Translate

திங்கள், 1 அக்டோபர், 2012

மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் -ஒரு சிறிய தொடர்ச்சி

கடந்த பதிவில் மனித கேடயமாக்கப்படும் காஷ்மீரிகளை மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் எழுதியிருந்தேன்.பல கருத்துக்கள் முக நூலிலும் வந்தன..அதில் ஒன்று வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதி காஷ்மீரிகளை சுடுவதும் தவறுதானே அதை ஏன் சுட்டி காட்டவில்லை என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார்

போராளிகளோ தீவிரவாதிகளோ அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் அன்பும் மிக மிக முக்கியம்.அவர்கள் உதவியின்றி கொஞ்சமும் செயல்பட முடியாது.எனவே அவர்கள் வீட்டுக்குள் நுழையும் காஷ்மீரிகளை தாக்க மாட்டார்கள்.இதை பயன்படுத்திதான் ராணுவம் காஷ்மீரிகளை உள்ளே பலியாடாய் அனுப்புகிறது.

அப்படியானால் இதில் என்ன தப்பு ? அதுதான் ஆபத்தில்லையே என்று தோனுகிறதா? தப்புதான் நண்பர்களே,உள்ளே இருக்கும் ஆய்தவாதி கதவு திறக்கும்பட்சம் உடனடியாக தாக்குதல் நடத்துவார்.அங்கே எதுவும் தெரிய போவதில்லை.உள்ளே வருவது பொது மனிதனா?ராணுவமா? யோசிக்க முடியா சில  தாக்குதலில் பொது மக்கள் ,வாலிபர்கள் ஏன் பலியாக வேண்டும்?

நான்தானே சபதம் எடுத்து உங்கள் மத்தியில் நாயகன் போல துப்பாக்கி ஏந்தி களமாட சம்பளமும் இன்ன பிற சலுகைகளும் பெறுகின்றேன்.அந்த அப்பாவி வாலிபர்களை முன்னால் நிறுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?சில நேரம் ராணுவத்திற்காக வைக்க கூடிய குண்டுகள் வெடிக்கும் போது அவர்களும் வெடித்து சிதறலாம் ...என்ன கிடைக்கப் போகிறது அவர்களுக்கு வெடித்து சிதறினால்?தீவிரவாதி பட்டம்?

நான் தாக்குதலுக்கு ஆகும் பட்சம் எனக்கு விருதுகளும் பேரும் பென்சனும் சலுகைகளும் வேலை வாய்ப்பில் முன்னுரிமைகளும் காத்து கிடக்கின்றன.ஆனால் அந்த பலியாடுகளுக்கு?மனித கேடயங்களுக்கு?நான் சண்டையிட பயிற்சி கொடுக்கப்பட்டு அது போலவே சண்டையிட வரும் எதிரியிடம் சண்டையிட களத்தில் நிற்கிறேன்.இடையில் அப்பாவி மக்களை பலியாடாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சரி ராணுவத்திற்கும் சரி முக்கிய தேவை பொதுமக்களின் ஆதரவு. அதை சம்பாதிப்பது அவர்களின் நடவடிக்கைகளே.இப்படி அப்பாவி மக்களை பலியாடாய் பரிசோதனை செய்வதன் மூலம் பயத்தை விதைக்க முடியுமே தவிர அன்பையோ ஆதரவையோ அல்ல.

விடுதலை புலிகள்,கூடங்குள போராட்டக்காரர்கள் பெண்களை குழந்தைகளை முன்னிறுத்தி மனிதகேடயமாக பயன்படுத்தி போராடினார்கள் போரிட்டார்கள் என்றும் அதை தவறு என்றும் சொல்வீர்கள் என்றால் இங்கு காஷ்மீரில் அப்பாவி வாலிபர்களை வலுகட்டாயமாக துப்பாக்கிகளுக்கு முன்னால் நிறுத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?

கூடங்குள போராட்டம் ஆயுதம் ஏந்தாமல் போராடும் அறப்போராட்டம்.அதற்கே அப்படி பெண்களை குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துகிறார் உதயகுமார் என்று சொல்லும் அலறும்  நண்பர்களே இந்த காஷ்மீர் மனித கேடயங்களை அரசே செய்வது எப்படி சரியாகும்?

