Translate

BSF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BSF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜூன், 2013

இந்தியர்களை குறிவைக்கும் பாக் SNIPER- தெரிந்து கொள்ளுங்கள்.

SNIPER...எதிரியை குறிபார்த்து அடிக்கும் மிகத்திறமையான பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடுபவனைதான் இப்படி SNIPER  என்று கூறுவர்.அப்படி சுடுபவரை பொதுவா மார்க்மேன் என்பார்கள்.ஆனா இந்த SNIPER கள் கொஞ்சம் விசேஷம்.

இந்த  SNIPER  என்பது SNIPE என்ற ஒரு வகையான பறவையை குறிப்பதாகும்.வேட்டையாடுவர்களிடம் சுலபமாக அகப்படாமல் தப்பி செல்லும் இந்த பறவையை போல இந்த SNIPER களும் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் தனது குறியை சரியாக தீர்த்து விட்டு தப்புவது  இவர்களின் சிறப்பு.(காக்கா கூடத்தான் தப்பிக்குது அதோட பேர் ஏன் வைக்கலன்னு கேக்க கூடாது )

கண்களுக்கு புலப்படாமல் என்றால் எப்படி?இப்படித்தான்


சரி ,இந்த மாதிரி குறிபார்த்து சுட அதற்கு தக்க ஆயுதமும் வேண்டாமா? பிஸ்டலை வைச்சிகிட்டு ஐநூறு மீட்டர் தூரத்துல இருக்கிற டார்கெட்டை சுடுன்னா அந்த பிஸ்டலை கண்டுபிடிச்ச பெருமாளே வந்தாலும் முடியாது.

இந்த SNIPER களின் தேவைக்கு தக்க ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிதான் Sniping SSG-69.இதோட முழு நாமம் STEYER MANNLICHER SSG-69....SSG னா ?SHARP SHOTTER GUN-MODEL 1969.கடந்த நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக SNIPING RIFILE வகையில் தனக்கென தனி இடம் வைத்துள்ளது இந்த RIFLE.TELESCOPE பொருத்தப்பட்ட இந்த துப்பாக்கியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள டார்கெட்டை துல்லியமாக சுடமுடியும்.

இந்த மாதிரியான SNIPER கள் தங்களை நிலப்பரப்பின் தன்மைக்கு தக்க மாற்றி கொள்ளும் முறை மிக முக்கியமானது.மரத்தோடு மரமாக,புதரோடு புதராக மாறிக்கொண்டு காத்திருந்து சரியான நேரத்தில் தனது குறியை முடிப்பது திறமையான ஒரு சவால்தான்.


பொதுவாக பல நாடுகளில் போலீஸ்,மற்றும் ராணுவத்தினர் இந்த துப்பாக்கியை பயன்படுத்தவது போல இந்தியா,பாகிஸ்தான் இரண்டு நாட்டிலுமே இதை ராணுவத்தினர் பயன்படுத்துகிறனர்.பாகிஸ்தானில் கொஞ்சம் அதிகப்படியா ராணுவத்தினரை தவிர பல ஆயுத குழுக்களும் பயன்படுத்துகின்றனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சில இடங்களில் இது போல பாக் ஆசிர்வாதத்துடன் SNIPER மூலம்  இந்திய வீரர்கள் மீது இல்லை விவசாயிகள் மீது திடிரென தாக்குதல் நடக்கும்.பதிலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதில் தாக்குதல் தொடங்கும்.பாகிஸ்தானும் தனது ட்ரிக்கரை அழுத்த ஆரம்பிக்கும்.அங்கேயும் இங்கேயுமாக பகைக்கும் புகைக்கும் நடுவே மெசேஜ்கள் பறக்கும்.அப்புறம் தாக்குதல் நிறுத்தப்படும்.

அடுத்த நாள் நடக்கும் FLAG MEETING ல் நீங்கதான் சுட ஆரம்பிச்சிங்க என்று பாகிஸ்தானும்,இல்ல நீங்க சுட்டதால்தான் நாங்க சுட்டோம்னும் இந்தியாவும் கதற.....ஒரு வழியா கை குலுக்கிட்டு கிளம்புவாங்க.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக இது போன்ற ஒரு SNIPER தாக்குதலில் இந்திய விவசாயிகள் இரண்டு பேரின் மேல் குண்டுகள் பாய
பதிலுக்கு எனது பட்டாலியன் மிக கடுமையான ஒரு பதிலடி கொடுத்தது.அந்த பகுதியில் பாகிஸ்தான் இதற்க்கு முன் சந்திக்காத அதிரடி அது.கிட்டத்தட்ட அனைத்து ஆயுதங்களாலும் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது எனது பட்டாலியன்.

