நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் வந்துள்ளேன் நண்பர்களே,சொல்லி கொண்டு செல்ல கூட காலம் கொடுக்காத அவசர கோலத்தில் சென்றதால் எந்த ஒரு தகவலும் தர இயலவில்லை.மன்னிக்கவும்.முதலாம் பிறந்தநாளை நினைத்து பார்க்க கூட மறந்து விட்டது இந்த வலைப்பூ.
ஏன்னா எல்லைல இந்த லேப் டாப்,மொபைல் செயல்கள் புரிய கமாண்டர் ஒத்துகிட்டா கூட காலம் ஒத்துகிடாது,காலம் ஒத்துகிட்டா கூட கடன்கார சிக்னல் ஒத்துக்காது..ஐந்து வருடத்திற்கு முன் ஒரு இரவு கூட நிம்மதியாக முழு உறக்கம் உறங்காத நினைவுகள் சற்று பயம் காட்ட ஆரம்பித்தன.
டெல்லில இருந்து அழுத்தம் காரணமாக என்னை பயிற்சி பள்ளி அவசரமாக விரட்டியதாலோ என்னவோ ஓடி ஓடி பயிற்சி கொடுத்த மைதானத்தை கடக்கும் போது முதன்முதலா மிக நீளமாக தோன்றியது.
அவசரமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு அதே அவசரமா ரயில் ஏறினால் பருத்திவீரன் பிரியாமணி மாதிரி எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்டானு அழும் மனைவிக்கு நடுவில் யப்பா,நீ இப்போ போறீயே என் சைக்கிளை யார் சரி பண்ணி கொடுப்பா?ன்னு கேக்கிறான் பையன்....அவனுக்கு அவன் கஷ்டம்....
காலை எழுந்ததும் முக நூல்,புதுபுது அர்த்தங்கள்,சன் மியூசிக்,நேர்பட பேசு சனிக்கிழமை இந்தி சினிமா,அப்பப்ப ஒரு பதிவுன்னு இருந்துட்டு வேலி கம்பியும்,ஆளுயர புற்களும்,நரிகள்,பாம்புகள்,மான்கள்,பன்றிகள் என்று சட்டென்று ஒரு ஆதிகால வாழ்வுக்கு திரும்பிய போது சங்கடமாகத்தான் இருக்கிறது...ஆனாலும் என்ன செய்ய? சங்கடமில்லா வாழ்க்கையும் சதுரமான முட்டையும் சாத்தியமில்லையே ..
ஒரு ஓரமான காட்டுக்குள் இருந்து என்னை முடக்கி கொள்ள எனக்கு விருப்பமில்லை...மனைவி மக்களை தேடுவது போல பதிவிட, பதிவுகள் படிக்க, பாராட்ட,எதிர்வினை ஆற்ற பாய்கிறது மனம்.
இந்தப்பதிவுலகில் கற்போம் தளம் மூலம் தமிழில் டைப் செய்ய வெளிச்சம் போட்ட பிரபுவும்,அலங்கோலமாய் கிடந்த என் தளத்தை ஒழுங்கு செய்து அழகு செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித் அவர்களும் வணக்கத்திற்கு உரியவர்கள் என்றால் மிகை அல்ல..
இவர்களை மீறி நான் கதை எழுதுவேன் என்று என்னை நம்பி முதலாம் மூன்றாம் பதிவு முதல் இப்போது வரை ஆதரித்து,அறிவுரை கொடுத்து எனது தளத்தை பல தளங்களுக்கு எடுத்து செல்லும் எனது ஆசான்,அன்புத்தம்பி,இலக்கிய சித்தன் ,கண்ணாடி மச்சான் என்று கவிதாவால் அன்போடு அழைக்கப்படும்
அன்பு தம்பி திடங்கொண்டு போராடு சீனுவை நன்றி சொல்லி சுருக்கி கொள்ள விரும்பவில்லை.