மனசாட்சியோடு சிந்தியுங்கள்....இங்கே உங்கள் தேசப்பற்றை தூக்கி தூர வையுங்கள்.ராணுவத்தின் மீது உங்கள் பற்றை காண்பிக்காமல் ஒரு இளம் வயது உயிர்களின் போராட்டங்களையும் வாழ்க்கை முறை கஷ்டங்களையும் உணருங்கள்.

எனது பெயரையோ எனது மதத்தையோ தேடாமால் உண்மைகளை உணருங்கள்.கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன.


36 கருத்துகள்:

  1. வர்கள் உதவியின்றி கொஞ்சமும் செயல்பட முடியாது.எனவே அவர்கள் வீட்டுக்குள் நுழையும் காஷ்மீரிகளை தாக்க மாட்டார்கள்."
    வெறி பிடித்த தீவிர வாதிகளுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்க அந்த தீவிர வாதிகளாலும் முடியாது.

    முதல் தடவை சோதனைக்காக செல்லும் போது அந்த பயங்கர வாதி வருவது யாரென தெரியாது சுட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து வரும் அனைத்து சோதனைகளிலும் இராணுவம் பொதுமக்களை சோதனைக்காக கொண்டு வரும் என்று தெரிந்த பின் அவர்கள் சுடுவது ஏன்?

    வீட்டுக்குள் இன்றுக்கும் பயங்கர வாதிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் வீட்டை திறந்து முதல் வர போவது ஒரு பொதுமகன் தான் என்று. தெரியாமல் சுட்டார் என்று கூறுவது ஒரு சப்பை கட்டு.

    கேக்கிறவன் கேனையனாக இருந்தால் காட்டெருமை பிளேன் ஓட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேனயனாகாவே இருந்து விடாதீர்கள் தோழா...அங்கு நடப்பது அவர்கள் உரிமை போராட்டம்.அதற்க்கு ஆதரவு இருப்பது இயல்பே...வீட்டுக்குள் வருவது பொதுமகன் என்று சுட்டுவிட்டால் அடுத்த முறை அவர்கள் அவ்வளவு சீக்கிரம் சுட்டுவிடுவதில்லை.

      ###தொடர்ந்து வரும் அனைத்து சோதனைகளிலும் இராணுவம் பொதுமக்களை சோதனைக்காக கொண்டு வரும் என்று தெரிந்த பின் அவர்கள் சுடுவது ஏன்?###

      நண்பரே,ஒவ்வொரு சோதனையிலும் ஒரே தீவிரவாதி இருப்பதில்லை. வெவ்வேறு இயக்கங்கள் வெவ்வேறு பயிற்சிகள்.... இங்கு எனது கேள்வி பதின் வயது பசங்களை ஏன் இடையில் நிறுத்தவேண்டும்?எந்த வித்ததில் நியாயம்?இது நான் கேட்கிறேன் என்று சொல்பதை விட அத்தனை பயிற்சிகளும் கற்றுதந்த என் கமாண்டோ ஆபிசர் கேட்டது.

      உங்களை போல சுமார் 70 கமாண்டோக்களின் நடுவில் பெரும்பான்மை எதிர்ப்பு கேள்விகளை தகர்த்த அவரின் விடை இது.

      நீக்கு
    2. Mr. Ethicalist E

      நீங்கள் சொல்வது சரி அல்ல
      இங்கு தீவிரவாதி யை ஆதரித்து எழுத படவில்லையே
      ஒரு பதிவு எந்த நோக்கத்திற்காக எழுத பட்டது என்பதை ஆராய்ந்து
      படிக்கவும்.
      இந்த பதிவை காஷ்மீர் மக்கள் பலி கிடா ஆக்க படுகிறார்கள் என்பதற்காக போட பட்டது
      இங்கு தீவிரவாதிகளை பற்றிய பேச்சு அர்த்தம் இல்லாதது .........

      நீக்கு
  2. கள் தளத்திற்கு வந்தேன் உங்கள் முதல் பதிவையும் படித்த பின் இன்னொரு பின்முதல் தடவையாக உங்னூட்டம் வரும்.