இப்படியான தாக்குதலில் தாக்குதல் முடிந்த பின் சுட்டவற்றிர்க்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும்...அது ஒரு தலைவலி பிடித்த வேலை..அது போக ஏன் இவ்வளவு குண்டுகளை வீணடித்திர்கள் என்று வேறு கேள்வி வரும்.இதற்கு பயந்தே தாக்குதல்களை ஒரு அளவாக  பல பட்டாலியன்களின் கமாண்டன்ட்கள்  வைத்து கொள்வார்கள்.இதை அறிந்தே பாகிஸ்தானும் சீண்டி கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த அதிரடி பதிலடிக்கு பின் நடந்த FLAG MEETINGல் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எனது பட்டாலியன் COMMANDANT விஜய் பால் சிங் இவ்வாறு கூறினார் "அனைத்து ஆர்டர்களும் எனது பாக்கெட்டில் வைத்துள்ளேன்....டெல்லியை கேட்டு அதன் பின் தாக்குதல் நடத்துவேன் என்று நினைக்க வேண்டாம்.எனது பட்டாலியனின் பகுதியில் ஒரு சிறிய அசம்பாவிதம் நடந்தாலும் பதிலுக்கு மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடுவீர்கள் என்று எச்சரிக்கிறேன்""

SSG-69 குறித்து மேலும் விரிவாக அறிய மற்றும் படங்களுக்கு இங்கே  மற்றும் இங்கேயும் சுட்டுங்கள்.தவிர விக்கியிலும் காணலாம்.SNIPERகளின் புகைப்படங்களை கூகுளாண்டவரிடம் கேட்டால் அள்ளித்தருவார்...கீழே உள்ள படம் நான் கிளிக்கியது.


இன்னும் நெறைய எழுதலாம்......இந்த பதிவிலேயே எதிரி எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்பதை எப்படி கணிப்பது போன்ற கேள்வி வரும்போது அடுத்த பதிவு தர தோணுகிறது.வரும் திங்களில் நான் டியூட்டியில் சேர வேண்டும்.அதற்குமுன் நேரம் அமைந்தால் மற்றுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

பதிவுகள் குறித்த பின்னூட்டங்கள்,கேள்விகள்,வசைகள் மற்றும் ஓட்டுகள் வரவேற்க்கப்படுகின்றன.


புதன், 5 ஜூன், 2013

இந்தியா -பாக் எல்லைப்புற படங்களும்...சில தகவல்களும்...

வழக்கமா மனசுக்குள்ளே உள்ளத எழுதும்போது வரும் கோர்வையான வார்த்தைகள் இல்லாமல் இந்த பதிவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன்....

கீழ் காணும் இந்த படத்தில் காணப்படும் கம்பி வேலி உங்களின் வரிப்பணத்தில் பாகிஸ்தானின் அலும்பு தாங்காமல் இந்தியா  பஞ்சாப்,ஜம்மு,காஷ்மீர்,ராஜஸ்தான்,குஜராத் என பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதிகளோடு  நீட்டி,வளைத்து ,நெளித்து அமைத்ததாகும்.  .
இது ஜம்மு சாம்பா பார்டர்.
இந்த வேலி பாகிஸ்தானோடு மட்டும் 2,289.66km அமைக்கப்பட்டுள்ளது.இன்னும்  148.073km வேலியிடாமல் உள்ளது.தவிர 282.655km நீளம் நீர்ப்பரப்புகள் ஆகும்.ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்த வேலியை அமைக்க விடாமல்தான் பாக் பயங்கர தொந்திரவை கொடுக்கும்.

இது ராஜஸ்தான் பாட்மீர் பார்டர்.
12 அடி உயர இந்த இரு பக்க வேலி கம்பிக்கு நடுவே இரண்டு கன்சல்டினா வேலி எனப்படும் சுருள் சுருளான வேலி அமைந்திருக்கும்.இது போக இரவில் குறிப்பிட்ட  கம்பிகளில்  மின்சாரம் வேறு பாயும்.வேலிக்கு இந்த பக்கம் அமைந்துள்ள 22அடி பாதையும் வேலிக்கு அந்தப்பக்கம் உள்ள  14 அடிப்பாதையும் காலடி தடங்ளால்  ஊடுருவல் நடந்துள்ளதா என இடத்திற்கு தக்க சோதனை செய்யப்படும்.(குறிப்பா ராஜஸ்தான் )
உயர பார்வையில்  வேலி 

 கீழே உள்ள இடம்தான் நாங்கள் காவல் காக்கும் இடங்கள்.பகலில் OP (OBSERVATION POST ) என்றும் இரவில் NAKA POINT,AMPUSH POINT OR MOUNT என்றும் அழைக்கப்படும்.



இதுதான் நம்ம ஆபீஸ் பாஸ் ...:)
மவுண்ட் 


நீண்டு செல்லும் வேலியில் குறிப்பிட்ட இடைவெளியில் கேட் (GATE) அமைந்திருக்கும்.வேலிதான் இந்தியாவின் எல்லை இல்லை.வேலியிலிருந்து 50mtr முதல் 3km வரை கூட இந்தியாவின் நிலம் இருக்கும்.மேலே காணும் கேட் திறக்கப்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்ய காவலோடு அனுன்மதிக்கப் படுவர்.அப்படின்னா இந்தியா பாகிஸ்தானின் எல்லை சரியாக எப்படி கணிப்பது?


