வழக்கமா மனசுக்குள்ளே உள்ளத எழுதும்போது வரும் கோர்வையான வார்த்தைகள் இல்லாமல் இந்த பதிவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன்....
கீழ் காணும் இந்த படத்தில் காணப்படும் கம்பி வேலி உங்களின் வரிப்பணத்தில் பாகிஸ்தானின் அலும்பு தாங்காமல் இந்தியா பஞ்சாப்,ஜம்மு,காஷ்மீர்,ராஜஸ்தான்,குஜராத் என பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதிகளோடு நீட்டி,வளைத்து ,நெளித்து அமைத்ததாகும். .
![]() |
| இது ஜம்மு சாம்பா பார்டர். |
![]() |
| இது ராஜஸ்தான் பாட்மீர் பார்டர். |
12 அடி உயர இந்த இரு பக்க வேலி கம்பிக்கு நடுவே இரண்டு கன்சல்டினா வேலி எனப்படும் சுருள் சுருளான வேலி அமைந்திருக்கும்.இது போக இரவில் குறிப்பிட்ட கம்பிகளில் மின்சாரம் வேறு பாயும்.வேலிக்கு இந்த பக்கம் அமைந்துள்ள 22அடி பாதையும் வேலிக்கு அந்தப்பக்கம் உள்ள 14 அடிப்பாதையும் காலடி தடங்ளால் ஊடுருவல் நடந்துள்ளதா என இடத்திற்கு தக்க சோதனை செய்யப்படும்.(குறிப்பா ராஜஸ்தான் )
![]() |
| உயர பார்வையில் வேலி |
![]() |
| இதுதான் நம்ம ஆபீஸ் பாஸ் ...:) |
![]() |
| மவுண்ட் |
![]() |
![]() |
| இந்த படத்தை கூர்ந்து கவனித்தால் வேலிக்கும் பாகிஸ்தானின் OP TOWERக்கும் நடுவே வெள்ளையா ஒரு கல் போல தெரிகிறதா?இல்லையெனில் அடுத்த படத்தை பாருங்கள் |
இந்தியா என்று எழுதப்பட்ட இந்த வெள்ளை கல்லை பில்லர் என்று அழைப்பர்..இதன் அப்புறம் பாகிஸ்தான் என்றும் அதன் கீழே பில்லர் நம்பரும் எழுதப்பட்டிருக்கும்.இந்த பில்லர்களை இணைத்து உருவாகிறது IBஎனப்படும் INTERNATIONAL BORDER .இதுதான் எல்லையே தவிர வேலி அல்ல.
இத்தனையையும் மீறி வேலி கம்பி அறுக்கப்பட்டு ஊடுருவினால் அல்லது அறுக்காமலேயே ஊடுருவல் நடந்து விடுகிறது என்று வைத்து கொள்வோம்.அறுக்கப்பட்ட வேலியை அப்போதைக்கு இணைத்து வைத்து உண்மை மறைத்தாலும் ஊடுருவியவன் நகருக்குள் மாட்டி கொள்ள நேர்ந்தால் எந்த பில்லரின் பக்கமா ஊடுருவினான் என அறியப்பெற்று அந்த தேதியில் அந்த இரவில் காவலில் இருந்தவர்களின் வேலைக்கு ஆப்படிக்கப்படும்.
இந்தியா-பங்களாதேசின் எல்லை நீளம் 4,096.70 km ஆகும்.இதில் 1,116.200 km நதி,நீர்ப்பரப்பாகும்.
அடுத்த பதிவில் தற்போது நான் நிற்கும் சாம்பா எல்லையில் உள்ள பாகிஸ்தான் தரும் முக்கிய அச்சுறுத்தல் ....ஸ்னைப்பர் ..
இந்த பதிவு என்னவோ படம் போட்டு பாகம் குறிச்ச மாதிரி இருக்கு எனக்கு.....எல்லையை பற்றிய அருமையான பதிவை படிக்க இங்கே சுட்டுங்கள்
| Tweet | |||||














2289.66km வேலி, ஆபீஸ், சிரமப்பட்டு எடுத்த படம் உட்பட அனைத்தும் படங்களும் தகவல்களும் அருமை... முடிவில் இணைப்பு அதை விட...!@!