    பதிலளிநீக்கு
  3. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. உங்கள் பெயர் சதீஸ் செல்லத்துரை அல்ல. மற்றையது நீங்கள் இராணுவத்தில் இல்லை. நீண்ட காலத்திற்கு வேடம் போடா முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரே,இன்றும் நான் பயிற்சி கொடுத்து அனுப்பி உள்ள என் மாணவர்கள் எல்லையில் நிற்கிறார்கள்.நானும் ஜம்மு செல்கிறேன்.வட கிழக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பட்சம் அங்கு உள்ளவற்றை உண்மைகளை வெளி சொல்வேன்.வேடம் போட அவசியமும் இல்லை.வேண்டுமானால் தேச துரோகி என்று சொல்லிகொல்லுங்கள்.வருத்தப்பட போவதில்லை.

      நீக்கு
  4. உங்களுடைய முன்னைய பதிவையும் அதற்க்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தேன். உங்களிடம் இஸ்லாமிய பெயரில் வந்த ஒரு இந்து நல்ல ஒரு கேள்விதான் கேட்டிருக்கிறார். அந்த கேள்விக்குதான் இரண்டாவது பதிவை போட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. இங்கு இராணுவம் செய்ததை யாரும் சரி என்று சொல் முடியாது. ஆனால் பொது மக்களை பணய கைதிகளாக தீவிர வாதிகளும் பயன்படுத்துகிறார்கள். அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். அதுக்கு உதாரணமாக கூடன் குளத்தை உதாரணம் காட்டுகிறீர்கள்.

    கூடங்குளத்தில் அந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் மக்கள் வந்து போராடுகிறார்கள். போராட்ட குழு பொது மக்கள் இருக்கும் குடியிருப்புகளில் இருந்தோ அல்லது சிறுவர் படிக்கும் பாடசாலையில் இருந்தோ தாக்குதல் நடத்தினால் அதை உதாரணம் காட்டலாம்.

    கூடங்குளத்தில் யாரும் குண்டு வைத்து கொல்ல போவதில்லை. ஆனால் கஷ்மீரில் அவ்வாறு இல்லை.
    விடுதலைபுலிகளை பற்றி குறிப்பிட்டீர்கள் புலிகளை இன்றும் எல்லோரும் அவர்கள் பணய கைதிகளாக வைத்து போராடியதை விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு சபாஷ் போட்ட தீவிர இஸ்லாமிய வெறியர் வாஞ்சூர் தொடக்கம் சுவனபிரியன் வரையான அனைத்து இஸ்லாமியர்களும் , நாங்களும் விடுதலை புலிகளை விமர்சித்து கொண்டிருக்கிறம். ஆனால் உங்களை போல் தீவிரவாதிகளின் செயலுக்கு காரணம் கற்பித்து சப்பை கட்டவில்லை.

    இரண்டு தரப்பும் செய்வதும் தவறுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழா,இன்று மணல் அள்ளி வீசிய மக்கள் நாளை ஆய்தம் ஏந்தினால் ஆச்சரியமில்லை.காரணம் அணுகுமுறை.எத்தனையோ விதங்களில் பயிற்சி தந்தாலும் கடைசியில் அடிதடி மூலமே தற்காலிக கண்ட்ரோல் செய்து நிரந்தர பிரச்சனைகளை அரசும் காவல் படைகளும் செய்கிறது என்பதுதான் உண்மை.

      நீக்கு
  6. இதுவரைக்கும் எங்களை போன்றவர்கள் இந்திய இராணுவத்தின் செயல்பாடுகளை ஆதரிப்பதில்லை. ஆதரிக்கும் வேலைகளை சோ , டோண்டு போன்றவர்களே செய்து வந்தார்கள்.

    நீங்களும் கிட்டதட்ட அவர்களின் வேலைகளை செய்கிறீர்கள். அவர்கள் இந்திய இராணுவத்திற்கு சப்பை கட்டுவார்கள். நீங்கள் தீவிர வாதிகளுக்கு சப்பை கட்டுகிறீர்கள். (நீங்கள் யார் என்று எங்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது௦)
    நீங்கள் விரும்பினால் நாங்களும் சோ போன்றவர்களுடன் இணைத்து அவர்களின் சப்பை கட்டல்களுக்கு உதவி செய்யலாம். எங்களால் வினைத்திறனுடன் சப்பை கட்ட முடியும். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.

