Translate

செவ்வாய், 9 அக்டோபர், 2012

"அட்ட கத்தி " கவிதைகள்

காதல் இல்லைனா  தண்ணியும் தாடியுமா பசங்க சுத்தறதாலதான் பொண்ணுங்க அதுப்பா இருக்குறாங்க...கீழே உள்ள குத்துற மாதிரி ரெண்டு கவிதையை தட்டி விடுங்க கொஞ்சமாவது உணரட்டும்!!...எங்கிருந்தாலும் வாழ்க  சொல்பவர்களா? ப்ளீஸ்  ஒன் ஸ்டேப் பேக் மேன் ...
அட்ட கத்தி

விடிய விடிய கதை கேட்கும்
உன் குழந்தைக்கு
நம் காதல் கதையை
எப்போது சொல்வாய்?

என்னை காண்பதில்
உன்னை விட
அவஸ்தை கொள்கிறாள்
உனக்கும் எனக்கும் தூது வந்த
உன் தோழி...

உன் கல்யாணத்தை விட
அதிகமாய் வலிக்கிறது
ஒவ்வொரு முறையும்
உன் குழந்தை என்னை
"அங்கிள்" என்று அழைக்கும்போது...

கடலோர காற்றோடு
நீயும் உன் கணவனும்
முகம் திருப்பி நின்றாலும்
அநியாயமாய் காட்டி கொடுத்தது
உன் அக்குள் வியர்வை.

நிர்வாண முதலிரவில்
என் காதலை
எங்கு கொண்டு ஒளித்து வைத்தாய்?

உன் முத்தத்தின் சுவடுகளை
என் கண்ணீர் கழுவிக் கொண்டது
என் இந்திர வீரியத்தை
எதை கொண்டு அழித்தாய்?


பிரபல பதிவர் திடங்கொண்டு போராடு ம்  சீனு நம்ம தளத்தை கவிதை தளம்னு சொல்லி "பல்பு"  கொடுத்த காரணத்தினால்  இன்றைய இந்த கவிதைகள்  அனைத்தும் சீனுவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

 கவிதை எழுத தெரியாதா? நாலு கமெண்டாவது எழுதிட்டு போங்க தெய்வமே...




8 கருத்துகள்:

  1. வித்தியாசமான நல்ல வரிகள்...

    /// இந்த கவிதைகள் அனைத்தும் சீனுவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ///

    இன்னும் வாங்க வரவில்லையே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்தை சொல்ல?முழு இரவு கடந்த பின்னும் மொத்தமா 16 page view தான் அண்ணா...மிக மோசமான நிலை...நீங்களாவது வந்தீங்களே ...நன்றி அண்ணா..

      நீக்கு
  2. //உன் குழந்தை என்னை
    "அங்கிள்" என்று அழைக்கும்போது...// ஹா ஹா ஹா

    // "பல்பு" கொடுத்த காரணத்தினால் // இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ என்று சங்கம் சந்தேகப் படுகிறது யுவர் ஆனார்

    //சீனுவிற்கு விற்பனை செய்யப்படுகிறது// இது அநியாயம் அக்கிரமம் ஓசியில குடுக்கும் பொருட்கள் மட்டும் தான் சங்கத்தினரால் ஏற்றுக் கொள்ளப் போடும்...
    சங்கம் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது மை லார்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கத்துல பேரும் இல்லை சட்டமும் இல்லை.. என்ன செய்தாலும் சங்கத்தை சொல்லியே தப்பிச்சுகிரானுங்க....இருங்க மக்கா ஊர் வந்து பேசிக்கிறேன்..

      நீக்கு
  3. அருமையான வரிகள்
    மிகவும் ரசித்து படித்தேன்

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் ராணுவ வீரனா? இல்லை ராணுவ கவிங்கனா?
    சும்மா சொல்லகூடாது பாஸ் உங்க கவிதைகள் நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  5. நன்றி சகோ..உங்கள் பாராட்டுகளுக்கும் வருகைக்கும்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....