பதிலளிநீக்குநன்றி அண்ணா....எப்படிண்ணா இப்படி அனைத்து பதிவர்களையும் உற்சாகப்படுத்துறீங்க? நன்றி அண்ணா
நீக்குதகவல்களுக்கு நன்றி
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு சங்கர்..
நீக்குadengap
பதிலளிநீக்குadengappaa...!
பதிலளிநீக்குpirakaatham....
thodarungal ....
நன்றி சீனி கவிதை சகோ..
நீக்குதகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி
பதிலளிநீக்குதகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி திரு சங்கர் ....
நீக்குஉங்கள் பதிவை படித்துவிட்டு என்னுடைய பதிவை உடனடியாக படித்துப் பார்த்தேன், புரிந்துகொண்டேன் எவ்வளவு குழந்தைத் தனமாக எழுதியுள்ளேன் என்று...
பதிலளிநீக்குநீங்க எழுதி இருக்க ஒவ்வொரு வரியிலையும் தகவல் இருக்கு. வார்த்தை கோர்வை இல்லன்னு சொல்லாதீங்க ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...
இந்த பதிவுல இருக்க பல தகவலை நான் ஜம்மு வந்தப்போ ஏன் என்கிட்டே சொல்லல... உங்க கூட கா... (பயபுள்ள எனக்கும் கொஞ்சம் விட்டு வையிடா ன்னு நீங்க கதர்ரறது எனக்கு கேட்குது, இருந்தாலும் சொம்ப வச்சிருக்க நாட்டமையே பொய் தீர்ப்பு சொல்லக் கூடாதுல்ல )
என் பதிவு லிங்க் கொடுத்த நீங்க தெய்வம்னே தெய்வம்
உன்னோட தன்னடக்கத்தை பாராட்டுறேன் சீனு...சத்தியமா சொல்றேன் ...உன்னோட பதிவு வந்ததுக்கு அப்புறம் ரொம்ப யோசிச்சேன்...இனி எப்படிடா இத மாதிரி ஒரு பதிவ தேத்த முடியும்?பார்க்காமலேயே இவ்வளவு எழுதுறானே பார்த்திருந்தா? உன்னோட பய ண பதிவிற்கு முன் இந்த தைரிய பதிவு ஒண்ணுமே இல்லை தம்பி.....
நீக்கு##பயபுள்ள எனக்கும் கொஞ்சம் விட்டு வையிடா ன்னு நீங்க கதர்ரறது### factu factu factu ..
தகவல்களுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குஅதிலும் தங்கள் அலுவலகம் அருமை!!!
நன்றி இரவின் புன்னகை......வெயில் காலத்தில் அந்த ஆபீஸ் உள்ளே தூங்குவது தனி சுகமாகும்.....அப்பப்ப பாம்புகள் வேற விருந்தாளியா வரும்ங்க....
நீக்குஎல்லையோரத்தில் ரொம்பவே கஷ்டப்படுறீங்க... உங்களுக்கு ஒரு சல்யூட்...
பதிலளிநீக்குபதில் சல்யுட் பையா.....இன்னும் கஷ்டகதையை சொல்லல நண்பா......அப்புறமா ஒரு பதிவுல அந்த சோக கதையை சொல்லி அழலாம்.....சம்பளம் வாங்கிவிட்டு அத பத்தி எப்படி பேச? எவ்வளவோ மனிதர்கள் தமது கஷ்டத்திலும் பொதுவில் பல பணிகள் செய்கின்றனர்....அவர்கள் முன்னாடி நானெல்லாம் ஒண்ணுமே இல்லை பையா.......