    இந்திய இராணுவத்தின் செயல்பாடுகளை கண்டிப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதே வேளை தீவிரவாதிகளின் கொட்டத்தை நிஜாயப்படுத்தி நீங்கள் தொடர்ந்து கட்டுரைகள் வரைவதானால் இதுவரைக்கும் கஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இருந்த நியாயபாடுகள் மாற கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ###இதுவரைக்கும் எங்களை போன்றவர்கள் இந்திய இராணுவத்தின் செயல்பாடுகளை ஆதரிப்பதில்லை. ஆதரிக்கும் வேலைகளை சோ , டோண்டு போன்றவர்களே செய்து வந்தார்கள்.###

      நீங்கள் யார் தோழர்?

      நான் எனது பதிவுகளில் என்னையும் மீறி ஆயுத போராட்டங்களை ஆதரிதிருப்பேன் என்பதே உண்மை.வேறு வழியில்லை.அகிம்சைக்கு மதிப்பில்லாத தேசத்தில் அதுதான் உண்மை.தீவிரவாதம்,பயங்கரவாதம் என்பது நீங்கள் ஆதரிப்பதை பொறுத்து.காஷ்மீர் தேசம் தனியாக வேண்டும் என்று போராடினால் காஷ்மீருக்கு அவர் போராளி.இந்தியாவுக்கு பயங்கரவாதி.

      எதை நியாயப்படுத்துகிறேன்?அவர்கள் சண்டையிடுவது ராணுவத்தோடும் அரசோடும் மட்டுமே.நான் இவர்களை மட்டும் சொல்லவில்லை.இந்தியா முழுமைக்கும் அரசோடு போராடும் அனைவருக்கும் தீவிரவாத பட்டம் சூட்டி அவர்களுக்கு ஆதராவாக சப்பைக்கட்டு கட்டாதிர்கள் என்றால் ..மன்னிக்கவும் தோழா இந்த சப்பைக்கட்டு தொடரும்.

      நீக்கு
    2. ஏனுங்க, எதி---ட்,
      யாராவது ஏதாவது உண்மையை உள்ளது உள்ளபடிக்கி எழுதினா அவரை 'இந்து இல்லை'ன்னு சொல்லிருவீங்களா? என்னங்க இது? அநியாயமா இருக்கே? காஷ்மீரில் நம்ம ராணுவம் அட்டூழியம் பண்றதை நேர்மையா எழுதினா அவன் முஸ்லிமா மட்டும்தான் இருக்கனுமா? அப்போ, வடகிழக்கில் நடக்கும் ராணுவ அட்டூழியத்துக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்குற ஷர்மிளா யாரு? துலுக்கச்சியா? அடப்போங்க. இப்படில்லாம் மதவெறியிலே இருந்தா உங்களுக்கு புத்தி வேலை செய்யாதுங்க.

      நீக்கு
  7. @அன்பு என்ற பெயரில் வரும் பச்சை படைக்கு,

    " காஷ்மீரில் நம்ம ராணுவம் அட்டூழியம் பண்றதை நேர்மையா எழுதினா அவன் முஸ்லிமா மட்டும்தான் இருக்கனுமா"
    நம்ம இராணுவம் செய்கின்ற அட்டூழியத்தை எழுகின்ற அதே நேரம் அங்குள்ள பயங்கர வாதிகளும் செய்கின்ற அட்டூழியத்தை எழுதலாமே. எழுதாவிட்டாலும் பரவாயில்லை அந்த தீவிரவாதிகள் எதோ புனிதர்கள் என்ற வகையில் அல்லவா எழுதுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியலை தோழா உங்களின் கேள்வி என்ன?அட்டூழியங்கள்?அதைத்தான் ஒட்டு மொத்த மீடியாவும் செய்கிறதே.நான் தனி காஷ்மீரை ஆதரிப்பவன் தனி தமிழ் நாட்டை விரும்புகிறேன் மணிப்பூர் சர்மிளாவையும் விரும்புகிறேன்...எனது எழுத்துக்கள் அதற்காக போராடுபவர்களை ஆதரிக்கவே செய்யும்.இப்படியான போராட்டங்களில் என் கண்களுக்கு தெரிந்து அநியாயங்கள் நடக்கும் பட்சம் கட்டாயம் பதிவிடப்படும்.மறுபடியும் சொல்கிறேன்...சிலருக்கு தீவிரவாதிகள் என தெரிபவர்கள் ,சிலருக்கு போராளிகளா தெரிவார்கள்....

