நான் யார் ? சிறந்த பதிவர்களில் ஒருவரான (கவனிக்க பிரபல அல்ல) இக்பால் செல்வன் அவர்கள் கூட என்னை என் பணியை சந்தேகித்திருந்தார்.எனது சில பதிவுகளை வைத்து நான் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவன் என்றும் பெயர் மாற்றி எழுதுகிறேன் என்றும் பின்னூட்டங்கள் வருகின்றன.
இது என்னை அறிமுகம் செய்ய ஒரு அவசியத்தை கொடுத்துள்ளது.
நான் எந்த மதத்தை சேர்ந்தவன் ?
இந்து மதத்தில் பிறந்து தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் பெற்றோரால் கிறிஸ்துவத்தை நேசித்து எல்லா இழவும் ஒன்றே என்று எந்த மதமும் பிடிக்காமல் நிம்மதியாக இருக்கும் சாதாரண மனிதன் நான்.இஸ்லாமியம் மதம் இல்லை மார்க்கம் என்று எவ்வளவு சொன்னாலும் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை.அவசியமும் இல்லை.பெரியாரின் வார்த்தைகள் பிடிக்கும்.அதற்காக அவர் மட்டுமே வழிகாட்டி என்று பைத்தியம் ஆவதில்லை.திராவிடர் கலகத்தை நம்பும் அளவுக்கு இல்லாமல் சற்று பகுத்தறிவு உள்ளதாக நம்புகிறேன்.
நான் ரானுவத்தில்தான் பணி செய்கிறேனா?
இல்லை நான் ராணுவத்தில் வேலை செய்யவில்லை.துணை ராணுவம் என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் 13வருடமாக பணி புரிகிறேன்.இப்போதும் பணி புரிகிறேன்.இப்போது துணை ராணுவம் என்றும் சொல்ல முடியாது CENTRAL POLICE SERVICEல் நாங்களும் அடங்குகிறோம் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாக உடன் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சத்தியமாக உண்டு உறங்கி சலுகைகள் சாப்பிடும் ராணுவம் இல்லை என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன்.
நான் ஏன் என் பணியை குறிப்பிட்டு எழுதுகிறேன்?
உண்மையின் நம்பகத்தன்மை இதன் மூலம் கூடுதலாகும். சும்மா எழுதினா அவ்வளவு தூரம் நம்பமாட்டர்களே.
ஏன் எனது பதிவுகள் என்னை இஸ்லாமியனாக காட்டுகிறது?
எனது பணியின் நிமித்தம் நான் நேராக கண்ட உரிமை போராட்டம் காஷ்மீர் மக்களுடையது.இங்கு நமது வாழ்க்கை எவ்வளவு சுதந்திரமோ அவ்வளவு கட்டுப்பாடானது காஷ்மீர் மக்களின் நிலை.நான் அவர்களின் போராட்டங்களை மட்டுமே ஆதரிக்கிறேன் அன்றி அவர்களின் மதத்தை அல்ல.மணிப்பூர் சர்மிளாவையும் ஆதரிக்கிறேன்.அங்கு நடக்கும் ராணுவ அடக்குமுறைகளையும் எதிர்க்கிறேன்.மணிப்பூரில் என்ன மதமோ?காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகிறது என்றால் நான் என்ன செய்ய முடியும்?அவர்களும் மனிதர்களே என்று ஏன் நினைக்க கூடாது.
நான் ஒருவேளை மணிப்பூரில் இருந்திருந்தால் காஷ்மீரை விட அங்கு நடப்பவற்றை பற்றியே எழுதியிருப்பேன்.இதுதான் உண்மை.எனவே என் மீது மத சாயம் பூச வேண்டாம்.நான் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் இஸ்லாமிய நண்பர்கள் வருவதில்லை.அவர்களுக்கு குரல் தரும் பதிவுகளை மட்டுமே அவர்கள் ஆதரித்துள்ளார்கள்.அவ்வளவுதான்.
எனது பாதுகாப்பு படை பணியில் நான் இது வரை நீங்கள் நம்பும் இந்திய தேசத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை.என் மாணவர்களுக்கு சற்று வர்க்க வேறுபாடுகள் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன்.அவ்வளவுதான்.
இல்லை இல்லை நீ எழுதுனா நாங்க நம்பிடனுமான்னு கேட்டால்? கொஞ்சம் காத்திருக்கவும் அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் அறிமுகம் ஆகலாம்.
இது என்னை அறிமுகம் செய்ய ஒரு அவசியத்தை கொடுத்துள்ளது.
நான் எந்த மதத்தை சேர்ந்தவன் ?
இந்து மதத்தில் பிறந்து தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் பெற்றோரால் கிறிஸ்துவத்தை நேசித்து எல்லா இழவும் ஒன்றே என்று எந்த மதமும் பிடிக்காமல் நிம்மதியாக இருக்கும் சாதாரண மனிதன் நான்.இஸ்லாமியம் மதம் இல்லை மார்க்கம் என்று எவ்வளவு சொன்னாலும் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை.அவசியமும் இல்லை.பெரியாரின் வார்த்தைகள் பிடிக்கும்.அதற்காக அவர் மட்டுமே வழிகாட்டி என்று பைத்தியம் ஆவதில்லை.திராவிடர் கலகத்தை நம்பும் அளவுக்கு இல்லாமல் சற்று பகுத்தறிவு உள்ளதாக நம்புகிறேன்.
நான் ரானுவத்தில்தான் பணி செய்கிறேனா?
இல்லை நான் ராணுவத்தில் வேலை செய்யவில்லை.துணை ராணுவம் என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் 13வருடமாக பணி புரிகிறேன்.இப்போதும் பணி புரிகிறேன்.இப்போது துணை ராணுவம் என்றும் சொல்ல முடியாது CENTRAL POLICE SERVICEல் நாங்களும் அடங்குகிறோம் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாக உடன் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சத்தியமாக உண்டு உறங்கி சலுகைகள் சாப்பிடும் ராணுவம் இல்லை என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன்.
உண்மையின் நம்பகத்தன்மை இதன் மூலம் கூடுதலாகும். சும்மா எழுதினா அவ்வளவு தூரம் நம்பமாட்டர்களே.
ஏன் எனது பதிவுகள் என்னை இஸ்லாமியனாக காட்டுகிறது?