இந்த படத்தை கூர்ந்து கவனித்தால் வேலிக்கும் பாகிஸ்தானின் OP TOWERக்கும் நடுவே வெள்ளையா ஒரு கல் போல தெரிகிறதா?இல்லையெனில் அடுத்த படத்தை பாருங்கள் 

இந்தியா என்று எழுதப்பட்ட இந்த வெள்ளை கல்லை பில்லர் என்று அழைப்பர்..இதன் அப்புறம் பாகிஸ்தான் என்றும் அதன் கீழே பில்லர் நம்பரும்  எழுதப்பட்டிருக்கும்.இந்த பில்லர்களை இணைத்து உருவாகிறது  IBஎனப்படும் INTERNATIONAL BORDER .இதுதான் எல்லையே தவிர வேலி அல்ல.

இத்தனையையும் மீறி வேலி கம்பி அறுக்கப்பட்டு ஊடுருவினால் அல்லது அறுக்காமலேயே ஊடுருவல் நடந்து விடுகிறது என்று வைத்து கொள்வோம்.அறுக்கப்பட்ட வேலியை அப்போதைக்கு இணைத்து வைத்து உண்மை மறைத்தாலும் ஊடுருவியவன் நகருக்குள் மாட்டி கொள்ள நேர்ந்தால் எந்த பில்லரின் பக்கமா ஊடுருவினான் என அறியப்பெற்று அந்த தேதியில் அந்த இரவில் காவலில் இருந்தவர்களின் வேலைக்கு ஆப்படிக்கப்படும்.

இது பாகிஸ்தானின் OP TOWER. பைனாகுலரில் மொபைல் கேமராவை வைத்து சிரமப்பட்டு எடுத்த படம்.கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டவராகும்.வளைந்து நெளிந்து செல்லும் எல்லையில் தனது டவர் எது எதிரி டவர் எது என்று அடையாளம் காண பாகிஸ்தான் டவரில் பாகிஸ்தான் கொடி பறப்பதை கவனிக்கவும்.


இரவு நேர எல்லை.....மின்வெட்டானால்?அடுத்த இரு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக விளக்குகள் எரியும்.கீழே சேட்டிலைட் எடுத்த இந்திய பாகிஸ்தான் எல்லை படங்களை பாருங்கள்.பிரம்மிக்க வைக்கும் விளக்கு வெளிச்சம் ஆரஞ்சு வண்ணத்தில் கோடு போல செல்வதை பாருங்கள்.







இந்தியா-பங்களாதேசின் எல்லை நீளம் 4,096.70 km ஆகும்.இதில் 1,116.200 km நதி,நீர்ப்பரப்பாகும்.

அடுத்த பதிவில் தற்போது நான் நிற்கும் சாம்பா எல்லையில் உள்ள பாகிஸ்தான் தரும் முக்கிய அச்சுறுத்தல் ....ஸ்னைப்பர் ..

இந்த பதிவு என்னவோ படம் போட்டு பாகம் குறிச்ச மாதிரி இருக்கு எனக்கு.....எல்லையை பற்றிய அருமையான பதிவை படிக்க இங்கே சுட்டுங்கள் 

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நான் இஸ்லாமியனா?ராணுவத்தில்தான் பணி புரிகிறேனா?

நான் யார் ? சிறந்த பதிவர்களில் ஒருவரான (கவனிக்க பிரபல அல்ல) இக்பால் செல்வன் அவர்கள் கூட என்னை என் பணியை சந்தேகித்திருந்தார்.எனது சில பதிவுகளை வைத்து நான் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவன் என்றும் பெயர் மாற்றி எழுதுகிறேன் என்றும் பின்னூட்டங்கள் வருகின்றன.

இது என்னை அறிமுகம் செய்ய ஒரு அவசியத்தை கொடுத்துள்ளது.

நான் எந்த மதத்தை சேர்ந்தவன் ?

இந்து மதத்தில் பிறந்து தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் பெற்றோரால் கிறிஸ்துவத்தை நேசித்து எல்லா இழவும் ஒன்றே என்று எந்த மதமும் பிடிக்காமல் நிம்மதியாக இருக்கும் சாதாரண மனிதன் நான்.இஸ்லாமியம் மதம் இல்லை மார்க்கம் என்று எவ்வளவு சொன்னாலும் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை.அவசியமும் இல்லை.பெரியாரின் வார்த்தைகள் பிடிக்கும்.அதற்காக அவர் மட்டுமே வழிகாட்டி என்று பைத்தியம் ஆவதில்லை.திராவிடர் கலகத்தை நம்பும் அளவுக்கு இல்லாமல் சற்று பகுத்தறிவு உள்ளதாக நம்புகிறேன்.

நான் ரானுவத்தில்தான் பணி செய்கிறேனா?

இல்லை நான் ராணுவத்தில் வேலை செய்யவில்லை.துணை ராணுவம் என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் 13வருடமாக பணி புரிகிறேன்.இப்போதும் பணி புரிகிறேன்.இப்போது துணை ராணுவம் என்றும் சொல்ல முடியாது CENTRAL POLICE SERVICEல் நாங்களும் அடங்குகிறோம் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாக உடன் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சத்தியமாக உண்டு உறங்கி சலுகைகள் சாப்பிடும் ராணுவம் இல்லை என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன்.