தொலைபேசியில் எங்கோ வெளிநாட்டில் இருந்து இரவு ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய மூத்த பிரபல பதிவர் பாசமிகு கோவை முத்தரசு அண்ணனை,அரைநாள் முழுவதும் காதலியை போல சலிப்பில்லாமல் பேசிய கரை சேரா அலை அரச ன் ஐயும்,காமெடி கும்மி மூலம் என்னை சிரிக்க சிரிக்க வைத்த ஹாரி,வாத்தியார் ராஜா ,பிளேடு பீடியா கார்த்தி ,வரலாற்று சுவடுகள் போன்ற பல நல்ல உள்ளங்களையும் எனக்கு தந்த இந்த பதிவுலகை விட்டு விட எனக்கு முடியவில்லை.
கால இடைவெளிகள் மட்டுமே பிரச்சனை ஆனாலும் எனது பதிவுகள் தொடர்ந்து வரும்.
காஷ்மீர் பதிவுகள் என்னை பல இஸ்லாமிய நண்பர்களிடம் சேர்த்துள்ளது.காஷ்மீர் மக்கள் இஸ்லாமியர்கள் என்பதாலும்,அவர்களை வைத்து பாக் மீன் பிடிக்கிறது என்பதாலும் அவர்களின் உரிமை போராட்டத்திற்கு மத சாயம் பூசுவது என்னால் முடியாது.அடக்குமுறை அதிகாரத்தில் அவதி கொள்ளும் வடகிழக்கு,சட்டிஷ்கர் பூர்வ குடி மக்கள்,காஷ்மீரத்து மக்கள் மூவருக்கும் என்னிடம் வித்தியாசம் எதுவுமில்லை.
இன்னுமொரு வாய்ப்பு காஷ்மீரில் பணி செய்ய வாய்ப்பிருந்தால்,சட்டிஸ்கரில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தால் காணொளி
ஆதாரங்களோடு உங்கள் முன்னே எனது பதிவுகள் பேசும்.
வருடத்தில் இருமாதம் ,மற்றும் பதினைந்து நாள் விடுமுறையில் மனைவி,பிள்ளைகள்,நண்பர்கள்,உறவினர்கள்,பெற்றோர் என அனைவரையும் தாண்டி இங்கு பதிவிட வருவது எனக்கு சுலபமில்லை...ஆனாலும் வருவேன்.... மீண்டும் மீண்டும் வருவேன்.....உங்கள் ஆதரவோடு.....
-என்றென்றும் அன்போடும்,நன்றியோடும் உங்களின் அரசப் பயங்கரவாதி./தீவிரவாதி
அடுத்த பதிவு நீங்கள் காணாத இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் புற படங்களுடன்........
ஒவ்வொரு பதிவிலும் என்னை போல ஒரு புதிய பதிவரை எனது தளத்தில் அடையாளம் செய்வேன் என்று கடந்த பதிவில் ஆரம்பித்தேன்....எந்த பதிவுகளையுமே படிக்காமல் சட்டென்று வேண்டுமென்று ஒருவரை இங்கு சடங்காக அடையாளம் செய்ய விரும்பவில்லை...எனவே விடுமுறை....!!
| Tweet | |||||

தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
பதிலளிநீக்குபுதுப்பொலிவுடனும் புதுப்பதிவுகளுடன் வருக வருக
தங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி Ramani ,.....
நீக்குtha.ma 1
பதிலளிநீக்குநன்றி அண்ணா....
நீக்குவருக சதீஷ்....
பதிலளிநீக்குஎல்லையோர படங்களை காண ஆவலாக உள்ளேன்...
நன்றி பிரகாஷ் அண்ணா...விரைவில் வரும் ...
நீக்குWelcome Back :)
பதிலளிநீக்குthank u nanpan...:)
நீக்குவிரைவில் வருக... தொடர்க...