எனது பணியின் நிமித்தம் நான் நேராக கண்ட உரிமை போராட்டம் காஷ்மீர் மக்களுடையது.இங்கு நமது வாழ்க்கை எவ்வளவு சுதந்திரமோ அவ்வளவு கட்டுப்பாடானது காஷ்மீர் மக்களின் நிலை.நான் அவர்களின் போராட்டங்களை மட்டுமே ஆதரிக்கிறேன் அன்றி அவர்களின் மதத்தை அல்ல.மணிப்பூர் சர்மிளாவையும் ஆதரிக்கிறேன்.அங்கு நடக்கும் ராணுவ அடக்குமுறைகளையும் எதிர்க்கிறேன்.மணிப்பூரில் என்ன மதமோ?காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகிறது என்றால் நான் என்ன செய்ய முடியும்?அவர்களும் மனிதர்களே என்று ஏன் நினைக்க கூடாது.
நான் ஒருவேளை மணிப்பூரில் இருந்திருந்தால் காஷ்மீரை விட அங்கு நடப்பவற்றை பற்றியே எழுதியிருப்பேன்.இதுதான் உண்மை.எனவே என் மீது மத சாயம் பூச வேண்டாம்.நான் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் இஸ்லாமிய நண்பர்கள் வருவதில்லை.அவர்களுக்கு குரல் தரும் பதிவுகளை மட்டுமே அவர்கள் ஆதரித்துள்ளார்கள்.அவ்வளவுதான்.
எனது பாதுகாப்பு படை பணியில் நான் இது வரை நீங்கள் நம்பும் இந்திய தேசத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை.என் மாணவர்களுக்கு சற்று வர்க்க வேறுபாடுகள் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன்.அவ்வளவுதான்.
இல்லை இல்லை நீ எழுதுனா நாங்க நம்பிடனுமான்னு கேட்டால்? கொஞ்சம் காத்திருக்கவும் அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் அறிமுகம் ஆகலாம்.
| Tweet | |||||
சதீஷ் செல்லதுரை மனித நேயம் மிகுந்த மனிதனேயன்றி வேறு யாருமில்லை என்பது தெளிவு.
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி அய்யா...இஸ்லாமிய சகோதர்களின் வலைபூக்களில் உங்கள் முகப்பில் நீங்கள் எழுதி வைத்துள்ள வாசகங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.நன்றி அய்யா.
பதிலளிநீக்குநீங்கள் எல்லை பாதுகாப்பு படையில் COMMANDO INSTRUCTOR. இருப்பதால் முடிந்தவரை பொதுவான விஷயங்களை மட்டும் எழுதவும். சர்ச்சைக்குரிய விஷயங்கள் சிலசமயம் சர்ச்சையில் கொண்டு போய் விட்டுவிடும். ( நானும் ஒரு அரசுத் துறை சார்ந்த பணியில் இருந்தவன் என்ற முறையில் இதைச் சொன்னேன். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )
பதிலளிநீக்குநன்றி அய்யா,இதில் தவறாக எடுத்து கொள்ள ஒன்றுமில்லை அய்யா...தங்களின் மேலான அக்கறை போதும்.தைரியமாக வாழலாம்.நன்றி அய்யா.
நீக்குசகோ யாரும் எதுவும் சொல்லி விட்டுப் போகட்டும். பல சர்ச்கையான விபரங்களைச் சொல்வதால் உங்களுக்கு பிரச்னைகள் வரலாம். எனவே பொதுவில் நீங்கள் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஓநாய்கள் அதிகம் உலவும் தேசம் என்பதால் சொல்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி சகோ..சாதாரண ஒரு பதிவரா அடையாளம் இல்லாமல் எழுதினால் அவற்றை நம்புவது சற்று கடினமே.இதன் மூலம் பிரச்சனைகள் வந்தால் நான் யாருக்காக எங்கே இந்த எழுத்துக்கள் போய் சேரவேண்டும் என்று நினைக்கிறேனோ அங்கே செல்கிறது என்றே அர்த்தமாகும்.சில வீரர்களின் உயிர் தியாகம்தான் இன்று எங்களுக்கு வருடத்திற்கு இரு முறை விடுமுறை கிடைத்தது.நாமும் எதாவது செய்ய வேண்டாமா?நன்றி சகோ..அக்கறையான நண்பர்களுக்கும் அன்புக்கும்
நீக்குசகோ உங்களின் தைரியம் மிக நன்று ..
நீக்குஉங்களின் எழுத்துக்களை பொய்பிக்க முடியாதவர்களே உங்களை சந்தேகதிற்குரியவராக மாற்ற முயற்சிக்கின்றார்கள் .
சொந்த பெயரில் எழுத துப்பிலாதவர்கள் .. வேண்டாம் போகட்டும் விடுங்கள் இது அவர்களின் மரபணுக்களின் கோளாறே அன்றி வேறில்லை
உங்கள் தைரியமான பணியை தொடருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கீழே உள்ள சுட்டியை படிக்கவும்.
நீக்குபர்தா "சவுகரியமா? இதன் மூலமா?"-சகுந்தலா நரசிம்ஹன்
சுட்டி மூலம் செல்ல இயலவில்லை என்றாலும் பர்தா குறித்தும் உடைகள் குறித்தும் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கட்டாயமாக அணிய செய்யும் பட்சம் எப்படி நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நீக்குதங்களின் மேலான வருகைக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி சகோ....
புகழ்வதோ... இகழ்வதோ... - எப்போது மற்றவர்களைப் பற்றி பேச... தவறு தவறு... நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, அப்போதே உங்கள் மனதில் பிரச்சனையின் வேர் வளர்ந்து விட்டது... முதலில் அந்த வேரை தூக்கி எறிங்க... எரிங்க...
பதிலளிநீக்குபதிவுலகம் வாழ்வில் சிறியது... நிஜ வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...
அப்பப்போ மனதில் உள்ள delete கீயை அழுத்துங்க COMMANDO INSTRUCTOR... இவையெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்ன...?
சுருக்கமாக குறள் எண் 34
நன்றி...
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
நீக்குஆகுல நீர பிற.
மு.வ உரை:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
திண்டுக்கல் இல்லை இல்லை திருக்குறள் தனபாலன் அண்ணா,நிம்மதியா இருக்குது.இது போதும் அண்ணா,இன்னும் நிறைய எழுதலாம்.நன்றி அண்ணா.
நான் "நான் முஸ்லிம்" என்கிற வலைத்தளம் நடத்தி வருகிறேன்.