நான் ஏன் என் பணியை குறிப்பிட்டு எழுதுகிறேன்?
உண்மையின் நம்பகத்தன்மை இதன்  மூலம் கூடுதலாகும். சும்மா எழுதினா அவ்வளவு தூரம் நம்பமாட்டர்களே.

ஏன் எனது பதிவுகள் என்னை இஸ்லாமியனாக காட்டுகிறது?

எனது பணியின் நிமித்தம் நான் நேராக கண்ட உரிமை போராட்டம் காஷ்மீர் மக்களுடையது.இங்கு நமது வாழ்க்கை எவ்வளவு சுதந்திரமோ அவ்வளவு கட்டுப்பாடானது காஷ்மீர் மக்களின் நிலை.நான் அவர்களின் போராட்டங்களை மட்டுமே ஆதரிக்கிறேன் அன்றி அவர்களின் மதத்தை அல்ல.மணிப்பூர் சர்மிளாவையும் ஆதரிக்கிறேன்.அங்கு நடக்கும் ராணுவ அடக்குமுறைகளையும் எதிர்க்கிறேன்.மணிப்பூரில் என்ன மதமோ?காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகிறது என்றால் நான் என்ன செய்ய முடியும்?அவர்களும் மனிதர்களே என்று ஏன் நினைக்க கூடாது.

நான் ஒருவேளை மணிப்பூரில் இருந்திருந்தால் காஷ்மீரை விட அங்கு நடப்பவற்றை பற்றியே எழுதியிருப்பேன்.இதுதான் உண்மை.எனவே என் மீது மத சாயம் பூச வேண்டாம்.நான் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் இஸ்லாமிய நண்பர்கள் வருவதில்லை.அவர்களுக்கு குரல் தரும்  பதிவுகளை மட்டுமே அவர்கள் ஆதரித்துள்ளார்கள்.அவ்வளவுதான்.

எனது பாதுகாப்பு படை பணியில்  நான் இது வரை நீங்கள் நம்பும் இந்திய தேசத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை.என் மாணவர்களுக்கு சற்று வர்க்க வேறுபாடுகள்  பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன்.அவ்வளவுதான்.

இல்லை இல்லை நீ  எழுதுனா நாங்க நம்பிடனுமான்னு கேட்டால்? கொஞ்சம் காத்திருக்கவும் அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் அறிமுகம் ஆகலாம்.









திங்கள், 1 அக்டோபர், 2012

மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் -ஒரு சிறிய தொடர்ச்சி

கடந்த பதிவில் மனித கேடயமாக்கப்படும் காஷ்மீரிகளை மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் எழுதியிருந்தேன்.பல கருத்துக்கள் முக நூலிலும் வந்தன..அதில் ஒன்று வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதி காஷ்மீரிகளை சுடுவதும் தவறுதானே அதை ஏன் சுட்டி காட்டவில்லை என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார்

போராளிகளோ தீவிரவாதிகளோ அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் அன்பும் மிக மிக முக்கியம்.அவர்கள் உதவியின்றி கொஞ்சமும் செயல்பட முடியாது.எனவே அவர்கள் வீட்டுக்குள் நுழையும் காஷ்மீரிகளை தாக்க மாட்டார்கள்.இதை பயன்படுத்திதான் ராணுவம் காஷ்மீரிகளை உள்ளே பலியாடாய் அனுப்புகிறது.

அப்படியானால் இதில் என்ன தப்பு ? அதுதான் ஆபத்தில்லையே என்று தோனுகிறதா? தப்புதான் நண்பர்களே,உள்ளே இருக்கும் ஆய்தவாதி கதவு திறக்கும்பட்சம் உடனடியாக தாக்குதல் நடத்துவார்.அங்கே எதுவும் தெரிய போவதில்லை.உள்ளே வருவது பொது மனிதனா?ராணுவமா? யோசிக்க முடியா சில  தாக்குதலில் பொது மக்கள் ,வாலிபர்கள் ஏன் பலியாக வேண்டும்?

நான்தானே சபதம் எடுத்து உங்கள் மத்தியில் நாயகன் போல துப்பாக்கி ஏந்தி களமாட சம்பளமும் இன்ன பிற சலுகைகளும் பெறுகின்றேன்.அந்த அப்பாவி வாலிபர்களை முன்னால் நிறுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?சில நேரம் ராணுவத்திற்காக வைக்க கூடிய குண்டுகள் வெடிக்கும் போது அவர்களும் வெடித்து சிதறலாம் ...என்ன கிடைக்கப் போகிறது அவர்களுக்கு வெடித்து சிதறினால்?தீவிரவாதி பட்டம்?

நான் தாக்குதலுக்கு ஆகும் பட்சம் எனக்கு விருதுகளும் பேரும் பென்சனும் சலுகைகளும் வேலை வாய்ப்பில் முன்னுரிமைகளும் காத்து கிடக்கின்றன.ஆனால் அந்த பலியாடுகளுக்கு?மனித கேடயங்களுக்கு?நான் சண்டையிட பயிற்சி கொடுக்கப்பட்டு அது போலவே சண்டையிட வரும் எதிரியிடம் சண்டையிட களத்தில் நிற்கிறேன்.இடையில் அப்பாவி மக்களை பலியாடாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சரி ராணுவத்திற்கும் சரி முக்கிய தேவை பொதுமக்களின் ஆதரவு. அதை சம்பாதிப்பது அவர்களின் நடவடிக்கைகளே.இப்படி அப்பாவி மக்களை பலியாடாய் பரிசோதனை செய்வதன் மூலம் பயத்தை விதைக்க முடியுமே தவிர அன்பையோ ஆதரவையோ அல்ல.