      நீக்கு
    2. To Ethicalist E:

      யாரும் இங்கு தீவிரவாதிகளை புனிதர் என்று குறிபிடுவது இல்லை.
      தீவிரவாதிகளை பற்றி தெரிந்து கொள்ள ஆயிரம் வழி இருக்கு.
      சாதாரண தொலை காட்சியிலோ அல்லது செய்தி தாள்களிலையோ
      நீங்கள் பார்க்கலாம்
      ஆனால் ராணுவம் செய்ற தப்பை எங்கயாது படித்தது உண்டா(ஊடகங்களில்)
      அல்லது செய்திகளில் கேட்டது உண்டா ?
      அதனால் தான் இங்கு அதற்க்கு முக்கித்துவம் கொடுக்க பட்டுள்ளது.

      நீக்கு
    3. தலைவா சிங்கமே எளிதான வார்த்தைகளில் சிறப்பான பதில் தந்தீர்கள்.மிகவும் நன்றி.

      நீக்கு
  8. "இப்படில்லாம் மதவெறியிலே இருந்தா உங்களுக்கு புத்தி வேலை செய்யாதுங்க."
    அவர்கள் இவர்கள் மதத்தை பற்றி ஏதாவது சொன்னாலே கையை தலையை வெட்டுகின்ற கூட்டம் மத வெறியை பற்றி கதைக்குது.

    பதிலளிநீக்கு
  9. @ANBU
    "சில வரி கவிதை எழுதி அதில் ஏன் பெண் நபி இல்லை என்ற நியாயமான ஒரு கேள்வி எழுப்பியதற்காக ஊரே விட்டு ஒதுக்கிய கூட்டம் மத வெறியை பற்றி கதைக்குது

    பதிலளிநீக்கு
  10. "நீங்கள் யார் தோழர்?"

    இதுவரை காலமும் இந்திய இராணுவத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுதியவன். நேற்றும் நண்பர் இக்பால் எழுதிய ஒரு பதிவில் இந்திய இராணுவத்தின் பாலியல் வன்முறை தொடர்பாக விமர்சனம் எழுதியிருக்கிறேன்.

    அதே வேளை உங்களை போல் தீவிரவாதிகளின் எல்லா நடவடிக்கைகளுக்கும் சப்பை கட்டும் வேலை செய்வதில்லை.

    ஒரு நடுநிலையான பதிவு எப்படியிருக்கும் என்பதை நண்பர் இக்பாலின் பதிவை பார்த்து கற்று கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் இக்பால் செல்வனை பற்றிய உங்களின் பாராட்டுக்களுக்கும் எனக்கான அறிவுரைக்கும் நன்றி தோழர்.எனக்கு நடுநிலையாளாக இருக்க தெரியவில்லை தோழர்.அதற்க்கு என்ன அவசியம் என்றும் தெரியவில்லை.நான் நடுநிலையாக எழுத தினமலரோ மணியோ இல்லை தோழர்.இது முழுக்க முழுக்க எனது துறை தவறுகளை சொல்லும் பதிவு.இதில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?தீவிரவாதி சுடுவது....அதுதானே...முந்தய பதிவில் கடைசியில் என்ன எழுதியிருந்தேன்?

      ### நான் காஷ்மீரில் இருந்த வரை எங்களது ஆபரேசன்களில் காஷ்மீர் வாலிபர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் நடக்கவில்லை என்பது ஆறுதல். .###அவர்கள் இறந்தார்கள் சண்டையிட்டு இறந்தார்கள்.நினைத்தால் உள்ளே செல்பவர்களை பணயமாக்கி தப்பிக்க முடியும்.செய்யவில்லையே.ஏன்?