பதிலளிநீக்குயாருக்கும் பயபடாமல் உங்கள் பணியை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது நடக்கும் வன்முறையை நானும் பதிவு செய்து உள்ளேன், தயவு செய்து படித்து பார்க்கவும்.
இந்த சுட்டியை சொடுக்கி படிக்கவும்
நன்றி சகோ....தீவிரவாதமும் முஸ்லிம்களும் மிக முக்கிய பதிவு.சிறிய மறுப்புகள் இருந்தாலும் நியாயமான பதிவு.நன்றி சகோ தொடர்கிறேன்.
நீக்குஎச்சரிக்கை...!
நீக்குமேலே உள்ள கமென்ட்...
சகோ . ' G u l a m ' இன் கமென்ட் போல தெரியவில்லை. அதில் அவரின் படத்தை காணவில்லை. லிங்க் மட்டும் சரியான profile போகுது. ஆனால்... "அந்த சுட்டி" நேற்று... "UNMAIKAL' சொன்ன ஒரு வைரஸ் லிங்க் போல இருக்கே..!
யாராவது சோதித்துவிட்டு சொல்லுங்கள் சகோஸ்...! :-))
HERE IS A GOOD NEWS..!
நீக்குAs per Bro.Abdul Basith's (Blogger Nanban) request,
tiny website authorities have removed that virus link..!
THANKGOD.
////The user that created the link /ibJUN has added some public access restrictions to it...
So sorry, but we aren't allowed to let you visit that page.////
http://tiny.cc/traffic/ibJUN
NOW NO HARM WITH THE LINK.
HE/SHE IS NOT 'G U L A M'
CONFIRMED BY PHONE WITH BRO.GULAM.
HE DID NOT PUT THAT COMMENT.
THIS IS REALLY VERY BAD HABIT BY THESE 'ISLAMOPHOBIYA PSYCHOS'.
BEWARE OF THEM BROTHERS.
HE/SHE HAD USED 'ANONY' OPTION TO POST THIS COMMENT IN THE NAME OF 'GULAM' WITH AN ANCHOR LINK TO ORIGINAL GULAM'S PROFILE. THAT IS WHY THIS COMMENT IS WITHOUT GULAM'S PROFILE PICTURE.
நீக்குTHIS IS REALLY A CRIMINAL ACTIVITY BY THESE 'ISLAMOPHOBIYA PSYCHOS'.
BEWARE OF THEM BROTHERS.
ஸ் யப்பா மிக மிக மிக மிக நன்றி அப்துல் பசித் சகோ,ஆஷிக் சகோ.....எனக்கு அவ்வளவு கணினி அறிவு இல்லை.இது போல உள்ள செயல்கள் உண்மைகளை மேலும் உறுதி செய்கின்றது,இங்கு யாருக்கும் எந்த மதத்திற்கும் எதிர்த்து நான் எழுதவில்லை.சிறுபான்மை சமூகமும் தாழ்த்தப்பட்ட சமுதாயமும் திருப்பி கேள்விகள் கேட்கும்போது மட்டுமே அவை கலகங்கலாகவும் வன்முறையாகவும் சித்தரிக்கப்படுகின்றன.
நீக்குஒரு உண்மையை கூட தாங்கி கொள்ளாமல் இது போல வைரஸ் வேலைகள் செயபவர்கள் நடுவில் பலவித கொடுமைகளுக்கு நடுவே வாழ்பவன் திருப்பி கேட்பதில் என்ன தவறு?
கணினி அறிவில் லாஸ்ட் பெஞ்ச் பையனான எனக்கு உதவிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
திண்டுக்கல் தனபாலன் சார் சொன்னதை வழி மொழிகிறேன்! போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்! நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் அண்ணா..
நீக்குநன்றி சுரேஷ் அண்ணா, விளம்பரம் இல்லாமல் நிஜ பின்னூட்டம் இட்டதற்க்கு
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சதீஸ் தங்கள் பணி தொடரட்டும்...யாரைக் கண்டாலும்...யார் மனிதநேயம் பேசினாலும் அவர் உள்ளாடையை உருவிப் பார்ப்பதுதான் மகா யோக்கியர்களின் வழக்கமாக உள்ளது...///எனது பணியின் நிமித்தம் நான் நேராக கண்ட உரிமை போராட்டம் காஷ்மீர் மக்களுடையது.இங்கு நமது வாழ்க்கை எவ்வளவு சுதந்திரமோ அவ்வளவு கட்டுப்பாடானது காஷ்மீர் மக்களின் நிலை.நான் அவர்களின் போராட்டங்களை மட்டுமே ஆதரிக்கிறேன் அன்றி அவர்களின் மதத்தை அல்ல/// உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்..பொதுப்புத்தியின் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்துங்கள்...நன்றி
பதிலளிநீக்குநிஷா சகோ,முக நூல் நண்பர்...உங்களின் தெளிவான புரிதலுக்கு நன்றி சகோ.சந்தோசமாக உள்ளது வலைபக்கம வருகை தந்து பின்னூட்டம் இட்டது.
நீக்குஸலாம் சகோ.சதீஷ் செல்லத்துரை,
பதிலளிநீக்குஉண்மையை நேர்மையாக நீங்கள் சொன்னால், உங்களையே சந்தேகப்படுகிறதா... மனிதாபிமானத்தனத்தின் எதிரிகள்..???
அவர்களுக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!
தங்கள் பணி மிகவும் போற்றத்தகக ஒன்று. வாழ்த்துகள் சகோ.
வைரஸ் லிங்க் எல்லாம் அனுப்புகின்றனர்.
நேற்று உங்கள் பதிவில் 'வருன்' என்ற பெயரில்...
இன்று இங்கேயும்.... சகோ.வருண் பதிவில் 'உம்மத்' என்ற போலி பெயரில்...... 'உங்கள் பதிவின் லிங்க் என்று ஒன்றை கூறி அதே வைரஸ் லிங்க்' இன்று..!
முஸ்லிம்களிடம் இணக்கமாக இருக்க விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களிடம், 'வைரஸ் கோழைகள்' இதுபோல செய்வது ரொம்ப கேவலமாக உள்ளது.
என்னது என் பெயரிலும் வைரஸா? அய்யா அப்படி ஒரு ஜீவனை எப்படி அனுப்புறது வளர்ப்பது என்று ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு சாமீ நானு.எனக்கு பல நேரம் தம்பி சீனுதான் உதவி செய்றார்.இல்லைனா தமிழ் மணத்தில் கூட என் பதிவுகள் வந்திருக்காது.