விடுதலை புலிகள்,கூடங்குள போராட்டக்காரர்கள் பெண்களை குழந்தைகளை முன்னிறுத்தி மனிதகேடயமாக பயன்படுத்தி போராடினார்கள் போரிட்டார்கள் என்றும் அதை தவறு என்றும் சொல்வீர்கள் என்றால் இங்கு காஷ்மீரில் அப்பாவி வாலிபர்களை வலுகட்டாயமாக துப்பாக்கிகளுக்கு முன்னால் நிறுத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?

கூடங்குள போராட்டம் ஆயுதம் ஏந்தாமல் போராடும் அறப்போராட்டம்.அதற்கே அப்படி பெண்களை குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துகிறார் உதயகுமார் என்று சொல்லும் அலறும்  நண்பர்களே இந்த காஷ்மீர் மனித கேடயங்களை அரசே செய்வது எப்படி சரியாகும்?

மனசாட்சியோடு சிந்தியுங்கள்....இங்கே உங்கள் தேசப்பற்றை தூக்கி தூர வையுங்கள்.ராணுவத்தின் மீது உங்கள் பற்றை காண்பிக்காமல் ஒரு இளம் வயது உயிர்களின் போராட்டங்களையும் வாழ்க்கை முறை கஷ்டங்களையும் உணருங்கள்.

எனது பெயரையோ எனது மதத்தையோ தேடாமால் உண்மைகளை உணருங்கள்.கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன.


ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள்

மனித கேடயமாக மக்களை பயன்படுத்துவதை பற்றிய இந்த பதிவு அப்பட்டமான ஒரு உண்மையை உரைக்கிறது.உண்மைக்கும் உயிருக்கும் நடுவில் இந்த பதிவை எழுதுகின்றேன்.உண்மையை புரியும் பட்சம் அப்பாவி உயிர்கள் காப்பற்றப்படலாம்.அதே நேரம் அந்த இடத்தில்  என்னை போல ஒரு  ராணுவ வீரன் இறக்கப்பட நேரிடலாம் என்றும் தெரிந்தே எழுதுகிறேன்.

காஷ்மீரில் நடக்கும் முக்கியமான ஆபரேசன் CORDON AND SEARCH OPERATION.  சுருக்கமா CASO. (இதை பற்றி கோனார் பதிவு போடலாமா என்று யோசிக்கிறேன்.பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.)அதாவது முற்றுகை இட்டு சோதனை செய்தல்.

நம்ம ஊருக்குள்ளே ஒரு போராளி ஏதோ ஒரு காரணமா ஊருக்குள் வந்துள்ளார் சரியா...அதை தெரிஞ்சிகிட்ட ராணுவம் ஊரை வளைச்சி முற்றுகை இட்டு உள்ளது என்றால் அதுதான் CASO. வீடு வீடா சோதனை நடக்கும்.ஆம்பிளை பசங்க மொத்தமும் பொதுவா ஒரு இடத்துக்கு வந்துடனும்.தவறி வீட்டுக்குள் இருந்தா தவறுதலாக தீவிரவாதியா கருதப்பட்டு தவறுதலாக சுடப்படலாம்.தவறுதலாக சாகலாம்.அரசால், ஊடகங்களால் சரியாக்கப்படலாம்.சரியாக்கபடும்.பட்டுள்ளது.

ஆளில்லா வீடுகள் 
ஒவ்வொரு வீடாக நுழைந்து சோதனை செய்யவேண்டும்.எந்த வீட்டின் உள்ளே இருந்தும் குண்டுகள் சீறி வரலாம்.நுழை வாயிலில் கண்ணி வெடி வைத்திருக்கலாம்.உயிரை பணயம் வைத்து யார் முன்பே செல்வது?வீட்டுக்குள் எப்படி நுழைவது?எப்படி சோதனை போடுவது?

இங்கேதான் ராணுவம் தனது எல்லையை மீறுகிறது...மனித கேடயமாக காஷ்மீரிகளை  பயன்படுத்துகிறது.

ஆம்,ராணுவம் நான்கைந்து காஷ்மீரி வாலிபர்களை பிடித்து வலுக்கட்டாயமாக ஒவ்வொரு வீடாக உள்ளே அனுப்பி வைப்பார்கள்.அந்த இளைஞர்கள்தான்  முதலில் உள்ளே போய் அனைத்து ஜன்னல்களையும் திறந்து காண்பிக்க வேண்டும்.உள்ளே இருந்து வரும் முதல் அட்டாக்கை அவர்கள்தான் எதிர் கொள்ள வேண்டும்.கவசம் தாங்கிய உடைகள்,ஹெல்மெட் என்று எந்த பாதுகாப்பும் இல்லாமல் நிராயுதபாணியாக உள்ளே அனுப்பப்படும் அந்த இளைஞர்கள்தான் ராணுவத்திற்கு மனித கேடயங்கள்.