பதிலளிநீக்குநன்றி திருக்குறள் தனபாலன் அண்ணா...
நீக்குஅதானே நம்ம பேரு இல்லையோனு நினைச்சன்..
பதிலளிநீக்குஆமா.. ஒன்னாவதா இருக்கிற படம் நம்ம சீனு, ஜம்மு - பாகிஸ்தான் எல்லையை நோக்கிய 'பய'ண அனுபவத்தில எடுத்தது தானே..
மச்சி நீ இல்லாமலா? ஆமா அந்த பய புள்ள எடுத்த போட்டாதான் அது ..
நீக்குவாங்க வாங்க...
பதிலளிநீக்குவந்தேன் பையா.....வணக்கம்
நீக்குதங்கள் அனுபவிக்கும் பிரிவின் வலியை பதிவின் மூலம் உணர முடிகிறது. ஆனால் அந்த வலி இந்தியாவில் உள்ள 121 கோடி மக்களுக்காக என்பதில் பெருமை தான்... ஆனாலும் என்ன செய்ய? நாங்கள் எங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதில் பிசியாக இருப்பதால் உங்கள் வேதனைகளையும், கஷ்டங்களையும் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் போய்விட்டது.... :(
பதிலளிநீக்குகொஞ்சம் கஷ்டப்பட்டு பீல் பண்ண விடுங்கப்பா....அந்த பீலிங்கும் சுகம்தான் ...
நீக்கு##நாங்கள் எங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதில் பிசியாக இருப்பதால்##
உண்மைதான் சகோ....
//என் சைக்கிளை யார் சரி பண்ணி கொடுப்பா?//
பதிலளிநீக்குஅட! பையன் சைக்கிள் வித்தியாசமா இருக்கே? (பார்க்க படம்) ;)
ஐயோ..:) :) :)
நீக்கு//பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித் அவர்களும் வணக்கத்திற்கு உரியவர்கள் என்றால் மிகை அல்ல.//
பதிலளிநீக்குகண்டிப்பாக மிகை தான்... இப்படி இனி சொல்ல வேண்டாம்,,,
உங்கள் தன்னடக்கத்திற்கு வணக்கம்....எழுதியதில் தவறில்லை....அதற்க்கு தகுதி உடையவர்களே நீங்கள்..
நீக்குwelcome back! நீங்கள் பதிவுகளில் பகிர்வது உங்கள் வேலைக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா....தங்களை இழந்துவிட்டதாகவே நினைத்தேன்......சந்தோசமாக உள்ளது...நன்றி அண்ணா
நீக்குவேலைக்கு ஆபத்து இல்லாமல் பார்த்து கொள்கிறேன் அண்ணா...நன்றி
நீக்குvaanga anne.....
பதிலளிநீக்குவணக்கம் சீனி கவிதை....மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....
நீக்குEllai enrale thollaithan athu adutha veetu veliya irukkatum,Iilla adutha nattu veliya irukkatum.Ivvalavuku mathiyila ippadiyellam sinthikka mudiyudhungarathe periya vidayam Anna!vazhthukkal!
பதிலளிநீக்குநன்றி தமிழா,தொடர்ந்து இணைந்திருப்போம்...
நீக்குWe are WAITING..............
பதிலளிநீக்குthank u indian..
நீக்குஅண்ணா வணக்கம் விடுப்பு முடிந்ததா இல்லையா
பதிலளிநீக்குஇல்லை தம்பி 16 ஜூன் ரிப்போர்ட்....நலம்தானா?
நீக்கு//கண்ணாடி மச்சான் என்று கவிதாவால் அன்போடு அழைக்கப்படும்
பதிலளிநீக்குஅன்பு தம்பி திடங்கொண்டு போராடு சீனுவை
//
யாரு அந்த கவிதா ?
சொல்லவே மாட்டேனே....அப்புறம் கவிதா அவனுக்கு கிடைக்காம போய்டும்..
நீக்கு