Translate

செவ்வாய், 16 அக்டோபர், 2012

"பாவநாசம்... கதவத் திற " -டெடிகேட்டட் டூ "குடிமகன்கள்"

சங்க காலம் தொட்டு மது அருந்தும் மங்களகரமான பழக்கத்தை தமிழன் கடைப்பிடித்திருந்தான் என்றாலும் அதன் பின் விளைவுகளை எங்கேயும் பதிவு செய்தார்களா என்றால் தெரியவில்லை.(நேர்மையா சொன்னா எனக்கு தெரியாது) அப்படி ஒரு மங்களகரமான குடி ஒன்று  குடியை கெடுத்த உண்மை கதைதான் இது.

தமிழன் டா...
மணியாச்சி பக்கம் அக்கநாயக்கன்பட்டினு ஒரு ஊரு...நம்ம ஹீரோ  பேரு நியாபகம் தெரியலைங்க ..அவர் மனைவி பேரு பாவநாசம்...(புருசன் பேரு தெரியலை பொண்டாட்டி பேரு தெரியுது பாருப்பா  ) ஊருக்கு நடுவுல பொதுக் கிணறு பக்கமா வீடு...நம்ம ஹீரோ  வேலையில எவ்வளவு சின்சியரோ அவ்வளவு சின்சியரா சாயங்காலமானா  சாராயக்கடைல துண்டை போட்டார்னா கடைய அடைக்கிற வரை குடிதான்...

தெனமும் ராவானா பதினோரு மணிவாக்குல கடைசி பஸ்ல வீட்டுக்கு வந்து கதவ தட்டுவாரு.."பாவநாசம்...கதவைத் திற..."    

"ஏய் பாவநாசம் கதவத் திற..."அது ஒரு சுகமான ராகம் போல... அந்த பிள்ளையும் அதுக்காகவே கதவை மூடி வைத்திருக்கும்.


ஒரு நா ஓவர் குடி....பய புள்ளைக்கு ஒன்னும் புரியல..தட்டு தடுமாறி வீட்டு பக்கமா வந்தவன்...வீடுன்னு நினைச்சு கிணத்து  முன்னாடி நின்னுட்டு "பாவநாசம் கதவத் திற....ஏய் பாவநாசம் கதவத் திற" ன்னு சவுண்டை போட..பதில் வராத காரணத்தினால் கை வைத்து காற்றில் தட்ட... கதவு இருந்தாதானே ?

அப்புறம்தான் கூத்து...கிணத்துமேட்டுல கதவு கிடைக்காத ஹீரோ ... "ஓ கதவ திறந்தேதான் வைச்சிருக்கியா"னு கேட்டுகிட்டே வீட்டுக்குள்ள போறேன்னு அடியெடுத்து  கிணத்துக்குள் விழ....அப்புறம் என்ன ?பாவநாசம் மட்டும் இல்லாம மொத்த ஊரும் வந்தும் அவரை காப்பாத்த முடியல....உள்ள தண்ணி போதாதுன்னு கிணத்து தண்ணியையும் குடிச்சி உயிர் போனதுதான்  மிச்சம்.

"பாவநாசம் ....கதவத் திற "நியாபகம் இருக்கட்டும்.
"மச்சான் ஓபன் தி பாட்டில் " மறந்து போகட்டுமே....

நீதி: குடி குடியை கெடுக்கும்....

நீங்க குடியை வெறுப்பவர் என்றால் ஒரு ஓட்டு போடுங்க.....ஆதரிப்பவர் என்றால் கருத்துப் போடுங்க .....

இல்லை இல்லை கிணத்துக்கு கதவு வைக்காதாதுதான் தப்புன்னு யாராவாது பின்னூட்டம் போட்டுடாதிங்க மக்களே.......


20 கருத்துகள்:

  1. /// நீங்க குடியை வெறுப்பவர் என்றால் ஒரு ஓட்டு போடுங்க.....ஆதரிப்பவர் என்றால் கருத்துப் போடுங்க .....///

    நல்ல சாதூர்யம்..