நீக்குஎன்னத்த சொல்ல?இந்த தேசத்தின் முகம் இங்கேயும் விரிகிறது.
நன்றி இக்பால் செல்வன்
பதிலளிநீக்குஉங்க புண்ணியத்துல சதீஷ் போட்டோ மற்றும் அவரை பற்றி
தெரிந்துகொள்ள முடிந்தது.......
Sathish Hope you are risking yourself....
"Never try to prove Yourself to others
Because the people who really cares you never need a proof
and the person who doubts will never accept even if you prove"
--- Read in SMS
“You wouldn't worry so much about what others think of you if you realized how seldom they do.”
― Eleanor Roosevelt
“Believe in yourself and there will come a day when others will have no choice but to believe with you.”
― Cynthia Kersey
Note: If Possible remove that Pic
A kind request..
Don't risk Yourself..
சிறப்பான மேற்கோள்கள் நண்பரே,இந்த பதிவு என் பதிவுகளை உண்மையின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தி காட்டவே.
நீக்கு"Never try to prove Yourself to others
Because the people who really cares you never need a proof
and the person who doubts will never accept even if you prove"
fact u fact u fact u
போட்டோ எடுத்துடலாம் வேற போட்டோ வைத்துடலாம்.ஆனால் இதன் மூலம் என்ன ஆபத்து வரப்போகிறது என்று தெரியவில்லை.நீங்களும் சரி இக்பால் செல்வன் அவர்களும் சரி போட்டோவை எடுக்க சொல்லியதன் அக்கறைக்கும் அன்புக்கும் அடிபணிகிறேன்.
இரண்டு பதிவுகளால் சகோக்களின் பின்னூட்டங்கள் களை கட்டுகிற மாதிரி தெரிகிறதே:)
பதிலளிநீக்கு//காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகிறது என்றால் நான் என்ன செய்ய முடியும்?//
முந்தைய காஷ்மீர் அப்படிப்பட்டதாக இல்லையென்று களத்தில் நிற்கும் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள்.
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சூழ்ச்சிகளும்,மத அடிப்படைவாதங்களும் நிறைந்து காணப்படுகின்றன.இதுவே காஷ்மீர் மக்களின் உரிமைக்குரலுக்கான பக்க பலமாகத் தோன்றும் எதிரி.மேலும் காஷ்மீர் பிரச்சினை நேருவின் ஐ.நா சென்றதின் விளைவாகவும்,பின்பு ரஷ்ய,அமெரிக்க பனிப்போர் காலத்தின் அமெரிக்க ஆதரவு உருவாக்கமாக தோன்றி,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானிய தலிபான்,மதக்கல்வி மதராஸாவில் அடைகாத்து முட்டையிடாமல் அமெரிக்காவே இப்பொழுது இந்தியா,பாகிஸ்தானே பேசித்தீர்க்கட்டும்,மூன்றாம் நிலை மத்யஸ்தம் செய்ய விரும்பவில்லையென விலகிக்கொண்டது.
இந்தியாவும்,பாகிஸ்தானும் தலையிடாமல் காஷ்மீர் மக்களாக முடிவு செய்யட்டும் என்ற சூழல் இல்லை.அதே போல் Line of control பகுதியை பாகிஸ்தான்,இந்தியாவின் எல்லையாக நிரந்தரமாக்குவது மட்டுமே யதார்த்த சூழலுக்கு உதவும்.மத அரசியலையும்,மத கல்வியையும் பின் தள்ளி நவீன பொருளாதாரம்,கல்வியில் பாகிஸ்தான் நுழைந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கும்,காஷ்மீருக்கும் விடிவு.
தமிழக,கேரள சகோக்களில் சிலர் தான் வகாபியா,தலிபானா என்ற குழப்பங்களில் பாகிஸ்தான் காதல் கொண்டவர்கள் என்பது ஊரறந்த உண்மை:) என்பதால் காஷ்மீர் பதிவு சார்ந்து வரும் அடடாக்கள் குறித்தும் வைரஸ்கள் குறித்தும் கவனம் கொள்ளுங்கள்.நன்றி.
சதீஷ்,
பதிலளிநீக்குகேள்விகள்,சந்தேகங்கள்,குழப்பங்கள் அனைத்தும் மனித வாழ்வில் சகஜம், எனவே பதிவிலும் எதிரொலிக்கும், உங்கள் மனதுக்கு நீங்கள் செய்வது சரி,நேர்மை என தோன்றினால் சரி தான்.சக மனிதருக்கு பாதிப்பில்லை எனில் கவலைப்பட எதுவும் இல்லை.
எனவே நீங்கள் கவலைப்படாமல் தொடரலாம்.
நீங்களே சொன்னது போல இஸ்லாமியப்பதிவுகளில் மட்டும் கும்பலாக சிலர் வந்து கும்மியடிப்பதால் அப்படியான மாயத்தோற்றம் உருவாகிவிட்டது எனலாம்.
அரசுப்பணியில் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவும் செயல்படுவது அவசியம் என நினைக்கிறேன், உங்களுக்கே தெரியும் எந்தளவுக்கு பார்த்து செயல்பட வேண்டும் என.
பொது மக்களை விட மதவாதிகள் கொஞ்சம் அபாயகரமானவர்கள், அவர்களுக்கு மாற்றாக கருத்துக்கூறிவிட்டால் , உங்களை பழிவாங்குவதாக நினைத்து குழிப்பறிப்பார்கள் எனவே கவனமாக எழுதுவதில் தவறில்லை.
மிகவும் நன்றி தலைவா,என்ன செய்வது ?இந்த திருநாட்டில்,அணுமின நிலையம் கூடங்குள பிரச்சனையாகவும்,ராமேஷ்வர மீனவர்கள் கொலை அவர்கள் பிரச்சனையாகவும்,பழங்குடி மக்களின் போராட்டம் மாவோயிஸ்ட் தீவிரவாதமாகவும்,காஷ்மீர் இஸ்லாமிய போராட்டமாகவும்,மணிப்பூர் பிரிவினை போராட்டமாகவும் பிரித்து பார்க்கப்பட்டு பெட்ரோல் டீசல் விலைகளுக்கு மட்டும் முனங்கி கொண்டு மறந்து போகும் மனிதர்கள்தானே நிறைந்து உள்ளார்கள்.
நீக்கு// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm
பதிலளிநீக்கு.காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //
பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை.
ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன?
முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.
பிரிவினைக் கலவரங்களின் போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம்.
கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.
ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும்.
காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார்.
ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள் தான் பண்டிட்கள்.
இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...
காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.
உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.
குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை.
இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள்.
காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல.
அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். - அ.மார்க்ஸ் (a.marx)
// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm said..
பதிலளிநீக்கு.காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //
ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பா.ஜ.க.வினரும் தங்கள் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்துக்காகக் காஷ்மீர்ப் பண்டிட்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் அதனால் அவர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறியதையும் இந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டதையும் பற்றிப் பேசிவருகின்றனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 'காஷ்மீரில் இந்துக்கள் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது கோயில்கள் தகர்க்கப்பட்டன.
இந்த வெறிச் செயல்களை மதச்சார்பற்ற இந்தியர்கள் ஏன் பேச மறுக்கின்றனர்?'
என்னும் வாதத்தை இந்தப் பிராமணியவாதிகள் தங்கள் செயலை நியாயப்படுத்த முன்வைக்கின்றனர்.
இதில் உண்மையில்லை என்பதை 1993இல் டெல்லியைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகைக் குழு ஒன்று அம்பலப்படுத்தியது.
ஆனால், இந்திய ஊடகங்களில் பேரளவில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதை இருட்டடிப்புச் செய்தனர்.
தகர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட கோயில்களைப் பற்றிய விவரங்களைப் பெரும் சிரமப்பட்டுப் பா.ஜ.க.விடமிருந்தே பெற்றுக்கொண்டு, அந்தப் பத்திரிகைக் குழு பிப்ரவரி 1993இல் அனந்த்நாக் பகுதிக்குச் சென்றது.
கோயில்கள் எவ்விதச் சேதமோ அச்சுறுத்தலோ இன்றி இருந்ததை அந்தக் கோயில் பூசாரிகளிடமிருந்தே தெரிந்துகொண்டது. அவற்றைப் புகைப்படமெடுத்தும் வந்தது.
நாங்கள் சென்ற பல ஊர்களில் காஷ்மீரி பண்டிட்கள் வசித்ததையும் சின்னக் கோயில்கள் அங்குக் காவிக் கொடிகளுடன் இருந்ததையும் கண்டோம்.
ஸ்ரீநகரிலிருந்து சிறிய நகரமான ஷோபியனுக்குச் செல்லும் வழியில் பண்டிட்கள் வசித்த பல கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருந்ததையும் கண்டோம்.
நாங்கள் சந்தித்த தொழிற்சங்கவாதிகளில் (New Trade Union Initiative) பலர் பண்டிட்கள்.
1989இலிருந்து காஷ்மீரிகளின் விடுதலை இயக்கம் ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது.
பண்டிட்கள் பலர் ராணுவத்தின் ஆள்காட்டிகளானார்கள்.
அந்த ஆள்காட்டி வேலையில் முஸ்லிம்களும் ஈடுபட்டார்கள்.
போராளிகள் மத வேறுபாடின்றி ஆள்காட்டிகளைச் சுட்டுக் கொன்றார்கள்.
அதேசமயம் 1990இன் தொடக்கத்தில், இம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்மோகன்
ஏராளமான பண்டிட்களை அச்சுறுத்தியும் தூண்டிவிட்டும்
வெளியேறுவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தும் அகதிகளாக்கினார்.
ஆர்.எஸ்.எஸ். காரரான ஜக்மோகன் தேச விடுதலைப் போராட்டத்தை மதவாதப் போராட்டமாகச் சித்தரிக்க மைய அரசின் துணையுடன் அச்செயலில் ஈடுபட்டார்.
காஷ்மீரில் இன்றும் பண்டிட்களும் முஸ்லிம்களும் நேச உணர்வுடன் உள்ளனர் என்பதையும் நாங்கள் சந்தித்தவர்கள் தெரிவித்தார்கள். - ஜி.கே. ராமசாமி
கட்டுரை
காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்
ராஜ நடராஜன்,
பதிலளிநீக்குகாஷ்மீரிகளையும் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை" என்று சொல்லும் நீங்கள்...
'காஷ்மீர் பண்டிட்களை இடமாற்றம் செய்தது யார்' என்றும் சொல்லாமல்
"அவர்கள் தற்போது எந்தெந்த(?) ஊரில்,
எத்தனை(?) முகாம்களில்,
எவ்வித உரிமைகளும்(?) அற்று
நம் இந்தியாவில் அகதிகளாக(?) அடைக்கப்பட்டு உள்ளார்கள்" என்றும் சொல்லாமல்
கொல்லப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை இருப்பதை போல...
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எண்ணிக்கை ("?சிலர்?")சொல்லாததும் ஏனோ..?
Please read this post... for more info.
பதிலளிநீக்கு"வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்"
Tuesday, October 02, 2012 Abdul Basith
http://www.bloggernanban.com/2012/10/beware-of-virus-by-fake-tamil-bloggers.html
// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm said ...
பதிலளிநீக்கு.காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //
கீற்று சிறப்புக் கட்டுரை
தொண்ணூறுகளில் காஷ்மீரில் ஆளுநராக ஜக்மோகன் இருந்தபோது அவருடைய தூண்டுதலின் பேரிலேயே பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்டனர்.
அப்படி அனுப்பபட்ட பண்டிட்களுக்கு இந்திய அரசாங்கம் டில்லியில் கடைகளையும், குடியிருப்புகளையும் ஒதுக்கிக் கொடுத்திருப்பதோடு, அரசு வேலைகளையும் வழங்கியிருக்கிறது.
காஷ்மீரில் அவர்கள் அரசு ஊழியர்களாக பணி செய்திருந்தால் அதை ஓய்வூதியமாகவும் கொடுக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக தமிழகம் வந்த ஈழ அகதிகளை இந்தியா திறந்தவெளிக் கழிப்பிடங்களில் கொட்டி வைத்திருப்பது போல்தான் பர்மா, ஆப்கான், வங்க அகதிகளையும் வைத்திருக்கிறது.
திபெத் அகதிகள், காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள் இந்த இரண்டு அகதிகளுக்கும்தான் இந்தியா ஒப்பீட்டளவில் வசதியான ஒரு வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
சீனாவுடனான தனது எல்லைப் பிரச்சனையில் திபெத்தை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் இந்தியா திபெத் அகதிகளை ராஜமரியாதையோடு கவனித்துக் கொள்கிறது.
