Translate

திங்கள், 15 அக்டோபர், 2012

சன் மியூசிக் சங்கடங்களும் இசையருவி இம்சைகளும்...

அத்திப்பட்டியோ,அரக்கோணமோ,அபுதாபியோ,அமெரிக்காவோ எங்கே இருந்தாலும்  எத்தனை மொழில எத்தனை பாட்டுகள் கேட்டாலும் பூவுலகம் போற்றும் சொக்க வைக்கும் தமிழ் பாட்டை கேட்டு கொண்டே பணி செய்வது தனி சுகம்.

பல காம்பிரியர்களின் மொக்கைகளை மீறி விளம்பரங்களை மீறி தமிழ்  சேனல்களில்  பாட்டு கேட்கும் போராட்டத்தில் இருந்து மண்ணின் மைந்தர்கள்  பல லோக்கல் சேனல்களை திருகியும் எப் ம் வைத்தும் தப்பித்து விடுகின்றனர்..

ஆனா இந்த வயித்துப்பாட்டுக்கு தமிழ்நாட்டை விட்டு வெளில வந்தவங்க சன் மியுசிக் ,இசையருவி ரெண்டையும் கட்டிக்கிட்டு படுற பாடு.....காலைல பாட்டு கேட்டுகிட்டே வேலைக்கு கிளம்பலாம்னா பக்தி பாட்டுன்னு பட்டய போட்டுட்டு சாமி பாட்டா போட்டு படுத்துறாங்க.....மஞ்சதுண்டு போட்ட கருணாநிதி பஜனை பாடாத குறைதான் காலைல ஆறிலிருந்து ஏழு வரை.

அப்பால எட்டு மணிக்கு தாண்டி  விளம்பரங்களுக்கும் ரெண்டு ரெண்டு காம்பிரியருங்க  சேர்ந்து போடுற மொக்கைக்கும் நடுவிலே வர்ற பாட்டுக்கள் பார்ப்பது  பவர் ஸ்டாரின் "ஆனந்த தொல்லை". நல்ல வேலையா ஆட்சி மாறுச்சு..இல்லைனா இந்த அழகிரியும்,மாறனும்,ஸ்டாலினும் தெனமும் ஒரு படத்தை எடுத்துட்டு போடுற விளம்பர கொலைகள் உச்ச பட்ச உயிர் வதை கொடுமையாகும்.

பொது அறிவ வளக்குறேன்னு ஹிந்தி இந்தியாவின் தேசிய  மொழின்னு  பிரபலமான ஒரு காம்பிரியர் வதக்கி எடுத்தார்.இந்த அறிவாளி பிள்ளைங்க அடக்கமா புது வருஷம் கொண்டாடுறத பாக்குற  அளவுக்கு நம்மள முட்டாளாக்கியதிலும் அவர்களை நட்சத்திரங்களாகவும் மாற்றிய பெருமை விகடன்,குமுதம் ,குங்குமங்களை சேரும்.உங்களுக்குள்ள என்னாப்பா கொலாபரேசன்?

பொது அறிவுப் புலி இவருதாங்கோ.
பாட்டு போடுற புண்ணியவானுக்கு ஒன்னு வீட்ல பிரச்சனை இல்லைனா   டாஸ்மாக் சோனை.அட ஆமாங்க  உச்சி வெயிலில் மதியம் ஒரு மணிக்கு நிலா காயுது பாட்டெல்லாம் போட்டான்னா என்னத்த  சொல்ல?வேகாத வெக்கையில வீட்ல இருக்கிற பொம்பிளைங்க தலையணைய பிய்க்கவா?