      காரணம் பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு அவசியம்.அவர்கள் ஆதரிக்கவும் செய்கிறார்கள்.அதுக்காக ஊர்ல உள்ளவனை பிடிச்சி முன்னாடி நிப்பாட்டுறது எவ்விதத்திலும் நியாயம் இல்லை தோழர்.இங்கு நான் சொல்ல விரும்பியதும் அதுதான்.தீவிரவாதி குண்டுகளுக்கு அவன் பலியாக வேண்டியிருந்தால் அதற்க்கு முழு பொறுப்பும் வாலிபனை முன்னால் அனுப்பிய எங்களைத்தானே சேரும்.அதுதானே உண்மை.ஒரு ராணுவத்திற்கு இது அழகல்ல.பயங்கரவாதிகளோ இல்லை தீவிரவாதிகளோ பணயகைதியாக பிடித்து செல்லும் நிகழ்வை ஒத்ததே இந்த நிகழ்வும்....

      ராணுவம் ஏன் இப்படி செய்கிறது?அதிகார மமதை.மக்களை வெல்ல தெரியாமல் அடி தடியை மட்டும் நம்பும் பாங்கு.

      நீக்கு
  11. போராட்டம் பற்றி கதைக்க கூடாது என்று நான் சொல்லவேயில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் செய்யும் செய்யும் அட்டுழியத்தையும் கூறுமாறுதான் கேட்கிறேன். அது உங்கள் அரசியல் நிலையை பாதிக்கும் என்றால் அவர்கள் எந்த தவறும் செய்யாத உத்தமர்கள் என்றாவது நீங்கள் எழுதாமல் இருக்கலாம்.

    ஆனால் நீங்கள் எழுதுவது அப்படியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நான் இங்கு நல்ல பிள்ளை பெயர் வாங்கவோ இல்லை நடுநிலை பதிவு எழுதும் எண்ணத்தோடோ இல்லை.அவர்கள் செய்யும் அநியாயங்கள் எனக்கு தெரியும் பட்சம் எழுதுவேன் தோழர்.ஆனால் என்ன அநியாயம்?ஆயுதம் தூக்கியதா?இஸ்லாமிய மார்க்க சிந்தனைகளா?அவற்றை பற்றி அறியாமல் எழுத முடியாது தோழா...பெங்கால் எல்லையில் நடக்கும் விசயங்களை சேகரித்து வருகிறேன்.இரு பக்கமும் தவறுகள் உள்ளது.ஒரு வேளை அந்த பதிவு வேண்டுமானால் உங்க எதிர்பார்ப்புகளுக்கு தக்க அமையலாம்(?)

      இந்த பதிவின்படி ராணுவத்தின் செயல் சரியா? தவறா? அவ்வளவே.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  12. சிந்திக்க வைக்கும் கேள்விகள் பல... நல்ல பகிர்வு நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமா வரும் அண்ணன் வரவில்லை என்று கவலையில் இருந்தேன்..நன்றி அண்ணா ..இன்னு சில அண்ணாக்கள் வரவில்லை.இதை இஸ்லாமிய பதிவாகவே எடுத்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..மிகவும் நன்றி அண்ணா

      நீக்கு
  13. மேலும் உங்களுக்கு மத சாயம் பூசி விடுவார்கள் என்று தான் நான் வர வில்லை,
    நீங்கள் ராணுவம் செய்யும் அநியாயங்களை எழுதுகிறீர்கள் அனால் இங்குள்ளவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள்தான் முதலில் அநியாயம் செய்தார்கள் அவர்களை அடக்கவே ராணுவம் அநியாயம் செய்கிறது இப்படிதான் நம்ம ஊடகங்கள் நம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறது, முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் அடையாளம் காட்டி விட்டது, அதனால் காஷ்மீர் மக்களின் நியாயமான் போராட்டம் இவர்களுக்கு தீவிரவாதமாகதான் தெரியும்

    பதிலளிநீக்கு
  14. முதலில் நன்றி இதை எழுதி மக்களுக்கு தெரியபடுத்த நீங்கள் எடுத்த முயற்சிக்கு