    ஓட்டு எப்போதும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா,நானே சில நேரம் நல்ல பதிவுகளை படிச்சிட்டு வேற லிங்க் போகும் போது ஓட்டு போடாம மறந்து போயிடுறேன்....இது ஒரு நியாபக படுத்ததான் என்றால் நம்பவா போகுது உலகம்? :):):)ஒரு விளம்பரம்..........

      நீக்கு
  2. அதுவும் சரிதான்
    அங்கெல்லாம் கிணற்றுக்கு
    கதவு வைப்பதில்லையா
    மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டிய
    அருமையான பதிவு
    சொன்னவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனப்பாடம் செய்து கொள்ளுங்க அண்ணா....வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி அண்ணா....

      நீக்கு
  3. நன்றி அண்ணா,நானே சில நேரம் நல்ல பதிவுகளை படிச்சிட்டு வேற லிங்க் போகும் போது ஓட்டு போடாம மறந்து போயிடுறேன்....இது ஒரு நியாபக படுத்ததான் என்றால் நம்பவா போகுது உலகம்? :):):)ஒரு விளம்பரம்..........

    பதிலளிநீக்கு
  4. கருத்து சொல்லலேண்ணா குடியை ஆதரிக்கன்னு சொல்லிடுவீங்க....:-)

    சிறந்த பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ....சௌதில பல ஆராய்ச்சிகளுக்கு(கடந்த தங்களின் பதிவு) நடுவில் வந்த சகோவுக்கு நன்றி....

      நீக்கு
  5. nalla pakirvu!

    oottu poda enakku -
    theriyaathu!!

    enakku account illa!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சகோ....உங்க தொடர்ச்சியான வருகையே எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது.நன்றி சீனி கவிதை சகோ..

      நீக்கு
  6. அருமையான பதிவு சகோ.தொடரட்டும் மேலும் உங்களின் இதுபோன்ற விழிப்புணர்வு பதிவு.
    kalam.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. குடியை பற்றிய உங்கள் வரிகள் கேலியாகவும் நல்ல ஒரு கருத்துள்ளதாகவும் இருந்தது.....ஆனால் குடியின் வருவாயை நம்பியே நம் தமிழ்நாடு வாழ்வது சற்று கவலை அழிகிறது........சாரி இதுக்கு முன்னாடி உங்களுடைய கட்டுரைகளுக்கு என்னால் பதில் அனுப்பமுடியவில்லை எனினும் தவறாமல் படித்து விடுவேன்.....நன்றி

    பதிலளிநீக்கு
  9. குடியை பற்றிய உங்கள் வரிகள் கேலியாகவும் நல்ல ஒரு கருத்துள்ளதாகவும் இருந்தது.....ஆனால் குடியின் வருவாயை நம்பியே நம் தமிழ்நாடு வாழ்வது சற்று கவலை அழிகிறது........சாரி இதுக்கு முன்னாடி உங்களுடைய கட்டுரைகளுக்கு என்னால் பதில் அனுப்பமுடியவில்லை எனினும் தவறாமல் படித்து விடுவேன்.....நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி சகோதரி...ஆனாலும் நான் ஒத்துக்க மாட்டேனே...வேறென்ன? ஒரு பதிவுல ஒரே கமெண்ட்டை மூணு தடவை போட்டு தப்பிக்க முடியாது.....

      தொடர்ந்து வரும் ஆதரவுக்கும் மேலான கருத்துக்கும் மிகவும் நன்றி..

      குடியால் அரசாங்கம் வாழவில்லை...இலவசங்களை கொடுத்து ஓட்டுக்களை அள்ள அது ஒரு வருமான வழி அவ்வளவுதான்....

      நீக்கு
  10. இலவசம் கொடுத்து ஓட்டு பெறுவதே தவறு அதிலும் உடலுக்கு தீங்கானவை மூலம் பெறுவதை கூறுவதற்கு சொல்ல வார்த்தையே இல்லை பாட்டில் மேல் "குடி குடியை கெடுக்கும்" என்பதை அச்சிடுவதை நிறுத்திவிட்டு அதை கை விடுவதில் நாட்டம் செலுத்த வேண்டும்...... என்பது என்னுடைய கருத்து அண்ணா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....