எலுமிச்சை,நெல்லிக்காய் ,பால்,தயிர்,வெண்ணை  இப்படி நாலு ஐட்டம் பேரை தெரியுமா உங்களுக்கு?நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி மேடம்.....அந்த நாளுல ரெண்ட சேர்த்து மூஞ்சில அப்ளை பண்ணுங்க மூஞ்சு பொலிவா இருக்கும்னு பொலி போடுறதுதான் லேடீஸ் சாய்ஸ்.இதுல எட்டாங்கிளாஸ் படிக்கிற பிள்ளைக்கும் அவங்க குடும்பத்துக்கும் டெடிகேட் பண்ற பாட்டு"உருகுதே...... மருகுதே...".

இதெல்லாம் விட பெரிய ரோதனை குட்டீஸ் நேரம் குரங்குகள் நேரம்னு போடுற பாட்டு இருக்கே....டாடி மம்மி வீட்ல இல்லை,யம்மாடி யாத்தாடின்னு குத்துற குத்து இருக்கே அது உலக மகா குத்துடா சாமி..பிள்ளைங்க எல்லாம் நல்லா வருவாய்ங்க....ஏன் சாமி, காலைல கடவுளுக்கு ஒரு மணி நேரம் குடுத்த மாதிரி சாயங்காலம் சின்ன பிள்ளைகளுக்கு நீதி கதை பாட்டு,சின்ன சின்ன நீதிக் கதைகள் காட்டலாம்ல?உங்க வருமானத்துக்கு எங்க பிள்ளைங்க ஊறுகாய்?அப்படித்தானே?சிறுவர்கள் அப்படியே அதை இமிடேட் செய்வதை பார்க்கும் போது வேறு வழியில்லாமல் சேனல மாத்திதான் ஆகணும்.


இப்ப புதுசா ஒரு பொண்ணு இசையருவில நைட்டு பத்து மணிக்கு வர்றாங்க ...சும்மா சினிமா படத்துல சில நாயகி கேரக்டர் இருக்குமே கெக்கிலி பிக்கிளின்னு ....அதே மாதிரி சிரிச்சிக்கிட்டே இருக்குதுங்க இம்சை அரசி .ஏன்னு கேளுங்க ..அட ,அதுக்கும் சிரிக்கத்தான் செய்யுது.நாட்டாமையப போல ஒரு ஜோடி தெனமும் நைட்டானா தொலிய உரிக்கிறாங்க...அதுலேயும் அந்த சடையப்ப நாட்டாமை ஆண்தானா? இல்லை பொண்ணா?துணிய மாத்துறாங்களா இல்லியாப்பா?எத்தனை கேள்விகள்???

ஒரே ஆறுதல், நைட்டு தூங்கும்போது பாட்டு கேட்டுகிட்டே தூங்கலாம்னா இடைல கொஞ்ச நாளா பதினோரு மணி வரை  காமெடியை போட்டு உசுர வாங்குனாங்க...இப்ப அப்படி இல்லாம இளையராஜா பாட்ட போட்டு தூங்க வைச்சுடுறாங்க...அதுவரைக்கும் சந்தோசம்.

 என்னது கரண்ட் இல்லியா? கடுப்பை கிளப்புறேனா?....சமயம் தெரியாமா சடங்கு வைச்சுட்டேன் போல ..மன்னியுங்கள் தெய்வங்களே....உங்க கோவத்தை ஓட்டு பட்டைல காட்டுங்க....

14 கருத்துகள்:

  1. Ha, wonderful post.//நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி மேடம்.....அந்த நாளுல ரெண்ட சேர்த்து மூஞ்சில அப்ளை பண்ணுங்க மூஞ்சு பொலிவா இருக்கும்னு பொலி போடுறதுதான் லேடீஸ் சாய்ஸ்// not only in this program, in all cooking programs ,appappaaaa, thaangka mudiyalai.All ladies speak as if they have got 100 Ph.D .Now a days I have stopped seeing these programs.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன தலைவா செய்றது வேற வழியே இல்லாம பாக்க வேண்டியதா இருக்கு....வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  2. சரியா சொன்னிங்க போங்க.....இவனுக இம்சை தாங்க முடியல உண்மைல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது சகோ? இன்னும் நாலு பாட்டு சேனல அறிமுகப்படுத்தணும்...நல்லதா..வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  3. ஏம்பா ராசா...நாங்கதா இந்த காப்ம்பயர் அம்மனிக ரவுசு தாங்கமுடியாம் மூசிக் சேனல்ல பாட்டு கீக்குறதையே விட்டாச்சு... அதப் பாத்துட்டு எங்கலையும் செர்த்து ஏன் ராசா இம்சை பன்றே.