நீக்குஸலாம் சகோ.சதீஷ்,
பதிலளிநீக்குதுப்பாக்கி தோட்டாக்கள் மத்தியில் OP யில் நீங்கள் ராத்திரி பகலாக கண்விழித்து பணியாற்றும் கஷ்டம் (//அந்த தேதியில் அந்த இரவில் காவலில் இருந்தவர்களின் வேலைக்கு ஆப்படிக்கப்படும்// ---ப்ச்) மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தாலும்... இப்பதிவினூடே பயணிக்கையில் செமை த்ரில்லிங் அனுபவம் கிடைத்தது. அதோடு... நம் பிள்ளைகள் மெழுகுவர்த்தியில் படிக்க... சேட்டிலைட் தூரத்துக்கு கரண்டு வெளிச்சம் போகும்படி நிலைமை இருக்குதேன்னு பெருமூச்சு வருது..!
அப்புறம் எனக்கு ஒரு டவுட். (உனக்கு இதே வேலையா போச்) :-)
அதாவது...
எதுக்கு வேலியை ரொம்ப தூரம் உள்ளிழுத்து கட்டியுள்ளோம்..? எல்லை பில்லரை ஒட்டியே வேலி கட்டாததற்கு என்ன காரணம் சகோ..? (இராணுவ ரகசியம் என்றால் சொல்ல வேண்டாம்)
ஸலாம் அலைக்கும் சகோ.....அப்படில்லாம் பெரிய விஷயம் இல்லை ....IBயிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை எந்த கட்டுமானப்பணியும் செய்ய கூடாது என்று விதிகள் உண்டாம்.பாகிஸ்தானின் ஊடுருவல் தவிர்க்க இந்தியாவிற்கு இது அவசியமாகிறது....இந்த கட்டுமானப்பணிகள் குறித்த குழப்பத்தில்தான் பல துப்பாக்கிசூடுகள் நிகழ்கிறது.நில அமைப்பை பொறுத்தும் வேலியின் தூரங்கள் வித்தியாசப்படும்.
நீக்குநீங்க டவுட் கேட்டாதான் அடுத்ததா எழுத முடியும்..கேட்டுகிட்டே இருங்க..அப்படினாதான் நமக்கு எழுத வரும் சகோ......நன்றி சகோ
ARUMAIYANA TAGAVAL NAMATHU ELLAIYAI PATRI
பதிலளிநீக்குவருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி திரு நவின் பிரசாத்
நீக்குஎன்னங்க இப்புடி படம் போட்டு பாகம் குறித்து அப்பட்டமாக பதிவிட்டு இருக்கீங்க? இது பாதுகாப்பு ரகசியத்தை வெளிப்படுத்தும் செயல் இல்லையா?. எவனாவது வேண்ட்டாதவன் உங்களை போட்டுக்கொடுத்துட்ட போறான். முதலில் இந்த்த பதிவை தூக்குங்க.
பதிலளிநீக்குஉங்கள் அக்கறைக்கு நன்றி நண்பரே.....இதில் நான் எடுத்த படங்கள் பாகிஸ்தான் மட்டுமே..இந்திய படங்கள் நெட்டில் ஏற்கனவே உள்ளதே....அது போக இந்த தகவல்கள் லோக்கல் மக்களுக்கு தெரிந்ததே...ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிச்சு சோதிச்சு அப்புறமாத்தான் பதிவிட்டேன்..எனவே கவலை வேண்டாம்.....உதாரணத்திற்கு காவலில் ஆயுதத்தோடு நிற்கிற படம் உண்டு..ஆனால் வெளியிடவில்லை..அது என்ன்ன ஆயுதம் எவ்வளவு சக்தி என்பது எதிரிகளுக்கு தெரிந்தால் அதை பொறுத்து நடந்து கொள்வார்கள் என்பதால் அதை வெளியிடவில்லை...கவலை வேண்டாம் நண்பரே...வருகைக்கும் தங்களின் மேலான அக்கறைக்கும் நன்றி..
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று இந்தியாவின் சுதந்திர நாளில் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/08/blog-post_15.html?showComment=1376568104980#c892188592548843204
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-