    //
    மனசாட்சியோடு சிந்தியுங்கள்....இங்கே உங்கள் தேசப்பற்றை தூக்கி தூர வையுங்கள்.ராணுவத்தின் மீது உங்கள் பற்றை காண்பிக்காமல் ஒரு இளம் வயது உயிர்களின் போராட்டங்களையும் வாழ்க்கை முறை கஷ்டங்களையும் உணருங்கள்.
    //

    உண்மையான வார்த்தைகள்

    //
    எனது பெயரையோ எனது மதத்தையோ தேடாமால் உண்மைகளை உணருங்கள்.
    //

    உங்களின் இந்த வரிகளை நானும் ஆமோதிக்கிறேன்
    இதை பதிபவர்கள் ஜாதி மதம் கடந்து மனித நேயம் கொண்டு தான் பார்க்க வேண்டும் .

    எனக்கு உங்களிடம் சில கேள்விகள் ஆனால் இந்த பதிவை மட்டும் பற்றி அல்ல ....

    நீங்கள் எழுதுவதால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வந்து விடாதா?? ( இதை உங்கள் மேல் அதிகாரிகள் பார்க்கும் பட்சத்தில் )
    நீங்கள் உங்கள்(ராணுவம்) குறைகள், வலி, மற்றும் உங்களால் நடக்கும் தவறுகள் எல்லாவற்றையும் சுட்டி காட்டி உள்ளீர்கள் அனால்
    இதனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஞாயங்கள் கிடைக்க போவதில்லை, உங்களது வலிகள் களைய படபோவது இல்லை .
    நடக்கும் தவறுகளையும் குறைக்க போவது இல்லை.
    இதை படிபவரகள் ஐயோ பாவம், என்றதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டதாகவே கருதுவர். (என்னையும் சேர்த்து தான் )
    இருப்பினும் உங்களுக்கு இதை எழுதுவதால் இரண்டு பயண்கள்.
    ஒரு சிலரேனும் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்று
    உங்களின் பிரச்சனைகளை பகிர்வதன் மூலம் உங்கள் வலி சிறிதேனும் குறையும்.
    இதை நம்மால் நிறுத்தவோ இல்லை எதுவேமே செய்ய இயலாதா??
    அதற்க்கு ஏதேனும் வழி இருந்தால் கூறலாமே??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் எழுதும்போது சற்று இனம்புரியா படபடப்பும் பயமும் இருந்தது.இப்போது இல்லை.காஷ்மீர் மீறல்களுக்கு மனித உரிமை அமைப்புகள் மூலம் இன்னும் அழுத்தம் தரலாம்.

      இதை எழுத எனக்கு எந்த அனுமதியும் இல்லை எனினும் வலைபூக்கள் பற்றிய அறிதல் எங்கள் துறையில் மிக அரிதே.எங்கள் பிரச்சனைகளையும் மனித உரிமை அமைப்பினர் அழுத்தம் கொடுத்தாலும் அதை தொடர்ந்து கண்காணிக்க இயலாத காரணத்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே கசப்பான உண்மை.இருந்தாலும் இது ஒரு தொடக்கமாக இருக்கட்டுமே.இன்னும் வரப்போகும் நாட்களில் அதிகார மீறல்கள் இணைய தளங்கள் மூலம் வெளிப்படும் என்ற பயமாவது சில அதிகாரிகளுக்கு தோன்றட்டுமே.

      மத்திய உள்துறை அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன் எந்த ஆபிசரும் தனக்கு உதவிக்கு ஆள் வைக்க கூடாது என்று செய்தி அனுப்பியும் இன்றும் அது தொடர்கிறது என்றால் காரணம் கேள்வி கேக்க ஆள் இல்லா தைரியமே.நான் நேரடியாக கேக்கும் பட்சம் தனித்து விடப்படுவேன்..என் கூட உள்ளவர்களே கூட ஆதரித்தாலும் வெளியே சொல்லாமல் மௌனமாக இருந்துவிடுவார்கள்.அப்படி ஒரு வாழ்க்கை முறையை ராணுவம் கற்று தந்துள்ளது.சுருக்கமாக சொன்னால் சிறந்த அடிமைகள்தான் பட்டாளத்திற்கு லாயக்கு.