காஷ்மீரில் தன் ஆக்ரமிப்பு இராணுவத்திற்கு எதிராக காஷ்மீரிகள் போராடுவதால் பண்டிட்டுகளை இந்துத்துவப் பாதைக்கு திருப்புவதன் மூலம் காஷ்மீரிகளுக்குள் இந்து முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா.
அந்தத் தந்திரத்தின் விருந்தோம்பலும் உயர்குடி அங்கீகாரமும் இணைந்துதான் பண்டிட்களுக்கு டில்லியில் வசதியான வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
ஆனால் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் பண்டிட்களை தாக்கியதோ அவர்களுக்கு எதிரான வன்முறையிலோ இறங்கியதில்லை.
ஆயுதக் குழுக்கள் போராடிய காலத்தில் எப்படி சில அப்பாவி முஸ்லீம் குடும்பங்கள் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்களோ அப்படியே சில பண்டிட்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இன்று வெளியேறிய பண்டிட்களின் வீடுகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் டில்லியில் வாழும் அவர்களோ டில்லியில் இந்தியாவின் தேசியக் கொடிகளைப் பிடித்தபடி காஷ்மீர்களுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்து முஸ்லீம் என்று இந்துப் பாசிசம் விதைத்த நச்சுக் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். - டி.அருள் எழிலன்
THANKS TO KEETRU.COM
உண்மை பேசுவதாக சுய பிரகடனம் செய்து கொண்டு ஒற்றைக்கண்ணோடு பார்க்கும் வாஞ்சூராரே!
பதிலளிநீக்குநான் பதிவுகள் சார்ந்தே கருத்துக்களை வெளியிடுகிறேன்.சில நேரங்களில் நல்லவை என நினைத்தால் இஸ்லாமிய சார்பு இருக்கும்.பல நேரங்களில் உங்களைப் போன்ற தவறான இஸ்லாமிய வழிகாட்டுதலைப் பார்க்கும் போது மாற்றுக் கருத்துக்களையும் வெளியிடுவதும் வழக்கம்.
ஒரே வட்ட சிந்தனைக்குள் சிக்கி கொள்ள விரும்பாத காரணத்தால் இங்கே உங்களுக்கு எதிரான இஸ்லாமிய தோற்றம் தரக்கூடும்.பிழை எனதல்ல.நன்றி.
காஷ்மீர் பிரச்சினை உச்சமாக துவங்கிய காலம் பண்டிட்களின் இடப்பெயர்ச்சியும்,பாகிஸ்தானின் தலையீட்டால் அதற்கு பின்பான இந்திய இராணுவ அடக்கு முறையும் என்று காஷ்மீர் பிரச்சினையை அணுகுவதே சரியாக இருக்கும்.முஸ்லீம் என்ற பெயர் கண்டு முண்டியடித்துக்கொண்டு வருவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
பதிலளிநீக்குசுயமாக சிந்திக்கவும்,பின்னூட்டங்களிடவும் கற்றுக்கொள்வது விவாதங்களோடு பேச உதவுமென நம்புகிறேன்.நன்றி.
// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm said ...
நீக்குகாஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //
முஸ்லீம்கள் என
அதிகப்பிரசங்கி தனமாக "ஆரம் பிய்த்து" இங்கு இழுத்தது நீர்தானே ?
உமது கச்சேரிக்கு இங்கு யாரும் சிங்கி அடிக்கமாட்டார்கள் என இப்பொழுதாவது புரிந்துகொள்ளும்.
// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 7:40 pm
சுயமாக சிந்திக்கவும்,பின்னூட்டங்களிடவும் கற்றுக்கொள்வது விவாதங்களோடு பேச உதவுமென நம்புகிறேன்.நன்றி.//
ஊருக்கு தான் உபதேசமா?
இனிமேலாவது போதிப்பதை கடை பிடிக்கவும்.
உமது சாயம் வெளுத்து நாட்கள் பலவாகிவிட்டது.
.
.
வணக்கம் தோழர் சதீஸ் செல்லதுரை,
பதிலளிநீக்குமுதலில் உங்களின் மன தைரியத்தை பாராட்டுகின்றேன்.
அடுத்து நீங்கள் கஸ்மீர் பற்றியோ, இஸ்லாம் பற்றியோ பதிவெழுவதில் எனக்கு கோபமோ, தாபமோ இல்லை ... நீங்கள் முஸ்லிமா ? இல்லையா என்பதுப் பற்றி அறியும் ஆவலும் இல்லை ?
ஆனால் எனக்கு எழுந்த சந்தேகம் ஒன்றே ஒன்று மட்டுந்தான் தற்சமயம் ராணுவத்தில் பணியாற்றுகின்றீர்களா என்பது மட்டும் தான். அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றிகள் தோழரே...
ஏனெனில் ராணுவத்தில் இருந்துக் கொண்டே ராணுவத்தை விமர்சிப்பது தேசத் துரோக குற்றம், அதனை ராணுவ நீதிமன்றம் விசாரணை செய்யும், அதனால் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ பாதிப்பு ஏற்படலாம் என்ற எண்ணத்தில் எழுந்த ஐயமே அது !!!
பரவாயில்லை ! இந்திய ராணுவம் இலங்கை ராணுவம் போன்றோ, சீன ராணுவம் போன்றோ, அமெரிக்க ராணுவம் போன்றோ செயல்படவில்லை .. அது வரை மகிழ்ச்சி ...
உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் உங்களின் புகைப்படத்தை நீக்கிவிடலாம். ஏனெனில் இப்புகைப்படத்தை இந்திய விரோதக் கும்பல்கள் தமக்குச் சாதகமாய் திரித்து பல செய்திகளை உலவ விடலாம். அதன் பக்கவிளைவுகள் உங்களைத் தான் பாதிக்கும்.
அடுத்து நான் உங்களுக்கு முன்னமே சொன்னது தான். உங்களின் பணிக்கு இடையூறு இல்லாமல் எழுதுங்கள் .. உங்கள் எழுத்துக்கள் உங்கள் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்குமானால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையோடு இருப்பது மிக்க நலம். ஏனெனில் மதம் சார்ந்த தொனியில் பதிவுகள் வந்தால் அதை ஆதரித்தும், எதிர்த்தும் உசுபேற்ற பலர் இங்குள்ளனர். ஆனால் அதன் பிரச்சனைகள் நம் கழுத்தை நெறிக்கும் போது கைக்கொடுக்க யாரும் வரப்போவதில்லை. ஆகவே ! உமக்கான பாதுக்காப்பை உறுதிசெய்துக் கொண்டு எழுதுங்கள்.
