய்யது
துபாய்
சண்டை என்ன சகோ?அவரும் நம்மை போலதானே.....அவருக்கு அவ்வளவுதான் புரிதல்.....சந்தோசமா போனாங்க அந்த பசங்க....நன்றி சகோ...
நீக்குenna kaaranam sako....
பதிலளிநீக்குezhai en
ezhai enpatha. ...!?
பதிலளிநீக்குவேறென்ன காரணம் சகோ?இந்த மாலுக்குள் வருகிற ஆட்களுக்கு மத்தியில் நாமெல்லாம் வித்தியாசனமான ஜந்துக்கள் சகோ...
நீக்குஎன்னா பாய், இந்த தடவை பொதுவான சமூக அக்கறை்யோடு எழுதினாப்ல தெரியுது
பதிலளிநீக்குஎனிவே குட்
எப்பவுமே அப்படித்தான் நண்பரே....உங்க பார்வை அப்படி.....இந்த பசங்க கூட படத்தை உற்று நோக்குங்கள் யார் என்று பாருங்கள்?பசங்க என்றதும் இந்த பின்னூட்டம்....இதே நான் அவர்களின் பெயர் போட்டால்?அவ்வளவுதான் வேற முத்திரை குத்துவிங்க.....நன்றி நண்பரே உங்க வருகைக்கும்,கருத்துக்கும்...
நீக்குஇது போன்ற அறச்சீற்றங்கள் வலுப்படவேண்டும். அப்போது இது போன்ற 'பணத்திற்கு மட்டுமே மரியாதை' பழக்கங்கள் குறைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இது போன்ற 'பணத்திற்கு மட்டுமே மரியாதை' கொடுக்கும் இடங்களை புறக்கணிக்கவேண்டும்!
பதிலளிநீக்குகட்டாயம் அண்ணா,புறக்கணிப்பது என்பது சரிதான் என்றாலும்,நாம் எப்பவும் போல உள்ளே போய் வரவேண்டும்....இல்லைனா அது ஒரு தனி உலகமாகவே கவனிக்கப்படும் அபாயம் உள்ளது.....அனைத்து பிம்பங்களும் உடைக்கப்பட் வேண்டும்...
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.....
நீக்குபணம் பத்தும் செய்யும். :-(
பதிலளிநீக்குfactu factu factu.....சகோ...
நீக்குnalla karuthtu
பதிலளிநீக்குநன்றி அருண் நண்பரே....
நீக்குஏனிந்த பாரபட்சம்...?
பதிலளிநீக்குநாகரிக உலகில் பணமும் நடை உடை பாவனைகளும் ஜாதிகளை போல பிரித்து வைத்துள்ளது அண்ணா...
பதிலளிநீக்குஅடுத்த தடவை பாமக கட்சி தலைவர் ராமதாசுக்கு வோட் போட்டு அவரை முதல்வராக்கினால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும். மரங்கள் செழித்து வரும் (நாங்க ஆட்சிக்கு வந்தா யாரு மரத்தை வெட்டுவது)
பதிலளிநீக்குஎந்த கூட்டணியில் இருப்பார் என்று இப்போது என்னால் கூறமுடியாது - நிச்சயமாக ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார்.
தெரிவிப்பது - ராமதாஸ் அவர்களின் கால் செருப்பான தொண்டன் அருள் (ARUL GREEN )