    ங்கொன்னியா....அம்மனிகள பாத்து ஜொள்ளு விடுறதுக்குனே சேனல் பாத்திட்டு.... வந்து இங்கே குறை சொல்ற டெக்னிக் எங்களுக்கு தெரியாதா... போ...போய்ட்டே இரு...

    இப்படிக்கு
    திடம்கொண்டு போராடு - சீனு
    கரைசேரா அலைகள் - அரசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோர்த்து விடுறத தவிர வேற வேலையே கிடையாதா தெய்வமே?நல்லா போட்டா எடுங்க....நீங்க பொம்பள பிள்ளைங்களை போட்டோ எடுத்ததை வெளில சொல்லவே மாட்டேன் தலிவா...

      நீக்கு
  4. பதில்கள்
    1. அதுக்கு நீங்க ஊரே காலைல எட்டு மணி,ஒம்போது மணிவாக்குல அமுதகானம்,தேனருவி,தேனும் பாலும்,தென் கிண்ணம் நிகழ்ச்சிகளை மியூசிக் சேனல் இல்லாத வசந்த்,மெகா,ஜெயா,கலைஞர் டிவியில் பார்க்கலாம்..பழைய பாடல்கள்...அத்தனையும் அருமை. இன்றைய இரைச்சல்கள் பாடல்கள் எங்களுக்கு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.T.N MURALIDHARAN

      நீக்கு
  5. இசை புயல் என்று இசையறுவில மாலை 6 க்கு தொடர்ந்து கொஞ்சபாடல்களை தினமும் திருப்பி திருப்பி போட்டாங்க இப்ப விட்டுட்டாங்க

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ஓ அண்ணன் அதுதான் லேட்டா?நன்றி அண்ணா....தமிழ் மண மகுடம் சூடி நின்ற பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..TM-6 நன்றி..

      நீக்கு
  7. நீங்க சொன்ன குட்டீஸ் சாய்ஸ் ரொம்பச் சரி...மிட்நைட்டுக்கு அப்புறம் போடவேண்டிய பாட்டெல்லாம் அந்த டைம்ல தான் போட்டுத் தொலைப்பானுங்க. சரி .. சன் மியுசிக்ல அலப்பறய போடுறாய்ங்கன்னு ஆதித்யா, சிரிப்பொலி பக்கம் போனா, அங்க நிலைமை இத விடக் கேவலமா இருக்கு. மொக்கைக் காமெடி, மகாக் கேவலமான மிமிக்ரி ... ஹய்யோ ஹய்யோ. இதில் சிரிப்பொலி ரொம்ப மோசம். தினம் தினம் புதுசா ஒருத்தன கூட்டிட்டு வந்து கழுத்தறுக்கிறானுங்க. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுலேயும் அந்த மியாவ் மியாவ் பூனையை இன்னிக்கு வரை நான் முழுசா பாக்க முடியல காத்தாடி ...:):) ஏன் இவனுங்க இப்படி தெனமும் யாரையாவது கூட்டு மொக்கை போட்டு சம்பளமும் கொடுத்து நம்ம கழுத்தை அறுக்கானுங்க? கஷ்டபட்ட சமூகம் ஒரு நாள் பொங்கியெழுந்து DDக்கு மாறினாலும் மாறும்...வருகைக்கு நன்றி நண்பா...

      நீக்கு
  8. உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம். பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.

    நாட்டாமை சோடி இப்ப நல்ல களை கட்டுறதா உணருகிறேன். ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடி போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....