உண்மைகள் வெளிவருவதில் எமக்கு என்றுமே மகிழ்ச்சி ! கஸ்மீர் பற்றி தமிழர்களுக்கு அவ்வளவு தெரிவதில்லை.. ஆக அங்கு நேரில் நின்றோர் தரும் சாட்சியங்கள் பயன் தரவல்லவை.
கஸ்மீர் விவகாரத்தில் சுபியிடம் சொன்னது இங்கும் சொல்கின்றேன். கஸ்மீர் என்பது இறையாண்மை உடைய ஒரு தேசமாகும். அதனை இந்தியா, சீனா, பாகிஸ்தான் கூறு போடுவதில் எமக்கு விருப்பம் இல்லை. அல்லது மத அடிப்படையில் பிளவுப்படுத்துவதிலும் விருப்பம் இல்லை. ஐநா சபையின் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய முடிவுக்கு வருவது மிகச் சிறந்தது. ( இதேக் கருத்தைத் தான் வடக்கிழக்கு இலங்கைக்கும் யாம் முன் வைக்கின்றோம் )
ஆனால் மதவாதிகள் இரட்டை வேடமிடுவதை ராஜநடா சொல்லிவிட்டார்.
ஆகவே ! நிதானம் விவேகம் பிரதானம்.
தொடர்க நும் பதிவுகள் !
உங்களின் சந்தேகங்கள் எவ்விதத்திலும் தவறே இல்லை.சிலர் இஸ்லாமிய தீவிரவாதி என்று குறிப்பிடும்போது பதிவின் உண்மை நிலையில் பாதிப்பு வரக்கூடாது என்றே இப்படி அவசரமாக ஒரு பதிவு இட்டேன்.
நீக்கு####கஸ்மீர் என்பது இறையாண்மை உடைய ஒரு தேசமாகும். அதனை இந்தியா, சீனா, பாகிஸ்தான் கூறு போடுவதில் எமக்கு விருப்பம் இல்லை. அல்லது மத அடிப்படையில் பிளவுப்படுத்துவதிலும் விருப்பம் இல்லை. ஐநா சபையின் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய முடிவுக்கு வருவது மிகச் சிறந்தது. ####
மிக சரியான கருத்து.இதே கருத்தைத்தான் இன்று முகநூலில் நண்பருக்கும் தெரிவித்தேன்.என்னிடம் இங்கு பயிற்சி பெற்ற கஷ்மீர் பசங்க முதலில் இந்தியா என்று சொன்னாலும் என் மேல் நம்பிக்கை வந்த பிறகு தனி கஷ்மீர் என்றே கூறினர்.
##ஆகவே ! நிதானம் விவேகம் பிரதானம். #
தங்களின் மேலான கருத்துகளுக்கும்,அக்கறைக்கும்,அன்புக்கும்,வழிகாட்டுதலுக்கும் மிகவும் நன்றி தோழர்.
ஐயா.. நீங்கள் செய்வது மிகவும் துணிச்சலான செயல். உங்களின் மன உறுதியைப் பாராட்டுகிறேன். அதே போல, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும், அநியாயத்தின் உச்சத்தையும் இவ்வுலகிற்கு எப்படியாவது தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உங்களின் நேர்மை தான், இதன்மூலம் என்ன பிரச்சினை வந்தாலும் சந்தித்துவிடலாம் என்ற தெம்பை கொடுத்திருக்கிறது.
பதிலளிநீக்குஅநியாயத்தை எதிர்க்கும் முதல்படியே அநியாயம் நடைபெறுகிறது என்பதை அறிவதே.
அதன்படி இந்திய ராணுவத்தின் கஷ்மீர் அட்டூழியங்களை கண்முன்னே கொண்டு வந்து கொட்டியிருக்கிறீர்கள். இந்திய ராணுவத்தின் கஷ்மீர் அத்துமீறல்களை ஊடகங்கள் ஒரு சில தருணங்களில் தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதையும் இந்துத்துவ துவேஷவாதிகள் இருட்டடிப்பு செய்து மக்களிடம் சென்று சேரா வண்ணம் பார்த்து கொள்வார்கள். உங்களின் எழுத்தையும் அதிலுள்ள கருத்தையும் நோக்கும் போது எந்த மதத்திற்கும் சாதகமாகவும் அல்லது பாதகவுமில்லை என்றே அறிய முடிகிறது. விருப்பு வெறுப்பின்றி நீங்கள் எழுதுவதாலேயே அந்த உண்மைகள் பொட்டில் அடித்தாற் போல இருக்கிறது.
மேலும், வலைப்பதிவு என்ற ஒரு தனி மனித ஊடகத்தை, நீங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். உங்களை அறியாமலே ஒரு புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். வலைப்பதிவு வைத்துக்கொண்டு சமூகத்தில் துவேஷத்தை விதைத்து வரும் விஷமிகளுக்கு , உங்களின் பதிவுகள் உறுத்தலாகத்தான் இருக்கும். இதோ.. துவங்கி விட்டார்களே போலி ஐடிக்களும், வைரஸ் பரப்புகளும்.
நடுநிலை என்று ஒன்று கிடையாது என்பார்கள். ஒன்று நன்மை பக்கம் இருக்க வேண்டும் அல்லது தீமை பக்கம் இருக்க வேண்டும். தீமைக்கும் நன்மைக்கும் பாலம் போட அவசியமில்லை. நீங்கள் நடுநிலை என்று நீர்த்து போய் விடாமல் நன்மை பக்கமே இருங்கள். உங்களைப் போல நல்ல மனிதர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பீர்கள். அப்போது வேறு மதத்தின் துவேஷவாதிகள் உங்களை சாடி இருப்பார்கள். ஆகவே துவேஷவாதிகள் தூற்றாமலிருக்கும் போது தான் நாம் ஆச்சரியமடைய வேண்டும். ஒடுக்கப்படும் மக்களின் தரப்பு நியாயத்தை உரக்க சொல்லும் போராளியாகத்தான் உங்களை நான் பார்க்கிறேன்.
மிக நீண்ட கருத்துகளோடு அலசி எழுதிய தங்களுக்கு மிகவும் நன்றி நண்பரே...எனக்கு அறிந்தவற்றை அலுதுகிறேன்.எங்கேனும் வெளிச்சம் கிடைக்கட்டும்.ஒருவருக்காவது சில உண்மைகள் புரியட்டும்.நன்றி நண்பரே.
நீக்குneengal unmaiyai ezhuthureenga...
