கடந்த பதிவில் மனித கேடயமாக்கப்படும் காஷ்மீரிகளை மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் எழுதியிருந்தேன்.பல கருத்துக்கள் முக நூலிலும் வந்தன..அதில் ஒன்று வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதி காஷ்மீரிகளை சுடுவதும் தவறுதானே அதை ஏன் சுட்டி காட்டவில்லை என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார்
போராளிகளோ தீவிரவாதிகளோ அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் அன்பும் மிக மிக முக்கியம்.அவர்கள் உதவியின்றி கொஞ்சமும் செயல்பட முடியாது.எனவே அவர்கள் வீட்டுக்குள் நுழையும் காஷ்மீரிகளை தாக்க மாட்டார்கள்.இதை பயன்படுத்திதான் ராணுவம் காஷ்மீரிகளை உள்ளே பலியாடாய் அனுப்புகிறது.
அப்படியானால் இதில் என்ன தப்பு ? அதுதான் ஆபத்தில்லையே என்று தோனுகிறதா? தப்புதான் நண்பர்களே,உள்ளே இருக்கும் ஆய்தவாதி கதவு திறக்கும்பட்சம் உடனடியாக தாக்குதல் நடத்துவார்.அங்கே எதுவும் தெரிய போவதில்லை.உள்ளே வருவது பொது மனிதனா?ராணுவமா? யோசிக்க முடியா சில தாக்குதலில் பொது மக்கள் ,வாலிபர்கள் ஏன் பலியாக வேண்டும்?
நான்தானே சபதம் எடுத்து உங்கள் மத்தியில் நாயகன் போல துப்பாக்கி ஏந்தி களமாட சம்பளமும் இன்ன பிற சலுகைகளும் பெறுகின்றேன்.அந்த அப்பாவி வாலிபர்களை முன்னால் நிறுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?சில நேரம் ராணுவத்திற்காக வைக்க கூடிய குண்டுகள் வெடிக்கும் போது அவர்களும் வெடித்து சிதறலாம் ...என்ன கிடைக்கப் போகிறது அவர்களுக்கு வெடித்து சிதறினால்?தீவிரவாதி பட்டம்?
நான் தாக்குதலுக்கு ஆகும் பட்சம் எனக்கு விருதுகளும் பேரும் பென்சனும் சலுகைகளும் வேலை வாய்ப்பில் முன்னுரிமைகளும் காத்து கிடக்கின்றன.ஆனால் அந்த பலியாடுகளுக்கு?மனித கேடயங்களுக்கு?நான் சண்டையிட பயிற்சி கொடுக்கப்பட்டு அது போலவே சண்டையிட வரும் எதிரியிடம் சண்டையிட களத்தில் நிற்கிறேன்.இடையில் அப்பாவி மக்களை பலியாடாக்குவது எந்த விதத்தில் நியாயம்?
பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சரி ராணுவத்திற்கும் சரி முக்கிய தேவை பொதுமக்களின் ஆதரவு. அதை சம்பாதிப்பது அவர்களின் நடவடிக்கைகளே.இப்படி அப்பாவி மக்களை பலியாடாய் பரிசோதனை செய்வதன் மூலம் பயத்தை விதைக்க முடியுமே தவிர அன்பையோ ஆதரவையோ அல்ல.
விடுதலை புலிகள்,கூடங்குள போராட்டக்காரர்கள் பெண்களை குழந்தைகளை முன்னிறுத்தி மனிதகேடயமாக பயன்படுத்தி போராடினார்கள் போரிட்டார்கள் என்றும் அதை தவறு என்றும் சொல்வீர்கள் என்றால் இங்கு காஷ்மீரில் அப்பாவி வாலிபர்களை வலுகட்டாயமாக துப்பாக்கிகளுக்கு முன்னால் நிறுத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?
கூடங்குள போராட்டம் ஆயுதம் ஏந்தாமல் போராடும் அறப்போராட்டம்.அதற்கே அப்படி பெண்களை குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துகிறார் உதயகுமார் என்று சொல்லும் அலறும் நண்பர்களே இந்த காஷ்மீர் மனித கேடயங்களை அரசே செய்வது எப்படி சரியாகும்?
மனசாட்சியோடு சிந்தியுங்கள்....இங்கே உங்கள் தேசப்பற்றை தூக்கி தூர வையுங்கள்.ராணுவத்தின் மீது உங்கள் பற்றை காண்பிக்காமல் ஒரு இளம் வயது உயிர்களின் போராட்டங்களையும் வாழ்க்கை முறை கஷ்டங்களையும் உணருங்கள்.
எனது பெயரையோ எனது மதத்தையோ தேடாமால் உண்மைகளை உணருங்கள்.கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன.

| Tweet | |||||