      மனித உரிமை ஆணையத்திற்கு சரியாக பட்டது என்றால் அதற்ன் பக்கம் இந்த பதிவுகளை எடுத்து செல்லுங்கள்.ஒரு சிப்பாய்க்கு இந்த பாதுகாப்பு படையில் 20 வருடங்கள் ஆனாலும் எவ்வித ப்ரோமொசனும் கிடைக்கப் போவதில்லை.இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் எழுதுவதால் பயம் தொலைந்துவிட்டது தோழர்.

      தங்களின் பின்னூட்டங்கள் மிகவும் நம்பிக்கை அளிக்கின்றன.நன்றி தோழர்.ஒரு நாள் விடியும்.

      நீக்கு
  15. Please read this post... for more info.

    "வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்"
    Tuesday, October 02, 2012 Abdul Basith


    http://www.bloggernanban.com/2012/10/beware-of-virus-by-fake-tamil-bloggers.html

    பதிலளிநீக்கு
  16. ஐயா.. நீங்கள் செய்வது மிகவும் துணிச்சலான செயல். உங்களின் மன உறுதியைப் பாராட்டுகிறேன். அதே போல, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும், அநியாயத்தின் உச்சத்தையும் இவ்வுலகிற்கு எப்படியாவது தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உங்களின் நேர்மை தான், இதன்மூலம் என்ன பிரச்சினை வந்தாலும் சந்தித்துவிடலாம் என்ற தெம்பை கொடுத்திருக்கிறது. அநியாயத்தை எதிர்க்கும் முதல்படியே அநியாயம் நடைபெறுகிறது என்பதை அறிவதே. அதன்படி இந்திய ராணுவத்தின் கஷ்மீர் அட்டூழியங்களை கண்முன்னே கொண்டு வந்து கொட்டியிருக்கிறீர்கள். இந்திய ராணுவத்தின் கஷ்மீர் அத்துமீறல்களை ஊடகங்கள் ஒரு சில தருணங்களில் தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதையும் இந்துத்துவ துவேஷவாதிகள் இருட்டடிப்பு செய்து மக்களிடம் சென்று சேரா வண்ணம் பார்த்து கொள்வார்கள். உங்களின் எழுத்தையும் அதிலுள்ள கருத்தையும் நோக்கும் போது எந்த மதத்திற்கும் சாதகமாகவும் அல்லது பாதகவுமில்லை என்றே அறிய முடிகிறது. விருப்பு வெறுப்பின்றி நீங்கள் எழுதுவதாலேயே அந்த உண்மைகள் பொட்டில் அடித்தாற் போல இருக்கிறது.

    மேலும், வலைப்பதிவு என்ற ஒரு தனி மனித ஊடகத்தை, நீங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். உங்களை அறியாமலே ஒரு புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். வலைப்பதிவு வைத்துக்கொண்டு சமூகத்தில் துவேஷத்தை விதைத்து வரும் விஷமிகளுக்கு , உங்களின் பதிவுகள் உறுத்தலாகத்தான் இருக்கும். இதோ.. துவங்கி விட்டார்களே போலி ஐடிக்களும், வைரஸ் பரப்புகளும்.

    நடுநிலை என்று ஒன்று கிடையாது என்பார்கள். ஒன்று நன்மை பக்கம் இருக்க வேண்டும் அல்லது தீமை பக்கம் இருக்க வேண்டும். தீமைக்கும் நன்மைக்கும் பாலம் போட அவசியமில்லை. நீங்கள் நடுநிலை என்று நீர்த்து போய் விடாமல் நன்மை பக்கமே இருங்கள். உங்களைப் போல நல்ல மனிதர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பீர்கள். அப்போது வேறு மதத்தின் துவேஷவாதிகள் உங்களை சாடி இருப்பார்கள். ஆகவே துவேஷவாதிகள் தூற்றாமலிருக்கும் போது தான் நாம் ஆச்சரியமடைய வேண்டும். ஒடுக்கப்படும் மக்களின் தரப்பு நியாயத்தை உரக்க சொல்லும் போராளியாகத்தான் உங்களை நான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....