பதிலளிநீக்குkavalai ethukku!?
payam ethukku!?
ungalukku illai-
naan sollanumaa..!?
பயமோ தயக்கமோ இல்லை சகோ நமது பதிவுகளை ஏதேனும் சாயம் பூசி இல்லாமால் ஆக்கிவிடுவார்கள்.அதனால்தான்.நன்றி சீனி கவி சகோ.
பதிலளிநீக்கு@இக்பால் செல்வன்
பதிலளிநீக்கு// கஸ்மீர் விவகாரத்தில் சுபியிடம் சொன்னது இங்கும் சொல்கின்றேன். கஸ்மீர் என்பது இறையாண்மை உடைய ஒரு தேசமாகும். அதனை இந்தியா, சீனா, பாகிஸ்தான் கூறு போடுவதில் எமக்கு விருப்பம் இல்லை. அல்லது மத அடிப்படையில் பிளவுப்படுத்துவதிலும் விருப்பம் இல்லை. ஐநா சபையின் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய முடிவுக்கு வருவது மிகச் சிறந்தது.//
முதல் தடவையாக உங்களை நான் வழிமொழிகிறேன்... பாகிஸ்தானுடன் சேர்ந்து நாமும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, என்னமோ சொந்த தேசம் போல் உரிமையுடன் பேசுவது நேர்மையாளரக்ளுக்கு வெட்கக்கேடு... காஷ்மீர் பற்றி வாய் கிழிய பேசும் தேச பக்தர்கள், பொது மக்கள் நலனுக்காக ரோடு போடவோ அல்லது கழிவு நீர் குழாய் அமைக்கவோ ஒரு அடி இடம் கேட்டால் கோர்ட்டில் கேஸ் போடுவார்கள்... யாராக இருந்தாலும் நீதியின் பக்கமே நில்லுங்கள்.. அது தான் மனித நேயத்துக்கு நெருக்கமானது... நீதியின்றி பேசும் மனிதன் செத்த பொணத்துக்கு சமம்...
பதிலளிநீக்கு"கஸ்மீர் விவகாரத்தில் சுபியிடம் சொன்னது இங்கும் சொல்கின்றேன். கஸ்மீர் என்பது இறையாண்மை உடைய ஒரு தேசமாகும். அதனை இந்தியா, சீனா, பாகிஸ்தான் கூறு போடுவதில் எமக்கு விருப்பம் இல்லை. அல்லது மத அடிப்படையில் பிளவுப்படுத்துவதிலும் விருப்பம் இல்லை. ஐநா சபையின் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய முடிவுக்கு வருவது மிகச் சிறந்தது. ( இதேக் கருத்தைத் தான் வடக்கிழக்கு இலங்கைக்கும் யாம் முன் வைக்கின்றோம் ) "
இக்பாலின் இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
"உங்களைப் போல நல்ல மனிதர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பீர்கள். அப்போது வேறு மதத்தின் துவேஷவாதிகள் உங்களை சாடி இருப்பார்கள்"
பதிலளிநீக்குதிரு.உதயம் இது நேர்மையான கருத்து
"பண்டிட்கள் பலர் ராணுவத்தின் ஆள்காட்டிகளானார்கள். அந்த ஆள்காட்டி வேலையில் முஸ்லிம்களும் ஈடுபட்டார்கள்.
பதிலளிநீக்குபோராளிகள் மத வேறுபாடின்றி ஆள்காட்டிகளைச் சுட்டுக் கொன்றார்கள். "
உண்மை அவர்களுடன் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். ஆட்காட்டி வேலையில் ஈடுபட்டவர்களை கொன்றது சரியா ? தவறா?
விடை எதுவாவும் இருக்கலாம். தங்கள் கருத்து
நான் மேலே கேட்ட கேள்வி உண்மை அவர்களுக்கானது. திரு.சதீஸ் அவர்களுக்கு அல்ல.
பதிலளிநீக்கு"ஆனால் சத்தியமாக உண்டு உறங்கி சலுகைகள் சாப்பிடும் ராணுவம் இல்லை என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன்"
பதிலளிநீக்குஒருவேளை நீங்கள் இந்திய ராணுவத்தில் பயிற்சியாளராக இருந்திருந்தால் விமானப் படையினரைப் பார்த்து மேற்கூறிய வரிகளை கூறியிருப்பீர்களோ ???
முப்படைகளுக்கும் சற்றும் சளைக்காமல் போராடும்,பலியாகும் bsf crpf படை வீரர்களின் எண்ணங்கள் இது என்பதை சொல்லிகொல்கிறேன்.
நீக்குநான் ஒருவேளை இந்திய ராணுவத்தில் இருந்தால் இப்படி நினைக்க வாய்ப்பில்லை ஏனென்றால் எனக்குதான் கிட்டதட்ட விமானப்படைக்கு இணையாக சலுகைகள் கிடைத்து விடுமே....இங்கே அப்படியில்லை...
BDR கள் அவர்களின் ARMY மீது துப்பாக்கியை திருப்பியதன் காரணம் இதை போல காரணங்களுக்காகத்தான் என்று அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ராணுவ அதிகாரி ஒருவர் பஞ்சாப் எல்லையில் எங்களின் தற்காலிக முறையிலான OP(OBSERVATION POST)யை பார்த்து என்னிடம் என்னிடம் நேரில் சொன்ன வார்த்தைகள் இது .."நாய் கூட இங்க இருக்க முடியாது"எப்படி இருக்கிறீங்க?
அப்படினா விமானப்படையில் பயங்கர ஓய்வா?நீங்க டெக்னிகலான படை என்பதால் அதிகம் உங்களை பற்றி தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது சார்.
போட்டு வாங்குறீங்களே நீங்க ஆபிசர்தானே....:)
எனது கோரிக்கைகள் ராணுவத்திற்கு இணையாக அனைத்து விதங்களிலும் சலுகைகள் BSF CRPF வீரர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதே.
வருகைக்கு நன்றி சார்...
நீக்குThanks Mr. Abdul Kader alias satish chelladurai.
பதிலளிநீக்குKeep writing against India. Even then, India can survive in spite of parasites like you. The more you pull down, the more India will come up. Jai Hind.
இந்த சில பதிவுகளால் இந்தியா முன்னேற முடிந்தால் வாழ்த்துக்கள் நண்பரே...##Mr. Abdul Kader alias satish chelladurai.###மறுபடியும் இஸ்லாமிய பூச்சு....நீங்க நல்லா வருவீங்க பாஸ்...
நீக்கு