பலவித ஆயுதங்களும்,பாதுகாப்புகளும்,பயிற்சிகளும் கொண்ட ராணுவம் உள்ளே நுழைய வேண்டுமா?நிராயுதபாணி இளைஞர்கள் நுழையவேண்டுமா?

அந்த மனித கேடயங்கள்  சோதனை செய்த பிறகுதான் ராணுவம் உள்ளே நுழையும்.அந்த இளைஞர்கள் ஒருவேளை உள்ளே செல்ல மறுத்தால்?

உள்ளே போக மறுத்தால் அடிகளும்,உதைகளும்,பிறப்பு பற்றிய அசிங்க பேச்சுக்களும் ஏச்சுக்களும் கிடைக்கும் .தீவிரவாதிகளுக்கு ஆதரவான ஊர் என்ற சிறப்பு கவனிப்பில் அடிக்கடி சோதனை நடைபெறும்.பல கைதுகள்,சித்திரவதைகள்,உயிரிழப்புகள் தொடர்கதையாகும்.

ஒருவேளை அப்படி அந்த வாலிபர்களின் உயிருக்கு ஏதும் நேர்ந்தால் அவனுக்கு சத்தியமாக இந்தியா மெடல் குத்தப்போவதில்லை.மாறாக அவனையும் தீவிரவாதியாக்கும் வேலைகள் நடைபெறும்.இல்லையெனில் CROSS FIRE ல் செத்ததாக காண்பிக்கும்.

அந்த வாலிபர்களின் பதின் வயது பையன்களின் வலிகளையும்  கண் முன்னே பலியாடாய் போகும் மகன்களை பெற்ற  தாய்களின் தந்தையர்களின் கண்ணீர்களையும் நாம் என்று உணர்வோம்?

ஒவ்வொரு வீடும் சோதனை செய்யும்போது வேர்க்க விறு விறுக்க உள் நுழைந்து வெளியே வரும் காஷ்மீர் பசங்களை போலத்தான் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நடக்கும் CASO ஆபரேசன்கள் நடக்கின்றன.

ஊர்ல உள்ள உங்க தம்பியையும் பக்கத்தூட்டு   பசங்களையும்  பிடிச்சி கட்டாயமாக அந்த மாதிரி தீவிரவாதி இருக்கிற வீட்டுக்குள் அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்?உள்ளே உள்ள ஆயுத போராளி ராணுவம் நுழைகிறது என்று சுட்டால்?அதில் உங்கள் தம்பியோ மச்சானோ உடல் சிதறி விழுந்தால்?ஊனமானால்?உயிரிழந்தால்?கொஞ்சமா கற்பனை செய்து பாருங்கள்.

இங்கே மனித கேடயமாக யார் யாரை பயன்படுத்துகிறார்கள் என்று 'சோ ' போன்ற அண்ணாவிகள் அவசியம் தெரிவிக்கவும்.இது சரிதானா என்று தன் வீட்டில் இவற்றை நிறுத்தி யோசிக்கவும்.

2006ல் கமாண்டோ பயிற்சியின் போது இதை(CASO) பற்றிய வகுப்பில் இது போல செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எனது அதிகாரி ஒருவர் சொன்ன போதுதான் எனக்கும் உண்மை தெரிந்தது.

குறிப்பு: நான்  காஷ்மீரில் இருந்த வரை  எங்களது ஆபரேசன்களில் காஷ்மீர் வாலிபர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் நடக்கவில்லை என்பது ஆறுதல்.அதன் காரணம் என்னவென்றும்,அப்படி மனித கேடயம் இல்லாமல் நடந்த ஆபரேசன் ஒன்றை பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்.

இது உண்மைக்கும், என்னை போன்ற ஒருவனின் உயிருக்கும் நடுவில் உண்மைக்காக எழுதப்பட்டுள்ளது.தங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்.
கேள்விகள்  கேளுங்கள்.உங்களின் கேள்விகள் பல உண்மைகளை கொடுக்கட்டும்.புரிதலை தரட்டும்.எனவே கேள்விகள் கேளுங்கள்.

இந்த பதிவின் தொடர்ச்சியை படிக்க இங்கே சுட்டுங்கள் மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள்- ஒரு சிறிய தொடர்ச்சி





திங்கள், 17 செப்டம்பர், 2012

எல்லை பாதுகாப்புப்படை -ஒரு சின்ன அறிமுகம்.

ராணுவத்திற்கும்  துணை ராணுவத்திற்கும் வித்தியாசம் தெரியாம நிறைய பேர் இருப்பதினால் இந்த பதிவு.ராணுவம் என்றால் INDIAN ARMY துணை ராணுவம்னா PARAMILITARY FORCE.இந்தியாவில் துணை ராணுவத்தில் பல படைகள் உள்ளது.அதில் ஒன்றுதான்  எல்லை பாதுகாப்பு படை..வெள்ளைக்காரன் மொழில BSF(BORDER SECURITY FORCE).....BSF பற்றி அறிந்து கொள்ளுதல் இனி வரும் என் பதிவுகளுக்கும் உங்களின் பொது அறிவுக்கும் உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

கொசுவத்தி கொளுத்துங்கப்பா..கொஞ்சம் பிளாஷ்பேக்.முன்னாடி சுதந்திர இந்தியாவில் வடக்கே உள்ள எல்லைகளை அந்தந்த மாநில காவல்துறைகளே "கவனித்து" கொண்டன. குப்புற படுத்துட்டு காலாட்டி (இது எப்படி சாத்தியம்?) காவல் பார்த்த மாநில ஆயுத படைகளை பார்த்து பாகிஸ்தானுக்கு ஒரு குடைச்சல்.ஊடல் இல்லைனா காதல் எப்படி விளங்கும்?

