QRT னா என்ன?அதன் வேலை என்ன?வடகிழக்கு,சட்டிஸ்கர்,காஷ்மீர் மாநிலங்களின் ஆயுத போராட்டம் நடக்கும் இடங்களில் உள்ள QRT அறப்போராட்ட கூடங்குளத்தில் என்ன செய்யப் போகிறது?
காலை செய்திகளில் கூடங்குளத்தில் CISF மற்றும் QRT பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது என்ற செய்திகள் வந்தது.QRT என்ற பெயர் சற்று டெர்ரராக இருந்திருக்கும் போல ....புதிய தலைமுறையில் இந்த பெயரை பயன்படுத்தியிருந்தார்கள் .
QRTனா QUICK REACTION TEAM....இது CISFல் உள்ள ஒரு டீம்.CISF வேற QRT வேற என்று நினைத்து விடாதிர்கள். ஆயுத போராட்டங்கள் நடக்கும் மாநிலங்களில் ஒவ்வொரு பட்டாலியன்,மற்றும் கம்பெனி எப்பவுமே இப்படி ஒரு டீமை வைச்சிருப்பாங்க.....தேர்ந்தெடுக்கப்பட்ட துடிப்பான படை வீரர்கள் 24மணி நேரமும் ரெடியா இருப்பாங்க...
இவங்க ரோல் என்ன?
காலை செய்திகளில் கூடங்குளத்தில் CISF மற்றும் QRT பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது என்ற செய்திகள் வந்தது.QRT என்ற பெயர் சற்று டெர்ரராக இருந்திருக்கும் போல ....புதிய தலைமுறையில் இந்த பெயரை பயன்படுத்தியிருந்தார்கள் .
இவங்க ரோல் என்ன?
- குறிப்பிட்ட வாகனத்தை தொடர்ந்து பிடித்தல்
- SPOT CHECK
- தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள்,வீடுகளை சோதனை இடுதல்
- உடனடியாக அதிரடியாக முற்றுகை இட
- அவசியப்பட்டால் AMBUSH .(திட்டமிட்டு மறைந்திருந்து நடத்தும் அதிரடி தாக்குதல்)
- குறுகிய நேரத்தில் VIP அழைத்து செல்லபிடிக்கப்பட்ட
- கலகவாதிகளை விசாரணைக்கு எடுத்து செல்லுதல்.
- குறைந்த வீரர்களால் பெரிய ஆபரேஷனை செய்தல்(சேதம் குறைவாக அமையும்,சர்ப்ரைஸ் காக்கப்படும்)
எப்படி QRT யால் ரெடியாக இருக்க முடியும?
- ஒவ்வொரு ஆறிலிருந்து எட்டு மணி நேரமும் தங்களுக்குள் பிரித்து கொண்டு தயாராக இருந்து கொள்வார்கள்.
- இவர்களின் ஆயுதங்கள் மற்ற சாதனங்கள் மற்றும் ரேசன் வரை இவர்கள் கூடவே இருக்கும்.
- தனியாக வாகனங்கள் தயார் நிலையில் (குறைந்தது ஒரு ஜீப்,ரெண்டு மீடியம் வண்டிகள் (அதுல LMG (LIGHT MACHINE GUN)மவுன்ட் செய்து விடுவார்கள்.)
- ரேடியோ ஆபரேட்டர் (மிர்ச்சி சிவா இல்லைங்க) வயர்லெஸ் சாதனங்களோடு இவங்க கூடவே இருப்பார்.
![]() |
| LMG மவுன்ட் செய்யப் பட்ட ஜீப் |
இவையெல்லாம் மேலே சொன்ன வடகிழக்கு,காஷ்மீர்,மாவோ மாநிலங்களில் செய்வது....இப்ப இங்கே ஜோத்பூரில் கூட நானும் QRTயில் இருந்தேன்.(ஆகஸ்ட் 15 க்காக)
இதுதான் QRT.இந்த டீம் ஆயுத போராட்டம் நடைபெறும் மாநிலங்களில் நடைபெறும் கொரில்லா தாக்குதல்கள்,அதிரடி தாக்குதல்களுக்கு பொருத்தமானதே...ஆனால் கூடங்குளத்தில் ?சிறிய டீமான இது ஆயிரக்கணக்கான மக்களை சமாளிக்கவா?முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்.ஆனால் மக்கள் பயப்படும்படியாக இந்த பெயர்களை பயன்படுத்தப்பட வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
அடுத்து வரும் பதிவொன்றில் AMBUSH பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.அதிலும் வடகிழக்கு மாநில AMBUSH ம் சட்டீஸ்கர் AMBUSHம் குறிப்பிடத்தக்கது.
தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லுங்கள்.நன்றி.
| Tweet | |||||

சரியான பகிர்வைதான் செய்கின்றீர்கள் சகோ,,
பதிலளிநீக்குதொடருங்கள்..
நம்து ராணுவ பலமும்
நமது வீரர்களின் நிலையும் நிச்சயம் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்...
தொடருங்கள்!!
தொடர்கிறேன் சகோ..உங்களின் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ...
நீக்குஇது வரை இந்திய ராணுவம் எதிரி நாட்டுடன் சண்டை போட்டதை விட சொந்த மக்களுடன் சண்டை போட்டதே அதிகம் ..............................இந்திய தரகு முதலாளிகளின் கூலி படையே இந்திய ராணுவம் இது தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் பன்னாட்டு மூலதனத்தை பாதுகாத்து நம் நாட்டை அவர்களின் வேட்டை காடாக ஆக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த படுகிறது............................. ஆகவே இதற்க்கு எந்த புனிதமும் இல்லை
பதிலளிநீக்குஎவ்வித மாற்றுகருத்தும் இல்லை...ராணுவம் என்பது அரசோட அடியாள்...அரசு எவுவதை செய்யும்.அரசை பொறுத்தே ராணுவத்தின் செயல்பாடுகள்.அரசை மீறி எதுவும் செய்தால் அது புரட்சி..நடக்குற விசயமா நண்பரே?
நீக்குஉங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்,அரசு புனிதமாகட்டும் அனைத்தும் புனிதமாகும்......நன்றி நண்பரே
இது வரை இந்திய ராணுவம் எதிரி நாட்டுடன் சண்டை போட்டதை விட சொந்த மக்களுடன் சண்டை போட்டதே அதிகம் ..............................இந்திய தரகு முதலாளிகளின் கூலி படையே இந்திய ராணுவம் இது தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் பன்னாட்டு மூலதனத்தை பாதுகாத்து நம் நாட்டை அவர்களின் வேட்டை காடாக ஆக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த படுகிறது............................. ஆகவே இதற்க்கு எந்த புனிதமும் இல்லை
பதிலளிநீக்குappadiyaa anne!
பதிலளிநீக்குஅப்படியேத்தான் சகோ ....
நீக்குநல்லதொரு பகிர்வு... இது போல் தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
தொடர்கிறேன் அண்ணே....நன்றி அண்ணே...
நீக்குஇந்திய இளைஞர்களே தங்களை சுற்றிநடக்கும் அவலங்களை நாமே சுட்டிகாட்டி அதை மாற்றி புதியவழி காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகமாகும் இதில் புதியவழி காண துடிக்கும் அனைத்து இளைஞர்களும் இணையலாம் indianyouthcor@gmail.com,indianyouthcorblogspot.in,
பதிலளிநீக்குஇந்திய இளைஞர்கள்?
பதிலளிநீக்கு