1965ல ஏப்ரல 9ம் நாள் குஜராத்தாண்டை சர்தார் போஸ்ட் மற்றும்  சில இடங்களில் பாக் மூக்கை நீட்ட இந்தியா நாக்கை துருத்த ஒரு ஐந்து வாரம் பல்லாயிரம் உயிர்களின் குருதியோடு  உசாராயி இந்தியாவின் மேல்படிகளான  சர்மாக்கள்,மேனன்கள் யோசிச்சி இந்தியாவோட எல்லைக்காகவே உருவாக்குனதுதான் BSF.1965 டிசம்பர் 1ம் தேதி BSF உருவாக்கி  கே எப் ருஷ்டம்ஜி னு ஒரு அதிகாரியை  தலைவராக்கி அவரை BSF தந்தைனு எழுதிகிட்டாங்க.
இத பாருங்கப்பா DUTY UNTO DEATH


அன்னைக்கு வேலி கட்டி பாதுகாக்க ஆரம்பித்த BSF இன்று பாகிஸ்தான், பங்களாதேஷ்  எல்லைகளில் பெண்கள்(ஆமா பாஸ் பஞ்சாப் எல்லையில்) உட்பட 2,40,000 பேர் பணி புரிய பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லை பகுதியில் காவலுக்கு நிற்கிறது.

இவங்க வேலை என்னானா எல்லை ஊடுருவல் தடுத்தல் ,கடத்தல்களை தடுத்தல்,எல்லையை பாதுகாத்தல்.....அதே மாதிரி போர் வந்துச்சுன்னா அப்பாடக்கர் ஆர்மி முன்னாடி வந்துரும்.அதுக்காக அந்த நேரம்  BSF தயிர் கடைய போய்டாது...கொஞ்சம் மொக்கையா எதிர் பார்ட்டி இருக்குற இடத்துல பாதுகாப்பு,முக்கியமான இடங்களை பாதுகாப்பது,அகதிகள் கட்டுப்பாடு,மற்றும் சில பிகர் உள்ள இடமா(எதிரி நாட்டுக்குள்னு அர்த்தம்ங்க ) ஊடுருவல் பண்ணுறது.இது போக நாட்டுக்குள்ளே அரசியவாதிகளை எதிர்த்து கூட்டம் போட்டா கலைக்கிறது, கை வைக்கிறதுன்னு உப தொழிலும் பார்க்கணும்.(CRPF வேலையே இதுதான்.கூட நாங்களும் தொடுப்புக்கு)

காஷ்மீரில் தனியாக ஆபரேசன் செய்யும் அதிகாரம் ராணுவத்திற்கு உண்டென்றால் BSFக்கும் உண்டு.CRPF தனியா ஆபரேசன் பண்ண முடியாது.எல்லையிலும் காவல் காத்து காஷ்மிரிலும் கலவரம் பண்ணி(??!!) மன்னிக்க கலவரம்  அடக்கி தேர்தலுக்கும் காவல் காத்து  இப்படி எல்லா இடங்களிலும் பணி செய்வதால் ஆல் ரவுண்டர்னு நீங்க சொல்லலாம்.நாங்க எங்களுக்குள்ளே சொல்வது என்னானா BSF ஒரு விபச்சாரி.யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்.(எங்க கஷ்டம் எங்களுக்கு).

அப்படினா BSF ராணுவம் இல்லியா? இல்லை பாஸ் இது ஒரு துணை ராணுவம்.தின்னு தின்னு தூங்கி வழியிற ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கையில் இருக்கும் சுகபோகி. BSF என்பது உள்துறை அமைச்சகத்தின் கையில கிடக்கும் ஒரு சவலைபிள்ளை.(CRPF,ITBP,SSB,CISF னு பல பிள்ளைங்க இருக்குதுங்க.)

ஏன் அப்படி?அது அப்படித்தான்...இரண்டிற்கும் பல சலுகை வித்தியாசங்கள் உண்டு.ராணுவத்தில் வேலை குறைவு  சலுகை அதிகம்.BSFல வேலை அதிகம் சலுகை குறைவு.இது BSF க்கு அண்ணாவான CRPFக்கும் பொருந்தும்.கூர்ந்து கவனியுங்கள்... இன்று சட்டிஷ்கரில் பலியாவது இவர்கள்தானே தவிர ராணுவத்தினர் இல்லை.

இப்படிப்பட்ட BSF பற்றி தெரியாமல் பச்சை சட்டை போட்டவன்லாம் ராணுவத்தான்னு நினைச்சிகிட்டு  ரம் கேக்குறது ,காண்டீன்ல சோப்பு வாங்கி தர சொல்றதுன்னு காமெடிலாம் நடக்கும்.இதெல்லாம் உண்டுதான் ஆனா ராணுவ அளவுக்கு இல்லை.

அவங்க அவங்கதான் ..நாங்க நாங்கதான்.அவர்கள் இந்தியாவின் மிக பலம் வாய்ந்த ஆயுதங்களை  வைத்திருப்பார்கள்.நாங்க கொஞ்சம்(ரொம்ப                                                                                      ) மொக்கை பீசுங்க..ஆனா கடின உழைப்பாளிங்க.

இரண்டுக்குமே பொது என்னனா சிப்பாய் என்பவன் அனைத்து இடங்களிலும்  அடிமையே.

இனி வரும் பதிவுகளில் பல எல்லை புற நிகழ்வுகள்,பங்களா தேஷ் எல்லை, காஷ்மீர் ஆபரேசன் செய்யும் விதம்,மீறப்படும் மனித உரிமைகள் பதியப்படும்.கூடவே படை வீரர்களின் தரப்பையும் எடுத்து சொல்லப்படும்.

BSF பற்றி விக்கியில் தேடினால் நிறைய தருவார்கள்.கூடவே வங்காள கொடுமைகளையும் தருவார்கள்.உண்மைகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு ஏற்றுகொள்வது உங்கள் மனதில்...

குறிப்பு :A R RAHMAN இசையில் BSF பாடலை பார்க்கவும்.பாட்டும் சரி படமாக்கியதும் சரி நல்லா இருந்தது.ஆனால் எங்கேயுமே தீவிரவாதின்னா தாடி வைக்கிற கான்செப்ட்தான் சரியில்லை.BSF THEME SONG BY AR RAHMAN
இதில் பறக்கும் தேசிய கொடிக்கு கூடவே பறக்கும் தேசிய பற்று உணர்ச்சிகளை குறைந்த பட்சம் கூடங்குள மக்களுக்கும் ராமேஷ்வர மீனவர்களுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்.


செவ்வாய், 10 ஜூலை, 2012

BSF RECRUIT CONSTABLE DIED BY DOCTOR'S ABSENCE

Dananjay ray 22 yrs old from Assam got selection in Border Security Force(BSF) and come to for training under my company as well as in my team.His chest no 104. Here no one will call by Name.
FIRING RANGE

Firing practice started on 2nd July.In Rajasthaan last week Recorded as high temperature.All the schools are announced for leave by the Govt..Our pactice started Day and Night.3rd July night 11.30pm Dhananjay can't tolerate the heat and he devoloped the symptoms like vomitting headache etc and admitted to the BSF Hospital 12.30am.we can call the BSF hospital as a REFERENCE HOSPITAL if the doctor's  found emergency or critical they will refer to send to Govt hospital.

DHANANJAY RAY
Dananjay diagnosed as a"HEAT STROKE" from around 1.30 am.Dananjay sended to Govt hospital(MGH JODHPUR)with one medical assistant,our two staffs and two recuits.The BSF doctor washed his hands and go to house.around 2.00am i got information and i reached hospital with coy 2ic Insp.I C Singh.

In Emergency depart the treatment started for Dhananjay.In his mouth two tubes are inserted one for oxcygen and another tube for suction.With out his control the urine and motion is coming out.The doctors informed that he is in critical condition During the Treatment itself he shifted to the ward around 3.30am.The duty doctor may be he is a practice doctor did continious observation.Morning 6.00am our coy comdr came to hospital and asked his condition to doctor.But Dananjay health started to worsen,he devoloped seizure.No one can control him.The practice doctor informed to the serious practitioner,but the doctor didn't come up to 9.25am.The Dananjay also died He stopped his last breath around 9.25am

He closed his eyes,but I m not able to close my eyes,because his last look asked so many questions to me.
Where is the chief doctor?     Why they are not placed me in ICU?    If you taken me to the private hospital may be i will not die?    If i'm your own brother you will get it my body? My BSF doctor duty is only refer to GH?

I couldn't able to forget that look.World's second big paramilitary force BSF  are not having any good facilities hospital like Army.Even the Army will not accept  BSF persons for the treatment.

His first month salary came.But he is not there for taking the salary.Who knows what commitment he had in his life? may be he thought to get saree for his mother.

From the puplic one person due to his anxious assualted the doctor all the doctors came to road and striked.Now who will be responsible?

The  media channel24 reporter said tell me frankly about the incident,then i told about the duty doctor's absence during the time of treatment.He asked the photo of Dhananjay. I went directly to the channel 24 office given the photos but they need video evidence and they said if the BSF asked any query about the treatment to the hospital then we will take an interview that will telecast.Every one said don't give photo or other details to anyone, because no one will take action some times it will be against you also.But i not believed now after seeing the media I become depressed.May be media cameras catching  actress personal life only.

After giving proper treatment if the Dhananjay died means i can consolved  my self. Now i couldn't.

PLZ ALL MY FRIENDS SHARE THIS INCIDENT VIA SOCIAL NETWORKS LIKE  FACEBOOK,TWITTER ETC...